Wednesday, June 9, 2010

கீதோபதேசம் - எந்த உயிரையும் வெறுக்காதே!



அர்ஜுனன் கேட்டது!

எப்பொழுதும் இடைவிடாது யோகத்தில் உறுதியுடனிருந்து உன்னைத் தியானிக்கும் பக்தர்கள், அழிவற்றப் பரம்பொருளை வழிபடுவோர் இவர்களுள் யார் சிறந்த யோகிகள் ஆவார்?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி, எப்பொழுதும் பக்தியுடனும் மாறாத உறுதியுடனும், மிகவும் மேலான நம்பிக்கையுடனும் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களை நான் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்று கருதுகிறேன்.

எவன் ஒருவன் எந்த உயிரையும் வெறுக்காமல் இருக்கிறானோ, எல்லோரிடமும் நட்பு கொண்டவனாக, கருனை உள்ளவனாக இருக்கிறானோ, பற்றற்றும், நான், எனது என்ற எண்ணத்தை எல்லாம் அறவே கைவிட்டவனாக இருக்கின்றானோ, இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையில் இருக்கிறானோ, மன்னிக்கும் பாங்கும், பொறுமை உடையவனாகவு இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எப்போதும் போதும் என்ற மனத்திருப்தி உடையவனாகவும், தியானத்தில் உறுதியாகவும், திடசித்தம் உடையவனாகவு, யோகப் பயிற்சியில் அனுபவம் பெற்றவனாகவும் இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எவனொருவன் தன்னடக்கம் உள்ளவனாகவும் உறுதியான கொள்கை உடையவனாகவும், தனது மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாகவும் யார் இருக்கிறானோ அத்தகைய பக்தனே எனக்குப் பிரியமானவன்.

தனஞ்செயா! எவன் உலகுக்கு யாதொரு துன்பமும் இழைப்பதில்லையோ, உலகால் துன்பமடையாமலும் இருக்கிறானோ, எவன் மகிழ்ச்சி, கோபம், அச்சம், கவலை ஆகியவை நீங்கியவனாக இருக்கிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன்.

எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், திறமைசாலியாய், பற்றின்றி எல்லாவற்றையும் சமமாக கருதுபவனாய், கவலையற்றவனாய், எல்லா ஆடம்பரங்களையும், செயல்களையும் துறந்தவனாய் என்னிடம் பக்தியோடு இருப்பவன் எவனோ அவனே எனக்குப் பிரியமானவன்.

மகிழ்ச்சியடைதலும், வெறுத்தலும், துயரமடைதலும், விரும்புதலும் இன்றி, நல்லது, கெட்டது எல்லாவற்றையும் எவன் துறந்து விடுகின்றானோ, அந்தப் பக்தனே எனக்குப் பிரியமானவன்.

அர்ஜுனா! விரோதியையும், நண்பனையும் ஒரே விதமாகக் கருதுபவனும், மானம் அவமானம், குளிர்-உஷ்ணம், இன்பம்-துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருதுபவனும், பற்றுதலில் இருந்து விடுதலை பெற்றவனும் எனக்குப் பிரியமானவன்.

புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுபவனும், மௌனமாக இருப்பவனும், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவனும் உறுதியான உள்ளம் படைத்தவனும், பக்திமானாகிய அவனே எனக்கு பிரியமானவன்.

அர்ஜுனா! நான் கூறியுள்ளபடி தர்மத்தின் சாரமான இதை யார் நம்பிக்கையுடனும், என்னைலட்சியமாகக் கொண்டு என்னை யார் பின்பற்றுகிறார்களோ, அத்தகைய பக்தர்களையே நான் மிகவும் விரும்புகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்


10 comments:

KMK said...

Nice Article. Thank you for your service. What happened to "After Death" - articles. Did I miss anything after 13th episode Wednesday April 14th 2010. Could not wait longer.... :-)

hayyram said...

நன்றி கெ எம் கெ. அடுத்த பகுதி ஆரம்பிப்பதற்குள் நிறைய ஆணி புடுங்கும் வேலை வந்து விட்டது. தொட்டால் தொடர வேண்டுமே அதனால் கொஞ்சம் தொங்கப்போட்டு விட்டேன். மிச்சத்தையும் விரைவில் உங்களுக்குச் சொல்லி நசிகேதன் நற்கதி அடைந்த கதையை முடிக்கிறேன். தங்கள் ஆதரவிற்கு நன்றி!

thiruchchikkaaran said...

ராம்,

எந்த உயிரையும் வெறுக்கக் கூடாது என்பது மிகச் சிறந்த கருத்து, கீதையின் பொருள் அதனையும் தாண்டி செல்லுகிறது!

காரணம் இல்லாமல் எதையுமே வெறுக்க வேண்டியதில்லை, எந்த ஒரு இனத்தையோ, பழக்கத்தையோ, உடைகளையோ, மொழியையோ, பணபாட்டையோ, பாலினத்தையோ, கோட்பாட்டையோ , நாட்டையோ, பிரதேசத்தையோ, உயிரினததைய்ப், தாவரத்தையோ .... எதையுமே வெறுக்க வேண்டியதில்லை.

இது மிக முக்கிய மிக உயரிய கருத்து.

இந்த உலகத்தில் அமைதியை உருவாக்கும் வல்லமை உடையது இந்தக் கருத்து.

கீதையின் அத்வேஷ்டா என்கிற வார்த்தையின் பெருள் - மனதில் வெறுப்பு இல்லாதவனாக, வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக, பகைமை உணர்ச்சி இல்லாதவனாக - என்பது ஆகும்.

இந்த கோட்பாட்டை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே உயிர்களின் மீது மட்டும் வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக என்பது போல மொழி பெயர்ப்பு செய்து விடுகின்றனர்.

அதி கர்விதா AK 63 said...

People have realized that if a species is vanished from this planet that would adversely affect other creatures. That’s conceived the idea of Diversity. Difference is inevitable and it prevails spontaneously in nature.

Diversification is therefore acceptable, but not the dividend governance between the difference. This in turn shatter the nature. British invaded into the sub-continent (Bharatha Nation as known in scriptures) for trading, then to Evangelize, and later on to conquer. We now face the consequences of their venomous strategies, esp. dividend ruling between ethnic groups.

However, we are not complaining about their religion but the hatred propaganda it carries out on laypeople in rural regions.

The very first thing the locals need to do is to educate the people with Hinduism. And everyone should remember that Hinduism is a name given for the all-alike religious/ spiritual beliefs and doctrines practiced in India, by some Travelers. Because, these people were originated from Indus Valley which gave them a collective name Hindus.
Hence, Hinduism has so many philosophies which sometimes seem to have drastic differences, though they do compromise with each other. For example, Saiva sect has two paths: devotion and wisdom (Sidhars way). This differs from Tantric methods of worshiping. Tribal worships are quiet a differnt from all the above. And Vaishnava branch is totally committed to devotion and krya. Likewise, there are ample amount of ways. THAT IS THE SPIRIT OF LONG SURVIVAL NATURE OF THIS RELIGION. No body knows which region they are attacking. It’s and old Ficus tree and immaturity cannot chop its hundreds or thousands of hanging roots.

I will come soon, yes, with other treats ;)

Cheers,

AK 63

kppradeep said...

Dear Ram,
Thanks again for your wonderful service
Pradeep

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருச்சி அவர்களே!

hayyram said...

நன்றி அதி கர்விதா AK 63

hayyram said...

thanks pradeep. its my pleasure.

sudha said...

Each and every word is good sir.

Really I happy to read articles all .

hayyram said...

thanks and welcome sudha