Wednesday, November 16, 2011

கையில் கவனம் தேவை!

கையை மட்டும் பாருங்க சார்!

கணிப்பொறியில் அதிகம் வேலை செய்யும் போது கையை மேஜை மீது அழுத்தமாக வைத்து விடுவோம். அதுவும் மவுஸ் உயபோகப்படுத்தும் போது அதிகம் அழுத்தம் கொடுப்போம். அப்படி செய்தால் கை இப்படி ஆகிவிடுமாம். லேப் டாப் உபயோகிப்பவர்களுக்கு கண்டிப்பாக இது நடக்கும்.


எனக்கு இப்போதான் ஆரம்பிக்கிறது. 


உங்க கையெல்லாம் எப்படி?

4 comments:

Geetha Sambasivam said...

அதனால தானா? நான் என்னவோ ஏதோனு பயந்துட்டு இருந்தேன். இது இருக்கு 2,3 வருஷமா!

hayyram said...

அப்போ நீங்க ரொம்ப நேரம் விடாம டைப் பன்றீங்கன்னு நல்லா தெரியுது. தட்டச்சி தட்டச்சி கைவலிக்கும் போது நம்மையறியாமல் மேஜையில் கையை அழுந்த இருத்தி வைப்போம். அதன் விளைவு பின்னாளில் இப்படி ஆகிவிடுகிறது. எதுக்கும் கையை பாத்துக்கோங்க!

எதிர்காலத்தில் இதன் பொருட்டு இப்படியும் நடக்கக்கூடும். கூடிய சீக்கிரம் உள்ளங்கையின் அடியில் தடிக்காமல் இருக்க சைனா தயாரிப்பு பஞ்சு விற்பனையாகலாம். மருத்துவர்கள் உடனே இது ஒருவகையான உள்ளங்கை நோய் இதுவே, கேன்சராவதற்கும் வாய்ப்பிருக்கிறது, அதனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை எங்களிடம் வந்து செக்கப் செய்து கொள்வது உள்ளங்கை அடிபாகத்திற்கு நல்லது என்று புதிதாக மார்கெட்டிங் செய்யலாம். வெள்ளைக்கார வியாபார ஆராய்ச்சியாளர்கள் உடனே உள்ளங்கை இப்படி ஆவதற்கு பாட்டம்பால்ம் சிண்ட்ரோம் என்று இதற்கு பெயர் வைத்து அதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்பார்கள். உடனே ஏதாவது ஒரு மருந்து கம்பெனி வெறும் விட்டமின் டேப்ளட்டிற்கு வேறு பெயர் வைத்து இந்த பாட்டம்பால்ம் சிண்ட்ரோமிற்கு நாங்கள் இது தான் ஒரே மருந்து என்று கூறி பேட்டன்ட் வாங்கலாம். அதை இந்தியாவில் வியாபாரம் செய்ய வரலாம். நம் மருத்துவர்கள் அதனை புரியாத ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதி நமக்கே தரலாம். அதனால் இதன் பொருட்டு எதிர்காலத்தில் பெரிய வியாபாரம் நடந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. நமக்கெதுக்கு அதெல்லாம். நீங்க கையை பத்திரமா பாத்துக்கோங்க. அவ்ளோதான்.

RAJA said...

இது சகஜம் தானே. கொஞ்சநாள் மவுசில் கை வைக்காமல் இருந்தால் போய்டப்போகுது. இப்போதைக்கு நம்ம தொழில் தட்டச்சுதானே

hayyram said...

அதானே, தட்டச்சுவது, எதையாவது ஒன்றை தட்டச்சிக் கொண்டே இருப்பது. நமக்கெல்லாம் விரல்களில் தான் வாழ்க்கை. எதிர்காலத்தில் 'தன் விரலே தனக்குதவி' என்று கைப் பழமொழி சுருங்கி விரல் மொழியாகலாம்.