Tuesday, August 2, 2011

இத்தாலி காங்கிரஸின் பிரித்தாளும் கொள்கை!



"வகுப்புவாதம்...மற்றும் வன்முறை தடுப்பு மசோதா" ஏதாவது ஒரு ரூபத்தில் முஸ்லீம் ஜால்ராவைப் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி இந்தியாவை துண்டு துண்டாக்கி விடவேண்டும் என்பது இத்தாலிக்காரியின் அடிப்படைத் திட்டம் போலும். அதைச் செவ்வனே அவ்வப்பொழுது செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.


இப்போது வகுப்புவாதம் மற்றும் வன்முறை தடுப்பு மசோதாவாம். கண்டிப்பாக யாரை மனதில் வைத்து இப்படி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பார்கள் காங்கிரஸ்காரர்கள் என்பது பலருக்கும் புரியாமல் இல்லை. 




நரேந்திர மோடியைப் பற்றி எவ்வளவோ தவறான பிம்பங்களை எழுப்பப்பார்த்து தோற்றுப்போன காங்கிரஸ் கடைசியாக ஏதாவது கலவரம் நடந்தால் அதை வைத்து ஆட்சியைக் கலைக்க முடிகிறது மாதிரி ஒரு மசோதாவைப் போட்டு குஜராத் அரசை மிரட்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனால் இந்த மிரட்டும் தொனி பொதுவாக இருப்பதால் எல்லோருக்குமே ஆபத்தாகி விடுமே என்பதால் முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். யார் செவி சாய்க்கிறார்கள் என்று பார்ப்போம்.


"சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் இனக் கலவரங்கள் ஏற்படும் போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு." என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
இவரது கூற்றில் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இந்துக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மதம் மாறியவர்களும் , மதத்தால் ஆதிக்கம் செய்ய நினைப்பவர்களும் செய்யும் அதிகாரத்தால் இந்துக்களின் பொது வாழ்க்கை பல்வேறு இடங்களில் நிலை குலைந்து இருக்கிறது. இதில் கலவரம் என்றால் உடனே இந்துக்களை குறிபார்த்து கைது செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம். 

அதுவும் தமிழகத்தைப் பொறுத்தவரை கலவரம் நடந்தால் ஆட்சி கலையும் என்ற நிலை சட்டப்படி இருந்தால் கருணாநிதிக்கு, ஜெயலலிதா ஆட்சியைக் கலைப்பது சுலபமான வழியாகி விடாதா என்ன?
அதனால் தான் ஜெயா கடுமையாக எதிர்க்கிறார் போலும்.


வருடத்திற்கு குறைந்தபட்சம் நான்குமுறையாவது குண்டுவைப்பு துப்பாக்கிச் சூடு என்று நடத்தி நடத்தி கூட்டம் கூட்டமாக மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் முஸ்லீம்களாகத்தானே இருக்கிறார்கள். உள்நாட்டு முஸ்லீம்களின் துணை இல்லாமல் அந்நிய சக்திகள் திட்டமிட்டபடி கொலைகளைச் செய்ய முடியுமா என்ன? அப்படி இருக்கும் போது யாரைப் பாதுகாக்க யாருக்காக இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது இத்தாலி அரசு என்று புரியவில்லை. 

கொலை பாதகங்களை தொடர்ந்து செய்யும் தீவிரவாதிகளை தண்டிக்ககூட துப்பில்லாத இத்தாலி காங்கிரஸ் தொடர்ந்து பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டு வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

இனி மசோதா என்ன ஆகிறது, யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள், யாரெல்லாம் ஆதரவளிக்கப் போகிறார்கள் என்று வரும் நாட்களில் பார்க்கலாம்.

சில தலைவர்கள் மீது பொய்யான ஒளிவட்டம் உருவக்கப்படும். அதுவே பின்னாளில் வரலாறாகும். ஆனால் நரேந்திர மோடி விஷயத்தில் "அவர் கெட்டவர்" என்கிற பொய்யான ஒரு வரலாற்றை காங்கிரஸால் எழுப்ப முடியாமல் போகிறது என்பது உண்மை. 

ஆனால் பலகாலங்களுக்கு முன்னால் ஒருவர் மீது பொய்யான ஒரு ஒளிவட்டம் உருவாக்கப்பட்டு மக்களிடம் தவறான வரலாற்றைப் பரப்பினார்கள். ஆனால் உண்மைச் சாயம் என்றும் வெளுக்கும் தானே. அப்படி அவ்வப்போது வெளுத்துக் காயப்போடப்படும் பொய் வரலாறு ஈ வே ராமசாமி நாயக்கர் பற்றியதாகத்தான் இருக்கும். 

அவ்வாறு நாளிதழில் வெளியான சுவாரஸியமான தகவல் ஒன்று:-


"கோவை அய்யாமுத்து, காங்கிரசிலும், பிறகு சுயமரியாதை இயக்கத்திலும், ஈ.வெ.ரா.,வின் வலது கரமாக விளங்கியவர். கட்சி மாநாடுகளில் இவர்தான் சிறப்புரை ஆற்றுவார்; சிறந்த பேச்சாளர். ஈ.வெ.ரா.,வின், "குடியரசு' பத்திரிகைக்கு இவர்தான் ஆசிரியர். காந்திஜி, ராஜாஜியோடும் நெருங்கிப் பழகியவர். அவர், "செல்வமும், அதிகாரமும்!' என்ற கட்டுரையில், தன் நண்பர் ஈ.வெ.ரா.,வை படம் பிடித்துக் காட்டுகிறார்.

என் மதிப்பிற்குரிய நண்பர், ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர்.

அவரிடத்தும் செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி மன்றத்துக்கு, ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.

தாம் செல்வராகையால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும். மதிப்பாக நடத்த வேண்டும் என்று எப்போதும் எதிர்ப்பார்க்கிறார். "செல்வம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து, பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள்...' என்று கருதுவார். அவர்களை, "அன்னக் காவடிகள், தகர போனிகள்...' என்றும், "கீழே பூமியும், மேலே ஆகாசமும் அன்றி வேறெதுவும் அற்றவர்...' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.
"இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.




பனகல், பொப்பிலி, ராஜா சர் அண்ணாமலை, சவுந்திர பாண்டியன், ஆர்.கே.சண்முகம், ஜமால் முகம்மது போன்ற செல்வர்கள் தான் ஆட்சி பீடத்தில் அமரத் தகுதியுடையவர்கள் என்று கருதுவார். யாதுமற்ற, "அன்னக் காவடிகள்' அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், "ஜனநாயகம்' என்ற சனியனைக் கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும், ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப் பிடிக்காது. உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய, அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்தப் பெருஞ் சனியனாகிய ஜனநாயகத்தை அவர் இப்பிறவியிலும், மற்றெந்தப் பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.


ஏதோ வேண்டா வெறுப்பாக, காமராஜரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் இதர கண்ணீர்த் துளிக்கும், ஆட்சி பீடத்திலிருந்து அதிகாரம் செய்த காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதையும், மலர் மாலைகளும், சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால் அவர்களை, "பச்சைத் தமிழன்' என்றும், "கலைஞர் கருணாநிதி' என்றும், தம்முடைய பரிவாரங்கள் என்றும், பரிந்துரைகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கிறார்.

ஆனால், அவருடைய மனதின் அடி ஆழத்தை சோதித்துப் பார்த்தால், "ஹும்... என்னிடம் மாதம், முப்பது ரூபாய்க்கு இருந்த பயல், இப்போது மந்திரியாகி விட்டான். மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்யதை இருக்கிறது...' என்ற பொருமல், பெருமளவில் காணப்படும்."

—சிவாஜி' மாத இதழ், 1970லிருந்து...
நன்றி:- நடுத்தெரு நாராயணன் , தினமலர்.

1 comment:

saravana kumar said...

திரு.ராம் அவர்களே......பெருந்தன்மைக்கும் கோழைத்தனத்துக்கும் நூலளவே வேறுபாடு. இயல்பிலேயே கோழைகளான ஹிந்துக்கள் தம் பலவீனத்தை மறைக்கப் போடும் வேடமே மதச்சார்பின்மை என்பது.உலகிலேயே பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக்கண்டு அஞ்சும் அவலம் நம் நாட்டில் மட்டுமே நடக்கும்.சிறுபான்மையினருக்கு நம் நாட்டில் இப்போது என்ன குறை ? அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் [ தமது அந்நிய நாட்டு சகோதரர்கள் உதவியுடன் ] குண்டு வைக்க முடிகிறது. நினைத்தபடி மதமாற்றம் செய்ய முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டுமாம் ? இந்த தேசத்தில் ஹிந்துக்களே இல்லாமல் செய்து விடலாமா ? ஹிந்துக்களுக்கு சூடு, சொரணை வராமல் இது போன்ற அநீதிகளுக்கெல்லாம் விடிவே கிடையாது........