Wednesday, October 5, 2011

மத மாற்றம் என்னும் மன நோய் - ஒரு எச்சரிக்கை!



அன்று ஞாயிற்றுக் கிழமை. சென்னையின் புறநகர்ப் பகுதி. என் அலுவலக நண்பர் வீட்டிற்கு போயிருந்தேன்.

அவரது 10 வகுப்பு படிக்கும் ஒரே மகன் ஞாயிற்றுகிழமையும் அதுவுமாக வேகமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். அவர் வீட்டு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

பையன் எடுத்தான் "ஆங்.. இதோ கிளம்பிட்டேண்டா' என்றான்.


'எங்கேடா?' என்றார் என் நண்பர்.

"என் ப்ரண்டு வீட்டுக்குப்பா...! ஏதோ பங்க்ஷனாம்!" என்றான்.

"என்ன பங்க்ஷன்?"

'தெரியலைப்பா.!'

'எவ்ளோ நேரம் ஆகும்? போய்ட்டு எப்ப வருவே...?

'தெரியலைப்பா!'

எதற்காகப் போகிறோம் என்று அந்த விடலைப் பையனுக்குச் சொல்லத் தெரியவில்லை. என்ன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறோம் என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

மீண்டும் அலைபேசி அடித்தது.

'ஹக்கீல்!..கெலம்பிட்டேண்டா.. இரு டொன்டி மினிட்ஸ்ல வந்திருவேன்!'

அவன் அப்பா சைகையில் காட்டினார்... 'என்ன பங்க்ஷன்னு கேளு!'

'ஏ ஹக்கீல்.. எங்கப்பா என்ன பங்க்ஷன், முடிய எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்றார்ரா, சொல்றியா'

'........'

'ம் சரி வர்றேன்' அலைபேசியை அனைத்து வைத்தான்.

'என்னடா சொன்னான்..? 'இல்லப்பா வந்தா தான் தெரியும் ன்னான். ஒரு மணி நேரம் தானாம்'

வந்தாதான் தெரியுமா...நண்பருக்கு சந்தேகம் வந்தது. அப்படி சொல்லாமல் சர்ப்ரைஸாக கூப்பிட என்ன இருக்கு. போறவனும் முழிக்கிறான். கூப்பிடறவனும் சொல்லமாட்டேங்கரான்.

சந்தேகமடைந்தவர்கள் அந்த ஹக்கீல் என்ற பையனுக்கு போன் செய்து 'என்னப்பா விஷேஷம் , என் பையனை கூப்பிட்டாயாமே?' என கேட்க அவனோ, 'இல்லை எங்க வீட்ல ஒரு மீட்டிங் இருக்கு அங்கிள். அவனை அனுப்பி வைங்க?
'என்ன மீட்டிங் பா?'

'இல்ல, நீங்க அவனைஅனுப்புங்க அங்கிள்.. ஒரு வாட்டி அவன் அட்டென்ட் பண்ணினா அவன் வாழ்க்கையே மாறிடும்!'

'அப்படி என்ன ப்ரோக்ராம்?'

"ஒரு ஸ்பீச் அங்கிள்.. நீங்க அவனை அனுப்புங்க அங்கிள்.. அவனே அப்புறம் வந்து சொல்வான்!"

'இல்லப்பா நீயே சொல்லேன்"

'இல்ல அங்கிள் அவனே சொன்னா தான் நல்லாருக்கும்.. அவனை அனுப்புங்க..'

அவ்ளோ தான், நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. "ஏம்பா, அவனுக்கு எதுக்காகப் போறோம்னு தெரியலை, நீ அவன் கிட்ட சொல்லாட்டாலும் அவனை பெத்தவன் நான் கேட்டா என்னை மதிச்சாவது சொல்லனும். அதுவும் சொல்ல மாட்டேன்னா அப்டிபட்ட எடத்துக்கு என் பையன் வரமாட்டாம்பா. அவனை எதிர்பாக்காதே!" என்று கூறி போனை வைத்து விட்டார். அவர் மகனையும் போகக்கூடாது என்று கூறிவிட்டார்.

அழைத்தவன் ஒரு முஸ்லீம் பையன். அது பிரச்சனை இல்லை. ஆனால், அவன் வீட்டில் யாரோ வந்து பேசப் போகிறார்கள் என்பதும் அதுக்கு ஆள் பிடிக்கிறான் இந்தப் பையன் என்பதும் தான் பிரச்சனை. ஆக இதன் சூழ்ச்சி என்னவாக இருக்கும் என்பதும் வெளிப்படை.

நண்பரின் மனைவி பதற்றமானார். "இப்போதெல்லாம் முஸ்லீம்களிலும் ப்ரெயின் வாஷ் செய்து மதம் மாற்றும் வேலை நடக்கிறது என்கிறார்கள். இனிமே எங்கிட்ட விவரம் சொல்லாம எந்த ஃப்ரெண்ட பாக்கவும் போகாதே!" என்றார் கண்டிப்பாக மகனிடம்.

விடலை பருவத்து சிறுவன் எதையும் யோசிக்காது ப்ரெயின் வாஷ் ஆகிவிடக்கூடும் என்கிற ஒரு சாமானிய குடும்பத் தாயின் பயம் அந்தப் பெண்ணிடம் தெரிந்தது.

இந்த குறைந்த பட்ச விழிப்புணர்வு எல்லா ஹிந்துக்கள் வீட்டிலும் இருக்க வேண்டும்.

இது ஒரு எச்சரிக்கை!
.

No comments: