Sunday, December 30, 2012

கருக் முருக் நொறுக்ஸ்!


அஞ்சலி!
கொடூரமாக கொல்லப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நடந்த கொடுமை போல வேறு யாருக்கும் இனி நடக்காமல் இருக்க வேண்டும். காவல் துறையும் சட்டமும் அதற்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் உருவில் கொடிய மிருகங்கள் நடமாடும் உலகில் அப்பாவிப் பெண்கள் சமூகத்தின் மீது பழி போடாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது.

டெல்லி வாழ் நண்பர் மூலமாக ஒரு விஷயம் கேள்விப்பட நேர்ந்தது. அதாவது டெல்லி மாநகரக்காவல் துறை முழுக்க முழுக்க 'உள்துறை அமைச்சரின்' கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்றார். அதனால் முதல்வர் நேரடியாக தலையிட்டால் கூட அமைச்சரே கேட்கவில்லை இவருக்கென்ன வேலை என்று காவல்துறை மேலதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தலைநகரம், அத்தனை உயர் மட்ட ஆட்சியாளர்களும் குடியிருக்கும் பகுதியில் இந்தளவு அட்டூழியம் நடக்கிறது என்றால் மேல்மட்டத்திலிருந்தே அவைகள் வெளிக்கு வெளி தெரியாமல் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. அதனால் தான் 'இவர்களா நம்மைக் கேட்கப் போகிறார்கள்?' என்று சமூக விரோதிகள் அத்தகைய சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதைப் பார்த்து சில ஒழுக்கம் கெட்ட மிருகங்கள் நம்மளும் இதே போல செய்யலாமே என்று கொடூரங்களை நிகழ்த்தி விடுகிறார்கள் போல!.

மிகக்கடுமையான கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பும் டெல்லி மட்டுமல்ல நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் தேவையாகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஓரிரு தினங்களுக்கு முன்பாக கனிமொழி சுப்பையா என்பவனின் பாலியல் கொலையை கண்டித்து ஒரு தெரு முனைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

இது செய்தி:
"தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகள் புனிதா (13). பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்கார செய்து படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியாச்சி அருகேயுள்ள பாறைகுட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் சுப்பையா(36) என்பவரை கைது செய்தனர்."
அதே நேரம் இந்த வார நக்கீரனில் (25-12-2012) பாலியல் கொடுமை செய்த பாதிரியார் பற்றிய செய்தி வந்திருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றிப் பேசிய எந்த அரசியல் தலைவரும், தொலைக்காட்சி மீடியாக்களும் இந்த விஷயத்தை கையிலெடுத்துப் பேசவில்லை.

நக்கீரனில் வந்திருந்த விபரங்களில் சில...

கும்பகோனம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இருக்கும் இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரியின் இயக்குநரும் பாதிரியாருமான மரியபிரான்சிஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மானவிகள் நடத்திய போராட்டத்திற்கு முன்நின்றவர் மாணவி திருத்துறைப்பூண்டி ராஜலட்சுமி. அந்த ராஜலட்சுமி தான் "என் மரணத்திற்குப் பிறகாவது அந்த ஆபாச பாதிரியாரிடமிருந்து மாணவிகளுக்கு நீதி கிடைக்கட்டும்" என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.


"போன பொங்கலுக்கு லீவு விடாமல் மதப்பிரச்சாரத்திற்காக வேளாங்கண்ணிக்கு அழைத்துப் போனார்கள். அங்கே பாதர் மரியபிரான்ஸிஸ் பாக்கெட் தண்ணீரை மார்பில் பீச்சியடித்துவிட்டு 'ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கா?" என்று ரெட்டை அர்த்தத்தில் கிண்டலடித்தார்....."

"...திருமணத்திற்கு முன்னால் செக்ஸ் வைத்துக் கொண்ட மாணவிகள் எல்லாம் கையைத் தூக்குங்கள்' என்று ப்ரேயரில் பகிரங்கமாகக் கேட்டு எங்களைத் தலை குனிய வைத்தவர் அவர்"...

இப்படி போகிறது அந்தச் செய்தி. பாலியல் வன்கொடுமை பற்றி பரபரப்பாக அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு பாதிரியார் மரியபிரான்ஸிஸ் என்பவனின் பாலியல் வன்முறை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட  செய்தி பற்றி ஏன் யாரும் விவாதிக்கவில்லை எனத் தெரியவில்லை. பாதிரியாகள் செய்தால் அது பாலியல் வன்கொடுமை வரிசையில் வராதா அல்லது அப்படி ஒரு சம்பவத்தால் அவமானப்பட்ட பெண் தானே தற்கொலை செய்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாதா? சுப்பையா பற்றி பேசத்தெரிந்த கனிமொழிக்கு ஏன் பாதிரியார் மரியபிரான்ஸிஸ் பற்றி பேசத்தெரியவில்லை?

செலக்ட்டிவ் அம்னீஷியா?

தொடர்புடைய பழைய செய்தி!

பாதிரியார்கள் பற்றிய சம்பவமெல்லாம் தினக்கதை தானே..ஸ்பெஷலாக ஒன்றுமில்லையே என்று விட்டு விட்டார்கள் போல.

இனி இவ்வார துக்ளக்கில் திரு.சுப்பு எழுதும் திராவிட மாயை பகுதியிலிருந்து சில சுவாரஸ்யங்களைப் பார்ப்போம்:


திரு.சுப்பு

"பிரமணர்களுக்குத் தமிழ் மீது மரியாதை கிடையாது. தமிழர் மீது துவேஷம் உண்டு" என்று பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா." ஆனால்...

"காஞ்சிபுரத்தில் இருந்த தன்னுடைய மிகப்பெரிய வீட்டை பெண்களுக்கான பள்ளிக்கூடம் நடத்துவதற்காக நன்கொடையாகக் கொடுத்தார் ஒரு பிராமணர். நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த எஸ்.எஸ்.கே.வி. பள்ளியில் 7000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்."

"தமிழ் இலக்கண இலக்கியங்களை மனப்பாடமாக வைத்துக் கொள்ளும் மரபு தமிழில் இருந்து வந்துள்ளது. கோபாலய்யர் இந்த மரபின் இறுதிக் கண்ணி என்று துணிந்து கூறலாம்.. 'பிராமணருக்குத் தமிழபிமானம் கிடையாது' என்ற ஈ.வெ.ரா. கட்சியின் வாதங்களை தவிடு பொடியாக்க கோபாலய்யரின் உழைப்பால் உருவான 'தமிழ் இலக்கணப் பேரகராதி' யின் பதினேழு தொகுதிகளே போதும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நூல் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது."

- (02.01.2013) துக்ளகில் திராவிட மாயை; திரு. சுப்பு



கொஞ்சம் வரலாறு:

1972 - ல் எம் ஜி ஆரின் பேட்டியை தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளில் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

நிருபர்: தி.மு.க. மந்திரிசபை கவிழ்ந்து விடுமா?

எம்.ஜி.ஆர்: கவிழ்ந்தால் ஆச்சரியம் இல்லை.

நிருபர்: தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எவ்வாறு உள்ளது?

எம்.ஜி.ஆர்: என் கட்சிக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள். பீதி நிலைமை நீடிக்கிறது.

நிருபர்: தமிழ் நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு?

எம்.ஜி.ஆர்: 1000 க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் தி.மு.க பக்கம்.

நிருபர்: இவ்வளவு பலம் பொருந்திய நீங்கள் ஏன் அவர்கள் (தி.மு.க) தாக்குவதாகப் புகார் செய்கிறீர்கள்?

எம்.ஜி.ஆர்: அந்த 1000 பேரில் ஒருவர், ஆட்களுடன் வந்து தாக்குகிறார்கள்.