Sunday, October 4, 2009

கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்! - 2

தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

இவ்வாறு பெரியோர்களால் வகுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் நம் சமூக மக்கள் சிறந்த கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்தனர். வள்ளுவர் இப்படி ராவாக சொல்லியிருக்கும் விஷயங்களை மனதில் பதியும் மசாலாக்களுடன் கூடிய கதைகளாச் சொல்லியும் இதிகாசங்கள் மூலமும் மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்கின்றனர் நம் முன்னோர்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்பட்டுவரும் இதிகாசமே ராமாயணம்.

மனிதர்கள் மத்தியில் நடக்கும் குற்றங்கள் பெண்ணுக்காக அல்லது பொருளுக்காக மட்டுமே நடக்கிறது. இதை மீறி குற்றங்களுக்கு வேறு காரணங்களை பொதுவாக பார்க்க முடியாது. மனிதப் பெருங்கூட்டத்தின் முக்கியக் குற்றங்களை உண்டாக்கும் இவ்விரு உணர்வுகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டை ஆழ்மனதில் பதிய வைத்தால் சமூகம் அமைதியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இவற்றை மூலக்கதையாகக் கொண்ட ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.

பிறன் மனைவி நோக்காப் பேராண்மையாளனாக ராமனையும், கற்புக்குச் சிறந்தவளாக சீதையும் கதாநாயகன் கதாநாயகியாக நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தோர்களாக எடுத்துச் சொல்லி அது போல் வாழவேண்டும் என்று மக்கள் மனதில் ஆழப்பதியச் செய்கின்றனர். தற்காலத்தில் இளம் வயதினரை ஈர்க்கும் மனிதர்கள் சினிமா கதாநாயகனும் கதாநாயகியரும்தான். அவர்களுடைய நடை உடை பாவனைகளால் கவரப்படுபவர்கள் அவர்களைப் போலவே தங்களை பாவித்து வாழத்துவங்குவதை பார்த்திருப்போம். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஆண்கள் அந்தப்படத்தின் கதாநாயகனாக தன்னையே உருவகித்துப் பார்க்கிறான். பெண்கள் கதாநாயகிகளை உள்வாங்குகிறார்கள். காதல் காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே வெளியே உள்ள மனிதர்களின் வெளிப்பாடும் அது போன்ற தருணங்களில் காட்சியளிப்பதை பார்க்க முடியும்.

இப்படி தங்களை பாதிக்கும் கதாநாயகனும் நாயகியும் ஏக பத்தினி விரதத்தைக் கொண்டவனாக இருந்தால், கதாநாயகி கற்புக்கரசியாக காட்சியளித்தால் இவர்களை உதாரணமாக வைத்து தாமும் வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் உண்டாவார்கள். ராமனைப் போல ஆண்களும் சீதையைப் போல பெண்களும் வாழ்வதே சிறந்த உயர்ந்த வாழ்க்கை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டது. கேட்பவர்களும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக தானும் இருக்கவேண்டும் என்ற உத்வேகம் கொள்வார்கள்.

ராமாயணத்திலிருந்து சில துளிகளை இப்போது பார்க்கலாம்...


சீதையை அடைய பல முயற்சிகள் செய்யும் ராவணனிடம் ஒரு யோசனை சொல்லப்பட்டது. நீ ராமனாகவே சென்று அவள் முன் நின்றால் அவள் ஏமாந்து உன்னிடம் வந்து விடுவாள் என்றார்கள். அதற்கு ராவணன் சொன்னான் "எவ்வளவோ செய்த எனக்கு இதைச் செய்ய முடியாதா? நானும் ராமனாக உருமாறிப்பார்த்தேன். ஆனால் நான் எப்போது ராமனாக மாறினேனோ அப்போதே அடுத்தவர் மனைவிமீது ஆசைப்படும் எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எனக்கு சீதை மீது ஆசையே வரவில்லையே! நான் என்ன செய்ய?" என்று புலம்பினான்.

அதாவது பிறன் மனை நோக்கும் இச்சை கொண்டவனே ராமனாக ஆனவுடன் அந்த ஆசை அற்றுப் போனது என்று சொல்லுமளவிற்கு ராமனின் ஏக பத்தினி விரதம் போற்றிச் சொல்லப்பட்டது. அவ்வாறு வாழ்வதே ஆண்களுக்குச் சிறப்பு என்றும் போதிக்கப் பட்டது. பின்னால் நாகரீகத்தைப் போற்றியவர்கள் என்ன செய்தார்கள்? ராமாயணம் மூட நம்பிக்கை என்றார்கள். ராமன் இன்ஜினியரா? அவன் தான் பாலம் கட்டினானா? என்றார்கள்.

ராமாயனத்திற்கு ஆதாரம் இல்லை என்று அறிவியல் கொண்டு ஆனியடித்தார்கள். இப்படி சிதைத்தவர்கள் ராம நம்பிக்கையைச் சிதைக்கவில்லை. அவர்கள் சிதைக்க முயற்சித்தது ராமனாக வாழ முடியும் என்கிற கலாச்சார நம்பிக்கையை. இப்படி நாகரீகம் கலாச்சாரத்தின் அடிமரத்தை வெட்டிக்கொண்டே இருந்தது. மேலை நாட்டு நாகரீகமே சிறந்தது என்றும் பெருமை பேசப்பட்டது.

கமலஹாஸன் போன்றவர்கள் திருமனத்தை முட்டள் தனம் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். நான் மலை மேலிருந்து நீங்களும் அப்படிச் செய்யுங்கள் என்று சொல்லவில்லை அது என்கருத்து என்றும் மற்றொரு தொலைக்காட்சியில் உளருகிறார். இவர் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் இவர் பேசுவது மலை மேல் நின்று பேசுவது போல் பரவும் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் மேலை நாட்டு நாகரீகத்தை இவர்கள் பரப்பி இந்திய கலாச்சாரத்தை முட்டாள் தனம் என்று தூற்றுவதை நிறுத்து வதில்லை.

ராமாயனத்தில் பெண்ணின் உயர்வைக்காட்டும் இன்னொரு இடம்..

காட்டில் சீதைக்காக மான் பிடிக்கச் சென்ற ராமன் வெகுநாரம் ஆகியும் திரும்பவில்லை. சீதை கவலையில் ஆழ்ந்தாள். அப்போது மாரீச்சனின் கபடக்குரல் ராமனின் குரலாகக் கேட்டது. "லக்ஷ்மனா...காப்பாற்று...!! லக்ஷ்மனா...காப்பாற்று...!!" என்று. இந்தக் குரலைக் கேட்ட சீதை கலங்கினாள்.

தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறினாள். உடனே சீதை லக்ஷனனைப் பார்த்து என்னவென்று கண்டுவரச் சொன்னாள். ஆனால் லஷ்மனனோ "அபயக்குரல் எழுப்பும் அளவிற்கு அண்ணன் ராமன் கோழையல்ல. அப்படி ஒரு ஆபத்து தன் அண்ணனைச் சூழப்போவதும் இல்லை அதனால் கலங்காமல் இருங்கள் என்று தாய் சீதையிடம் எடுத்துரைக்கிறார். தாயே என்று கூறி அழைக்கும் லக்ஷ்மனனை சீதை கோபமாகப் பார்க்கிறாள். "என் கணவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால், நீ என்னை அடையலாம் என்று எண்ணுகிறாயா?" என்று சற்றும் எதிர் பார்க்காத வகையில் கேட்டுவிட லக்ஷ்மனன் உடனே ராமனைத் தேடி புறப்பட்டு விடுகிறான். பிறகு நடந்த கடத்தல் கதை நமக்குத் தெரியும்.

ஆனால் இங்கே உணர்த்தப்படுவது என்ன? கணவர் இல்லாத போது உடனிருப்பது அவரது தம்பியாக இருந்தாலும் அவன் நல்லவனாகவே இருந்தாலும் தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே ஒரு பெண்ணின் முதல் நினைவாக இருக்கவேண்டும் என்பதும் அதுவே தனது கணவனுக்கு உண்மையாக இருப்பதாகும் என்பதும் உணர்த்தப்படுகிறது. Perception என்று சொல்வார்களே அதுதான்.

நாகரீகம் என்ற மாயத்தோற்றத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்தக்காலத்தில் அப்படி Perception னுடன் நடந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற நாகரீகம் இன்று கணவனுக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டது. படுக்கை அரையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வித்தியாசமில்லை என்னுமளவிற்கு எல்லோருடனும் பெண்கள் ஒரே மாதிரியாகப் பழகுவதை சகஜமாகவே பார்க்க முடிகிறது. நாகரீகம் என்ற பெயரில் சீதையாக வாழ்வது பழம்பஞ்சாங்க நிலையென எள்ளி நகையாடப்படுகிறது. இந்த நிலை தான் தவறான உறவுக்கு அஸ்திவாரமாக அமைகிறது.

பெண்களும் தன்னுடன் பழகும் ஆண்களில் யாருடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாமல் சீதைக்கு இருந்த அந்த Perception இல்லாமல் பழகி தவறான உறவில் விழுந்து விடுகின்றனர். ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்பது நீண்டநாள் நீடிக்காது. காதல் அல்லது காமத்தில் விழாமல் ஆணும் பெண்ணும் பழக முடியாது என்பதே உண்மை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதே வேலையாகக் கொண்ட பலர் இந்த நட்பு நாகரீகத்தைப் பரப்பினார்கள். திரைப்படங்களும் ஆணும் பெண்ணும் நண்பர்களாக பழக முடியும் என்று முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்து பணம் சம்பாதித்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருக்கலாம் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றனர். பூனையும் எலியும் ஒன்றாய் உறங்கலாம் பூனை எலியைக் கடிக்காது என்றனர்.


பெற்றோராக இருக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் இதை அப்படியே நம்பி விட்டார்கள். இதனால் தன் வீட்டுப் பெண்பிள்ளைகள் ஆண்களுடன் மணிக்கனக்கில் தொலைபேசுவதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதை தவறு என்று சுட்டிக்காட்டும் பெற்றோர்கள் புழு பூச்சி போல பார்க்கப்பட்டனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகளாக கண்டிக்கப்பட்டனர். பெண்ணை அடிமைப்படுத்துவதாக சித்தரித்தனர். போதாக்குறைக்கு பெண்ணியம் என்ற பூதம் வேறு கிளம்பி கலாச்சார கட்டுக்கோப்பை புரட்டிப்போட்டது. இந்த பெண்ணிய பூதத்தால் சமூக கட்டுபாடுகள் சின்னாபின்னப் படுத்தப்படுகின்றன. தான் செய்வதெல்லாம் சரி, ஆண் செய்வது மட்டும் தான் தவறு என்பது பெண்ணிய சித்தாந்தம்.

ஆண்களின் நிலைமை அதுவும் கணவன்மார்களின் நிலைமை மிகவும் பரித்தாபத்திற்குரிய்தாக மாறிப்போனது. தனக்கென்று ஒரு பெண்ணை கல்யாணம் செய்து அவளை தனக்காக தக்கவைத்துக் கொள்வதற்குள் போதும் போதும் என்றானது ஆண்மகனுக்கு. வேறு ஆண்மகனிடம் மனைவி எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் யார் அவன் என்ற கேள்வியைக் கேட்கவே பயப்படும் ஆண்கள் தான் பலர். எங்கே தான் சந்தேகப்படுவதாக பெண்டாட்டி நினைத்துவிட்டால் குடும்ப உறவில் விரிசல் வந்து விடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. மீறி கேள்வி கேட்டு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்? இதையெல்லாம் அலுவலகத்திலேயே பேசி முடித்துவிட வேண்டியது தானே என்று கேட்டுவிட்டால் போதும். அன்று முதல் அவனுக்கு வீட்டில் மரியாதை போச்சு. நாகரீகத்தின் விளைவு.

அதுமட்டுமா? பெண்ணியப் பேச்சாளர்கள் கற்பு என்ன கடைச்சரக்கா? என்னவிலை என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி விமர்சித்து கண்டனங்கள் எதிர்கொண்டதும் நமக்குத் தெரிந்ததே.
அதுமட்டுமா? உச்ச நீதிமன்றத்தின் ஓரினச்சேர்க்கை பற்றிய தீர்ப்பை குஷ்பு
வரவேற்றார். இவர்களைப் போன்றவர்கள் தறிகெட்ட வாழ்க்கைக்கு அச்சாரம்
தேடி அலைகிறார்கள் அல்லது அடுத்த தலைமுறையை சீரழிவுப்பாதைக்கு தள்ளி விடப்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

சினிமாக்களிலும் சீரியல்களிலும் சந்தேகப்படும் ஆண்கள் அவமானப் படுத்தப்படுவார்கள். "சீ, கட்டின பொண்டாட்டியை சந்தேகப்படுகிறாயே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா" என்று வசனம் வைப்பார்கள். பின்ன பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியையா சந்தேகப்பட முடியும்? ஒரு பெண்ணுக்கு மூன்று நான்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய நாகரீகப் பெண்களின் நிலையாக ஆகிப்போனது. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்ய மறந்து விட்டனர். மாறாக ஆணோடு ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது.

பொது இடங்களில் ஆண்களுக்கும் மனக்கட்டுப்பாடு கட்டாயம் தேவை. அலுவலகத்திலோ அல்லது பிற இடங்களிலோ திருமணமான பெண்ணிடம் பேசுகிறோம் என்று தெரிந்தும் தேவையில்லாமல் வலிய போய் சிரித்து பேசி அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது.
தனக்கு உரிமை இல்லாத அதுவும் மணமான பெண்களின் உடை மற்றும் அழகை வர்ணித்தோ அல்லது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலோ பேசுவது நாகரீகமற்ற செயல் என்பதை ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ராமனைப் போல வாழ்வதின் சிறப்பை மனதில் ஆழ்ப் பதிந்து கொள்ள வேண்டும்.
மணமான பெண்ணிடம் வழியும் ஆண்கள் தன் மனைவியிடம் வேறொருவர் அவ்வாறு நடந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்து வேறொரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது என்பதை கண்டிப்பாக மனதில் வைத்து விலகியிருக்க வேண்டும்


தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த ஆண்பெண் நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்.

1. கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலை பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

2. அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

3. பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.

4. அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தாலும் அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது.

5. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்.

6. அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க அனுமதிக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவரின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்.

7. உடல் அங்கங்களை அப்பட்டமாகக் காட்டும் இறுக்கமான ஆடைகளை குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ஒரு பெண் அணிந்துகொண்டு அலுவலகங்களுக்குச் செல்வது மற்ற ஆண்களைக் கவர்ந்திழுக்கவே வழி செய்யும். அந்தப் பெண் இரு குழந்தைக்குத் தாய் என்ற எண்ணம் வராது. அதனால் மரியாதையை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளையே அணிய வேண்டும். இன்றைய நாகரீகப் பெண்கள் இவற்றைச் கவனிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போனார், விஷயம் இவ்வளவுதான். ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பதே அவரது இறுதியான வாக்கியம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதால் தவறிழைக்க நினைக்கும் பெண்களுக்கு அதுவே உடலுறவுச் சுதந்திரத்தைக் கொடுத்து விடுகிறது. காமத்தைத் தேடத்துவங்கும் வாலிபர்களுக்கும் நடுத்தர அல்லது வயோதிகப் பெண்களுக்கும் இடையிலான முறையற்ற உறவுகள் பற்றிய செய்திகளே அதிகம் காணப்படுகிறது. செய்திகளில் கண்டது ஒரு சோறு பதம் என்ற நிலையே. எனவே கையில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அதைக் குடும்பத்திற்க்காக மட்டுமே என்று காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு பெண்களுடையது தான் என்பதை பெண்கள் தான் நினைவில் கொள்ள வேண்டும். கணவன் பெண்டாட்டியைக் காப்பாற்றிக் கொள்ளும் வேலையையே செய்யவேண்டியிருந்தால் அவன் பணம் சம்பாதிப்பது எப்படி.

கணவன் இல்லாத நேரத்தில் சபலம் கொள்ளும் பெண்களே, உங்கள் கணவன்மார்கள் உங்களைக் காக்கும் பொருட்டே வீட்டிற்கு வெளியே உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு கனம் நினையுங்கள்.

அப்படியானால் ஆண்கள் ராமனாக இருக்கமாட்டார்கள், பெண்கள் மட்டும் சீதையாகவே இருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சுருக்கமாக ஒன்றைச் சொல்ல முடியும். இன்றைய இந்திய பீனல் கோட் இருக்கிறதே அது பெண்களுக்காகத்தானே ஒழிய ஆண்களுக்காக இல்லை.

பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது.

ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினாலோ இரட்டை அர்த்த தொனியில் பேசினாலோ பெண்கள் உடனே (உண்மையாக) கண்டித்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு ஆண் செல்வதை தடுக்க முடியும். அந்த வகைப் பேச்சுக்களுக்கு ஆசைப்பட்டு சீ, போ என்றெல்லாம் குழைந்தால் சிக்கிட்டாடா சீமாட்டி என்று அடுத்த அடியை எடுத்து வைக்க எந்த ஆணும் தயங்க மாட்டான்.

அதையும் மீறி துன்புறுத்துபவனா?, சமூக அச்சம் இல்லாமல் துனிகிறானா? இருக்கவே இருக்கு காவல் துறை லாடம் கட்ட.

இப்படி எல்லா விதமான பாதுகாப்பையும் சட்டதின் மூலம் செய்து கொடுத்த பின்னும் ஆண் நண்பர்கள் என்ற பெயரில் கணவனின் கண்ணில் மன்னைத்தூவி செல்லும் பெண்ணே பின்னாட்களில் செய்திப்படங்களாகிறார்கள் என்பது உறுதி. நாகரீகத்தின் உச்சம் செய்தித் தாள்களில் சிரிக்கிறது?

சமீபத்தில் சிரித்த அனந்த லட்சுமி கொலைவழக்கைப் பாருங்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இப்படி நிகழும் என்று? அந்தப் பெண் நள்ளிரவில் மணிக்கணக்கில் கணவர் அல்லாதானிடம் பேசிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகி யிருக்கிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பெண்ணா? அப்படியா? என்றே கேட்டிருப்பார்கள். காரணம் ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று வெளியே பழகத்துவங்கியது, பின் அடி மேல் அடிவைத்து நள்ளிறவு அரட்டையாக மாறியிருக்கிறது.

சீதையைப் போல் Perception அதாவது தவறு நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வு அந்தப்பெண்ணுக்கு கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாளா? விளைவு குடும்ப மானம் நாளிதழ்களில் பல்லைக்காட்டியது.

எச்சரிக்கை:

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இரவு எட்டு மணிக்கு மேல் கூட ஆண்கள் தொலைபேசியில் அழைக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத ஆண்களுடன் தொலைபேசியில் அரைமணி நேரம் பேசுகிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண்கள் அதிகநேரம் பேசுகிறார்கள் ஆனால் யாருடன் என்பதை சொல்லும் போது சமாளிக்கிறார்களா? ஜாக்கிரதை.

உங்கள் வீட்டுப் பெண் ஏதேனும் ஆபத்தை எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடும்.

ஜாக்கிரதை. உங்கள் குடும்ப மானத்திற்கு சிரிப்பு மூட்ட நாளிதழ்கள் காத்திருக்கின்றன.

கலாச்சாரத்தைக் கட்டிக்காப்போம், குடும்பத்தைக் காப்போம்.

19 comments:

ரோஸ்விக் said...

அருமை நண்பா! பெண்மை எது என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆணுக்கு அடங்காமல் திரிவது அல்ல பெண் சுதந்திரம். கல்வி, வாழ்க்கைத்தரத்தில் முன்னேறுங்கள். ஆடை அவிழ்ப்புகளும், அனாவசிய உறவுகளும் உங்களை கீழ்மைப்படுத்தும். உங்கள் உண்மையான முன்னேற்றம் தடைப்படும்.

sadayan said...

This is what Islam says, No man and women mixing, No tight dress or showing body structure by waearing Black Burqa, no taking with unknown man, etc, etc.

hayyram said...

ஆனால் MOHAMED அவர்களே!

மீறுபவர்களை நடுத்தெருவில் வைத்து எல்லோர் முன்னிலையுலும் சவுக்கால் அடிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. அதை நீங்கள் கவனிக்க வேண்டும். பெண்கள் எவ்வெவ்வாறு நடந்து கொண்டால் ஆண்களை தூண்டிவிடாமல் தவிர்த்து தங்களையும் காத்துக் கொள்ளலாம் என்பதற்கு யோசனைதான் சொல்லப்படுகிறது. மீறுபவர்களை யாரும் தண்டிக்கப்போவதில்லை. தண்டனையை அவர்களே சூழ்நிலைக்குத்தகுந்தவாறு அனுபவித்துக் கொள்கிறார்கள். இவை தினிக்கப்படும் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் ஆண்களும் தர்மத்திற்குட்பட்டு நடக்கவேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப் படுகிறது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நேராக இஸ்லாத்துடன் ஒப்பிட்டு விடாதீர்கள். மற்றபடி எல்லா மதங்களும் மனிதன் இன்புற வாழ வழி சொல்பவையே என்பது உண்மை.

hayyram said...

//waearing Black Burqa,//

this all too much i hope.

இ.பி.கோ 498A said...

திருமணமான பெண்களின் தற்கால நடத்தையைப் பார்க்கும்போது தாலிபான்களின் ஆட்சி வந்தால் தேவலை என்று தோன்றுகிறது.

பிரச்னையை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.

kavi said...

தோழரே,, நீங்கள் கூறியதில் 50% சரிதான்.. ஆனால் உங்கள் கருத்துப்படி பார்த்தால் 'சீதை'க்குபிறகு யாருமே சீதையாக வாழவில்லை என்பதுபோல் உள்ளது... ஒருவேளை நீங்கள் இந்தமாதிரி பெண்மணிகளின் வாழ்க்கயைதான் நிறைய கேள்விப்பட்டிருபீர்கள் என்று நினைக்கிறேன்... இவ்வளவு மோசமாக பெண்களை விமர்சிப்பது சரியாக இல்லை..சில கேடுகெட்ட, 'கற்பு' என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் காமத்துக்கும் பணத்துக்கும் அடிமையாகி தன் மரியாதையையும், தன் குடும்பத்தாரின் மரியாதையையும் நடுத்தெருவில் நிற்க வைகுகும் பெண்மணிகள் வாழும் இதே இடத்தில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்மையான கற்புடைய பெண்கள் ஏறாளம் இருக்கிறார்கள் நண்பரே...ஆகையால எல்லாரையும் அப்படி கருத வேண்டாம்... தூய்மையான பாசமும், உண்மையான புரிதலும் இருக்கும் இடத்தில் ஒரு சதவிகிதம் கூட கள்ளத்தனம் தலை தூக்காது...
தொழிலதிபராக இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியின் 'ஆண் பெண் நட்பு நாகரீகத்தின் ஆளவு' பற்றிய கருத்துக்கும் மிகவும் தெளிவு... அதை மட்டும் கடைபிடித்தாலே நிறைய பெண்கள் தேவையில்லாத வசை மொழிகளிலிரிந்தும், பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்...
மேலும், தங்களின் "எச்சரிக்கை" பகுதியை சில அரைவேக்காட்டு கணவன்மார்கள் படிக்க நேர்கையில் அவர்களின் சந்தேக புத்தி 100 மடங்கு அதிகாமாகுமே தவிர...அதற்கு தீர்வு கிடைக்காது... ஏனென்றால், பொதுவாக மனைவிகள் சாதாரணமாக கணவரிடம் ஏற்படும் புரிதலின்மை, சிற்ச்சில குடும்ப பிரச்சனைகள்..முதலியானவற்றையை தன் தாயிடமும், சகோதரயிடமும், தோழியிடமும் பெரும்பாலும் கூறுவார்கள்... இப்படி இயல்பாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேறு நபரிடம் பேசிக்கொண்டிருக்காள் என்ற சந்தேகம் ஏற்படலாம்.. அதேபோல் கள்ளத்தொடர்பு உள்ள பெண்மணிகள் கணவன் முன்னிலையில் நிறைய நடிக்க வேண்டியிருப்பதால் தோலைபேசிகள் போன்ற ஊடகத்தை தவிர்க்கத்தான் செய்வார்கள்...
சொன்னதையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன் "தூய்மையான பாசமும், உண்மையான புரிதலும் இருக்கும் இடத்தில் ஒரு சதவிகிதம் கூட கள்ளத்தனம் இருக்காது..."

Anonymous said...

Excellent explanation about Epics and the need of the Epics. I agree our growth is related to the environment, As you said now the environment is not good. Almost no kids watching Ramayana Serials etc... Also these smart guys saying it is not truth or illusions so no one bothered about it. As of now each one has more n more desire towards money or sex. Someone should revitalize the people including myself ( I want to be honest).

hayyram said...

இ.பி.கோ 498A ...

சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வழிநடத்துவதை விட்டு அபாயத்திற்கு வழி சொல்வீர்கள் போலிருக்கிறதே!

எனினும் வருகைக்கு மிக்க நன்றி!

hayyram said...

நன்றி kavi!

///"தூய்மையான பாசமும், உண்மையான புரிதலும் இருக்கும் இடத்தில் ஒரு சதவிகிதம் கூட கள்ளத்தனம் இருக்காது...///

நல்லவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள். ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். மறுப்பே கிடையாது.

நன்றிகள் பல.
அன்புடன்
ராம்

hayyram said...

// Anonymous said..( I want to be honest)//

நன்றி!

hayyram said...

நன்றி ரோஸ்விக் .

தமிழ். சரவணன் said...

அருமை நண்பரே,

தங்கள் கட்டுரையை படித்து மிக மகிழ்வுற்றேன்... இக் கட்டுரை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய கையேடு. மிக அருமையாக தெள்ளத்தெளிவாக தங்கள் கருத்துகளை கூறியிருக்கின்றிர்கள்...

//பேருந்தில் பயணம் செய்யும் போது ஐந்தடி தூரத்தில் இருக்கும் ஆணைப்பார்த்து ஐயோ இவன் என்னை இடித்து விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் இவ்வளவு தூரம் தள்ளி இருக்கானே எப்படி இடிப்பான் என்று கூட யோசிக்காமல் லாடம் கட்டும் லத்திக் கம்பு நிறைந்த ஊர் தான் நம்முடையது//


இந்த கருத்து அப்பட்டமான உண்மை...

எனது மனைவி திருமணம் ஆகி 7 மாதம் கூட முடியவில்லை அதற்குள் நான் வரதட்சணை கேட்டு வயிற்றில் உதைத்தேன் என்றும் மற்றும் ஆபாச வக்கிர குற்றச்சாட்டுக்ளை (மஞ்சள் பத்திரக்கையை விட கேவலமாக எழுதி) வஞ்சனையில்லாம் எழுதிகொடுத்தார்...
இதில் பலியாடாக எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பருடைய தாயர் கைது (இவரும் வரதட்சணை கேட்டு வயிற்றில் உதைத்ததற்கு உடந்தையாக இருந்த ராம்) செய்யபட்டு 5 ந்து நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்ட்டார்... இதில் அதிகம் பாதிக்கபடுவது என் 15மாதக்குழந்தை.. இவரை நான் பிறந்த பொழுது பாத்தது... மற்றும் நான் பெற்ற குழந்தையை பார்க சென்றார் நீதிமன்றத்தில் அனுமதிவாங்க வேண்டும் அதுவும் வாரத்திற்கு அல்லது மாத்திற்கு ஒரு மணிநேரம் (டிவி சிரியல் மாதிரி) தான் அனுமதிகிடைக்கும்... அதுமட்டுமல்லாம்ல மேலும் குழந்தையை கடத்தவந்தான் என்றும் பொய்வழக்கு போடாலாம்... ( நம் நாட்டில் என்னவேண்டுமானல் செய்யலாம் பணமும் அரசியல் பலமும் இருந்தால்)

மற்றும் இதுமட்டுமல்லாமல் இச்சட்டத்தினால் எனது தாயர் தம்பி கைது செய்யபட்டு புழல் சிறையில் ஒரு மாத காலத்திற்கு மேல் அடைக்கப்பட்டனர்

இது போல் கொடுமைகள் பல நம் நாட்டில்..

இந்த கட்டுரையை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்தில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்டிவைக்கவேண்டும் என்பது என்விருப்பம் விரைவில் இதைச்செய்வேன்...

Ramesh K said...

Great explanation about discipline of mankind. Thanks lot for such a clear clarity. Your's writings need to be reach many people. Excellent friend.

hayyram said...

நன்றி Ramesh K.

hayyram said...

தமிழ். சரவணன்!

//இதுமட்டுமல்லாமல் இச்சட்டத்தினால் எனது தாயர் தம்பி கைது செய்யபட்டு புழல் சிறையில் ஒரு மாத காலத்திற்கு மேல் அடைக்கப்பட்டனர்//

உண்மையிலேயே இது ஒரு கொடுமை தான். உங்கள் அடுத்தக் கட்ட வாழ்க்கை புதுப்பொலிவுடன் புதிய ஆரம்பத்துடன் நல்ல விதமாகவும் இன்பமாகவும் அமைய வேண்டும் என்று மனப்பூர்வமாக இறைவனை வேண்டுகிறேன். கண்டிப்பாக நல்லது நடக்கும் நம்பிக்கை தான் வாழ்க்கை.

அது மட்டுமல்ல ஆண்கள் படும் பல்வேறு சிறு சிறு கொடுமைகள் வெளியே தெரிந்தாலும் பெரிதுபடுத்தப்படுவதில்லை.

சமீபத்தில் வந்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் துவக்கத்திலேயே வரும் காட்சியில் ஒருவர் காவல் நிலையத்தில் தன் மனைவி பருப்பு ஏன் சரியாக வேகவில்லை என்று கேட்டதற்கு குக்கரால் அடித்துவிட்டால் என்று தலையில் இருக்கும் ப்ளாஸ்திரியை காண்பிப்பார். காவலர் அதை அலட்சியம் செய்து, இதையெல்லாம் சிரித்து பேசி சரிசெய் இதற்கெல்லாம் இங்கே வராதே என்று சொல்லி விரட்டிவிடுவார். அதாவது ஆண்கள் மனைவி மார்களால் படும் துன்பம் இன்னும் சமூகத்தில் காமெடியாகவே பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் நிரூபிக்கிறது.

பெரும்பாலான திரைப்படங்கள் இதையே செய்கின்றன, மேலும் பெண் அழுதாலே அது பிரச்சனை என்றும் பெரிதுபடுத்தப்படும்.

ஆண்கள் விட்டுக் கொடுத்துப் போகும்வரை தான் இந்த பெண்ணியப் பப்பு வேகும். எத்தைனைக்காலம் தான் இவ்வாறு நடக்கும் என்பதையும் பார்ப்போமே. அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம். சரியா!

அன்புடன்
ராம்

Unknown said...

நல்லா சொல்லியுள்ளீர்கள்.

கொஞ்சம் கொஞ்சமமாக முறையற்ற உறவுகள் மாறிக்கொண்டுள்ளன...

நமது வாழ்க்கை முறை கூட ஒரு காரணம். பணம் பணம் என்று ஓடாமல் இருக்க வேண்டும், கலாச்சாரத்தை காக்க வேண்டியது மிக அவசியம்.

பொடிப்பையன் said...

உங்கள் கருத்துமுழுக்க முழுக்க உண்மை..
ஆண் - பெண் நட்பின் அளவையும், பெண் சுதந்திரம் பற்றி விவாதித்தமைக்கும் நன்றி. "-பொடிப்பையன்-"

hayyram said...

mr. s.abubakkar.sithik , வக்கிரமான சுட்டியைத் தந்து உங்கள் பாகிஸ்தானிய முகத்தை காட்டிவிட்டதற்கு நன்றி.

என்னது நானு யாரா? said...

மேற்கத்திய நாகரீகம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. அது அனைவருக்கும் சுதந்திரம் தரும் ஒரு சாவியாக பார்க்கபடுகிறது.

நம் நாட்டு கலாச்சாரம் மூச்சை முட்ட செய்யும் இருட்டு அறையாகவே இருக்கிறது என்கின்ற பார்வையே இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிறது

இனி குடும்பங்கள் சிதைவுறத்தான் செய்யும். மாற்றங்களை யாரால் தடுத்து நிறுத்தமுடியும்? குடும்ப பொறுப்புக்களை, குழந்தைகளை அரசே ஏற்கும் நிலை வரலாம்.

தாய் கிடையாது, தந்தை கிடையாது, எல்லோரும் தனி தனி மனிதர்கள் என்கின்ற நிலையை நோக்கி பயணபடுகிறது நமது சமூகம். பார்த்துகொண்டே இருங்கள்! இன்னும் 20, 25 ஆண்டுகளில் எந்த எந்த மாற்றங்கள் எல்லாம் வர போகிறது என்பதனை.

-----------------------------------

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
----------------------------------