- ஆனந்த் கணேஷ்
பௌத்தத்தால் தீண்டத்தகாதவராக ஆக்கப்பட்ட சுரண்டப்பட்ட ஜாதிகளை, தீண்டத்தகுந்த சமமாக மதிக்கத்தகுந்த ஜாதிகளாக மாற்ற உழைத்தனர் ஆதி சங்கரரும், அவருக்குப் பின்வந்த ராமானுஜரும்.
அவர்கள் நமக்கு வழிகாட்டும்போது கிறுத்துவ சர்ச்சின் வரையறைப்படி ஏன் நடக்க வேண்டும் ?
கிறுத்துவப் பாதிரிமார்களால் பயன்படுத்தப்பட்டு ஆங்கில அரசாங்கத்தால் பரப்பப்பட்ட தலித் எனும் நெகட்டிவான வார்த்தையை ஒதுக்குவது ஹரிஜனங்களின் நன்மைக்கு செய்ய வேண்டிய முதல் படியேறுதல்.
அந்த வார்த்தைக்குப் பதிலாக எம்பெருமான் ராமானுஜர் தந்த "திருக்குலத்தார்" என்கிற பொருத்தமான மதிப்புமிக்க பதத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இது பழகும்வரை தெய்வத்தின் குழந்தைகளாகக் கருதி வணங்கப்பட வேண்டியவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அந்தஸ்தும் சம உரிமையும் தரப்பட வேண்டியவர்கள் என்கிற பொருளில் காந்தி ஜி தந்த ஹரிஜனர் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இந்த மதிப்புத் தரும் வார்த்தைகளை ஹரிஜனங்கள் பயன்படுத்தவிடாமல் கிறுத்துவ ஆங்கிலேயர்களின் வழியிலேயே செயல்பட்டார் அம்பேத்கார்.
அவர் தலித் என்கிற வார்த்தையைப் பிரபலமாக்கினார். ஆனால், நேருவின் அரசில் பதவியில் இருந்தபோது உருவான ஒரு படைப்பிரிவுக்கு தலித் என்கிற பொதுப்பெயர் வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
தனது ஜாதிப் பெயரான மகர் என்கிற பெயர்தான் வைக்கச் சொன்னார். இன்றும் இந்தியாவில் ஜாதிப் பெயரில் ஒரு படைப்பிரிவு இருக்கிறது என்றால் அது இந்த மகர் படைப்பிரிவு மட்டுமே.
எப்படி இனவெறியரான ஈவேரா பற்றிய உண்மைகளை பிசி, ஓபிசி, எம்பிசி ஜாதிக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமோ, அதைவிட அதிக அவசியம் அம்பேத்காரைப் பற்றித் தற்கால ஹரிஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதிலும் இருக்கிறது.
அம்பேத்கார் என்பவர் சுயநலத்தின் காரணமாக ஹரிஜனங்களுக்குச் செய்த துரோகத்தை அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியமான ஒன்று.
இனவெறியரான ஈவேராவால் யாரும் பெரிதாகக் கொல்லப்படவில்லை. ஆனால், இனவாதியான அம்பேத்காரால் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.
கடைசிவரை அந்தக் கொலைகளை அம்பேத்கார் கண்டித்ததாகத் தெரியவில்லை.
ஏனெனில், அம்பேத்காரின் சுயநலப்பார்வையில் அவர்கள் அவருடைய உயர்ந்த சாதியினரான மகர்கள் இல்லை. கேவலம் ஹிந்து நாமதாரி ஜாதிக்காரர்கள்.
இந்த அம்பேத்கார் பற்றி அந்தக் காலத்து ஹரிஜனங்கள் தெளிவாகவே அறிந்து இருந்தார்கள். எந்தத் தேர்தலில் முஸ்லீம் லீகோடு சேர்ந்துகொண்டு வெற்றிபெற அம்பேத்கார் ஆயிரக்கணக்கான ஹரிஜனங்களின் கொலைக்குக் காரணமானாரோ, அந்தத் தேர்தலில், ஹரிஜனங்கள் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில், அம்பேத்காரை ஹரிஜனங்கள் மிக மோசமாகத் தோற்கடித்தார்கள்.
அவருக்கு டெப்பாஸிட் கூட கிடைக்கவில்லை.
எனவே, அம்பேத்கார் பற்றிப் பேசுவது ஹரிஜனங்களின் மனத்தை பாதிக்கும் வருந்தச் செய்யும் என்கிற ஜல்லி வேண்டாம்.
இந்தக் காலத்தில் தமிழகத்தில் பறையர் ஜாதிக்காரர்கள் அம்பேத்கார்மேல் மிகுந்த பக்தியுடன் இருக்கிறார்கள். திருமாவளவன் வழியாக அம்பேத்காரின் இனவெறி திணிக்கப்படுவதாலும், அந்த இனவெறி அடிப்படையில் அவர்கள் தங்களை ஷத்திரிய மற்றும் பிராமணர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாகா இனத்தவராக கருதுவதாலும் அவர்கள் மட்டுமே அம்பேத்கார் பெயரை பக்தியுடன் உபயோகிக்கிறார்கள்.
தன்னுடைய மகர் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டும் என்று அம்பேத்கார் ஆங்கில அரசுக்கு எழுதும்போது மகாராட்டிரத்தில் மகர்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக, அவர்களது கொள்ளை கொலைகளுக்கு ஆதரவாக அவர்களது படைகளில் சேர்ந்தார்கள் என்பதை அம்பேத்கார் சுட்டுகிறார்.
அதன்மூலம் அப்போதே இந்த மகர் - பறையர் கூட்டு இனவெறிக்கு இந்திய எதிர்ப்பு வெறிக்கு அஸ்திவாரம் போட்டு இருக்கிறார்.
அதனாலும் பறையர் இனத்தவர்களிடம் மட்டுமே அதிக அளவில் அம்பேத்கார் பற்றிய மயக்கம் இருக்கிறது. மற்ற ஹரிஜன ஜாதிகளில் கிருத்துவத்துக்கு மதம் மாறிய பள்ளர்களிடமும் அந்த மயக்கம் சர்ச்சால் திணிக்கப்படுகிறது.
மற்றபடி ஹிந்து பள்ளர் இனத்தவர்களும், ஹிந்து சக்கிலியர் இனத்தவர்களும் அம்பேத்கார்மேல் அவ்வளவு பிடிப்புக் கொண்டவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கார் ஒரு மகாராஷ்டிரப் பறையர் இனத்தவர் என்பது போன்ற பார்வையே நிலவுகிறது.
தங்கள் ஜாதித் தலைவர்களுக்கு வரவேண்டிய மதிப்பும் மரியாதையும் கிடைக்காமல் போவதற்கு அம்பேத்கார் காரணம் என்று நினைக்கிறார்கள்.
இந்த நினைப்பு ஒன்றும் ஜாதிவெறியால் வந்தது இல்லை. வரலாற்று உண்மைகளில் இருந்து ஞானிகளான ஹரிஜனங்களுக்கு வந்த புரிதல் அது.
அம்பேத்கார் தன்னைத் தவிர மற்ற எந்த ஹரிஜனத் தலைவரையும் மதித்தது கிடையாது. அவர்களை மிக மோசமாக திட்டியும் வைதும் வந்தார்.
அதற்கு உதாரணம்,அம்பேத்காரால் இருப்பதிலேயே மிக மோசமாக திட்டப்பட்டவர் தமிழ்நாட்டு ஹரிஜனத் தலைவரான ராஜா அவர்கள்.
எனவே, பொதுவான சாதீயவெறியர்களின் புரிதலுக்கு மாறாக ஹரிஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அம்பேத்கார்மேல் அவர்கள் விலகல் கொண்டு இருக்கிறார்கள்.
பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் "அம்பேத்கார் எங்கள் முதுகில் குத்திய துரோகி" என்று என்னிடம் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
எனவே, அம்பேத்காரை அனைத்து ஹரிஜனங்களுக்கும் தலைவராக, நபியாகக் காட்டும் பொய் பிரச்சாரத்தை இங்கே செய்ய வேண்டியதில்லை.
அம்பேத்காரை முன்வைப்பதன் மூலம் பறையர் ஜாதி மற்ற ஹரிஜன ஜாதிகளைவிட "உயர்ந்த" ஜாதியாகக் காட்டப்படுகிறது.
எல்லா ஜாதியும் சமம் என்ற பேசுதல்கள் உண்மையானால் இங்ஙனம் பறையர் ஜாதீய வெறியைத் தூக்கிப்பிடிப்பது பொய்மை. அதன்மூலம் ஒரு புதிய இனவெறியை நுழைப்பது கயமை.
அந்தக் கயமையை ஒதுக்குவதும் ஒறுப்பதும் உண்மையானவரின் இயல்பு.