Showing posts with label குஜராத். Show all posts
Showing posts with label குஜராத். Show all posts

Sunday, December 22, 2013

"நாட்டைக் காக்க வாருங்கள்" மோடியின் பேச்சு - "மோடியைக் கொல்லுங்கள்" சன் டி வி க்காரன் பேச்சு!


இன்றைய தினம் லட்சக்கணக்கான மும்பைவாசிகள் முன்னிலையில் மோடி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில துளிகளைப்பார்க்கலாம்:

குவிட் இன்டியா மூவ்மெண்ட் போல இப்போது ' Congress Free India ' கோஷத்துடன் புறப்படுங்கள் சகோதரர்களே, காங்கிரஸிடமிருந்து இந்தியாவிற்கு முக்தி கொடுங்கள். காங்கிரஸ் ஃப்ரீ இந்தியாவை உருவாக்குவோம். அதுவரை தேசத்தில் அமைதி இருக்காது.

மொழியால் அடித்துக்கொள்ளுங்கள், தண்ணீரின் பெயரால் அடித்துக் கொள்ளுங்கள்,  மதத்தால் அடித்துக்கொள்ளுங்கள் என பிரித்தாளும் கொள்கையை கையாண்டு இந்த நாட்டை துண்டாடி வருகிறது காங்கிரஸ்.

கருப்புபணத்தை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். நாங்களெல்லாம் வெளிநாட்டில் எங்களுக்குக் கருப்புப்பணம் இல்லை என எழுதிக் கொடுத்தோம். அது போல காங்கிரஸிடம்  நீங்களும் இப்படி எழுதிக் கொடுங்கள் பார்க்கலாம் என்றோம். இன்று வரை யாரும் முன்வர வில்லை. வெளி நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அத்தனை கருப்புப்பணத்தையும் கொண்டு நம் நாட்டு ஏழைகளுக்கு உதலாமா இல்லையா?

படிக்கிறீர்கள், பரீட்சை எழுதுகிறீர்கள், ஆனால் அரசு வேலை கிடைக்கிறதா, சிபாரிசு தேவைப்படுகிறது. சிபாரிசுக்கு என்ன வேண்டும், மஹாத்மா காந்தி படம் போட்ட நோட்டுக்கள் வேண்டும். ஒரு ஏழை தாயின் பிள்ளை எப்படி காந்தி படம் போட்ட நோட்டு கொடுப்பான். இன்டெர்வியூ என்ற பெயரில் இப்படி கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் நான் என்ன செய்தேன் இன்டெர்வியூ என்கிற முறையை ரத்து செய்தேன், பரீட்சை எழுதி தேர்வு பெற்ற லட்சக்கனக்கான பேரையும் கம்பியூட்டரில் ஏற்றினேன், கம்பியூட்டரிடம் கேட்டேன் இவர்களில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களை எனக்குக் காட்டு என்று. அது காட்டிய நபர்களுக்கெல்லாம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். குஜராத் அரசு வெள்ளைத்தாளைப் போல சுத்தமானதாக இருக்கிறது.

காங்கிரஸ் நண்பர்களே கேட்டுக்கொள்ளுங்கள்?? டிவியின் பர்தாக்களுக்குப் பின்னால் மோடி இருக்கிறேனோ இல்லையோ, கோடிக்கனக்கான ஜனங்களின் மனதில் இருக்கிறேன். டிவிக்களை நீங்கள் மறைப்பதால் மோடியை மறைக்கமுடியாது" என்றார் மோடி. இவ்வாறு மோடி குறிப்படதற்கு காரணம், மும்பையில் பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கானோரது கரகோஷத்தோடும் மோடியை வாழ்த்திய கோஷத்தோடும் பிரம்மாண்டமாக கூட்டம் நிறைவேறியது.

'மோடியைக் கொல்லுங்கள்' - சன் டி வி வீரபாண்டியனின் வன்முறை தூண்டிய பேச்சு::



இதற்கிடையில் மோடியைக் கொல்லுங்கள் என முஸ்லீம்களைத் தூண்டி விட்டு சன் டி வியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வீரபாண்டியன் முஸ்லீம்களின் கூட்டத்தில் நின்று பேசிய வீடியோ வெளியாகி பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சன் டி வி தனக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த நபரை தொகுப்பாளர் வேலையிலிருந்து சன் டி வி நிர்வாகம்  நீக்க வேண்டும்.

இந்த வீடியோ வெளியான விதம் மற்றும் முஸ்லீம்களால் அந்தப்பகுதி பயத்தின் காரணமாக நீக்கப்பட்டது பற்றியும் பல தகவல்களை நண்பர் பால கௌதமன் தனது தளத்தில் விவரித்திருக்கிறார். 

அதில் வீரபாண்டியனின் குறுக்கு புத்திக்கான ஒரு சுவாரஸ்யத்தை அவர்  இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை! இது தான் இவரின் நடுநிலமை!

இதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன்! சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு! ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம்! விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை! பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை."

அது பற்றி விபரமாகப் படிக்க க்ளிக்கவும்: சன் நியூஸில் ஒரு பின் லாடன்



Monday, October 10, 2011

குஜராத்தில் முஸ்லிம்கள்!




இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டிபார்லிமெண்டுக்குச் சமர்பித்த அறிக்கையில் மற்ற மாநிலங்களை விட, குஜராத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உள்ளது என்றும், மற்ற மாநில அரசுகள் 'மதச்சார்பின்மை' என்று சொல்லிக் கொண்டு, ஓட்டு வங்கி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையா?

தேசிய அலவில் 59.1% முஸ்லிம்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் குஜராத்திலோ 73.5% என்ற அளவில் முஸ்லிம்களின் கல்வி அறிவு அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் இந்த வித்தியாசம் இன்னமும் கூடுதலாக குஜராத்திற்குச் சாதகமாகவே தெரிகிறது.

தனிநபர் வருமானம் குஜராத்தில் தேசிய அளவிலான கணக்கை விட கூடுதலாகவே இருக்கிறது. முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகளைக் காட்டி வருகிற மாநிலங்களாக அறியப்பட்டிருக்கிற உத்திரப்பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை விட குஜராத்தில் முஸ்லிம்களின் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது.

குஜராத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால், 1987-ல் 54% ஆக இருந்த எண்ணிக்கை 2006-ல் 34% ஆக குறைந்துவிட்டது.

டெல்லி, மேற்கு வங்காளம் , மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை விட முஸ்லிம்களுக்கு குஜராத்தில் அதிகமாக அரசு வேலைகள் கிட்டியிருக்கின்றன.

இப்படி பல விஷயங்களில் முஸ்லிம்கள் குஜராத்தில் திருப்திகரமான வாழ்க்கைத் தரம் பெற்று விளங்குகிறார்கள் என்று சச்சார் அறிக்கை கூறுகிறது.

ஆனாலும் மோடியின் அரசாங்கத்தை, முஸ்லிம் விரோத அரசாங்கம் போல் சித்தரிக்கும் பிரச்சாரம் என்னமோ இன்னமும் ஓயவில்லை.

நன்றி:- இவ்வார துக்ளக்

நரேந்திர மோடியிடம் ஒரு முறை 'உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'முன்னேற்றம். மாநிலத்தின் எல்லோருக்கும் ஒரேமாதிரியான முன்னேற்றம். அதுதான் எனது செக்யூலரிஸம்' என்றார். அதைத்தான் குஜராத்தில் செய்து காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களைப் போல உடனே 'சிறுபான்மை' ஜல்லி டிக்கவில்லை. ஆன்டோனியோ மொய்னோ என்னதான் மோடி மீது சேறு வாரிப்பூசினாலும் குஜராத் மக்களுக்குத் தங்கள் வளர்ச்சி தெரியும் தானே. அது சச்சார் கமிட்டியில் பிரதிபலித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

.