Saturday, January 21, 2012

அதன் பெயர் செக்யூலரிசம்!


"அக்னி, கடன், பகை இதையெல்லாம் முழுவதுமாக தீர்க்காமல் மிச்சம் வைத்தால் மீண்டும் வளர்ந்துவிடும்"

- துக்ளக் ஆண்டுவிழாவில் திரு.சோ பேசியது!

இதை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு சாணக்கியர் வாழ்வில் நடந்த சம்பவம் பற்றி பற்றிப் படித்தது தான் ஞாபகம் வந்தது.

ஒரு நாள் விஷ்ணுகுப்தன் அதாவது சாணக்கியர் ஒரு சிறிய காட்டின் ஒற்றையடிப் பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.

பாதையில் இருந்த ஒரு சிறிய செடி தடுக்கி தடுமாறி விட்டார். கீழே சாய்ந்த அவர் சமாளித்து எழுந்து நின்றார்.

தன்னைத் தடுக்கிய செடியைத் திரும்பிப் பார்த்தார். உடனே குனிந்து செடியைச் சுற்றி இருந்த மண்ணைத் தோண்டி செடியை வேறோடு பிடுங்கி தூர வீசினார்.

எதிரே வந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் சாணக்கியரின் செயலை நின்று கவனித்துக் கொண்டிருந்தான். சாணக்கியர் செடியை தூர எறிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அப்பொழுது அந்த இளைஞன் அருகே வந்து சாணக்கியரிடம் கேட்டான், 'ஐயா நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்'

'தாராளமாக என்ன வேண்டுமானாலும் கேள் இளைஞனே' என்றார் சாணக்கியர்

'ஐயா, உங்களை ஒரு சிறு புல்செடி தடுக்கியது. மற்றவர்கள் அந்தப் புல் செடியை ஒரு பொருட்டாகப் பார்க்காமல் சென்றுகொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் குனிந்து சிரமப்பட்டு அதை வேருடன் களைந்து எறிந்தீர்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நான் கேட்டதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் அந்த இளைஞன்.

சாணக்கியர் அவனை உற்றுப் பார்த்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே கூறினார், 'இளைஞனே, எதிரிகளுடன் போரிட்டு வெல்லும் பொழுது அவர்களை மிச்சமில்லாமல் அழித்து விட வேண்டும். எதிரிகளும், கடனும், நெருப்பும், சிறுது மிச்சம் இருந்தால் கூட வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் அவை நம்மையே அழித்து விடக்கூடும். ஆகையால் முழுமையாக அவைகளை அழிக்க வேண்டும். இந்தச் செடி என்னைத் தடுக்கியதால் எனக்கு எதிரியாகிறது. ஆகையால் அதை வேரோடு களைந்தெரிந்தேன்' என்றார்.

இதைக் கேட்ட இளைஞனின் கண்கள் பிரமிப்பில் அகல விரிந்தன. அவன் சாணக்கியரைப் பார்த்துக் கூறினான், 'அன்றாட வாழ்க்கையின் சிறுசிறு நிகழ்வுகளுக்குப் பின்னால் கூட இவ்வளவு பெரிய விஷயங்கள் உள்ளடங்கி இருக்கிறதென்பதை நீங்கள் விளக்கும் போது பெரிய பாடமாக இருக்கிறது. நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன். என்னை தங்களின் சீடனாக ஏற்று எனக்கு வித்யைகளைக் கற்றுக்கொடுங்கள்' என்றான்.

அந்த இளைஞனை மனமாறச் சீடனாக ஏற்று அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார். அந்த இளைஞனைக் கொண்டே தன்னை அவமதித்த அரசன் தனநந்தனை தோற்கடித்து அவனை நாடாளும் அரசனாக ஆக்கினார்.

அந்த இளைஞன் தான் 'சந்திரகுப்த மௌரியன்'. மௌரியவம்சத்தின் முதல் அரசன்.

"எதிரிகளுடன் போரிட்டு வெல்லும் பொழுது அவர்களை மிச்சமில்லாமல் அழித்து விட வேண்டும். எதிரிகளும், கடனும், நெருப்பும், சிறிது மிச்சம் இருந்தால் கூட வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் அவை நம்மையே அழித்து விடக்கூடும்" - சாணக்கியரின் இந்த மந்திர வரிகளை பிற்காலத்தில் வந்த ஹிந்து அரசர்கள் கண்டுகொள்ளாமல், தோற்றுப் போன எதிரி ராஜாக்களை மன்னித்து விடும் பெரியமனசு காட்டியதால் பின்னாட்களில் கொலைவெறியோடு மிச்சமில்லாமல் அழிக்கும் குணம் படைத்த முகலாயர்களிடம் தோற்று அடிமையானார்கள்.

அதன் விளைவுகளை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதன் பெயர் - செயூலரிசம்!
வீடியோவில் கொஞ்சம்!

1 comment:

premprakash said...

dear sir, you are exactly correct. in those days, persians/afgans were preached by their koran that it is not a sin to mercelessly kill all other community people completely and that was their main sucess. but ironically thier point of teaching seems to be correct till now. is it know?