Tuesday, January 10, 2012

சாணக்கியன் சொல்!



முட்டாளான மாணவனுக்குப் பாடம் கற்பிப்பதாலும், கெட்டவளான பெண்ணைக் காப்பாற்றுவதாலும் ஒரு அறிவாளி துன்பமடைந்து அவதியுறுகிறான்.

கெட்டவளான மனைவி, ஏமாற்றும் நண்பன், எதிர்த்துப் பேசும் பணியாள், பாம்பு குடியிருகும் வீடு ஆகியவை ஒருவனது மரணத்திற்கே காரணமாகிவிடும்!

ஆபத்து சமயத்தில் உதவுவதற்காகச் செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வத்தை விட அதிகமாக, மனைவியைக் காப்பாற்ற வேண்டும். செல்வத்தையும் மனைவியையும் விட அதிகமாக ஒருவன் எக்காலத்திலும் தன்னையே காப்பாறிக்கொள்ள வேண்டும்.

எந்த நாட்டில் ஒருவனை மதிக்கவில்லையோ, அல்லது ஒரு வேலையும் கிடைக்கவில்லையோ அங்கு அவன் குடியிருக்க வேண்டாம். அதே மாதிரி எங்கு ஒருவனுக்குச் சுற்றத்தார் எவருமில்லையோ அல்லது கல்வி கற்க வழியில்லையோ அங்கும் குடியிருக்க வேண்டாம்.

ஒரு இடத்தில் குடியிருப்பதற்கு ஐந்து விஷயங்கள் இன்றையமையாதவைகள். அவைகள், செல்வந்தர்களான  வியாபாரிகள், நன்கு படித்த பண்டிதர்கள், நீதி நெறி வழுவாத அரசன், நல்ல மருத்துவர்கள், போதிய நீருள்ள ஆறு ஆகியவை. இவைகள் இல்லாவிட்டால் ஒருவன் ஒருநாள் கூட அந்த இடத்தில் குடியிருக்கக் கூடாது.

ஆழ்ந்த துயரம் வரும் போதும், கடுமையான பஞ்சத்திலும், எதிரிகள் துன்புறுத்தும் பொழுதும், அரசாங்கத்தின் முன்பும், சுடுகாட்ட்லிசும் ஒருவனைத் தவிர்க்காமல், கூடவே அவனுடன் இணைபிரியாமல் எவன் இருக்கிறானோ, அவனே உண்மையான சுற்றமாகும்.

ஒருவனுக்குச் சொன்னபடி கேட்கும் மகனும், வேத தர்மங்களைப் பின்பற்றும் மனைவியும், வேண்டிய அளவு செல்வமும் இருந்தால், அவனுடைய இவ்வுலக வாழ்க்கை சுவர்கத்திற்கு ஈடாகும்.

- மௌரியவம்சம் தோன்றக் காரணமான விஷ்னுகுப்தன் என்ற சாணக்கியர்!

2 comments:

Thava said...

வணக்கம்,
என்ன உண்மையான வார்த்தைகள் இவை...சிந்திக்கவும் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பின்னால் தட்டி சொல்கிறது எழுத்துக்கள்..தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

.சஸ்பிஷன் ஒரு பார்வை - ஒரு ஹிட்ச்காக் திரை படைப்பு.

premprakash said...

excellent sir. May i request you to post all the preaching of chanakiya, so that we all will be very much educated. Because i like his preaching, but never read his books. thanks.