Thursday, September 15, 2011

பிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்!




பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதை அடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.

இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீய நரகங்களை எல்லாம் அனுபவிப்பான்.

மோசம் செய்து பிறர் பொருட்களை அபகரிப்பவன் கொடுமையான பாவத்தைச் செய்பவனாகிறான். அவன் பிரேத ரூபமெடுத்து யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். தன் சொந்த புத்திரன் முதலியோருக்கு கூட சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.

அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

போரில் புறங்காட்டி ஓடியவனும், செய் நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான்.
தருமங்கள்.

நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.

தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும்,
திருஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.


.

5 comments:

Sanjivini said...

பகுத்தறிவு என்னவென்று இத்தளத்தில் காணவும்.
http://arivuu.wordpress.com

இதுவரை பகுத்தறிவு என நம்பி வந்ததும் மூடத்தனம் என்பது விளங்கும்

hayyram said...

hi sanjivini, welcome to this blog.

Dr Rama Krishnan said...

Lusting for another man's wife may not be a noble thing but I fear the punishment as described here is harsh and unjust! Seriously, it sounds like Mohamed's religious doctrines.I feel one pays for his Karmas in his next birth.

hayyram said...

rk ...

கருடபுராணத்தில் கூறப்படுபவை இறந்த பின் கிட்டும் தண்டனைகள். முகமதியர்கள் உயிருடன் இருக்கும் போதே அதைச் செய்வார்கள். அதற்கு ஷரியத் என்று பெயரும் உண்டு. இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் கருட புராணம் மனிதற்களை வழிக்குக் கொண்டு வர கண்ணுக்குத் தெரியாத இடத்தைப் பற்றி கற்பனைக்கெட்டாத விதத்தில் ஒரு பயத்தை உண்டாக்கி நிரந்தரமாக சமூகத்தினரின் மனதை கட்டுப்படுத்தி வைக்க விதைக்கப்பட்ட புராணமாக நினைக்க முடிகிறது. ஏனெனில் இருக்கும் போது தண்டனை கிடைக்குமென்றால் எங்கே தண்டித்துப்பார் என்பான் மனிதன். இறந்ததற்குப் பிறகு கிடைக்கும் என்றால் சத்தியமாக மரணித்த பின் என்ன நடக்கும் என்று தெரியாததால் ஒருவித குழப்பத்தில் பயந்து போய் சொல்பேச்சு கேட்டு நடப்பான் என்கிற நோக்கமே கருட புராணத்தில் மேலாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாது. எது எப்படியோ, இறந்த பின் தெரிந்து கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறாது. அதையும் பார்த்து விட்டு இது முகமதியர் சட்டங்களுடன் எப்படி ஒத்துப்போகிறதென்று அப்புறம் விவாதிப்போமே. என்ன சரிதானா?

Dr Rama Krishnan said...

"இறந்த பின் தெரிந்து கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறாது. அதையும் பார்த்து விட்டு இது முகமதியர் சட்டங்களுடன் எப்படி ஒத்துப்போகிறதென்று அப்புறம் விவாதிப்போமே. என்ன சரிதானா?"
Tongue in cheek I presume.
But this" Ummachi kanna kuthuva" business is rather silly.