Saturday, April 18, 2009

முல்லா நசுரிதீன் கதைகள்


ஒரு தடவை முல்லா ஒரு திருமணத்திற்க்கு சென்றார். பல முறை அவர் திருமணங்களுக்கு சென்று திரும்பி வரும் போது அவரது செருப்பு காணாமல் போய்விட்டது.  

அதனால் இந்த திருமண வீட்டில் செருப்பை வெளியில் வெட்டுச் செல்ல முல்லாவிற்க்கு மனம் வர வில்லை. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அதனை யாருக்கும் தெரியாதவாறு ஒரு துணியில் சுற்றி கையில் வைத்துக் கொண்டார்.  

முல்லாவின் கையில் ஏதோ பொட்டலம் இருப்பதைப் பார்த்த திருமண வீட்டுக்காரர், "முல்லா அவர்களே ஏதோ பொட்டலம் வைத்திருக்கிறீர்களே, அதில் என்ன இருக்கிறது? மணமகனுக்கு அளிக்க வேண்டிய பரிசா? என்று கேட்டார்.  

"இதுவா, இது மிகவும் புனிதமான வேதாந்த நூல்" என்று முல்லா சமாளித்தார்.  

"வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்கள்?" என்று திருமண வீட்டுக்காரர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக எரிச்சலான முல்லா பதிலளித்தார்,  

"செருப்புக் கடையில் வாங்கினேன்".

No comments: