Tuesday, November 17, 2009

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

வலை தளங்கள் நிறைய கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி செய்யும். கருத்து மோதலுக்கும் குறைச்சல் இருக்காது. அவ்வாறு நிகழ்த்தப்படும் கருத்துப் பரிமாற்றங்களில் சிலருடைய கருத்துக்களால் ஈர்க்கப் படுவோம்.

அவ்வகையில் என்னை கருத்துக்களால் ஈர்த்தவர் திருச்சிக்காரன் (புனைப் பெயர் தான்). அன்பு நண்பர். அவர் சிறந்த ராம பக்தர் என்பது அவரது பதிவுகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீக விவாதம் என்று வந்தால் ஆழமாகவும் நிதானமாகவும் பல கருத்துக்களை எடுத்து வைப்பவர். பைபிளை படித்து குடித்தவர். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். நாத்திகம் பேசுபவர்களைக் கூட கண்மூடித்தனமான நாத்திகத்தை விட்டு நிஜத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் என்று அழைப்பவர்.

தனியாக அமர்ந்து அவரது எழுத்துக்களை பற்றி அவதானித்துக் கொண்டிருந்தேன். சரி எல்லோருக்கும் சொன்னால் கும்பலாக சிந்திக்கலாமே என்று அவர் எழுதியதை இங்கே அளிக்கிறேன். கம்பைண்டு ஸ்டடி.

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?
எழுதியவர்: திருச்சிக்காரன்

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

பகுத்தறிவாளர் என்பவர் யார்?

இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.


சரிதானே ?

பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில்
உழல்வதாக கூறுகிறார்.

“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிஞரிடம் முன் வைத்தாரா?

அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம். ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும். என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்! ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

Because Truth can never be defeated- it is the property of the truth!

Truth shall prevail! No body can defeat the Truth.

Hence let us all strive to find the truth.

- திருச்சிக்காரன்
__________________________________________________________________________________________

ஆக ஆராய்ந்தறிவோம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். அது தானே பகுத்தறிவு. ஒரேயடியாக கடவுள் இல்லை என்று சொல்வது, அல்லது ஒரு புள்ளியைக்காட்டி இது தான் கடவுள் என்று சொல்வது ரெண்டுமே ஒன்றுதான். அதைத் தாண்டி சிந்திக்கவேண்டும்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்னர் அர்ஜுனனிடம் சொல்கிறார் - 'அர்ஜுனா! நான் சொல்வதை எல்லாம் கேட்டு, அதில் எது சரியென்று நீ நினைக்கிறாயோ அதையே செய்!' என்கிறார். சொன்னவர் கடவுள். நான் தான் கடவுள், நான் சொல்வதை அப்படியே கேள் என்றாலும் அர்ஜுனன் சரி என்று கேட்டிருப்பான். ஆனாலும் அந்தக் கடவுளே அர்ஜுனனுக்கு போதித்துவிட்டு நீ சிந்தித்து முடிவெடு என்கிறார்.

அது தான் இந்து தர்மத்தின் சிறப்பம்சம். இந்து தர்மம் சிந்திக்கத்தூண்டும் மதம். கட்டளை பிறப்பிக்கும் மதம் அல்ல.

சிந்திப்போம். ஞானம் பெறுவோம்.

ஜெய் ஸ்ரீ க்ருஷ்னா!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.

12 comments:

thiruchchikkaaran said...

Dear Mr. Ramkumar,

First, Let me thank you for having posted my opinions in your blog as an article.

To the best of My knowledge you are the only blogger, who posts others opinions as an article in your blog. I aprreciate your broad minded courtesy.

Now your derivataion that I am a Ram devotee is also correct, and the word "Ram devotee" has to be understood in the right context.

No doubt, I am charmed by the Kind, Selfless, Sacrificial...life of Ram.

I am devoted to his principles:

Prefering to follow principles and not to leave principles to get the throne and power

accepting adversity and pain for the pleasure of others,

Not desiring for other women other than wife,

helping others even while he was in adversity...etc.

As a rationalist, I do not rule out the chances that the Life of Rama could be a fiction,

at the same time I wish to mention that there are more chances that Ramas life was a real event, There are reliable evidences to corroborate that Ramas life was real event, an ancient history.

Again I can not confirm that Rama is living in the sky, unless I can see him or feel him or find him...in some way.

I am not ready to give false testimony "I found him"!

My viewing of Rama is similar the view of Kuhan, Anuman, Vibishen... etc. They dont know whether Ram was a GOD or a moratl man, They loved Rama for his Charcater and self less service.

My function to Rama is exactly the same, We like him, love him, understand his principles and upheld them- We dont know whether He is a God or he was a man-its immaterila for us.

Hence there is no contradiction in being a Ram devotee, and at the same time be a perfect Rationalist.

We can keep rationality and Ram devotion in perfect harmaony in our Philosophy- obsolutely no contradictions.

Thanks,

Thiruchchikkaaran.

hayyram said...

thank u,

பக்தி என்றாலே ஒரு பொருள் அல்லது ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலுடன் மனது லயித்திருத்தல் என்று கொள்ளலாம். நீங்கள் ராம பக்தர் என்றால் ராமரின் கொள்கைகளின் பக்தர் என்று சொல்லாம் அல்லது நல்ல கொள்கைகளுக்கு அடையாளமாகவே ராமன் திகழ்வதால் ராமன் என்ற கதாபாத்திரத்திற்கு பக்தர் என்றும் கொள்ளலாம். இரண்டுமே ராமரின் நற்கொள்கைகளைக் குறிக்கக்கூடியதே!

மாறாக பக்தர் என்று சொன்னவுடன் சாமி நம்பிக்கையாகிவிடும் என்று பயந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்ள. நல்ல விஷயம் என்று உறுதியாக தெரிந்த பின்னர் அதை அப்படியே ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம் எதற்கு விளக்கம். நீங்கள் ராம பக்தர் என்று சொல்லும் போதே ராமரின் அற்புதமான நற்குணத்தால் கவரப்பட்டு அவர் மீது மனதை லயிக்கச் செய்தவர் என்றே பொருள் படுகிறது. அதற்கு விளக்கம் வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். சரி.

to avoid more confusion, instread of word devotee I can say that you are a follower of GOD rama? is it ok. or will you explain more?

hayyram said...

////My viewing of Rama is similar the view of Kuhan, Anuman, Vibishen... etc. They dont know whether Ram was a GOD or a moratl man, They loved Rama for his Charcater and self less service////

these are nice explanation. ஆனால் ராமன் என்றாலே நீங்கள் மேற்சொன்ன இவை அனைத்தும் அடையாளப் பட்டு விடும் என்பது சராசரி மனிதருக்கே விளங்கி விடும் என்றே நினைக்கிறேன். ஆதலால் ராம பக்தர் என்று ஒரே வார்த்தையில் சொல்லிக் கொள்வதால் எந்த தவறான புரிதலும் வந்து விடப்போவதில்லை என்பதே என்கருத்து. நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ? நான் கிருஷ்ணரை மனதார விரும்புகிறேன். காதலிக்கிறேன். குருவாக நேசிக்கிறேன். சகோதரனாக துணைக்கு கொள்கிறேன். நண்பனாக பாவிக்கிறேன். கிருஷ்ணன் ஒருவனைத் தான் எல்லா ரூபத்திலும் விரும்ப முடியும் என்றும் நம்புகிறேன். அதனால் நான் நேரடியாக என்னை கிருஷ்ண பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி ஒரு நெருடல் இல்லா வெளிப்பாடு உங்களிடம் இருந்தால் உங்களைத் தொடர்பவர்கள் குழம்பாமல் தொடர்வார்கள் என்றென்னுகிறேன். கருத்துக்களுக்கு நன்றி.

thiruchchikkaaran said...

// My viewing of Rama is similar the view of Kuhan, Anuman, Vibishen... etc. They dont know whether Ram was a GOD or a moratl man, They loved Rama for his Charcater and self less service.

My function to Rama is exactly the same, We like him, love him, understand his principles and upheld them- We dont know whether He is a God or he was a man-its immaterila for us//

இது பயந்து கொண்டோ, பூசி மொழுகவோ யாரையும் ஏமாற்றவோ அளிக்கப் பட்ட விளக்கம் அல்ல!

கடவுள் இருக்கிறார் என்று நம்புவது என்பது ஒரு விடயம் - ஆனால்

கடவுள் இருக்கிறாரா , நான் அவரைப் பார்க்க முடியுமா? நான் அவரைப் பார்த்தபின் சாட்சி குடுப்பேன், என்ற நிலைப்பாடு எடுப்பதில் தவறு இல்லை.

அப்படிப் பட்ட நிலைப் பாடு எடுப்பவன் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள நம்பிக்கை வாதியை விட இன்னும் தீவிரமாக முயற்ச்சி செய்வான்.

நீங்கள் விவேகானந்தர் வரலாறு அறிந்து இருப்பீர்கள்.

நரேந்திரன் தான் விவேகனந்தராக உருவெடுத்தார் என்பதையும் அறிந்து இருப்பீர்கள்.

எனவே கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரைக் காணும் முன்னரே அவர் இருக்கிறார் என்று அடித்து சொல்ல, வற்புறுத்தி சொல்ல இயலாது- கடவுள் என ஒருவர் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதற்க்கு முன் அவசரப் பட்டு "சாட்சி குடுக்கிறேன்",
"குபுல் ஹை",

"ஒரே கடவுள் தான்",

"இல்லை ஒரு கடவுள் இராமரைத் தவிர, அனுமார் அவர் தூதுவர்" என்று எல்லாம் அலப்பறை விட வேண்டிய அவசியம் இல்லை.

இராமாயணம் முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக நடந்து இருக்க கூடிய ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

அதற்கு நூல் சான்றாக வால்மீகியின் இராமாயணமும் பிசிகல் எவிடன்சாக பாலமும் உள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நடு நிலையாக ஆராய்ந்தால், இராமாயணம் ஒரு உண்மை நிகழ்வாக இருந்திருக்க எல்லா சாத்தியங்களும், வலுவான் ஆதாரங்களும் உள்ளதை ஒத்துக் கொள்வார்கள்.

இராமன் கடவுளின் அவதாரமாக இருந்திருக்காவிட்டாலும், அவன் எல்லோரையும் விட மிக பொறுமையாகவும், மிக அதிகமாக விட்டுக் கொடுத்தும், மிக நியாயமாக நடந்து கொண்டும், மிக ஒழுக்கமாக வாழ்ந்தும், மிகுதியான வீரத்தை வெளிக் காட்டியும், செய்வதற்கரிய தியாகத்தை செய்தும்,… இருக்கலாம் எனக் கருதுவதில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை.

பல சமய அறிங்கர்கள், மத்த கடவுள்கள் எல்லாம் வானத்திலே இருந்து லீலைகளை செய்வதாக கூறப் படும் போது, இராமர் மனிதர்களோடு வாழ்ந்து மிக அதிகமான துன்பத்தை அனுபவித்த தாகவும், அப்படி பல துன்பங்களை அனுபவித்த நேரத்திலும், பிறருக்கு முடிந்த வரை உதவி செய்ததாகவும் எடுத்துக் காட்டி உள்ளனர்.

இராமர் கடவுள் இல்லை - கடவுளுக்கும் மேலே, எல்லா கடவுளும் மேலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்த நிலையிலே இராமர் கீழே வந்து பல இன்னல்கள் ஏற்று அந்த நிலையிலும் பிறருக்கு உதவியவர், எனவே மனிதர்களிலும் இராமனுக்கு சமமானவர் இல்லை. கடவுள்களிலும் இராமனுக்கு சமமானவர் இல்லை என்று சமய அறிங்கர்கள் கூறியுள்ளனர்.

எனவே தான் ஒரு சமய அறிங்கர்,
“சமான மெவரு, ராம நீ சமான மெவரு

ரகு வம்ச தாரகா” என்று பாடியுள்ளார், எனக் கூறுகிறார்கள்!

hayyram said...

“சமான மெவரு, ராம நீ சமான மெவரு ரகு வம்ச தாரகா”

ஆகா மன்ச லைனு. அதி சதவுன்னதி நா பாக்கியம். இக்கட ஒச்சி மீரு எக்ஸ்ப்லெயின் சேஸாரு அதும் நா பாக்கியமே! சால உந்தி. மீருக்கு நன்ன நமஸ்காரமண்டி.

Anonymous said...

உங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது. உபயோகமான என்னைப்போல் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள அதிக கருத்துக்கள் உள்ளன.எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ் சினிமாவில் பிராமணர்கள் என்ற தலைப்பில் tamilbrahmins.com மில் எழுதியது நீங்களா?

hayyram said...

//தமிழ் சினிமாவில் பிராமணர்கள் என்ற தலைப்பில் tamilbrahmins.com மில் எழுதியது நீங்களா?// ஆம் இந்த தளத்தில் எழுதியதை அங்கே மறுபிரசுரம் செய்தேன். பலர் படித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். ஏதாவது மாற்றம் நடந்தால் சரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மு.

Ammu Madhu said...

எனக்கும் என் தோழிகளுக்கும் உங்களோட அந்த ஆர்டிகிள் மிகவும் பிடித்திருந்தது.என்னை அறியாமல் அழ வைத்தது.எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ராம்.

hayyram said...

//உங்களோட அந்த ஆர்டிகிள் மிகவும் பிடித்திருந்தது// எந்த ஆர்டிகிள்ன்னு சொல்லலியே அம்மு? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

hayyram said...

//எனக்கும் என் தோழிகளுக்கும் உங்களோட அந்த ஆர்டிகிள் மிகவும் பிடித்திருந்தது// ஓ! தமிழ் சினிமாவில் பிராமணர்கள் பற்றி தானே! மிக்க நன்றி. முதலில் எதைப் பற்றி பேசினீர்கள் என்று புரியவில்லை. தூக்க கலக்கத்தில் படித்ததால் வந்த வினை. நன்றி.

அதி கர்விதா AK 63 said...

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக புரிந்தால் தமிழ் நாட்டில், ஏன் இந்த்தியாவில் கூட நாச்திகம் என அறியப்பட்டது எது என்பது விளங்கும். அன்னிய ஆட்சிகளின் பலவிதமான ஊடுருவல்களில் இந்த நூதனமான நாச்திக வாதமும் ஒன்று. இது இந்து சமயத்தை மட்டும் குறி வைப்பதையும், அதிலும் அர்ச்சகர் (பிராமணர்கள் என்பவர்கள் தொழில்சார்ந்தவர்களோ, பிறப்பு சார்ந்தவர்களோ இல்லை, எனவே தான் அர்ச்சகர் சமூகம் என்கிறேன்) சமூகத்தை மட்டும் கபடநோக்கோடு தாக்குவதையும் பல காலம் கவனித்து வருகிறேன். இதற்க்கு சாதாரண சமூகம் எந்த சிந்தனையையும் பிரதி பலித்ததாக காணோம். சைவ ஆதினங்களின், இந்துக்கோயில்களின் சொத்துகலையிட்டு அங்காப்புடைக்கும் சில ஊடகங்கள், வேற்று சமயங்களின் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்திருக்கும் கட்டிடங்களை, சொத்து மதிப்புகளைக் “கவனிப்பது’ கிடையாது. இத்தனை இந்துக்கள் தமிழ் நாட்டில் இருந்தும் நாச்திக வாதிகள் ஆட்சிப் பலம் பெற என்ன காரணம்? ஆன்மிக வறுமை, கீழ்த்தர சினிமாவின் மூன்று தசாப்த மூளைச்சலவை, கபட நாஸ்திகர்களின் இந்து எதிர்ப்பு ஆட்சி என மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்.

அதி கர்விதா AK 63 said...

இன்னொன்று... இராமர் பாலம் என்று சொல்ல வாய் கூசுகிறவர்கள் வெள்ளைக் காரன் ஆதாம் பாலம் என்று நாஸா புகைப்படத்தில் குறியிட்டிருப்பதை சாஷ்டாங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள். விந்தை!