'எதிலுமே கணக்காக இருக்கவேண்டும்' என்று பலரும் கூறுவார்கள். பண விஷயத்தில் பெரும்பாலும் கணக்காகத்தான் இருக்கிறோம். ஆனால் கணக்காயிருக்க வேண்டியது பண விஷயத்தில் மட்டும் தானா?.
பணம் மட்டுமில்லை. வார்த்தைகலை உபயோகிக்கும் போது ஒரு சொல் கூட அதிகமாகக் பேசிவிடக்கூடாது. அலவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.
வளவளவென்று பேசாமல் சுருக்கமாச் சொல்ல வேண்டும் என்று பழகிக் கொண்டால் புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீண் ஆகாமல் இருக்கும். எத்தனையோ சண்டை சாடிகளும் மிச்சமாகும்.
'வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியுமா? என்று பாமர ஜனங்கள் கூடக் கேட்கிறார்கள். திருவல்ளுவரும் எதைக் காக்கா விட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.
ஆனால் இப்போது உலகம் முழுக்க ஒரே பேச்சு யுகமாகத்தான் ஆகியிருக்கிறது. நியூஸ் பேப்பார்கள் எல்லாம், 'அவர் பிரசங்கம்,' 'இவர் பிரசங்கம்' என்று தான் போட்டு நிரப்புகின்றன. காரியத்தில் ஏதாவது நடக்கிறதா என்றால் இல்லை. காரியமாக எதுவும் நடக்காமல் இருக்கிறது என்பதை மறைக்கவே நிறையப் பேசுகிறார்கள்.
பணம் பேச்சு, அப்புறம் நாம் செய்கிற காரியம் எதிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான கரியங்களைச் செய்யவே கூடாது. ஆத்ம சிரேயஸுக்கோ யோக க்ஷேமத்துக்கோ பிரயோஜனம் இல்லாத காரியங்களில் ஈடுபடவே கூடாது.
எல்லாவற்றையும் விட முக்கியம் எண்ணத்தில் மனஸை ஓடவிட்டுக் கொண்டே இருக்காமல் இது இதைத்தான் நினைப்பது என்றும் கணக்காக இருக்கவேண்டும். கணக்கில்லாத மன அமைதிக்கு அதுவே நல்லது.
- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
1 comment:
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
Post a Comment