சாதுர்-வர்ண்யம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகச:|
"நான்கு வர்ணங்களான (பிரிவுகளான) ஸ்ருஷ்டியை நானே படைத்தேன். குணங்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே"
தஸ்ய-கர்தராமபி மாம் வித்த்யகர்தார-மவ்யயம்||
"அவைகளை படைத்தவன் நானே எனினும் நான் அழிவற்றவன், செய்கையற்றவன் என்பதை அறிவாயாக."
- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
புராணத்திலும், வேதங்களிலும், கீதையிலும் பிறப்பு எதுவாகிலும் ஒருவரது குணமும் செயல்களுமே அவர்களது வகையை
நிர்ணயிக்கிறது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
சரி இங்கே ஜாதி எங்கிருந்து வந்தது?
பொதுவாக மனிதர்கள் எதையுமே தனதாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவன். மனிதன் மட்டுமல்ல
ஏறக்குறைய அனைத்து விலங்குகளுமே தனது குட்டி, தனது இருப்பிடம், தனது வாழ்வெல்லை
என தனக்கு என்று எதையும் பகுத்து வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவை. இதனால்
பொதுவுடைமையாக எந்த ஒரு கருத்தையும் நீண்ட நாளைக்கு வைத்துக் கொள்ள முடியாது.
எல்லோருக்கும் பொது என்ற கம்யூனிஸமும் உடைந்து தூளாகிப்போவதும் மனிதர்களின்
இந்தப்போக்கினால் தான் என்பது உடைந்து போன கம்யூனிச நாடுகளே சாட்சி!
உதாரணமாக அரசு ஆட்சி என்பது அதிகாரக்கையிருப்பிற்கும், சுக போகத்தை அனுபவிப்பதற்கும்
அல்ல. சுயநலமில்லாத சேவையாக மக்களுக்கான தொண்டாகவே ஆட்சியை நடத்த வேண்டும்.
ஆனால் இந்த பரந்த பொதுவுடைமை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி அமைப்பு
அதை அனுபவித்தவர்களால் தமதாக்கப்பட்டு அதிகாரமும் அரசின் கஜானாவும் ஆள்பவனுக்குச்
சொந்தம் என்று மாறிவிடுகிறது. ஆள்பவன் தன்னை ஆண்டவன் என்றே அழைத்துக் கொள்ளத்
துவங்குகிறான். அவனது சந்ததிகளுக்கும் அத்தகைய சுகபோகங்களை கொடுக்கவும் அவர்கள் அதை விட்டுவிடக்கூடாது எனவும்
விரும்புகிறான். இவ்வாறு மனிதர்கள் எதையும் தமதாக்கிக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக
இருப்பதால் பொதுவான எதையும் தனதாக்கிக் கொண்டு காலப்போக்கில் அதையே தனது
அடையாளமாகக் கொண்டு விடுகிறான். அடுத்த சந்ததியினருக்கும் அதையே உரிமையாக்குகிறான்.
கீதையில் பிறப்பு எதுவாகிலும் ஒருவணது குணத்தையும் செயல்களையும் கொண்டே மனிதர்கள்
இன்ன வகையினர் என பிரிக்கப்படுகிறான். ஆனால் நாளடைவில் ஒருவன் தான் எந்த
பிரிவைச் சேர்ந்தவன் என்பதே தனது அடையாளமாகக் கொள்கிறான் என வைத்துக்கொள்வோம்,
அவனுக்கு குழு மனப்பான்மை உருவாகிறது. ஒரே வகையினர் ஒரு குழுவாக புழங்கத் துவங்குகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வர்ணத்தவர்களும் குழுவினர்கள் ஆயினர். பின்னர் குழுவினர்களுக்குள்
பிரிவுகள் அவர்களுக்குள் உட்பிரிவுகள் என்று உருவாகிறது. அவைகளே இன்றைக்கு
ஜாதிகள் என அடையாளம் காணப்படுகின்றது. குணங்களாக வகைப்படுத்தப்பட்டவை
காலப்போக்கில் ஜாதிகள் என்ற பெயருடன் குழுக்களானது பிரபஞ்ச இயக்கவிய லின் ஒரு
பன்பேயன்றி அது தனிப்பட்ட கடவுளால் அல்லது மதத்தினரால் பிரிக்கப்படுவதில்லை. அவைகள்
தானே உருவாகின்றனவே அன்றி உருவாக்கப்படுபவை அல்ல.
உதாரணமாக நிறமற்ற கடல் நீர் பரவி ஓடி பல இடங்களில் சேரும் போது அவை நிறைந்திருக்கும் மண்ணுக்கேற்ற
நிறத்தை பெறுகிறது. நீல நிறமாக, செந்நிறமாக, பச்சை நிறமாக கடல் தோற்றமளிக்கும். தாம் கொண்ட மண்ணின் நிறத்தை தாங்கி
நிற்கும் நீரை நீல ஜாதி நீர், சிவப்பு ஜாதி, நீர், பச்சை ஜாதி நீர் என்று அழைத்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் மனிதர்கள் வகைகளாகி வகைகள் குழுக்களாகி, குழுக்கள் ஜாதிகளாகி இருக்கின்றன.
எப்படி பரந்து விரியும் கடல் நீர் வெவ்வேறு நிறத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாதோ அதேபோலவே
மனிதர்களுக்குள் குழு உருவாவதையும் தவிர்க்க முடியாது. அவைகள் ஜாதிகளாவதும் காலத்தால் நிகழ்வதே
அன்றி தனி மனிதர்களாலோ அல்லது குழுக்களாலோ அல்ல! சரி அவை நிகழ்வதெப்படி?
உதாரணமாக குணத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை நல்லவன் , கெட்டவன் என்று பிரித்துக்
கூறுகிறோம். இவையெல்லாம் நல்ல குணங்கள்,
இவையெல்லாம் கெட்ட குணங்கள் என்று பிரித்து
நல்ல குணம் கொண்டவர்களை நல்லவர்கள் என்றும் கெட்ட குணம் கொண்டவர்களை
கெட்டவர்கள் என்றும் கூறுவதில்லையா! அப்படி ஒரு வகைப்படுத்தல் தான் வர்ணங்கள்.
பின்னாளில் குணங்களின் அடிப்படையில் நல்லவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்
அதையே தங்கள் குழு அடையாளமாகக் கொள்கிறார்கள். தங்களை
நல்லவன் ஜாதி என்றும் கெட்டவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தங்களை கெட்டவன் ஜாதி
என்றும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிறந்தவர்கள் அந்த ஜாதிக்காரர்கள்
என்றும்
அழைத்து அதையே வழக்கமாக்கிக் கொண்டால் அது ஜாதியாகி விடுகிறது. பிறகு
அதற்குள்ளேயே பிரிவுகளும் வந்து ஏற்றத்தாழ்வுகளும் வந்துவிடுகிறது.
நல்லவன் ஜாதிக்காரன் அதே ஜாதியில் திருமணம் செய்வார்கள். கெட்டவன் ஜாதிக்காரனும் அவ்வாறே!
உதாரனமாக டாக்டர் கம்யூனிட்டி, வக்கீல் கம்யூனிட்டி, சார்டர்ட் அக்கவுன்டன்ட் கம்யூனிட்டி, தொழிலாளர் கம்யூனிட்டி
என்று குழுக்கள் உருவாகிறது. டாக்டர் குழுவைச் சேர்ந்தவர்கள் டாக்டரையே மனமுடிக்க விரும்புவார்கள், வக்கீல் வக்கீலையும்
சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட் அதே குழுவிலும் தேடுவார்களே அதுபோல.
இவைகளில் ஏற்றத்தாவு எப்படி உண்டாகிறது. வக்கீல் குழுவிற்கும், போலீஸ் குழுவிற்கும் ஏன் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இவர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வு இருந்ததில்லையே? காலப்போக்கில் குழுக்களுக்கிடையே
உண்டாகும் முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகின்றனவே அன்றி இவற்றிர்கு தனிப்பட்டவர்கள் பொறுப்பாக முடியாது.
முரன்பட்ட எந்தக் குழுவிற்கும் ஏதாவது அடிப்படை ஞாயம் இருக்கலாம். ஆனால் அவைகள் உருவாவதும் களையப்படுவதும்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான் மக்களிடம் ஜாதிகள் உருவாகின. நல்லவன் ஜாதியில் பிறந்தவன் கெட்ட குணங்களோடும், கெட்டவன் ஜாதியில் பிறந்தவன்
நல்ல குணங்களோடும் இருக்க முடியும்! ஏனெனில் குணங்களின் வகைப் பெயர் தங்கி விட்டதே தவிற குணத்தால்
மனிதன் வகைப்படுத்தப்படவில்லை. அவ்வாறே அடிப்படையில் ஜாதிகள் கிடையாது. பின்னால் குழுமயமாக்கப்பட்டது.
ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் வேதத்தில் ஜாதி சொல்லியிருக்கிறது என்று இந்து தர்மத்தையே பழிக்கிறார்கள். ஞான
சூனியத்தின் அடையாளம்.
சரி, இவை எல்லாவற்றிர்கும் மேலாக ஜாதிகளை உண்டாக்கியதே பிராமணன் தான்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சட்டத்தை வகுத்தவனும் பிராமணனே என்றும்
எந்த ஆதாரமும் இல்லாமல் வாழும் மக்களுக்கிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து
வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அதை எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் குறைந்த பட்சம்
இந்து தர்மத்தை விளங்கிக்கொள்ளும் புத்தகங்களைக் கூட புரட்டிப் பார்க்காமல்
அவற்றை அப்படியே நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டங்களும் இருக்கின்றன.
தர்மத்தின் படி பார்த்தாலுமே ப்ராமணனுக்கு அரசாளும் பொறுப்பு வழங்கப்படவில்லை.
அரசை ஆள்பவனே சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொண்டவனாகிறான். அதிகாரம்
கையில் இல்லாத ஒருவன் சட்டத்தை இயற்றுவது சாத்தியமில்லாத போது பிராமணன்
ஏற்றத்தாழ்வுக்கான சட்டத்தை எப்படி இயற்றி இருக்க முடியும்?
ஒரே குற்றத்தைப் புரிந்த நால்வரில் ப்ராமணனே கடும் தண்டனையைப் பெற்றான் என்ற
இதிகாச நிகழ்வைப் பார்ப்போம்!
மகாபாரதத்தில் அரக்கு மாளிகையிலிருந்து உயிர் தப்பிய பாண்டவர்களை திருதிராஷ்டிரன்
வேண்டா வெறுப்பாக நாட்டிற்குள் மீண்டும் அழைத்து வருகிறான். நாட்டின் இளவரசர்
பட்டத்தை துரியோதனனுக்குக் கொடுப்பதா இல்லை யுதிஷ்டிரனுக்குக் கொடுப்பதா?
யாருக்குக் கொடுத்தாலும் எனக்குத் தானே தலைவலி என்று தலையில் கைவைத்து கருணாநிதி
போல அமர்ந்திருக்கிறான்.
அந்த நேரம் அரசவையில் ஒரு வழக்கு வருகிறது.
ஒரு பிராமனன், ஒரு சத்ரியன், ஒரு வைசியன், ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து
ஒருவனை கொன்று விடுகிறார்கள். மன்னர் இவ்வழக்கை விசார்க்கிறார். இந்த வழக்கிற்கான தீர்ப்பை
தனது மகன் துரியோதனன் கூறுவான் என்று கூறிவிடுகிறார். காரணம் துரியோதனன் சிறந்த
நீதிமான் எனவே அவனுக்கு இளவரசர் பட்டத்தை வழங்கலாம் என்று திட்டமிட்டார்.
துரியோதனன் எழுந்து "ஒருவனைக் கருணை இல்லாமல் கொலை செய்த இவர்கள்
நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்றான்.
ஆனால் குலகுருவாக இருந்த கிருபாச்சாரியார், யிதிஷ்டிரனுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது
அவசியம் என எடுத்துக்கூற திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க
அழைக்கிறார்.
யுதிஷ்டிரன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? சூத்திரனுக்கு நான்கு வருடம் கடுங்காவல்
தண்டனையும், வைசியனுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனையும், சத்ரியனுக்கு பதினாறு
வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறான். அதேநேரம் பிராமனருக்கு மரண தண்டனை
விதிக்கிறான். காரணம் சூத்திரன் ஞாய தர்மங்களை அறியமாட்டான், அதனால்
அவனுக்கு குறைந்த தண்டனையும், வைசியன் கொஞ்சம் விஷயஞானம் உள்ளவன் அதனால்
அவனுக்கு 8 வருடமும், நாட்டை காக்க வேண்டிய பொறுப்புள்ள க்ஷத்ரியன் அதற்கு எதிர்மாறாக
நடந்து கொண்டதால் அவன் செய்த தவறுக்கு இரு மடங்கு தண்டனையும்,
பிராமனன் ஞாய , தர்மம் தெரிந்தும், பாவ, புண்ணியங்கள் குறித்து உணர்ந்திருந்தும் குற்றம் புரிந்ததால்
அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்" என்றான்.
'யுதிஷ்டிரனின் தீர்ப்பு தர்மத்தின் வழியினதே' என்றுகுல குரு கிருபாச்சாரியார்
ஆமோதிக்கிறார். சிறந்த நீதிமானாக அவையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யுதிஷ்டிரனே
அந்நாட்டின் இளவரசராக அறிவிக்கப்படுகிறான்.
இங்கே நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட தீர்ப்பு கூட ஜாதியின்
அடிப்படையில் இல்லை. ஒருவனது வாழும் வகைக்கு எவ்வளவு விரோதமாக இருந்திருக்கிறான்
என்பதை மனதில் வைத்தே அவனுக்கு தண்டனையின் அளவு நிர்ணயிக்கப் படுகிறது. பிராமணன் என்பதால் பச்சாதாபம் காட்டப்படவில்லை. ப்ராமணன் என்பதால் தேவையற்ற மரியாதை கொடுக்கப்படவில்லை.
ஒரு வேளை பிராமணன் தண்டனைச் சட்டத்தை நிர்ணயித்திருந்தால் ஞாய, தர்ம, பாவ, புண்ணியங்கள்
அனைத்தும் அறிந்தவன் நான் என்பதால் நான் செய்வது எதுவும் குற்றமாகாது என்று
சட்டம் இயற்றி இருக்கலாமே! ஆனால் கடுமையான தண்டனையை அவன் பெறுகிறான்.
க்ஷத்ரியனால் விதிக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டு தண்டனையும் ஏற்கிறான்.
எனவே ஜாதீய ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வாழும் வகைக்கான சட்டங்களையும்
இயற்றியவன் ப்ராமணன் இல்லை என்பது இதிகாச ஆதாரங்களில் இருந்தே புலனாகிறது.
எனவே சமூகத்தின் ஜாதிகள் என்ற குழு மனப்பான்மை வாழும் மக்களுக்குள் காலப்போக்கில்
தானாகவே உருவானதாகவே இருக்குமேயன்றி தனி ஒரு மனிதர்களால் ஒரே கடவுளால் உருவாக்கப்படவில்லை
என்பதே நிதர்சனம்!
உலக நாடுகள் முழுவதிலும் ஒரே மதம் ஒரே கடவுள் என்றிருக்கும் மதத்தினருக்குள்ளும்
ஜாதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதே இதற்கு கண்கூடான சாட்சி!
ஆக இந்து தர்மத்தில் ஜாதிகள் போதிக்கப்படுவதில்லை, இந்துக்கடவுளரும் ஜாதிகளை உருவாக்கவில்லை என்பதே "நிஜம்"!
உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் இவற்றைத் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்வார்கள்
என்பதே "நிஜம்"!
நீங்கள் உண்மையான பகுத்தறிவு கொண்டவரா? அப்படியெனில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .....
"இந்து தர்மம் என்பது மனோவியலும், அறிவியலும், பகுத்தறிவும் ஆகும்"
28 comments:
நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். இன்று கூட இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி இந்துக்களையும் இந்து மரபையும் பூண்டோடு ஒழித்து தங்கள் மதத்தை மட்டும் இந்திய நாட்டில் நிறுவுவதையே தங்கள் குல தர்மமாக கொண்ட சிறுபான்மையினருக்காக ஒரு விதமாகவும், அடுத்தவர் வம்புக்கு போகாமல் தன சொந்த நாட்டிலேயே தன உரிமைகளை பெறுவதற்கு வழியின்றி தவிக்கும் ஒற்றுமைஅறிவே சிறிதும் இல்லாத,சொந்த மதத்தில் எவ்வளவுதான் பொக்கிஷம் போன்ற நல்ல விஷயங்கள் ஆக இருந்தாலும் அவற்றை எல்லாம் பரிகசிக்கும் செகுலர் வியதிக்கரர்களையும் தன்னகத்தே கொண்ட பாவிகளாகிய பெரும்பான்மையினருக்காக வேறு விதமாகவும் தான் இங்கே ஆட்சியையும் சட்டமும் ,தண்டனையும், மரியாதையும் அரசியல்வாதிகளால் தரப்படுகிறது.
Let me tell you the real fact,
there is no unity in Tamil Nadu, Inspite of Being an Tamilian, really i'm ashamed of this. and moreover, we the one who made them as big shot in politics, why? because we are seperated by Religion, Caste. One more point i like to notify, Even in Hindus we dont have unity, because of having rivals between castes. First We should be united then lets focus right things.
இந்து மதம் சாதிகளை உருவாக்கியதோ இல்லையோ, சாதிகள் மறைந்து போகாமல் பார்த்து கொண்டது என்பதும் உண்மைதானே. ஒருவன் பிறப்பிலே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்று பிரித்ததும் இந்து மதத்தின் சாதனை தான்.
தியான் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! //ஒருவன் பிறப்பிலே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்று பிரித்ததும் இந்து மதத்தின் சாதனை தான்// உயர்வு தாழ்வை உண்டாக்குவது மனிதன் தான். அதற்கும் தர்மம் காக்கும் மதத்திற்கும் நீங்கள் எப்படி சம்பந்தப்படுத்த முடியும்? பி ஏ படித்தவனை விட பி இ படித்தவன் உயர்ந்தவன் என்று இந்து மதம் சொன்னதா! ஆனால் பி ஏ படித்தால் ஐந்தாயிரம் சம்பளம் பி இ படித்தால் ஐந்து லட்சம் சம்பளம் என்ற உயர்வு தாழ்வை உருவாக்கியது யார்? எல்லா மனிதர்களுக்கும் அறிவு ஒன்றாக இருக்கும் போது படிப்பின் மூலம் வர்க பேதத்தை வளர்த்தது மதமா ? மனிதர்களா? இப்படி மனிதன் ஆதிக்க குணத்தாலும் தன்னைத்தானே எப்போதும் உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்ற குணத்தாலும் உண்டாக்கிய ஏற்றத்தாழ்விற்கு மதம் எப்படி பொறுப்பாகும்? மனிதனின் தவறுக்கும் மதத்தின் பொறுப்பேது?மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவன் இஸ்லாமியன் என்றாலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடல் கூடாது என்றும், அது மனிதன் செய்யும் தவறு. எனவே மதத்திற்கும் தீவிர வாதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று முஸ்லீம்கள் கூறினால் அப்போது மட்டும் பொத்துக் கொண்டு வக்காளத்து வாங்கும் உங்களைப் போன்ற போலி நடுநிலைமை வாதிகள், இந்துக்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வு மனிதர்களின் வாழும் முறையால் தாமாகவே உருவானது என்றும் இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினால் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பதேன்! கொலை பாதகத்தையே மதத்தின்பெயரால் செய்யும் போது அது மதத்திற்கு சம்பந்தமில்லை என்றால், மனிதர்கள் தமக்குள் உண்டாக்கி வைத்த ஏற்றத்தாழ்வுக்கு மட்டும் மதம் எப்படி பொறுப்பாக முடியும்? தீவிரவாதத்திற்கு மதமில்லை என்று முஸ்லீம்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு, காவி தீவிரவாதம் என்று கூறி தீவிரவாதத்திற்கு நிறம் உண்டு என்று புதிதாக கண்டுபிடிப்பு நடத்திய சிதம்பரத்தின் அயோக்கியத்தனமான பேச்சுக்கும் உங்கள் பேச்சுக்கும் வித்தியாசமில்லை!
1. For the welfare of humanity the supreme creator Brahma, gave birth to the Brahmins from his mouth, the Kshatriyas from his shoulders, the Vaishyas from his thighs and Shudras from his feet. (Manu's code I-31,)
2. God said the duty of a Shudra is to serve the upper varnas faithfully with devotion and without grumbling. (Manu 1-91) Manu is not satisfied with this. He wants this servile status of the Shudras to be expressed in the names and surnames of persons belonging to that community. Manu says:
3. Let the first part of a Brahman’s name denote something auspicious, a Kshatriya’s be connected with power, and a Vaishyas with wealth but a Shudra’s express something contemptible. (Manu II. 31.)
4. The second part of a Brahmin’s name shall be a word implying happiness, of a Kshatriya’s (a word) implying protection, of a Vaishya’s a term expressive of thriving and of a Shudra’s an expression denoting service. (Manu II. 32.)
5. A hundred year old Kshatriya must treat a ten year old Brahmin boy as his father. (Manu 11-135)
6. The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu II2).
7. He who instructs Shudra pupils and he whose teacher is a Shudra shall become disqualified for being invited to a shradha. (Manu III. 156.)
8. A Shudra is unfit of receive education. The upper varnas should not impart education or give advice to a Shudra.It is not necessary that the Shudra should know the laws and codes and hence need not be taught. Violators will go to as amrita hell. (Manu IV-78 to 81)
9. "Let him not dwell in a country where the rulers are Shudras." (Manu IV. 61)
10. He must never read the Vedas in the presence of the Shudras. (Manu IV. 99.)
11. Any country, where there are no Brahmins, of where they are not happy will get devastated and destroyed. (Manu VIII-20 to 22)
12. A Brahmana who is only a Brahman by decent i.e., one who has neither studied nor performed any other act required by the Vedas may, at the king’s pleasure, interpret the law to him i.e., act as the judge, but never a Shudra (however learned he may be). (Manu VIII. 20.)
13. The Kingdom of that monarch, who looks on while a Shudra settles the law, will sink low like a cow in the morass. (Manu VIII. 21.)
14. Any Brahmin, who enslaves or tries to enslave a Brahmin, is liable for a penalty of no less than 600 PANAS. A Brahmin can order a Shudra to serve him without any remuneration because the Shudra is created by Brahma to serve the Brahmins. Even if a Brahmin frees a Shudra from slavery the Shudra continues to be a slave as he is created for slavery. Nobody has the right to free him. (Manu VIII-50,56 and 59)
mubarak ho bai. vapas agaye!
//For the welfare of humanity the supreme creator Brahma, gave birth to the Brahmins from his mouth, the Kshatriyas from his shoulders, the Vaishyas from his thighs and Shudras from his feet. (Manu's code I-31,) // சரி இந்த நான்கும் ஜாதிகள் இல்லையே! கட்டுரையின் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் குதர்க்கமாக ஏதேதோம் மேற்கோள்காட்டுகிறீர்கள். குணத்தின் அடிப்படையில் வகைப்பட்டவர்கள் இனங்களாக மாறினர். இனங்களாக மாறிய காலத்தில் உருவான மனுவானவன் அந்த சமூகத்திற்குத் தேவையான ஒரு சட்டத்தை இயற்றி இருக்கலாம். அது மனுஸ்மிரிதி (மனிவின் சட்டங்கள்) என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமக கருணாநிதி ஒரு மனு என்று வைத்துகொள்ளுங்கள். அவர் பிராமணர்களுக்கு வேலை கொடுக்க கூடாது. பிராமணர்களுக்கு கல்வி கூடங்களில் இடம் அளிக்ககூடாது. நன்றாக படித்த பிராமணனை விட, மோசமான அறிவே இல்லாத பிறஜாதிக்காரன் கல்வி கற்கத் தகுந்தவன். (மனுச்சட்டதிற்கு எதிர்ச்சட்டம்? மனு பிராமணனா என்று கூட தெரியாது. அவன் க்ஷத்ரியனாகவும் அதாவது வேறு ஜாதியாகவும் இருக்கலாம்)இந்துக்களை அவமானம் செய்ய வேண்டும். முஸ்லீம்களை மட்டுமே செல்லம் கொஞ்ச வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத சட்டம் இயற்றி இருப்பதை போல.
பின்னால் சமூகத்தில் மாறுபாடுகள் உண்டான போது அந்த மனுச்சட்டங்கள் நீர்த்துப் போய் வழக்கில் இல்லாமலும் போனது. நீங்கள் மேற்கோள் காட்டி இருக்கும் இந்த மனுசட்டங்களைப் பற்றி இன்றைக்கு வேதம் ஓதும் பிரமணர்களுக்கே தெரிவது அபூர்வம் தான். இக்காலத்தில் இந்த மனு சட்டத்தை யாரும் பின் பற்றுவதும் கிடையாது. உங்களைப் போன்ற முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், நாத்திக அரசியல் வாதிகளும் சேர்ந்து தான் இவற்றை தூசி தட்டி படித்து மனப்பாடம் செய்து இந்துக்களிடம் ஜாதிப்பிரிவை வளர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
இதெல்லாம் சரி, அழிந்து போன மனுச்சட்டமே உங்களை இவ்வளவு பாதிக்கிறதே,இதை விட கொடுமையான விஷயங்களைக் கூறும் ஷரியத் சட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்?
1) முஸ்லீமாக பிறந்து பின் இஸ்லாத்தை மறுப்பவரை கொல்ல வேண்டும் (Apostates must be killed).
ஓரினச் சேர்க்கை பாலுறவில் (Homo Sex) ஈடுபடுவோர் கொல்லப்பட வேண்டும்.
(2) இஸ்லாமிய மத புத்தகங்களையோ, முகமது நபியையோ விமர்சிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் (Blasphemy).
(3) திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். (4) ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.வழக்குகளில் பெண்ணின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்தில் பாதி அளவு மதிப்புடையதாகவே கருதப்பட வேண்டும். மத புத்தகங்களில் பல கட்டமைப்புகள் இருந்தாலும் கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய “தலாக்” என்று மூன்று முறை கூறிவிட்டாலே போதும் என்று துஷ்பிரயோகம் செய்யப்படுகிறத் தேவையான சட்டங்கள்.
“இசை” சாத்தானின் விளையாட்டு. ஆகவே அதை அனுமதிக்க கூடாது.
(8) யூதர்கள் பன்றிகளின் வம்சத்தவர்கள். அவர்களுடனோ மற்ற மதத்தினருடனோ எந்த உறவும் கூடாது.
9) உலகம் முழுவதும் இஸ்லாத்தை பரப்ப வேண்டும். அதற்காக ஜிஹாத்செய்ய வேண்டும்.மதம் மாறவோ, அல்லது இஸ்லாத்திற்கு கீழ்படிவதையோ ஏற்க மறுப்பவர்கள் கொல்லப்பட வேண்டும்."
இத்தகைய கொடிய சட்டத்தை கொண்டு இயங்கும் உங்களோடு பிற மதத்தவர் வாழ்வது கத்தியை பிட்டத்தில் சொறுகிக்கொண்டு உட்கார்ந்த மாதிரி இல்லையா?
நீங்கள் பன்முகத்தன்மையையும் (Diversity) சாதி அடிப்படையிலான ஒதுக்குதலையும் (Caste based Discrimination) ஒன்றாகப் பேசி குட்டையை குழப்ப முயற்சிக்கிறீர்கள். இது ஒருபோதும் எடுபடாது.
பன்முகத்தன்மை என்பது இயல்பானது, நியாயமானது. அதில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஒருவரை ஒருவர் சுரண்டும் வாய்ப்பு குறைவு. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள இனக்குழுக்கள் இத்தகையவை. இந்தியாவில் மொழிவாரி தேசிய இனங்களையும் இதனுடன் ஒப்பிடலாம்.
ஆனால், சாதி என்பது பன்முகத்தன்மை அல்ல. அது நியாயமானதோ, இயல்பானதோ அல்ல. சாதி என்பது அடக்குமுறை மற்றும் சுரண்டலின் மறுவடிவம். அது இந்தியாவில் குறிப்பாக இந்துமதத்தில் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
பன்முகத்தன்மையைக் காப்பது மனித உரிமையைக் காக்கும் செயல். ஆனால், சாதியைக் காப்பது மனித உரிமைக்கு எதிரான செயல்.
//பன்முகத்தன்மையைக் காப்பது மனித உரிமையைக் காக்கும் செயல்//
எதை பன்முகத்தன்மை என்று குறிப்பிடுகிறீர்கள்? பிடிவாதமாக எதையோ சொல்லவேண்டுமே என்று போட்டு சொதப்புகிறீர்கள். சரி, இவ்வளவு பேசுகிறீர்களே! இந்த நாள் முதல் நான் வன்னியர் இல்லை என்று அரசாங்கத்திடம் எழுத்துமூலம் அறிவித்து நீங்கள் உங்கள் ஜாதியிலிருந்து விலகிவிட வேண்டியது தானே! இந்து மதமோ
பார்பனர்களோ உங்களை கட்டாயப்படுத்தவில்லையே! பிறகு ஏன் இன்னும் வன்னியர் ஆதரவு பிரசாரங்கள் செய்து கொண்டும் வன்னியராக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டும் இருக்கிறீர்கள்! ஜாதிக்கொடுமை பற்றி பேசும் எல்லோரும் அவரவர் ஜாதிகளை துறந்து விடுங்களேன் உங்களை யார் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
அரசாங்க அனுகூலங்களுக்காக இன்றைக்கும் ஜாதிகளைத் தூக்கிப் பிடித்து மதமே மாரிவிட்டால் கூட விடாமல் அந்த ஜாதியைப் பிடித்துக்கொண்டிருக்கும் கேவலத்தை நீங்களே தானே செய்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு இந்து மதம் என்ன செய்யும், பார்ப்பனர்கள் தான் என்ன செய்வார்கள்? இன்றைக்கு அனுகூலங்களைக் காட்டி ஜாதியை வளர்ப்பது அரசாங்கம் தானே ஒழிய இந்து மதமோ பார்ப்பனர்களோ அல்ல!
hayyram said...
// //ஏன் இன்னும் வன்னியர் ஆதரவு பிரசாரங்கள் செய்து கொண்டும் வன்னியராக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டும் இருக்கிறீர்கள்! ஜாதிக்கொடுமை பற்றி பேசும் எல்லோரும் அவரவர் ஜாதிகளை துறந்து விடுங்களேன் உங்களை யார் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?// //
பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் அல்ல. மாறாக, பார்ப்பனராக இருப்பதே முன்னிலைக்கு காரணமாக இருக்கிறது.
வன்னியர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் போதாமை அல்ல. மாறாக, வன்னியராக இருப்பதே பின் தங்கிய நிலைக்கு காரணமாக இருக்கிறது.
இதுகுறித்து வரலாற்று பூர்வமாக விளக்க வலைப்பூ போதாது, நேரமும் இல்லை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் நூல்களைப் படித்தால் விளக்கம் கிடைக்கும்.
கூடவே, Caste-Based Reservations And Human Development In India, by K. S. Chalam எனும் நூலைப் படியுங்கள். (www.flipkart.com - ல் கிடைக்கிறது. விலை ரூ. 294)
நாங்கள் வன்னியருக்காகப் பேசுவது சாதி வெறிக்காக அல்ல, சாதி உரிமைக்காகத்தான். "வன்னியர்கள் ஒன்றுதிரண்டு, தமது மக்கள்தொகைக்கேற்ப அனைத்திலும் இடம்பிடிக்க வேண்டும், உரிமை பெறவேண்டும்" என்பது - சாதியை காப்பாற்ற அல்ல. சாதியால் ஏற்பட்ட இழிநிலையை அகற்றத்தான்.
நீங்கள் விரும்புவது போல - "நான் வன்னியர் இல்லை" என்று கூறிக்கொள்வதன் மூலம், வஞ்சிக்கப்பட்ட வன்னியர்களுக்கு விடுதலைக் கிடைக்காது. "நாங்கள் வன்னியர்" என்று அழுத்திக்கூறுவதன் மூலம்தான் விடிவு கிடைக்கும். இதுபோன்று, ஒடுக்கப்பட்ட அனைத்துசாதியினரும் தத்தமது சாதியை உயர்த்திப்பிடிப்பதன் மூலமே விடுதலை பெற முடியும். (கூடவே, இந்துத்வ தீவிரவாதத்திற்கும் இதுவே சரியான மாற்றாக அமையும்.)
ஒடுக்கப்பட்ட மக்கள் விகிதாச்சார உரிமை பெறுவது ஒன்றே சாதியை ஒழிக்க ஒரே வழி. வேறு வழியே இல்லை.
(உங்களால் முடிந்தால், மணமக்கள் தேவை விளம்பரத்திலிருந்து சாதியை எடுத்துக்காட்டுங்களேன். சாதிபார்த்து திருமணம் செய்வோரை சிறையில் தள்ள சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார் தந்தை பெரியார். இதற்கு பார்ப்பனர்கள் ஒப்புவார்களா?)
//பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் அல்ல,வன்னியர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரம், கல்வி, அதிகாரத்தில் மிக தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் - தனிமனித திறன் போதாமை அல்ல. //
ஒதுக்கீட்டுப் பிச்சை மானாவாறியாக கிடைத்தும் நம்மால் உயர முடியவில்லை என்ற வயிற்றெரிச்சல் அல்லது ஒதுக்கீடு இல்லாமல் சிலர் உயர்ந்த நிலையில் இருப்பதை பார்த்து வயிற்றெரிச்சல் மட்டுமே உங்கள் இந்த வரிகளில் தெரிகிறது. அன்புமணி கொல்லைப்புறம் வழியாக மந்திரி ஆனது வன்னியர் பின்புலத்தால் அல்லாமல் தனிமனித திறனா என்ன? சமையல்கார பார்ப்பனர்கள், பாடா கடையில் கால்களுக்கு ஷூ மாட்டி விடும் பார்ப்பனர்கள், ஆபீஸ்பாயாக வேலை பார்க்கும் பார்ப்பனர்கள், ஹோட்டல்களில் சர்வராக இருக்கும் பார்ப்பனர்கள், லாட்ஜ்களில் ரூம்பாயாக இருக்கும் பார்ப்பனர்கள், ஆட்டோ ஓட்டும் பார்ப்பனர்கள் , மைலாப்பூர் தெப்பகுளத்தில் பிச்சையெடுக்கும் பார்ப்பன தாத்தா, பாட்டிகள் எல்லாம் பார்ப்பனராக இருந்தும் ஏன் நீங்கள் சொல்வதைப் போல் உயர்ந்த நிலையில் இல்லை? அவற்றை கவனிக்க தவறும் அளவு உங்கள் கண்களுக்கு கோளாறு இருந்தால் அன்புமனிஅல்லாத நல்ல மருத்துவரைப் பார்த்து குணப்படுத்திக் கொள்ளுங்கள்.//இதற்கு பார்ப்பனர்கள் ஒப்புவார்களா?// சட்டம் என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் ஒப்பித்தானே ஆக வேண்டும். சரி, உங்கள் ராமதாஸ் ஐயாவிடம் சொல்லி தைரியம் இருந்தால் அப்படி சட்டத்தைப் போடுங்களேன் பார்க்கலாம்! பார்ப்பனர் மட்டும் ஜாதி பார்த்து திருமணம் செய்திருந்தால் போட்டிருப்பீர்கள். மற்றவர்களும் ஜாதி பார்க்கிறார்கள் என்பதால் சட்டம் இயற்றாமல் சும்மா உதார் மட்டும் விடுகிறீர்கள்! மொத்தத்தில் ஜாதியை விடமாடாமல் இருப்பதற்கு நீங்கள் சப்பைகட்டு காரணங்கள் கூறுகிறீர்கள்! எல்லா மக்களுமே இன்று முதல் ஜாதியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டால் அதன் பிறகு ஏது ஜாதி ஏது பிரச்சனை? அனைவரும் ஜாதியை விட்டு விலகிவிடுங்கள். ஓனானை மடியில் கட்டிக்கொண்டு குத்துதே குடையுதே என்று கத்திக்கொண்டிருப்பது என்ன பகுத்தறிவு. அறிவே அற்ற செயல். எல்லோரும் அவரவர் ஜாதியிலிருந்து விலகிவிட்டால் பார்ப்பனரையும் ஜாதியிலிருந்து விலகச்செய்வதும் சுலபம. தமிழக மக்கள் தொகையில் 1.5% மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் ஜாதியை விடுவதும், விடச்செய்வதும் ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே. பிறகு ஜாதீய ஏற்றத்தாழ்வோ ஜாதிக்கொடுமைகளோ இருக்கப்போவதில்லையே! அதை முதலில் உங்களில் இருந்து ஆரம்பியுங்கள். நீங்களும் உங்கள் தலைவர் ராமதாஸும் இந்த புரட்சியை முதலில் செய்யுங்கள் பார்க்கலாம்! வன்னியர்களை காப்பாற்ற வந்த தலைவன் நான் தான் என்று கூறி சப்பைக்கட்டு கட்டாமல் ஜாதியிலிருந்து விலக முடிந்தால் நீங்கள் மற்றவரை குறை கூறும் தகுதி படைக்கிறீர்கள்! இல்லையேல் ஜஸ்ட் ஷட் அப்!
// //எல்லா மக்களுமே இன்று முதல் ஜாதியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டால் அதன் பிறகு ஏது ஜாதி ஏது பிரச்சனை?// //
இது சும்மா உதார் விடும் சாக்கு. சாதியைக் கைவிடுவதால், சாதிரீதியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்துவிடாது.
அடுத்தவனை ஏய்த்து சுரண்டி கொழுத்தவன் அப்படியே தொடர்வதற்கும் - அவனால் ஏய்க்கப்பட்டு, சுரண்டப்பட்டவன் இழிநிலையிலேயே இருப்பதை நீட்டிக்கவும் செய்யப்படும் சதி இது.
பார்ப்பனர்களுக்கு பயன்பட்டால் சாதி தேவை - அதுவே பலவீனமாக மாறும்போது தேவையில்லை என்பது நாணயமற்ற சுத்த அயோக்கியத்தனமான பேச்சு.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்து முடியட்டும். அப்போது உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்..
whatever i told i showed proof from manutharmam, same i need proof tell me where it is written in quran without proof no one cannot accept
previously i ask you to read quran, ithink still u didnt read quran thatswhy you wrote some thing false about quran
the thing which u mentioned is not written in quran. simply u want to critisize other relegions thatshall. you replied for one versus only why not replied for another versus in manutharmam
Hi Hayram,
Hope you're doing well. I 100% agree what you said. I am a Yoga Teacher but i born as a Sudras(SC). Nobody treat me like a dog. people who are in spiritual path can understand about this, we need to bring more people into knowledge(spiritual path).
Hi Arul,
Hope you're doing well. what are you going to achieve to call yourself,i am from this, i am from that, who told Brahmin are great and sudras are useless. don't call yourself as a useless. everyone should realize that we are humanbeing that's what hayram written in his blog. we have to follow dharma and we are not going to achieve being calling our self as useless. Please don't read the British painted Hinduism. we have to go deeper and deeper and deeper to find our self. self realization is the only way.
this is for you and others
http://dalitheritage.blogspot.com/
//பார்ப்பனர்களுக்கு பயன்பட்டால் சாதி தேவை - அதுவே பலவீனமாக மாறும்போது // இப்போது பார்பனர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா? நீங்களே பார்ப்பனர்கள் மேன்மை நிலையில் இருப்பதாக ஒரு முறை கூறுகிறீர்கள். இப்போது பார்ப்பனர்கள் பலவீனமாக இருப்பதால் ஜாதி தேவையில்லை என்றுரைப்பதாக கூறுகிறீர்கள். என்ன தான் உங்கள் குழப்பம்?
//அடுத்தவனை ஏய்த்து சுரண்டி கொழுத்தவன் அப்படியே தொடர்வதற்கும் - அவனால் ஏய்க்கப்பட்டு, சுரண்டப்பட்டவன் இழிநிலையிலேயே இருப்பதை நீட்டிக்கவும் செய்யப்படும் சதி இது.// ஓஹோ! அப்படி என்றால் ராமசாமி நாயக்கர் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியது அவரால் ஏய்க்கப்பட்டு, சுரண்டப்பட்டவன் இழிநிலையிலேயே இருப்பதை நீட்டிக்க செய்த சதியா? ராமசாமியார் நாயக்கரின் ஜாதி ஒழிப்பு உங்கள் கண்ணோட்டத்தில் சுயநலமா? நான் ஏதோ அவரைப் பற்றி பெரிதாக நினைத்திருந்தேனே அருள்!
அருள், பிடிவாதத்திற்கும் சைக்கோ தனத்திற்கும் மயிறிழை தான் வித்தியாசம். காலத்திற்கேற்ப பிடிவாதம் மாற்றமடையாவிட்டால் அது சைக்கோத்தனம். நீங்கள் சைக்கோத்தனம் முற்றும் முன்பாக குணப்படுத்திக் கொள்ளுங்கள்!
//சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்து முடியட்டும். அப்போது உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்..// உங்களுக்கும் தான். ஆல் தி பெஸ்ட்!
வருகைக்கு நன்றி முபாரக். நீங்கள் கொடுத்தவற்றில் முதல் பத்திக்கு மட்டும் பதில் கூறிய காரணம் அடிப்படையையே தவறாக புரிந்து கொண்டீர்கள் என்பதை வெளிப்படுத்தவே! மற்றபடி உங்களிடமிருந்து மத, பார்ப்பன துவேஷம் மட்டும் தான் வெளிப்படுகிறது. மேலும் நான் முன்னமேயே கூறிவிட்டேன். எனக்கு குரான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஷரியத் சட்டம் பற்றி உங்கள் இமாம்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்! அது பற்றி தெரியாத குழந்தை மனதுக்காரராக நீங்கள் இருந்தால் அப்படியே தொடருங்கள். இறைவன் உங்களுக்கு அமைதியான வாழ்வை அளிப்பாராக!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. magesh.
// we need to bring more people into knowledge(spiritual path). //
உண்மை அதைத்தான்முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஐயா நாம் தொழும் நாயன் மார்களிலேயே பார்ப்பனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இறைவனிடம் அனைத்து ஜாதிக்காரர்களுமே நெருக்கமாகத்தான் இந்து தர்மத்தில் இருந்திருக்கிறார்கள். பிற்பாடு வந்த வெள்ளையர்கள் பிரிவினையை உண்டாக்கி அதன் பழியை மதத்தின்மீது பூசி விட்டனர். அதை ஆட்டு மந்தை ஜனங்களும் அப்படியே நம்பினர். இன்னும் தெளியவில்லை. நாயன் மார்களின் ஜாதியைப் பற்றி பார்ப்போம்!
சிவநெறி பூண்ட நாயன்மார்கள் பட்டியல் ஒரு பார்வையில்
எண் பெயர் குலம்
1 அதிபத்தர் பரதவர்
2 அப்பூதியடிகள் அந்தணர்
3 அமர்நீதி நாயனார் வணிகர்
4 அரிவட்டாயர் வேளாளர்
5 ஆனாய நாயனார் இடையர்
6 இசைஞானியார் ஆதி சைவர்
7 இடங்கழி நாயனார் செங்குந்தர் குல குறுநில மன்னர்
8 இயற்பகை நாயனார் வணிகர்
9 இளையான்குடிமாறார் வேளாளர்
10 உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்
11 எறிபத்த நாயனார் செங்குந்தர்
12 ஏயர்கோன் கலிகாமர் வேளாளர்
13 ஏனாதி நாதர் சான்றார்
14 ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர்
15 கணநாதர் அந்தணர்
16 கணம்புல்லர் செங்குந்தர்
17 கண்ணப்பர் வேடர்
18 கலிய நாயனார் செக்கார்
19 கழறிற்ற்றிவார் அரசர்
20 கழற்சிங்கர் குறுநில மன்னர்
21 காரி நாயனார் செங்குந்தர்
22 காரைக்கால் அம்மையார் வணிகர்
23 குங்கிலியகலையனார் அந்தணர்
24 குலச்சிறையார் மரபறியார்
25 கூற்றுவர் செங்குந்தர் குல குறுநில மன்னர்
26 கலிக்கம்ப நாயனார் வணிகர்
27 கோச் செங்கட் சோழன் அரசன்
28 கோட்புலி நாயனார் வேளாளர்
29 சடைய நாயனார் ஆதி சைவர்
30 சண்டேஸ்வர நாயனார் அந்தணர்
31 சத்தி நாயனார் வேளாளர்
32 சாக்கியர் வேளாளர்
33 சிறப்புலி நாயனார் அந்தணர்
34 சிறுதொண்டர் சாலியர்
35 சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்
36 செருத்துணை நாயனார் வேளாளர்
37 சோமசிமாறர் அந்தணர்
38 தண்டியடிகள் செங்குந்தர்
39 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர்
40 திருஞானசம்பந்தமூர்த்தி அந்தணர்
41 திருநாவுக்கரசர் வேளாளர்
42 திருநாளை போவார் புலையர்
43 திருநீலகண்டர் குயவர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர்
45 திருநீலநக்க நாயனார் அந்தணர்
46 திருமூலர் இடையர்
47 நமிநந்தியடிகள் அந்தணர்
48 நரசிங்க முனையர் செங்குந்தர்
49 நின்றசீர் நெடுமாறன் அரசர்
50 நேச நாயனார் சாலியர்
51 புகழ்சோழன் அரசர்
52 புகழ்த்துணை நாயனார் ஆதி சைவர்
53 பூசலார் அந்தணர்
54 பெருமிழலைக் குறும்பர் செங்குந்தர்
55 மங்கையர்க்கரசியார் அரசர்
56 மானக்கஞ்சாற நாயனார் வேளாளர்
57 முருக நாயனார் அந்தணர்
58 முனையடுவார் நாயனார் வேளாளர்
59 மூர்க்க நாயனார் வேளாளர்
60 மூர்த்தி நாயனார் வணிகர்
61 மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
62 வாயிலார் நாயனார் வேளாளர்
63 விறன்மிண்ட நாயனார் வேளாளர்
உண்மை இப்படி இருக்கும் போது இந்து தர்மத்தில் ஜாதியால் உயர்வு தாழ்வு ஏது?
hayyram said...
// //1. இப்போது பார்பனர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா? நீங்களே பார்ப்பனர்கள் மேன்மை நிலையில் இருப்பதாக ஒரு முறை கூறுகிறீர்கள். இப்போது பார்ப்பனர்கள் பலவீனமாக இருப்பதால் ஜாதி தேவையில்லை என்றுரைப்பதாக கூறுகிறீர்கள். என்ன தான் உங்கள் குழப்பம்?
2. ராமசாமி நாயக்கர் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியது அவரால் ஏய்க்கப்பட்டு, சுரண்டப்பட்டவன் இழிநிலையிலேயே இருப்பதை நீட்டிக்க செய்த சதியா? ராமசாமியார் நாயக்கரின் ஜாதி ஒழிப்பு உங்கள் கண்ணோட்டத்தில் சுயநலமா? // //
1. நான் பார்ப்பனர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று கூறவில்லை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் காலத்தில் சாதி என்கிற அடையாளம் பார்ப்பனர்களுக்கு பலமாக இருந்தது. ஆனால், இன்று ஒடுக்கப்பட்ட சாதியினர் எழுச்சி பெற சாதியே காரணமாக மாறும்போது - உங்களுக்கு அதுவே பலவீனமாக மாறிவிட்டது.
அதாவது முன்பு உங்களின் பலம் என்று கருதப்பட்ட சாதி இன்று பலவீனமாகிவிட்டது. இதனை பார்ப்பனர்கள் பலவீனமாகிவிட்டார்கள் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.
2. தந்தை பெரியார் என்ன கூறினார் என்பதை கொஞ்சமாவது அறிந்து பேச முயலுங்கள். ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்களது சாதி அடிப்படையில் ஒன்றுதிரண்டு சாதி அடிப்படையில் உரிமைகேட்பதை பெரியார் ஆதரித்தார். அத்தகைய சாதி மாநாடுகளில் அவரே கலந்து கொண்டதும் உண்டு.
சாதி ஆடிப்படையில் உரிமை கேட்பது குறித்து பெரியாரின் சில கருத்துகள் இதோ:
"""நமது நாட்டில் பல வகுப்புகளிருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கிறதா? தேசத்தில் வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்கமிருக்கிறதா என்பதைக் கவனித்து, வேலை செய்தால், அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டுவந்ததாகும். (தந்தை பெரியார், குடிஅரசு 14.02.1926).
""வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப்பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத்துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும்." (தந்தை பெரியார், குடிஅரசு 22.9.1940).
"ஒவ்வொரு வகுப்பாருக்கும் இத்தனை உத்தியோகங்கள்தாம் என்று திட்டவட்டமாக வரையறுத்துவிட வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்டு எவராவது, எந்த வகுப்பினராவது ஓர் ஆள் அதிகமாக உத்தியோகம் பார்த்தால் அவர்மீது துராக்கிரத ஆக்கிரமிப்புக் குற்றம் சாட்டப்பட்டு, அவனுக்கு வேலை கொடுத்தவனுக்கு நாணயக் குறைவுக் குற்றம் சாட்டியும் அதற்கான தண்டனையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும், எல்லா வகுப்பினரும் சமநிலை எய்தமுடியும்.
இல்லையேல், மேலே இருப்பவர்கள் இன்னும் உயர உயர போய்க்கொண்டே இருக்க - தாழ்ந்த நிலையில், சமுதாயத்தின் அடித் தளத்திலேயே வேதனையுறுவோர், மேலும் மேலும் தாழ்ந்து அழிந்து போகவேண்டிய நிலைமைதான் ஏற்படும்.""" (தந்தை பெரியார், குடிஅரசு 17.8.1950)
அருள், பிடிவாதத்திற்கும் சைக்கோ தனத்திற்கும் மயிறிழை தான் வித்தியாசம். காலத்திற்கேற்ப பிடிவாதம் மாற்றமடையாவிட்டால் அது சைக்கோத்தனம். நீங்கள் சைக்கோத்தனம் முற்றும் முன்பாக குணப்படுத்திக் கொள்ளுங்கள்! உங்களுடன் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. ராமசாமி பற்றி நீங்கள் எழுதியதால் நானும்.
//ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.
காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு - வீரமணி)//
//சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)
நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?
‘தாழ்த்தப்பட்டவர்கள் - சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் - பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.
சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் - இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.
48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
//
மேலும் படிக்க::
http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/
After reading your comment, i am really surprised and feel pity for your innocence in the caste based reservation policy in education and other government sectors. So from your statement you are saying Brahmins are forward in terms of money, power and economy and this is not because of their individual skills. Then what else would be the reason, have u think about the same anytime. Definetely one person will be famous and powerful just because he is a brahmin. Hmmm let me quote the current educational system in Tamilnadu. The 67% of seats in Medical and Engineering colleges are reserved for BC, MBC (DNC This is a sebsect in MBC), SC and ST. 33% is for OC, which is open category and any one from the caste mentioned above can come in the radar of 37% if he/she is capable. Please check that there is no specific reservation for Brahmins or other Forward Community Hindus. Ok Let us assume there are 100 seats in Tamilnadu for Medical. In that 33 will be for Open Competition and 67 is for Others. This 33 seats needs to be shared along with the other caste people who are falling under the radar of OC in terms of marks and not in terms of position. Contrastingly the position reserved for that guy will be empty and that cannot be filled by an OC candidate though he had the skills.
Let’s assume a Brahmin Boy got 295/300 in Medical and a non-brahmin got 294.5/300. Both will get the seat, but the later one will get the seat from the OC group. Unfortunately let’s assume that 33 seats are filled with the last Non-Brahmin candidate. This will deny a medical seat to a Brahmin boy who has scored 294.25/300. The seat which is reserved for that Non-Brahmin student will be kept vacant and it will give way to another backward class people and not the Brahmins as you said. As a result of this cut-off fission, many backward class people who got lower marks than the Upper caste people are selected for Medical and Engineering. Now also are you saying Brahmins are forward not because of their individual skills. Remember one thing, after getting denial of service like the one mentioned above, a Brahmin is in superior Power/Post means he is having the passion on the things that he do. A guy studied with me has got lower cut-off mark than me and he studied in REC because he got the seat in MBC quota. But as a Brahmin me and some of my other friends got in to the Private Engineering colleges. The guy who got a seat in REC has not cleared many subjects till the last year and he cleared in the subsequent years after the course completion. He said he is not inetersted inEngineering instead he wants to do some business, but just for the compulsion of his parents and he has taken the seat. He was having around 12-17 arrears at the time course completion and I don’t even know whether he has completed the same. What to say on this.
Please read the line in one of my first comment "Definetely one person will be famous and powerful just because he is a brahmin." as "Definetely one person won't be famous and powerful just because he is a brahmin."
Take Mr.Abdul Kalam for example, he is not a brahmin, but he has passion towards learning and knowledge and thats why he is at this height. There is a famous saying "A great leaders courage to fulfill his dreams comes from the passion and not position". This is applicable for everyone in this society. So i would rather prefer an open competition in the education system and make sure who is really passionate about what he wants to do will come and do the work and prove themselves. Lets take the example of your leader Dr.Ramadoss, is he a brahmin, how he can come to the power of leading the vanniyars and why not any one from that caste had the passion to become the leader. Since he has the passion towards politics and social work, he has been accepted as the leader for Vanniyar. Though he is passionate, he himself hasn't followed the rules registered by him. Without understanding this simple logic, our beloved PMK leader Dr.Ramadoss is asking for Reservation in private sector too. Private sector works for better service to the society and make money out of it. Here there is no compromise for the level of service delivered to the customers. Any one who is having the passion can get a chance there. If you feel that my comments to you are offensive, i cannot help, but the fact is a fact.
Superb Post..
Mr. Arul Pls dont divert the topic..
Understand well and comment about it..
"Varnam" means "Types Of People"
He Explained..
Not Caste...
hi
Dont go by any ஜாதி but you can get all ஒதுக்கீட்டு that based on wealth i mean income of the family so every one get if any mistake sorry....
that is my view
Mr. Arul can you ans pls i need ans from uuuuu
பிறப்பினால் சாதியில்லை என்றால் அனைத்து சாதியிலினரும் அர்ச்சராக முடியுமா?
சரி இந்தக் கேள்வியை ஒரு மருத்துவர் உடன் ஒப்பிட்டு விளக்க முயல்கிறேன். ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்றால் அதற்கான முறையாகப் பயின்ற கல்வி வேண்டும். அது போல் முறையாகக் கற்க வேண்டியதைக் கற்று யார் வேண்டுமானாலும் ஒரு அர்ச்சகர் ஆகலாம். ஒரு மருத்துவர் மருத்துவம் செய்யும் போது அதற்கான உடைகளை (uniform) அணிந்திருப்பார். அது போல், அந்த அர்ச்சகரும், அதற்கான உடையை அணிந்து கொள்ள வேண்டும். மருத்துவர் மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல், மக்களுக்கு செய்யும் சேவையாகப் பண்ணவேண்டும். அர்ச்சகர் அர்ச்சகப்பணியைத் தொழிலாகப் பண்ணாமல் இறைவனுக்கு செய்யும் சேவையாகப் பண்ண வேண்டும். ஒரு மருத்துவர் தான் கற்ற மருத்துவத்தின் மீதும் மருந்துகள் மீதும் அசராத நம்பிக்கை கொள்ள வேண்டும். அது போல, அர்ச்சகரும் தான் கற்ற மந்திரங்கள் மீதும் இறைவன் மீதும் அசராத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஒரு மருத்துவர், ஒவ்வொரு நோயாளியைப் பார்த்த பிறகும், கையை நன்றாகக் கழுவுவார். அது தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் முறை. அது போல், அர்ச்சகரும் தேவைக்கேற்ப அத்தனை முறை குளித்து, சுத்தபத்தமாக (ஆச்சாரமாக) இருக்க வேண்டும். இவ்வாறாக பல நிபந்தனைகள். புதிதாக ஒரு நாட்டிற்கு சென்றாலோ, ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாலோ, அவர்களுக்கு என்று ஒரு சில நிபந்தனைகள் வைத்திருப்பார்கள் இல்லையா, அதை நாம் கேள்வி ஏதும் கேட்பதில்லை, கடைப்பிடிக்கிறோம். அது போல, இங்கு உள்ள நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இது போக வழக்கமாக கேட்கும் கேள்விகள்: மந்திரங்கள் சமஸ்க்ரிதத்தில் தான் இருக்க வேண்டுமா? ஆமாம். சமஸ்க்ரிதத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஸ்வரம் உண்டு, இசை போல. ஏழு ஸ்வரங்கள் கொண்ட இசை மனிதனனுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இதில் சந்தேகங்கள் இருப்பின், "music therapy" சம்பந்தமாக படித்தால் அறியலாம். அதே போன்று மந்திரங்களை, அதற்கான ஸ்வரத்தில் சொல்லும்போது, அது மனிதனுக்கு நன்மை பயக்கிறது. தமிழில் ஸ்வரங்கள் கிடையாது. அதனால், தமிழில் சொல்வது வழக்கம் இல்லை. இதை ஒத்துக்கொள்ள முடியாது என் தாய்மொழி தமிழ் தான், தமிழில் தான் சொல்வேன் என்றால், நலம். தமிழில் சொல்லலாம். ஆனால், குறைந்தது தமிழில் சொல்லும் மந்திரங்களை மனப்பாடம் செய்து சொல்ல வேண்டும். அர்ச்சகராக ஆக விரும்பும் தமிழ் ஆர்வலர்கள், அர்ச்சகப்பணிக்கென்று உள்ளவைகளை மனப்பாடம் செய்தது போக, பன்னிரு திருமுறைகளையும் அல்லது நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களையும் மனப்பாடம் செய்து இருத்தல் அவசியம் (மருத்துவர் மருத்துவம் படித்திருத்தல் அவசியம் என்பது போல்). இதெல்லாம் செய்தால், யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம். இதற்கு முன், திரு. கருணாநிதி அவர்கள் சில பிராமணர் அல்லாத ஆனால் அர்ச்சகராக வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்களை ஒவ்வொரு கோவில்களிலும் அர்ச்சகப்பணி கற்க ஆணையிட்டார். இன்று அர்ச்சகராய் இருக்கும் பிராமணர்களும், அவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். ஆனால், எனக்குத் தெரிந்த வரையில், அர்ச்சகப்பணிக்கு வேண்டியவற்றை முழுமையாகக் கற்று அர்ச்சகப்பணி செய்பவர்கள் ஒருவரும் இல்லை. இவையெல்லாம் அந்த பணியின் வடிவங்களை விளக்கி மிரட்டும் முயற்சி அல்ல. எல்லாப் பணிகளும் கடினமானவை தான். ஏதோ கேள்வி கேட்க வேண்டுமே என்பதற்காக சில காலமாகத் தொன்று தொட்டு கேட்கப்படும் நூறு கேள்விகளில் இதுவும் ஒன்று. பதில் அறிக. நீங்கள் அர்ச்சகராக என் வாழ்த்துக்கள். நன்றி. தவறாகவோ, மனது புண்படும்படியோ பேசி இருந்தால் மன்னிக்கவும்.
வர்ணங்களுக்குள்ளேயும் குண வேறுபாடுகளால் ஒரு வர்ணத்தில் பிறந்தவர்கள் வேறு வர்ணத்திற்கு மாறியதும், தொழில் ரீதியாக சாதிகள் ஏற்பட்டபிறகு ஒரு சாதியில் பிறந்தவர் மற்றொரு சாதிக்காரராக மாறியதும் வரலாற்றில் உள்ளது. இதை வைத்துப் பார்த்தால் பார்ப்பன சாதியில் பிறந்த ஒருவரின் முன்னோர்கள் அனைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதே போல பார்ப்பனரல்லாத வேறு சாதியில் பிறந்த ஒருவரது முன்னோர்களில் பார்ப்பனர்களாக ஒருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இடையிடையே சாதிவிட்டு சாதி திருமணங்களும் நடந்திருக்கின்றன. எனவே சுத்த பிராமணரோ, பிள்ளைமாரோ இன்ன பிற சாதியினரோ என்று யாரையும் குறிப்பிட முடியாது.
வேறுபாடுகள் என்று பார்த்தால் இஸ்லாமியர்களிடையே ஷியா-சுன்னி பிரிவுகள், லப்பை,மரக்காயர் போன்ற அடையாளங்கள், உருது பேசுபவர்கள், தமிழ் தெலுங்கு போன்ற பிராந்திய மொழி பேசுபவர்கள் என்ற வேறுபாடு;கிறிஸ்துவர்களில் கத்தோலிக்க,,ப்ராடஸ்டண்ட், பெந்தகோஸ்தே பிரிவுகளைத் தவிர,ஏசுவே மீட்பர், மேய்ப்பவர் போன்ற வாசகங்களுடன் தனித்தனியான குழுக்களாக வழிபாட்டு முறைகளிலும், திருமண சடங்குகளிலும் வேறுபடும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர.மதம் மாறிய இந்துக்கள் உடையார்,பிள்ளை, ரெட்டி,ரெட்டியார், நாடார் போன்ற,,(மதம் மாறுவதற்கு முன்னிருந்த) சாதிகளை சேர்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். முறையாக குருத்துவக்கல்வியில் தேர்ச்சி பெற்று சர்ச்சுகளில் குருமாராகப் (அர்ச்சகர்களுக்கு ஒப்பிடலாம்)பணி புரிய முற்பட்ட தலித் கிறிஸ்துவர்கள் 'உயர் சாதி' கிறிஸ்துவர்களால் உண்டாக்கப்பட்ட பல இடர்பாடுகளையும், எதிர்ப்புகளையும், நீதி மன்ற வழக்குகளையும், வன்முறைகளையும் சந்தித்தது பலரும் அறிந்திருப்பர். பொதுவான கிறிஸ்துவ இடுகாட்டில் தலித் கிறிஸ்துவர்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய 'உயர்சாதி' கிறிஸ்துவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதும் உண்டு.. அவர்களுக்குத் தனியான இடுகாடு இருந்திருக்கிறது.
(பல காரணங்களுக்காக) தாங்கள் கிருஸ்துவர்கள்/இஸ்லாமியர்கள் என்று காட்டிக் கொள்ளாமல் பெயர்களை மாற்றியும், குறைத்தும், சாதிப்பெயர்களை விட்டு விடாமலும் சிலர் இருப்பதும்/இருந்ததும் நமக்குத் தெரிந்ததே. (தெரியாதவர்களுக்காக:-திலிப் குமார், ராஜசேகர ரெட்டி, மனுஷ்ய புத்ரன், சீமான், உதயகுமார் போன்றோர்) மதம் மாறிய பிறகும் திருமணங்கள் கூட ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடையேதான் நடக்கின்றன.
தற்போதைய சூழ் நிலையில் சாதி விட்டு, மதம் மாறி திருமணங்கள் நடப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. 'உயர்சாதி என்று சொல்லப்படுகிற பிராமணக் குடும்பங்களில் மருமகள்களும் மருமகன் களும் பிராமணரல்லாத இந்துக்களாகவும், வேற்று மதங்களைச் சேர்ந்தவர்களகவும் இருப்பதைக் காணலாம். தன் மகளோ மகனோ சாதி/மதம் விட்டுத் திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடில்லையென்றால் ' எங்களுக்கு ஒங்க கூட இருக்க மனசு ஒத்துக்கல. ஒங்க மனசு போல கல்யாணம் பண்ணிண்டு க்ஷேமமா இருங்கோ" என்று சொல்லி ஒதுங்கிக்கொளும் பிராமணக் குடும்பங்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அதற்காக எந்த பிராமணனும் அரிவாளைத் தூக்கிக்கொண்டோ, கூலிப்படையை ஏவிவிட்டோ 'கவுரவக் கொலைக்கு' முற்பட்டதில்லை. மாறாக பல குடும்பங்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. சில குடும்பங்களில் சில விரிசல்கள் இருக்கலாம். அவை பிராமணர்களுக்கிடையே நடக்கும் திருமண வாழ்க்கையிலும் நிகழும் 'மாமியார், மருமகள்' மோதல்கள் போன்றவையே!
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சாதி, மத ஆராய்ச்சி செய்ய வேண்டியது தேவையில்லாததாகவும், பொருளற்றதாகவும் எனக்குத் தோன்றுகிறது.உங்களுக்கு?
Post a Comment