Monday, May 3, 2010

நகைச்சுவையான முல்லா!


ஒரு நாள் முல்லா வெளியூர் ஒன்றிர்குச் சென்றிருந்தார்.


அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அரை இருந்தது. முல்லா அங்கே குளிக்கச் சென்றார்.


அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்ததால் அங்கிருந்த வேலைக்காரர்கள் அவரை சரியாக கவனிக்கவில்லை. அவரை அலட்சியமாக நடத்தினார்கள். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப்படுத்தினர்.


குளித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக்காசை அன்பளிப்பாக கொடுத்தார்.


அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய் விட்டார்கள்.


ஆகா! ஒரு பெரிய செல்வந்தரை அலட்சியப்படுத்தி விட்டோமே! அவரை நன்றாக கவனித்திருந்தால் நிறைய பரிசு கொடுத்திருப்பாரே. கோட்டை விட்டு விட்டோமே என்று சலித்துக்கொண்டனர்.


இரண்டு நாள் கழித்து முல்லா அதே குளியலரைக்குச் சென்றார்.


இம்முறை வேலையாட்கள் முல்லாவிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டனர். அவருக்கு முதுகு தேய்த்துவிட்டு நன்றாக குளிப்பாட்டி மகிழ்வித்தனர். முல்லா குளித்து முடித்தார்.


அவருக்கு உடல் துடைக்க உயர் ரக தூவாலைகள் கொடுத்தனர்.


அவருக்கு வாசனைத் திரவியங்கள். கொடுத்தனர். பன்னீர் தெளித்தனர்.


இப்போது வேலையாட்கள் முல்லா தங்கக்காசு கொடுக்கப் போகிறார் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முல்லாவோ ஆளுக்கொரு செப்புக்காசை கொடுத்தார்.


இதைப் பார்த்த வேலைக்காரர்கள் முல்லாவிடம் நாங்கள் நன்றாக உங்களை உபசரித்தோமே, ஏன் தங்கக்காசு தரவில்லை என்றனர்.


அதற்கு முல்லா அன்றைக்கு உங்களுக்கு தங்கக்காசு கொடுத்தேனே அது நீங்கள் இன்றைக்குச் செய்த உபசாரத்திற்கு. இப்போது செப்புக்காசு கொடுத்திருக்கிறேனே, அது நீங்கள் அன்று செய்த அலட்சியத்திற்கு என்று கூறி நடையைக் கட்டினார்.


*****************


ஒரு நாள் மாடியில் பராக் பார்த்துக் கொண்டிருந்த முல்லா கீழே தவறி விழுந்துவிட்டார். சப்தம் கேட்டு அவரது மனைவி ஓடி வந்து என்னவென்று விசாரித்தார்.


"மாடியிலிருந்து எனது சட்டை விழுந்து விட்டது" என்றார் முல்லா.


"சட்டை விழுந்ததற்கா இவ்வளவு சத்தம்" என்றார் அவர் மனைவி.


"சட்டைக்குள் நான் இருந்தேனே!" என்றார் முல்லா.




2 comments:

kargil Jay said...

//
hayyram said...

அதுக்கு ஏன் பிராமணர்களை இழுக்கிறீர்கள் ஜெய்? நீங்களும் திராவிட மாயைக்காரரோ?

அன்புடன்
ராம்
//

ஸ்ரீ . ராம்
மேற்கண்ட உங்கள் கருத்தினைப் படித்தேன். எனக்கு எப்போதாவது சில சமயங்களில் பிராமணர்கள் அறிவாற்றலுடன், பிறரின் பக்தியை உதாசீனம் செய்து விடுகிறார்களோ என்று தோன்றியது. அதனால் எழுதினேன். இருந்தாலும் உங்கள் கருத்துக்கு பெருமதிப்பளித்து மாற்றிவிட்டேன். இப்போது சரியா?

கார்கில் ஜெய்
http://vaikkal.blogspot.com

hayyram said...

மிக்க நன்றி ஜெய்!