Wednesday, June 16, 2010

பதின் வயது திருமணம் குற்றமா?




பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கூடத்தில் பிள்ளை பெற்றாள். நல்ல செய்தி!

ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டு சென்றுள்ளார் என்கிறது அந்த செய்தி. மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளதாம் பள்ளி நிர்வாகம். பின்ன, ஒரு பள்ளிக்கூடம் என்ன தான் செய்ய முடியும். ஆட்டு மந்தைகளை கூடத்தில் அடைப்பது போல ஆள் சேர்ப்பது, பின்னர் டி சியை கொடுப்பதும் மட்டுமே வேலையாக கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்களால் வேறென்ன செய்ய முடியும். கலாச்சாரம் , ஒழுக்கம் போன்றவற்றை பள்ளிக்கூடங்கள் போதிப்பதற்கு முன்னால் கற்பு பற்றியும் திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் குஷ்பு போன்றவர்கள் கற்றுக்கொடுத்து விடுகின்றனரே! பிறகு பள்ளிக்கூடங்களால் பிள்ளைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்க முடியும்!

செய்தியின் மிச்சத்தையும் படியுங்கள் - "தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இந்த யுவதி திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற்றோரிடம் வழங்கினர்." செய்தி இங்கே .

சரி. இப்படி நடந்தது அதிர்ச்சியான தகவலா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த இயற்கையின் படைப்பில் ஆடு, மாடு, நாய், நரி, ஓநாய், கழுதை, குதிரை, பன்றி, யானை, ஒட்டகம், ஈ, கொசு, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், மீன்கள் மற்றும் மரம் செடி கொடிகள் என்று எல்லா ஜீவராசிகளுமே இனப்பெருக்கத்திற்கான வயதை எட்டியவுடன் தன் இனையைக் கூடுகிறது. இது இயற்கையின் நியதி தானே!

அதைப் போலத்தானே இப்போது இந்த பள்ளியில் படிக்கும் யுவதியின் விஷயத்திலும் நடந்திருக்கிறது. இணை சேரும் காலம் வந்தது. இணையைக் கூடினாள். இயற்கையின் நியதிப்படி இது சரியே! இந்தச் செய்தியில் அடிபட்ட யுவதியோ அல்லது அவளுடன் கூடியவனோ தண்டிக்கப்படக் கூடியவர்கள் அல்ல. பருவம் எய்தியவுடன் இணையைக் கூடுவது குற்றமும் அல்ல.

ஆனால் மனிதர்களாக வாழும் நாம் உணர்ச்சிப் பூர்வமாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உணர்வுகளின் அடிப்படையில் எழும் சில உணர்ச்சிப் போராட்டங்களைத் தவிர்க்கவும், உரிமைப் போராட்டங்கள் இல்லாமல் அமைதியாக வாழவும், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முயன்றும் சில விதிகளை நமக்குள்ளே நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பெயர் தான் நாகரீகம். அது தான் நாகரீகம் அடைந்தோம் என்று நம்மை நாமே கூறிக்கொள்ளும் மனித வாழ்க்கை ஆகும்.

விலங்குகளைப் போல கூடினோமா, குட்டிப்போட்டோமா பின் விட்டுச் சென்றோமா என்று சென்று விடுவது எளிது தான். ஆனால் பெற்றுப் போட்ட குட்டியின் நிலை என்ன என்ற உணர்ச்சிப் பூர்வமான கேள்வியை மனிதன் சிந்தித்த நாள் முதல் தான் மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடத்துவங்கி இருப்பான். இந்த சிந்தனை விரிவடைந்து ஒரு ஆணும் பெண்ணும் தான் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பாகிறார்கள் என்ற ஆத்மார்த்தமான சிந்தனை தான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்து மேலும் செம்மையான நாகரீகத்திற்கு கொண்டு போனது என்றால் மிகையாகாது.

இப்படி ஒருவர் வாழ்க்கைக்கு மற்றவர்கள் தானாகவே பொறுப்பேற்றுக் கொண்டதனால் குடும்பம் என்ற அமைப்பு உண்டானது. குடும்பம் என்ற அமைப்பு உணர்வுப்பூர்வமாக உண்டான ஒரு அமைப்பு. இந்த அமைப்பை முறைப் படுத்தவே சில வழி முறைகளை பின்பற்றப்பட்டன. அதில் முக்கியமான வழி முறை தான் திருமனம் என்று அழைக்கப் படுகிறது.

இப்போது விஷயத்திற்கு வருவோம், நமது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட வயதைக் கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக எல்லோரும் இணை தேடும் பருவத்தில் மணம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளும் இல்லை. ஒன்றும் தெரியாத முட்டாள்களோ, காட்டு மிராண்டிகளாகவோ இருக்கவில்லை. பன்பட்ட நாகரீக மனிதர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆடு, மாடு, நாய், நரிகளைப் போல வாழாமல் முறையான மனித வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பருவத்தே கூட வேண்டியது இயற்கையின் நியதி என்பதை புரிந்து கொண்டு அதற்கு அணை போடாமல் அதை முறைப்படுத்தி, குடும்பம் என்ற அமைப்பு சிதையாமலும் தாங்களே தங்கள் வாரிசுகளுக்கு வயதிற்கேற்ற வரன் தேடிக்கொடுத்தும், முறையான வழியில் இணையைச்
சேரக் கற்றுக் கொடுத்தும் வாழ்கைக்கு வடிகால் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பதின் வயதில் திருமணம் செய்து கொள்வதை நாம் இன்று குழந்தைத் திருமணம் என்று அழைக்கிறோம். இது என்ன முரண்பாடு? பதினைந்து வயது யுவனும் யுவதியும், பாதுகாப்பு முறைகளுடன் உடலுறவு கொண்டால் தவறில்லை என்பது நாகரீகம் என்கிறார்கள். அதே பாதுகாப்பை ஒரு குடும்பம், திருமணம் என்ற அங்கீகாரத்துடன் அதே யுவனுக்கும் யுவதிக்கும் கொடுத்தால் அதை மூட நம்பிக்கை என்கிறார்கள். திருமண வயது பதினெட்டு என்பது என்ன கணக்கு? ஏன் பதினைந்து என்று வைத்துக் கொண்டால் யார் குடி முழுகிப்போகிறது?

பதின் வயதுகளில் இனக்கவர்ச்சி உண்டாகும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் சைட் அடிப்பது வயதிற்குரிய மாற்றம் என்று ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காதல் வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், பதின் வயதுகளில் காம உணர்வு வரும் என்பதை ஒத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகள், அத்தகைய காதல் காம உணர்வுகளுக்கான வடிகால்கள் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்வதில்லை? அப்படியே வெளிப்படையாக சொல்வதாகக் கூறிக் கொள்பவர்கள் உடலுறவு செய்து கொள்ளுங்கள். ஆனால் கருத்தடை சாதனங்களை உபயோகியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. இது தான் முறையான வடிகால் என்பதா?

பதினைந்து வயதில் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறில்லை என்றால், அதை திருமணம் மூலம் குடும்பம் என்ற அமைப்போடு முறைப்படுத்துதலை மட்டும் சட்ட விரோதம் ஆக்கி இருப்பது என்ன நியாயம்? பதின் வயது உடலுறவு சட்டப்படி தவறில்லாத போது அதை முறைப்படுத்தும் திருமணத்தையும் சட்டப்படி தவறில்லை என்று அறிவிக்க வேண்டும். பதினான்கு வயது பூர்த்தியானவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். பிள்ளைகள் வழிதவறிப் போவதற்கு முன்னால் அவர்களை பாதுகாப்பாக குடும்ப அமைப்புக்குள் கொண்டு வந்து வாழ்க்கையின் பொறுப்புக்களை புரிய வைக்க ஒரு வழியாவது கிடைக்கும். கருத்தடை சாதனங்களை மளிகை சாமான் லிஸ்டிலேயே சேர்த்து வாங்கிப் போட்டு விட்டால், கண்டவர்களுடன் உறவு கொள்ளாமல் கணவன் மனைவி உறவாக உடலுறவு முறைப்படுத்தப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் குடும்பத்தில் வாழ்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வாவது மிஞ்சும். இதைத்தான் அக்காலத்தில் நம்முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள். காந்தியடிகளுக்கு பதிமூன்று வயதில் திருமணம் நடந்ததாம்! என்ன குறைந்து போனது? தேசத்தந்தை ஆகவில்லையா?



தேசத்தந்தை காந்தி மனைவியுடன்

நம் பிள்ளைகளை குடும்பத்தந்தையாகவேனும் ஆவதற்கான முறையான வழிகாட்டுதல் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் தந்தை பெயர் தெரியாத ஒற்றைப் பெற்றோர்கள் இந்தியாவிலும் பெருகிவிடுவார்கள் என்பது தின்னம்.

பிறகு கண்ட இடத்தில் கூடி, கழிவறையில் குட்டி போட்டு நாய்க்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத மிருக வாழ்க்கையைத் தான் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்ளும். குஷ்புவும் மகிழ்ச்சி அடைவார்.
__________________________________________________________________________

எச்சரிக்கை: இந்திய நாணயங்களில் தொடர்ந்து கிறிஸ்தவ மதச் சிலுவையும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிக்களின் படங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன. நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது இத்தாலியில் வாழ்கிறோமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.



கேரளாவைச் சேர்ந்த மறைந்த கன்னி(?)யாஸ்திரி அல்போன்ஸாவின் உருவத்தைப் ஐந்து ரூபாய் நாணயங்களில் பொறித்து இத்தாலி அரசு கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இதேயே பி ஜெ பி காலத்தில், நாணயத்தில் ராமர் படமோ, சாய் பாபா படமோ போட்டிருந்தால் இந்துத்துவாவைத் தினிக்கிறது என்று கூறி ஒரு கலவரத்தையே நிகழ்த்த முன்னின்றுவிடும் நமது அரசியல் கட்சிகள் இப்போது மட்டும் வாய் மூடி வேடிக்கை பார்ப்பதேன்!

இந்து கடவுளரின் உருவம் பொறிக்கப்படும் போது இந்துத்துவா தினிக்கப்படுகிறது என்று கொண்டால், கிறிஸ்தவ பாதிரிகளின் படம் பொறிக்கப்படும் போது கிறிஸ்தவத்தை தினிப்பது ஆகிறதே! இதை தட்டிக்கேட்க மட்டும் தமிழகத்தின் பகுத்தறிவு வாதிகள் காணாமல் போய்விட்டனரே!

தமிழக அரசுச் சின்னத்தில் கோபுரம் இருப்பது மதச்சார்பாக இருக்கின்றது என்று கூறி அதை அகற்றி விட்ட கருணாநிதி, இந்திய ரூபாய் நாணயங்களில் பொறிக்கப்படும் மத சின்னங்களை எதிர்த்துப் பேசுவாரா? கோபுரத்திற்கு எதிராக சட்ட சபையில் உரை நிகழ்த்தியவர்கள், இந்த கிறிஸ்தவ அடையாளங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

இந்துக்களே நினைவில் கொள்ளுங்கள்!. காங்கிரஸ் மற்றும் தி மு க ஆகிய இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரானவையே! இந்துக்களின் பாரம்பரியத்தை அழிக்க அவதாரம் பூண்டவையே! இனி இறக்கும் வரை இவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்று இந்துக்கள் தீர்மானித்தாலே ஒழிய இந்துக்கள் சொந்த நாட்டின் மத அடிமைகளாகப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

18 comments:

Pandi A said...

http://thatstamil.oneindia.in/bookmarks/story/11680

virutcham said...

பதின்ம வயது திருமணம் அந்தக் காலத்துக்கு சரியாக இருந்து இருக்கலாம். இப்போ சரியா வருமா?
கல்வி என்பது பிள்ளைகளுக்கு கேள்விகுறி ஆகிவிடாதா? திருமணம் என்று வந்தால் பின் குழந்தை என்று மறுபடியும் பெண்கள் வீட்டில் பூட்டப் படுவார்கள்.
வயதுக்குரிய இச்சைகளைப் பற்றிய தெளிந்த அறிவை போதிப்பது நல்லது இல்லையா? இந்த மாதிரி தவறுகள் பெருவாரியாக நடப்பதை தவிர்க்க பள்ளிகள் பெற்றோர் கல்வி என்று எல்லா வகையிலும் awareness தேவை.
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை பிள்ளை பெரும் வரை தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், ஆசிரியர் குறித்து அதிர்ச்சியாக இருக்கு.


http://www.virutcham.com

virutcham said...

காந்தி தனது பதின்ம வயது திருமணத்தை ஆதரிக்கவில்லை. மாறாக அந்தப் பழக்கம் தவறு என்றும் கூறி இருக்கிறார்

hayyram said...

thanks for ur comment virutcham. But u read the HC judgement

//Wednesday, July 02, 2003, Kochi, July 2: The Kerala High Court has held that a Muslim girl, even if she is a minor as per the Indian Majority Act, can enter into a valid marriage agreement if she has attained puberty and her husband was legally bound to provide maintenance to her.

The court said that the Mohammedan law permits every Muslim of sound mind, who has attained puberty, to enter into a marriage contract. Puberty has to be presumed in the absence of evidence to the completion of 15 years of age.//
இஸ்லாமிய சட்டம் என்றால் மட்டும் அது சரியா?
//பதின்ம வயது திருமணம் அந்தக் காலத்துக்கு சரியாக இருந்து இருக்கலாம். இப்போ சரியா வருமா?// எந்தக்காலத்திலும் பதின்ம வயதில் உடலுறவு கொள்ளும் இச்சை மட்டும் மாறுவதில்லையே! ஏன்?அந்தக்காலத்தில் அதற்கு சமூக அங்கீகாரத்துடன் கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தை இந்த காலத்தில் மட்டும் மறுப்பானேன்!. வடிகால் இலாத காரணத்தாலே தானே இளம் பையன்கள் எல்லாம் பக்கத்து வீட்டு ஆண்டிகளிடம் சிலுமிஷம் செய்ய அலைகிறார்கள். கள்ளத்தொடர்பு என்பது காட்டு வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறதே! அதை மட்டும் கண்டித்து இந்த காலத்து இளைஞர்களிடம் கட்டுப்பாடில்லை, ஒழுக்கம் இல்லை என்று அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது. //கல்வி என்பது பிள்ளைகளுக்கு கேள்விகுறி ஆகிவிடாதா?// ஏன், பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலிக்கும் போது கெட்டுப் போகாத படிப்பு அதை அங்கீகரித்தால் கெட்டுப் போகுமா? கல்யாணம் என்பது சுமை அல்ல. அது ஒரு அங்கீகாரம் அவ்வளவு தான். அதை புரிந்து கொண்டால் பயப்பட வேண்டியது இல்லை. இன்றைக்கும் ஆனும் பெண்ணுமாக பலபேர் திருமணம் ஆகி பிள்ளைகள் பெற்ற பின்பு தானே மேற்படிப்பு படிக்கிறோம். வாழ வேண்டும் என்கிற லட்சியம் புரிந்துகொள்ளப் பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும். பிள்ளைகளை வழிநடத்துவதை விட பெற்றோர்களுக்கு வேறென்ன வேலை?

//மறுபடியும் பெண்கள் வீட்டில் பூட்டப் படுவார்கள்// ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள். இந்த காலத்தில் பிள்ளை பெற்ற பெண்கள் வேலைக்கு போகாமல் தான் இருக்கிறார்களா? திருமணம் ஆனாலும் பெண் தன் கணவனோடு சேர்ந்து கல்லூரிக்கு போகட்டும், படிக்கட்டும், பின் வேலைக்கு செல்லட்டும். இதைப் பற்றி விழிப்புணர்ச்சியை அரசாங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தட்டுமே! காண்டோமுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பாடுபடும் போது முறையான திருமண வாழ்க்கைக்கு மட்டும் ஏன் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடாது.

//வயதுக்குரிய இச்சைகளைப் பற்றிய தெளிந்த அறிவை போதிப்பது நல்லது இல்லையா?// போதித்து கொண்டே இருந்தால் அனுபவிப்பது எப்போது. அறுபது வயதிலா? எல்லா ஜீவராசிகளையும் போலவே மனித ஜீவராசிக்கும் இணைசேரும் பருவம் வந்தவுடன் உடலுறவு செய்யும் உந்துதலை அனுபவிக்கும் உரிமை உள்ளது. அதை பின் எப்போது தான் அனுபவிப்பதாம்?

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு பின் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது தவறான புரிதல். உடலுறவு கொள்ளும் பருவத்தில் நடப்பது தான் திருமணம். அது ஒரு முறைப்படுத்தல். அந்த பருவத்தில் முறைப்படுத்தல் நடக்கவில்லை என்றால் திருமணம் என்பது எந்த வயதிலும் ஒரு வெற்றுச் சடங்கே. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இயற்கையின் நியத்டிப்படி காலத்தே உடலுறவு கொள்ள உதவாத திருமணம் பின் எந்த வயதிலும் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன? ஒரு சடங்கிற்காக இயற்கைக்கு மாறாக மனித உயிரினம் வாழ்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வாழ்க்கை. அதற்காக முறைப்படுத்தலே தேவை இல்லை என்றால் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களுக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது. வித்தியாசம் தேவை இல்லை என்று தீர்மானித்து விட்டால் இவள் என் மனைவி, இது என் குழந்தை என்ற உரிமைகளும் பரிபோகும், பரவாயில்லையா? யோசியுங்கள்!

//காந்தி தனது பதின்ம வயது திருமணத்தை ஆதரிக்கவில்லை. மாறாக அந்தப் பழக்கம் தவறு என்றும் கூறி இருக்கிறார்// ஆக்கங். மனிசனுக்கு காலாகாலத்துல கட்டி வெக்காம காய விட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்! எல்லாத்தையும் அனுபவிச்சப்பறம் என்ன வேனாலும் பேசலாம்! என்னா முழுசா அனுபவிச்சப்பறம் தான் எந்த மனிசனுகும் ஞானமே பொறக்கும்! காந்திக்கு ஞானம் பிறந்ததும் அனுபங்களைப் பெற்ற பிறகுதான் என்பதை யோசியுங்கள்! இல்லையேல் வயதின் உந்துதலால் அவரும் ஒரு வெள்ளைக்காரியின் மீது மையல் கொண்டிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எல்லாம் வயசு பன்ற வேலைங்கோ!

virutcham said...

இது எனக்கு ஏற்புடையதாக இல்லை.
இப்போ அதிகம் சம்பாதிக்கும் பெற்றோராலேயே தன பிள்ளைகளுக்கு கல்வியை ஒழுங்கா தர முடியாத அளவு கல்வி ரொம்ப விலை உயர்ந்து இருக்கு. இந்த நிலையில் அந்த பதின்ம வயது பிள்ளைக்கு ஒரு குடும்பம் வேறா? பையனையும் மருமகளையும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு அனுப்பிட்டு பேரக் குழந்தைய k G யில் விட வேண்டுமா?

பதின்ம வயதில் வயதுப் பிரச்சனையை கட்டுப்படுத்தாத பிள்ளைகள் ரொம்ப சீக்கிரம் முதுமையை அதன் பிரச்சனைகளை தழுவிவிட வாய்ப்பு இருக்கிறதே.
பிரம்மச்சர்யத்தை பதின்ம வயதில் கூட செய்யாமல் எப்போ செய்வது? வானப் ப்ரச்னத்தில் அந்த வயதை ஏற்கனவே கடந்து விட்டிருப்பார்கள்.

இப்போ பெண்கள் கல்வி கற்று வேலைக்கு செல்கிறார்கள் தான். ஆனால் பிள்ளைகள் பல வீடுகளிலும் creche ல் இருப்பதை நாம் மறுக்க முடியாது. பதின்ம வயதுத் திருமணம் இந்த எண்ணிக்கையை அதிகப் படுத்தும். ஒரு வயதுக்கு மேல் முதிர்ச்சி மனதளவில் வந்த பின் மணம் செய்வது தான் சிறந்தது.
குறைந்தது பையனாவது வருமானம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று மறுபடி சிறு பெண்ணை அதிக வயது வித்தியாசத்தில் மணம் செய்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அவள் குழந்தை, குழந்தையின் கல்வி என்று வீட்டில் அடைய வேண்டியது தான். அடிப்படைக் கல்வி பெற்ற பின் செய்யும் மணத்துக்கும் இதுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கு.
பதின்ம வயதில் அது ஒரு curiosity . பெற்றவர்கள் சரியான guidance கொடுத்தால் போதுமானது.

hayyram said...

திரு விருட்சம் வருகைக்கு நன்றி. பதின்ம வயதில் திருமணம் செய்தால் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யார் சொன்னது. வீட்டு மளிகை சாமான்களில் ஷேவிங் பிளேடு, இட்ச் கார்டும் வாங்குவது போல எல்லா வீடுகளிலும் காண்டோமும், கருத்தடை மாத்திரைகளும் வாங்கிப் போடலாமே! பதினாறு பதினேழு வயதுப் பிளைகளுக்கு இவைகளை கையாளக் கற்றுக்கொடுத்தால் போதும். கருத்தடை சாதனத்தை கையாள இப்போதும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அரசாங்கம் கருத்தடை மாத்திரைகளை உபயோகியுங்கள் என்றி விளம்பரம் செய்கிறது. ஆனுரைகளை எப்படி உபயோகிப்பது என்று ஆணுரைகளை விரலில் மாட்டி செய்முறைகளை குறும்படங்கள் மூலம் செய்து காட்டுகிறார்கள். ஆனால் யாருடன் உறவு கொள்ளும் போது என்பதை மட்டும் சொல்லாதது ஏன்? ஆக, யாருடன் வேண்டுமானாலும் பாதுகாப்புடன் உறவு கொள்ளுங்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படித்தானே! அதற்குப் பதிலாக அதே பாதுகாப்புடன் கருத்தரிப்பை தவித்து இந்நாருடன் முறையாக உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில் என்ன தவறு. ரகசியமாக யாருடனோ உறவு கொள்ளும் போது கடைபிடிக்கும் எச்சரிக்கை வழிமுறைகளை அவரவர் கணவன் மனைவியுடன் தைரியமாக வீட்டுக்குளேயே கடைபிடித்து சுதந்திரமாக உறவு கொள்வதில் என்ன தவறு. முறையற்ற வாழ்க்கைக்கு விளம்பரம் கொடுத்து ஊக்குவிப்பதை வரவேற்கிறோம். அதே விழிப்புணர்ச்சியை முறையான வழிகளுடன் பாதுகாப்பாக செய்யலாமே என்று கூறினால் அதை ஏற்க மனப்பக்குவம் வரவில்லையே! ஏன்?

///ஆனால் பிள்ளைகள் பல வீடுகளிலும் creche ல் இருப்பதை நாம் மறுக்க முடியாது./// தனிக்குடித்தனம் இல்லாமல் தாத்தா பாட்டியுடன் கூட்டுக்குடித்தனத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு க்ரெட்ச் விதிக்கப்படவில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள். தனிக்குடித்தன போதையில் கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் சூழலால் எழும் நிலை இது என்பதை மறக்க வேண்டாம்.

///குறைந்தது பையனாவது வருமானம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று மறுபடி சிறு பெண்ணை அதிக வயது வித்தியாசத்தில் மணம் செய்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்./// இந்த விஷயம் தான் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. பதின் வயதுத் திருமணம் சமூகக் கட்டாயமாக இருந்த போது அப்படி நடந்தும் இருக்கிறது. அது அந்தக்காலம். ஆனால் இந்த காலத்தில் தான் எத்தனை மீடியாக்கள்? எத்தனை மகளிர் அமைப்புக்கள்? எத்தனைச் சட்டங்கள்? அதனால் குறைந்த பட்சம் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு பதின்ம வயதுப் பெண்ணை மணமுடித்து வைக்ககூடாது என்று சட்டமும் போடலாமே! நீங்கள் கவலைப்படுவது போல இது அந்தக்காலம் இல்லையே!

//பதின்ம வயதில் அது ஒரு curiosity//

not only curiosity, also its a need for human like all other animals in the world.

//பெற்றவர்கள் சரியான guidance கொடுத்தால் போதுமானது//

சரி, என்ன மாதிரியான guidance கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

hayyram said...

thanks pandi.

virutcham said...

நல்ல வயது முதிர்ச்சி அடைந்தவர்களே இந்த கருத்தடை விஷயங்களில் அசட்டையாகவோ, அல்லது தவறாக உபயோகித்தோ அல்லது தரமற்ற சாதனங்களால் கருத்தரித்து கருக்கலைப்பு செய்வது சாதரணமாக நடக்கிறது.
இதில் திருமணம் செய்து வைத்து விட்டு இந்த முதிர்ச்சியில்லாத பிள்ளைகளுக்கு எப்படி அறிவுறுத்துவது?
பிள்ளை பெற்றுக் கொள்ளவோ வேண்டாம் என்று முடிவெடுக்கவோ உரிமையும் அறிவும் முதிர்ச்சியும் அதற்க்கான வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களுக்கு ஒரு பள்ளிப் பாடம் தேர்வு அதற்கான pre-cautions என்பது மாதிரி பெற்றவர்கள் செய்து கொண்டு இருப்பது, அதை என்ன சொல்ல?
தன துணையை தீர்மானிக்கும் தேர்வு செய்யும் அல்லது வேண்டும் வேண்டாம் என்று சொல்லக் கூட முடியாத நிலையில் பெற்றவர்கள் செய்து வைக்கும் இந்த பால்ய மணம் பின்னாளில் அவர்களுக்கு தவறான துணையாகப் பட்டால் என்ன செய்வது?
மனத் தளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட நிலையில் பின்னோக்கிப் போவது கேடு விளைவிக்கும் என்பது என் கருத்து.





பெற்றவர்கள் பிள்ளைகளை அவர்கள் வயதை அந்த வயதில் அவர்களின் exposure என்ன என்பதை தெரிந்து அதற்கு ஏற்ப guidance வழங்க வேண்டும். எல்லா பிள்ளைகளுக்கும் guidance தேவைப்படாது. இந்த வயதில் கல்வி, வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றின் அவசியங்களை பற்றி guide செய்ய வேண்டும்.
ஒரு பெண் கருத்தரித்து பெற்றுப் போட்டு விட்டுச் செல்லும் வரை பெற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அந்த மாதிரி தனிமைகள் சுலபாமாகக் கிடைக்கும் வீடுகளில் இதை தவிர்க்க இயலாது. இதற்கு ஒரு பொதுக் கருத்தும், அணுகுமுறையும் சமுதாய மாற்றங்களும் தர முடியாது. இந்த மாதிரி தவறுகள் பொதுப் பிரச்சனை ஆகாது.
இப்போ பதின்ம வயதுப் பிள்ளைகள் எல்லாம் திருட்டுத்தனமாக உறவுகளில் ஈடுபடுகிறார்கள் என்று நாம் முடிவு எடுக்க முடியாது இல்லையா?

hayyram said...

//பிள்ளை பெற்றுக் கொள்ளவோ வேண்டாம் என்று முடிவெடுக்கவோ உரிமையும் அறிவும் முதிர்ச்சியும் அதற்க்கான வருமானமும் இல்லாத நிலையில்// பதினைந்து வயதை அடையும் ஒரு ஆனுக்கும் பெண்ணுக்கும் அறிவு முதிர்ச்சி இருக்காது என நீங்கள் நினைப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் வருமானம் பற்றிய உங்கள் கருத்தை யோசிக்கலாம். சரி, பதினெட்டு வயதானால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. அதற்காக எல்லா வீட்டிலும் பதினெட்டில் திருமணம் நடந்து விடுவதில்லை. அதைப் போலவே இந்த விஷயத்தையும் குடும்பங்களின் முடிவுக்கு விட்டு விடலாம்.

சரி, நான் சில சந்தேகங்களை கேட்கிறேன். அதை மட்டும் தெளிவு படுத்துங்கள்!

சகல ஜீவராசிகளைப் போல இனைசேரும் காலம் என்று மனிதனுக்கும் இருக்கிறது. அதுதான் பதின்ம வயது. இந்த வயதில் இயற்கையாக எழும் இந்த இணை சேரும் உணர்ச்சியை இயற்கைக்கு முரனாக அடக்க வேண்டும் என்கிறீர்களா? எத்தனை வயது வரை அடக்க வேண்டும் என்கிறீர்கள்?

இல்லை, அடக்க வேண்டாம் என்று நீங்கள் கூறினால் யாருடன் உறவு கொள்ள வேண்டும்? இதை மட்டும் தெளிவான வார்த்தைகளால் நறுக்கென்று விளக்குங்கள் பார்க்கலாம்!

virutcham said...

ஆசை, கோபம், குரோதம் என்று புலன்களை அடக்குவது தானே மனிதனுக்கு சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் மிருகங்களுக்கு இணையாக மனிதன் இருப்பதை நாம் அங்கீகரிகிறோமா?
மிருகங்கள் தவறுகளுக்காக சட்ட ரீதியாக தண்டிக்கப் படுகிறதா?
இது மிருகங்களுக்கு பிற ஜீவராசிகளுக்கு சரி மனிதனுக்கு அல்ல என்று ஒரு வரைமுறையை வைத்துள்ளோம் அல்லவா?
மேலும் பிற ஜீவராசிகளுக்கு இணை கூட என்று எந்த உறவு முறை வரையறையும் இல்லையே. மனிதனுக்கு வரையறை வகுத்து வைத்து இருக்கிறானே.
நாம் மிருகத்தோடு மற்ற விஷயங்களில் மாறுபட விரும்பும் போது இந்த விஷயத்தில் மட்டும் இயற்கையை துணைக்கு அழைப்பது ஏன்?

யாரோடு என்பதற்கு வயது முதிர்ச்சி அடைந்த பின் தனிப்பட்ட மனிதர்களே தீர்மானிக்க வேண்டும். இதில் வரையறை வைத்துக் கொள்ள ஆன்மிக, சமுதாய மற்றும் சட்ட அறிவும் தனி மனிதனுக்கு துணை செய்யும். விதி விலக்குகள் எதிலும் இருப்பார்கள். அவர்களை வைத்து நாம் தீர்மானத்துக்கு வரக் கூடாது. இது என் கருத்து

hayyram said...

வருகைக்கு நன்றி விருட்சம். நான் நினைத்தது போலவே நேரடியாக பதில் சொல்லவில்லை. //புலன்களை அடக்குவது தானே மனிதனுக்கு சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது// இதற்கு அர்த்தம் இயற்கைக்கு முரனாக வாழவேண்டும் என்பதல்ல. அப்படி நினைத்திருந்தால் ராமனுக்கு லவ குசர்கள் வந்திருக்க வாய்ப்பில்லை.

நான் கேட்டது சிம்பிள். இயற்கையாக எழும் உணர்சிகளை முறைப்படுத்துவது தவறா என்பது தான். //யாரோடு என்பதற்கு வயது முதிர்ச்சி அடைந்த பின் தனிப்பட்ட மனிதர்களே தீர்மானிக்க வேண்டும்.// வயது முப்பதில் முதிர்ச்சி அடையும். ஐம்பதில் இன்னும் நன்றாக முதிர்ச்சி அடையும். எழுபது மற்றும் தொன்னூறுகளில் யாருக்கும் இல்லாத அளவு முதிர்ச்சி அடையும். வயது முதிர்ச்சி அடைந்த பின் தான் தீர்மானிக்க வேண்டும் என்றால் அதற்கும் வரம்பில்லை. சரி விடுங்கள். நாம் ஒற்றை விவாதத்தில் இதை தீர்மானித்து விட முடியாது. நல்லதும் கெட்டதும் மக்கள் அனுபவித்துப் பின் மாற்றிக் கொள்வார்கள். மற்றவற்றை காலம் தீர்மானிக்கட்டும்.

பொறுமையாக கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி விருட்சம்.

virutcham said...

ஒற்றை விவாதத்தில் முடிவு எடுக்கும் விஷயம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஆனாலும் ஒரு கேள்வி. பதின்ம வயதில் பிள்ளைகளுக்கான ஒரு துணையை பெற்றவர்கள் தேர்ந்து எடுத்து மண முடித்து வைத்து விட்டதாலேயே பிள்ளைகள் காலம் பூரா எந்த மணப் பிறழ்வும் இன்றி வாழ்ந்து விடுவார்களா? தகுந்த வயதில் மணம் செய்தவர்கள் கூட திருமண பந்தத்தின் விதிகளுக்கு வெளியே மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இன்றளவும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். திருமணம் ஒரு ஒழுங்கு முறை தான். ஆனால் அது மட்டுமே மனிதனை கட்டுப்படுத்தும் ஒழுக்கப் படுத்தும் என்று நினைக்க முடியுமா?

பதின்ம வயதில் பிள்ளைகளுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் energy அதிகம். புத்தி கூர்மை, ஞாபக சக்தி இப்படி நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் இந்த வயதில். கூடவே வயதுக்குரிய இனக் கவர்ச்சி அவர்களை திசை திருப்ப முயலும். இந்த வயதை தாண்டிய பெற்றோர் ஆசிரியர் மற்றோர் எல்லாம் அவர்களுக்கு guidance அளித்து அவர்களை முன்னேற்றத்தை நோக்கி திசை திருப்ப வேண்டுமா அல்லது ஒழுங்கு படுத்துவதாகச் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டுமா?

எனது மகனுக்கு பதின்ம வயது தான். அவனுக்கான துணையை தேர்ந்து எடுக்கும் முதிர்ச்சி கண்டிப்பாக எனக்கு இப்போ இல்லை. ஆனால் வயதுக்குரிய சந்தேகங்களை என்னிடம் தயக்கமின்றி பேசும் சுமுகமான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி இருக்கிறேன். தகவல்களுக்காக தவறான நட்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது இல்லையா?

hayyram said...

//ஆனால் வயதுக்குரிய சந்தேகங்களை என்னிடம் தயக்கமின்றி பேசும் சுமுகமான ""சூழ்நிலையை"" வீட்டில் உருவாக்கி இருக்கிறேன்//

இந்த வயதுப் பிரச்சனைக்கு இது தான் சரியான தீர்வாக இருக்க முடியும். மிகவும் நல்லது. இது தான் எல்லா பெற்றோர்களும் தற்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறை.

//தகவல்களுக்காக தவறான நட்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது இல்லையா?//

குருதிப்புனல் படத்தில் கமலஹாசன் வசனம் ஞாபகம் வருகிறது. "நாம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் சாட்டிலைட் சேனல் கற்றுக்கொடுக்கும்" என்பார். ஒரு பிள்ளைக்கு முதல் நண்பனும் ஆசானும் அவன் தந்தையாக இருப்பதே நல்லது. அதே போல எந்தப் பெண்ணிற்கும் அவளது முதல் மற்றும் உற்ற தோழி தாயாரே ஆகிறார். இவ்வாறு எல்லா பெற்றோர்களும் உணர்வுப்பூர்வமான விஷயங்களில் தம் பிள்ளைகளுக்கு தோள் கொடுப்பது அவர்களை குழப்பமான மனோநிலையில் இருந்து மீட்க உதவும்.

பொதுவாக இன்றைய தலைமுறை உணர்வுப்பூர்வமான விஷயங்களில் குழப்பமான உள்ளத்துடனேயே இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னால் உடலுறவு தவறு என்று கூறும் ஒரு தரப்பும் , கல்லூரி வாசலிலேயே காண்டோமுக்கு வெண்டிங்க் மிஷின் வைத்து எந்த வயதிலும் உடலுறவு கொள்ளுங்கள் ஆனால் பாதுகாப்புடன் இருங்கள் என்று பிரச்சாரம் செய்ய ஒரு தரப்பினரும் இருப்பதால் எந்த வாழ்க்கை சரியானது என்ற பாதை தெரியாமல், பழமைக்கும் புதுமைக்கும் இடையில் இளைஞர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இது போன்ற நிலையில் பெற்றோர்களே நல்லாசானாக இருப்பது தான் நம் குடும்பங்களைக் காக்க சரியான வழி.! அந்தப் பக்குவம் எல்லா பெற்றோர்களுக்கும் வர வேண்டும் என பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்.

virutcham said...

உண்மை தான். குழப்பமான ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதனால் குற்றுணர்வுக்கும் ஆர்வத்துக்கும் இடையே அவதிப்படுகிறார்கள்.
தொடர்ந்து வேறு கருத்துப் பகிர்வில் சந்திப்போம் .
நன்றி. வாழ்க வளமுடன்

hayyram said...

நன்றி விருட்சம்.

Madhusudhanan D said...

அந்த காலத்தில் பெண்களும் சம உரிமை பெற்றார்கள் என்பதற்கு ஔவையார் போன்றோரை சான்றாக காட்டுகிறார்கள். ஆனால் இல்லறத்தில் உள்ள பெண்கள் யாரும் அவ்வாறு இருந்ததாக தெரியவில்லையே. ஔவையாருக்கு கூட இளம் வயதில் அவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய முற்பட்டு பின் அவர் பிள்ளையாரிடம் வேண்டி முதுமை பெற்றதாக தானே படித்தோம்.

ஏன், பக்த மீராவிற்கு கூட அவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தார்கள்.

இல்லறத்திலும் ஈடுபட்டு வெளியுலகிலும் பெருமை பெற்றவர்கள் எவரேனும் உளறா?
நான் அறிந்து சாரதா தேவி ஒருவர் தான் அவ்வாறு இருந்தவர். இராமகிருஷ்ணர் சாரதா தேவியை கடவுளாகவே பார்த்தார் என்றும் படித்துள்ளேன். அது அவரின் மேன்மை. மேலும் அவர்கள் உலக இன்பங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் அல்லர்.

வாசுகியோ இல்லறத்தில் தான் பெருமை பெற்றார்.

இல்லறத்தில் இருந்துகொண்டு புலமையும் பெற்ற பெண்கள் எவரேனும் உள்ளார்களா?

ஏனெனில் பதின்ம வயது திருமணம் காலபோக்கில் பெண் கல்வியை பாதிக்குமோ என்ற ஐயம் எனக்கு உள்ளது.

hayyram said...

//ஏனெனில் பதின்ம வயது திருமணம் காலபோக்கில் பெண் கல்வியை// அதென்ன பெண்கல்வி. கல்வியும் கலவியும் எல்லோருக்கும் ஒன்றுதான். கல்வியில் நாட்டம் குறைந்ததால் தானே கலவிக்கு செல்கிறார்கள். எது நல்லா வருதோ அதைச் செய்ய விடலாம்ல! இன்றைக்கும் திருமணமான பிறகு மேற்படிப்பு படித்து வேலை தேடும் பெண்கள் இருக்கிறார்கள் தானே? எத்தனையோ ஆண்கள் திருமணத்திற்கு பின் குழந்தைகளுக்கு தகப்பன் ஆன பின் தான் மேல் படிப்பு படித்து வேறு வேலை தேடவும் செய்கிறார்கள். படிப்பு வேறு வாழ்க்கை வேறு. இரண்டையும் ஒன்றக்கி இயற்கைக்கு அணைபோடும் வினோதம் நம் நாட்டில் தான் நடக்கிறது. ஆங்கிலேயன்கள் பள்ளிக்கூடப்பருவத்திலேயே கட்டில்லாமல் உடலுறவு கொள்கிறார்கள். அங்கிருந்து கணிப்பொறி, தொழில்முனைவு, அறிவியல் என்று பல துறைகளில் ஆண்களும் பெண்களும் சாதிக்கவில்லையா என்ன? வடிகால்களை முறையில்லாமல் செய்தால் படிப்பு கெடாது, அதை முறைப்படுத்தினால் மட்டும் படிப்பு கெடும் என்பது தவறான நோக்கம். நம் சமூகம் மாமியார் மருமகள் என்கிற சிக்கல் கொண்ட சமூகம். அதை கொஞ்சம் மெண்மை படுத்தி இருதரப்பினரையும் நிகழ்கால வாழ்விற்கு தகுந்தாற்போல குடும்பத்தைப் பேண கற்றுக்கொடுத்து விட்டால் குடும்ப பாரம் என்கிற நினைப்பில்லாமல் திருமணம் ஒரு கட்டுக்கோப்பான கலவிக்கு வடிகால் என்று புரிந்து கொண்டு அதனை பதின்ம வயதிலும் நடத்தலாம் என்பது எமது அபிப்பிராயம்.

Madhusudhanan D said...

அக்காலத்தில் திருமணமான ஆண்களில் அகத்தியர், வள்ளுவர் போன்றோர் இன்று வரை பேசப்படுகிறார்கள். ஆனால் பெண்களில் யாரும் அவ்வாறு இல்லையே. நீங்கள் சொல்லும் இதே வழியை அவர்களும் கடைபிடித்திருக்கலாமல்லவா. ஏன் திருமணமான பிறகு அவர்களுக்கு கல்வியில் நாட்டம் இல்லையா?