Monday, December 28, 2009

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்!


சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

சீடர்: 'சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?"

சுவாமி விவேகானந்தர் "உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் "சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா'- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது' என்று கூறுகிறார்.

அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.

மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், 'அறிபவனை எதனால் அறிவது?' என்று கேட்கின்றன.

உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. 'உணரப்படுகிறது' என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.

மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.

இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!

- சுமாவி விவேகானந்தர்.

சரி நாம் எதற்கெல்லாம் பயப்படுகிறோம்? லிஸ்ட் போட்டு பார்த்தால் வெல்ல வேண்டிய பயங்கள் வெளிப்படுமோ?

போட்டு பாப்போம்!

4 comments:

ஸ்ரீராம். said...

அருமை...என் பயங்களை பொதுவில் லிஸ்ட் போடவே பயம்...!

creativemani said...

அருமையான விளக்கங்கள்..
நிறைவான பதில்!!!

சிந்திப்பவன் said...

தனபால்
ராம் சார்,உங்கள் ப்ளாக் மிகவும் நன்றாக உள்ளது.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

hayyram said...

நன்றி SRIVI BLOG,

பொதுவாக நான் ஆங்கிலேயன் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை.

எனினும் உங்கள் வாழ்த்தும் மனதிற்கு நன்றி. நீங்கள் கொண்டாடினால் உங்களுக்கு எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசுவோம்.

அன்புடன்
ராம்