Showing posts with label chanakyar. Show all posts
Showing posts with label chanakyar. Show all posts
Tuesday, April 7, 2020
Wednesday, May 30, 2012
சாணக்கியன் சொல்!
ஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது.
இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும்.
மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும்.
நால்வர் சேர்ந்து வெளியில் செல்வது மகிழ்ச்சிகு உதவும்.
ஐந்து பேர் சேர்ந்து க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வது துணை பயக்கும்.
போரென்று வரும்போது பலர் சேர்வது நலம் பயக்கும்.
தெய்வ பக்தி உள்ளவளும், வீட்டு வேலைகளில் திறமைசாலியும், கற்பு உள்ளவளுமே உயர்ந்த மனைவி!
கெட்டவர்கள் உள்ள கிராமத்தில் குடியிருத்தல், கீழ்மக்களிடம் பணி புரிதல், சுவையில்லாத உணவு, எரிந்து விழும் மனைவி, முட்டாளான மகன் ஆகிய இவையாவும் ஒரு மனிதனுடைய உடம்பை நெருப்பு இல்லாமலே எரித்து விடுகின்றன.
பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசுமாடு எப்படி உபயோகம் அற்றதோ அதேபோல கல்வியும், தெய்வ பக்தியும் இல்லாத மகனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை!
ஒரு சந்திரன் இருளைப் போக்குகிறது. ஆனால் நக்ஷத்திரங்கள் ஆயிரமிருந்தும் இருளைப் போக்க முடியாது. அது போல நூறு குணமில்லாத மகன்களை விட ஒரு குணமுள்ள மகன் மேலானவன் ஆவான்.
தர்மத்தில் பற்று, பேச்சில் இனிமை, தானம் கொடுப்பதில் உற்சாகம், நண்பனிடம் நேர்மை, குருவிடம் பணிவு, உள்ளத்தில் கம்பீரம், நடத்தையில் சுத்தம், நற்குணங்களுக்கு மதிப்பு, சாஸ்திரங்களில் தேர்ச்சி, உருவத்தில் அழகும், சிவனிடத்தில் பக்தி இவை எல்லாம் சான்றோரின்
லக்ஷணங்கள் ஆகும்.
- சாணக்கியர்
Thursday, February 16, 2012
சாணக்கியன் சொல் கேளீர்!
செல்வம் மட்டும் எல்லாதவன் ஏழையல்ல, அவன் நிச்சயமாகச் செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன் எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்.
கண்களால் சுற்று முற்றும் நன்றாகப் பார்த்து விட்டு வெளியே செல்லக் காலடி எடுத்து வைக்க வேண்டும்!
தண்ணீரைச் சுத்தமான துணியால் வடிகட்டிக் குடிக்க வேண்டும்!
சாஸ்திரங்களுக்கு ஒத்ததான பேச்சையே பேச வேண்டும்.
மனச்சாட்சியைப் பின்பற்றிக் காரியங்களைச் செய்ய வேண்டும்.
கஞ்சனுக்கு யாசகன் எதிரி. முட்டாளுக்கு ஆசான் எதிரி, மலடிக்குக் கணவன் எதிரி. திருடர்களுக்கு நிலவொளி எதிரி!
ஆற்றோரத்தில் உள்ள மரங்களும், மற்றவர்கள் வீடுகளில் வசிக்கும் பெண்களும், மதியுள்ள மந்திரிகளில்லாத அரசர்களும், விரைவிலேயே சந்தேகமில்லாமல் அழிவடைகிறார்கள்.
அதிகமாகப் பிரயாணம் செய்வதால் ஒரு மனிதன் விரைவில் கிழத்தன்மையை அடைகிறான்.
கட்டிப்போடப்பட்ட குதிரைகள் விரைவிலேயே கிழத்தன்மையை அடைகின்றன.
ஆண்களுடன் சேர்க்கை இல்லாவிடில் பெண்கள் விரைவில் கிழவிகளாகிறார்கள்.
அதிக நேரம் வெயிலில் காய்ந்த துணிகள் விரைவில் கிழிந்து போகின்றன.
சந்தண மரங்கள் நிறைந்திருக்கும் மலையில் விளையும் மூங்கில் சந்தன மரமாகாது.
அதுபோல, புத்தியில்லாதவனுக்குக் கூறும் நல் வார்த்தைகள் வீணே ஆகும்.
ஒவ்வொருவருடைய உண்மையான குணத்தை அதற்கான நேரங்களில் சரியாகத் தெரிந்து
கொள்ளலாம். ஒரு பணியாளனை வெளியே வேலைக்காக அனுப்பும் போது அவனைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம். சுற்றத்தைத் துன்பத்திலும், நட்பை ஆபத்து காலத்திலும்,
மனைவியை ஏழ்மையிலும் தெரிந்து கொள்ளலாம்.
- சாணக்கியர்
Saturday, January 21, 2012
அதன் பெயர் செக்யூலரிசம்!
"அக்னி, கடன், பகை இதையெல்லாம் முழுவதுமாக தீர்க்காமல் மிச்சம் வைத்தால் மீண்டும் வளர்ந்துவிடும்"
- துக்ளக் ஆண்டுவிழாவில் திரு.சோ பேசியது!
இதை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு சாணக்கியர் வாழ்வில் நடந்த சம்பவம் பற்றி பற்றிப் படித்தது தான் ஞாபகம் வந்தது.
ஒரு நாள் விஷ்ணுகுப்தன் அதாவது சாணக்கியர் ஒரு சிறிய காட்டின் ஒற்றையடிப் பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.
பாதையில் இருந்த ஒரு சிறிய செடி தடுக்கி தடுமாறி விட்டார். கீழே சாய்ந்த அவர் சமாளித்து எழுந்து நின்றார்.
தன்னைத் தடுக்கிய செடியைத் திரும்பிப் பார்த்தார். உடனே குனிந்து செடியைச் சுற்றி இருந்த மண்ணைத் தோண்டி செடியை வேறோடு பிடுங்கி தூர வீசினார்.
எதிரே வந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் சாணக்கியரின் செயலை நின்று கவனித்துக் கொண்டிருந்தான். சாணக்கியர் செடியை தூர எறிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அப்பொழுது அந்த இளைஞன் அருகே வந்து சாணக்கியரிடம் கேட்டான், 'ஐயா நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்'
'தாராளமாக என்ன வேண்டுமானாலும் கேள் இளைஞனே' என்றார் சாணக்கியர்
'ஐயா, உங்களை ஒரு சிறு புல்செடி தடுக்கியது. மற்றவர்கள் அந்தப் புல் செடியை ஒரு பொருட்டாகப் பார்க்காமல் சென்றுகொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் குனிந்து சிரமப்பட்டு அதை வேருடன் களைந்து எறிந்தீர்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நான் கேட்டதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் அந்த இளைஞன்.
சாணக்கியர் அவனை உற்றுப் பார்த்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே கூறினார், 'இளைஞனே, எதிரிகளுடன் போரிட்டு வெல்லும் பொழுது அவர்களை மிச்சமில்லாமல் அழித்து விட வேண்டும். எதிரிகளும், கடனும், நெருப்பும், சிறுது மிச்சம் இருந்தால் கூட வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் அவை நம்மையே அழித்து விடக்கூடும். ஆகையால் முழுமையாக அவைகளை அழிக்க வேண்டும். இந்தச் செடி என்னைத் தடுக்கியதால் எனக்கு எதிரியாகிறது. ஆகையால் அதை வேரோடு களைந்தெரிந்தேன்' என்றார்.
இதைக் கேட்ட இளைஞனின் கண்கள் பிரமிப்பில் அகல விரிந்தன. அவன் சாணக்கியரைப் பார்த்துக் கூறினான், 'அன்றாட வாழ்க்கையின் சிறுசிறு நிகழ்வுகளுக்குப் பின்னால் கூட இவ்வளவு பெரிய விஷயங்கள் உள்ளடங்கி இருக்கிறதென்பதை நீங்கள் விளக்கும் போது பெரிய பாடமாக இருக்கிறது. நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன். என்னை தங்களின் சீடனாக ஏற்று எனக்கு வித்யைகளைக் கற்றுக்கொடுங்கள்' என்றான்.
அந்த இளைஞனை மனமாறச் சீடனாக ஏற்று அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். அந்த இளைஞனைக் கொண்டே தன்னை அவமதித்த அரசன் தனநந்தனை தோற்கடித்து அவனை நாடாளும் அரசனாக ஆக்கினார்.
அந்த இளைஞன் தான் 'சந்திரகுப்த மௌரியன்'. மௌரியவம்சத்தின் முதல் அரசன்.
"எதிரிகளுடன் போரிட்டு வெல்லும் பொழுது அவர்களை மிச்சமில்லாமல் அழித்து விட வேண்டும். எதிரிகளும், கடனும், நெருப்பும், சிறிது மிச்சம் இருந்தால் கூட வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் அவை நம்மையே அழித்து விடக்கூடும்" - சாணக்கியரின் இந்த மந்திர வரிகளை பிற்காலத்தில் வந்த ஹிந்து அரசர்கள் கண்டுகொள்ளாமல், தோற்றுப் போன எதிரி ராஜாக்களை மன்னித்து விடும் பெரியமனசு காட்டியதால் பின்னாட்களில் கொலைவெறியோடு மிச்சமில்லாமல் அழிக்கும் குணம் படைத்த முகலாயர்களிடம் தோற்று அடிமையானார்கள்.
அதன் விளைவுகளை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதன் பெயர் - செயூலரிசம்!
வீடியோவில் கொஞ்சம்!
Tuesday, January 10, 2012
சாணக்கியன் சொல்!
முட்டாளான மாணவனுக்குப் பாடம் கற்பிப்பதாலும், கெட்டவளான பெண்ணைக் காப்பாற்றுவதாலும் ஒரு அறிவாளி துன்பமடைந்து அவதியுறுகிறான்.
கெட்டவளான மனைவி, ஏமாற்றும் நண்பன், எதிர்த்துப் பேசும் பணியாள், பாம்பு குடியிருகும் வீடு ஆகியவை ஒருவனது மரணத்திற்கே காரணமாகிவிடும்!
ஆபத்து சமயத்தில் உதவுவதற்காகச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வத்தை விட அதிகமாக, மனைவியைக் காப்பாற்ற வேண்டும். செல்வத்தையும் மனைவியையும் விட அதிகமாக ஒருவன் எக்காலத்திலும் தன்னையே காப்பாறிக்கொள்ள வேண்டும்.
எந்த நாட்டில் ஒருவனை மதிக்கவில்லையோ, அல்லது ஒரு வேலையும் கிடைக்கவில்லையோ அங்கு அவன் குடியிருக்க வேண்டாம். அதே மாதிரி எங்கு ஒருவனுக்குச் சுற்றத்தார் எவருமில்லையோ அல்லது கல்வி கற்க வழியில்லையோ அங்கும் குடியிருக்க வேண்டாம்.
ஒரு இடத்தில் குடியிருப்பதற்கு ஐந்து விஷயங்கள் இன்றையமையாதவைகள். அவைகள், செல்வந்தர்களான வியாபாரிகள், நன்கு படித்த பண்டிதர்கள், நீதி நெறி வழுவாத அரசன், நல்ல மருத்துவர்கள், போதிய நீருள்ள ஆறு ஆகியவை. இவைகள் இல்லாவிட்டால் ஒருவன் ஒருநாள் கூட அந்த இடத்தில் குடியிருக்கக் கூடாது.
ஆழ்ந்த துயரம் வரும் போதும், கடுமையான பஞ்சத்திலும், எதிரிகள் துன்புறுத்தும் பொழுதும், அரசாங்கத்தின் முன்பும், சுடுகாட்ட்லிசும் ஒருவனைத் தவிர்க்காமல், கூடவே அவனுடன் இணைபிரியாமல் எவன் இருக்கிறானோ, அவனே உண்மையான சுற்றமாகும்.
ஒருவனுக்குச் சொன்னபடி கேட்கும் மகனும், வேத தர்மங்களைப் பின்பற்றும் மனைவியும், வேண்டிய அளவு செல்வமும் இருந்தால், அவனுடைய இவ்வுலக வாழ்க்கை சுவர்கத்திற்கு ஈடாகும்.
- மௌரியவம்சம் தோன்றக் காரணமான விஷ்னுகுப்தன் என்ற சாணக்கியர்!
Subscribe to:
Comments (Atom)



