Sunday, December 22, 2013

"நாட்டைக் காக்க வாருங்கள்" மோடியின் பேச்சு - "மோடியைக் கொல்லுங்கள்" சன் டி வி க்காரன் பேச்சு!


இன்றைய தினம் லட்சக்கணக்கான மும்பைவாசிகள் முன்னிலையில் மோடி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில துளிகளைப்பார்க்கலாம்:

குவிட் இன்டியா மூவ்மெண்ட் போல இப்போது ' Congress Free India ' கோஷத்துடன் புறப்படுங்கள் சகோதரர்களே, காங்கிரஸிடமிருந்து இந்தியாவிற்கு முக்தி கொடுங்கள். காங்கிரஸ் ஃப்ரீ இந்தியாவை உருவாக்குவோம். அதுவரை தேசத்தில் அமைதி இருக்காது.

மொழியால் அடித்துக்கொள்ளுங்கள், தண்ணீரின் பெயரால் அடித்துக் கொள்ளுங்கள்,  மதத்தால் அடித்துக்கொள்ளுங்கள் என பிரித்தாளும் கொள்கையை கையாண்டு இந்த நாட்டை துண்டாடி வருகிறது காங்கிரஸ்.

கருப்புபணத்தை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். நாங்களெல்லாம் வெளிநாட்டில் எங்களுக்குக் கருப்புப்பணம் இல்லை என எழுதிக் கொடுத்தோம். அது போல காங்கிரஸிடம்  நீங்களும் இப்படி எழுதிக் கொடுங்கள் பார்க்கலாம் என்றோம். இன்று வரை யாரும் முன்வர வில்லை. வெளி நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அத்தனை கருப்புப்பணத்தையும் கொண்டு நம் நாட்டு ஏழைகளுக்கு உதலாமா இல்லையா?

படிக்கிறீர்கள், பரீட்சை எழுதுகிறீர்கள், ஆனால் அரசு வேலை கிடைக்கிறதா, சிபாரிசு தேவைப்படுகிறது. சிபாரிசுக்கு என்ன வேண்டும், மஹாத்மா காந்தி படம் போட்ட நோட்டுக்கள் வேண்டும். ஒரு ஏழை தாயின் பிள்ளை எப்படி காந்தி படம் போட்ட நோட்டு கொடுப்பான். இன்டெர்வியூ என்ற பெயரில் இப்படி கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் நான் என்ன செய்தேன் இன்டெர்வியூ என்கிற முறையை ரத்து செய்தேன், பரீட்சை எழுதி தேர்வு பெற்ற லட்சக்கனக்கான பேரையும் கம்பியூட்டரில் ஏற்றினேன், கம்பியூட்டரிடம் கேட்டேன் இவர்களில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களை எனக்குக் காட்டு என்று. அது காட்டிய நபர்களுக்கெல்லாம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். குஜராத் அரசு வெள்ளைத்தாளைப் போல சுத்தமானதாக இருக்கிறது.

காங்கிரஸ் நண்பர்களே கேட்டுக்கொள்ளுங்கள்?? டிவியின் பர்தாக்களுக்குப் பின்னால் மோடி இருக்கிறேனோ இல்லையோ, கோடிக்கனக்கான ஜனங்களின் மனதில் இருக்கிறேன். டிவிக்களை நீங்கள் மறைப்பதால் மோடியை மறைக்கமுடியாது" என்றார் மோடி. இவ்வாறு மோடி குறிப்படதற்கு காரணம், மும்பையில் பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கானோரது கரகோஷத்தோடும் மோடியை வாழ்த்திய கோஷத்தோடும் பிரம்மாண்டமாக கூட்டம் நிறைவேறியது.

'மோடியைக் கொல்லுங்கள்' - சன் டி வி வீரபாண்டியனின் வன்முறை தூண்டிய பேச்சு::இதற்கிடையில் மோடியைக் கொல்லுங்கள் என முஸ்லீம்களைத் தூண்டி விட்டு சன் டி வியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வீரபாண்டியன் முஸ்லீம்களின் கூட்டத்தில் நின்று பேசிய வீடியோ வெளியாகி பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சன் டி வி தனக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த நபரை தொகுப்பாளர் வேலையிலிருந்து சன் டி வி நிர்வாகம்  நீக்க வேண்டும்.

இந்த வீடியோ வெளியான விதம் மற்றும் முஸ்லீம்களால் அந்தப்பகுதி பயத்தின் காரணமாக நீக்கப்பட்டது பற்றியும் பல தகவல்களை நண்பர் பால கௌதமன் தனது தளத்தில் விவரித்திருக்கிறார். 

அதில் வீரபாண்டியனின் குறுக்கு புத்திக்கான ஒரு சுவாரஸ்யத்தை அவர்  இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை! இது தான் இவரின் நடுநிலமை!

இதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன்! சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு! ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம்! விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை! பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை."

அது பற்றி விபரமாகப் படிக்க க்ளிக்கவும்: சன் நியூஸில் ஒரு பின் லாடன்2 comments:

அப்பாதுரை said...

இணையத்தில் எதையோ தேடி இங்கே விழுந்த அனுபவம் இனிக்கிறது. சில பதிவுகளை அவசரமாகப் படித்தேன். என் எண்ணங்களுக்கு முரணான கருத்துக்கள் என்றாலும் உங்கள் வெளிப்பாட்டின் சுவாரசியம் ஜவ்வாய் இழுக்கிறது. தொடர்ந்து வருகிறேன்.

hayyram said...

மிக்க நன்றி திரு அப்பாதுரை. வருகைக்கு மகிழ்ச்சி.