நம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது 'சொந்த பந்தத்துல நல்ல வரன் இருந்தா நம்ம புள்ளைக்கு பாத்திரலாம்' என்பது தான்.
சொந்தத்தில் திருமண பந்தத்தை பெரியோர்கள் நிச்சயிக்க விருப்புவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சம்பந்திகள் சொந்தங்களாக இருப்பதால் உரிமையுடன் பழகமுடியும். சங்கோசமில்லாமல் புழங்க முடியும். மேலும் இரு குடும்பத்தினர் ஒருவரின் நிறை குறைகளை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டே உறவாடுவதால், பின்னாட்களில் தம்பதிகளுக்குள்ளோ அல்லது அந்தக் குடும்பத்தினருக்கிடையிலோ உண்டாகும் பிரச்சனைகளின் தன்மை உணர்ந்து அதற்கேற்றபடி அவர்களுக்கு உதவுவதற்கும் அல்லது குறைந்த பட்சம் பிரச்சனைகளைத் பேசித் தீர்க்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.
பழைய கால பாசப்பரிமாற்ற நினைவுகளே பல நேரங்களில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவிவிடும்.
இப்படி பல நெகிழ் தன்மைகள் இரு வீட்டாருக்கும் இடையில் இருப்பதால் நல்ல நாள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று உறவுகள் மகிழ்ந்து வாழ, வருடங்கள் கடப்பது தெரியாமல் வாழ்க்கை ஓடிவிடும். மேலும் திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதிகள் இளம் பருவத்தில் அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது இளமைக்கால நினைவுகள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரே மாதிரியான குழந்தைப் பிராயத்து நினைவலைகள் அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாசத்தையும், உரிமையையும் நெருக்கமாக வெளிப்படுத்திக் கொள்வர். பிறக்கும் குழந்தைகள் மீது அப்படியே அந்த பாசம் பிசகின்றி செலுத்தப்படும்.
இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பினும், திடீரென மருத்துவ ரீதியாக எனக்கூறி ஒரு பெரிய புரட்டு இடைக்காலத்தில் பரப்பப்பட்டது. அது நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறந்து விடும் என்பதாகும். அதெப்படி? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தாலே பிறக்கும் குழந்தை எல்லாம் ஊனமாகத் தான் பிறந்து விடுமா என்ன? ஏன் இந்த பித்தலாட்டப் பொய் பரப்பப் பட்டது?
இந்தக் கூற்றை புரட்டு, பித்தலாட்டம் என்று கூறலாமா என உங்களுக்குச் சந்தேகம் வருகிறது. சந்தேகமே வேண்டாம், அது வெறும் புரட்டு தான். பித்தலாட்டம் தான். காரணம் ஒரு கிராமத்திற்குச் சென்று பார்த்தால் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரக்காரர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான், சகலை, பங்காளி என சொந்தக்காரனாக மட்டும் தான் இருப்பார்கள். அனைவருமே முறைப் பெண், ஒன்றுவிட்ட அத்தைப் பெண், சின்ன மாமன் மகன் என்று ஏதாவது ஒரு உறவில் மணமுடித்து அப்படியே உறவுக்குள்ளேயே திருமணங்கள் செய்து கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். அப்படி இருப்பதால் மட்டுமே ஒரு கிராமத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவரும் சொந்தபந்தங்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டாகிறது.
அப்படி ஒரு கிராமமே சொந்தத்தில் திருமணம் செய்து பங்காளிகளாக வாழும்போது அவர்கள் அத்தனை பேருமே ஊனமுற்றவர்களாகவும் நோயாளிகளாகவுமே தான் இருக்கிறார்களா என்ன? இந்த புரட்டின் படி நடக்குமானால் ஒரு கிராமமே ஊனமுற்றவர்களாலும், கொடிய வியாதிக்காரர்களை மட்டுமே கொண்ட கிராமங்களாகத்தானே நம் நாட்டு கிராமங்கள் எல்லாம் இருந்திருக்க முடியும்.
இப்படி விரிவாக எடுத்துக் கூறி கேள்வி கேட்டால் இந்த புரட்டைப் பரப்புபவர்கள் உடனே ஒரு அடிக்கும் ஜல்லி, 'நாங்கள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று சொல்லிவிடவில்லை. 'நெருங்கிய உறவினர்களுக்குள் சம்பந்தம் செய்தால் ஒரு சில நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்' என்று தான் கூறுகிறோம்'. என்பார்கள்.
இந்தியாவில் இருக்கும் ஜாதி முறையே உறவு முறையிலான மனிதக்குழுக்களின் தொகுப்புதான். அப்படி இருக்கையில் இது போன்ற முடிவுகளை வெளியிடுபவர்கள் எந்த விதத்தில் இந்த சாத்தியக் கூறுகளை ஆராய்ச்சி செய்தார்கள்? எத்தனை நெருங்கிய உறவுத் திருமணத்தை ஆராய்ந்தார்கள்?. இதனை முதன் முதலில் வெளியிட்டவர் யார்? இது போன்ற ஆராய்ச்சியை நடத்தியவர்கள் யார்?
இதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு பெரிய விளம்பரங்கள் ஏதாவது ஒரு அமைப்பினர் மூலம் பரப்பப்படும். அது பெரிய அளவில் பேசப்படும். அவற்றை அப்படியே ஊடகங்கள் செய்திகளாக்கிவிடும். அவ்வளவு தான். நம் மக்கள் உடனே அது தான் சரி என்றும் முடிவு கட்டி விடுவார்கள்.
நாம் தான் படித்த நாகரீக சமுதாயமாயிற்றே. ஏற்கனவே 'சொந்தக்காரர்களை விட ப்ரென்ட்ஸ்
தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே
கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில்
பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை
ஊனமாகப் பிறக்குமாமே!' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.
தாம்ப்பா எனக்கு எல்லாம்' என்று சொந்தங்களை வெறுப்பதை ஒரு நாகரீகப் பேச்சாகவே
கொண்டிருக்கும் நம் புதிய தலைமுறை வர்கத்தினர் இது தான் சாக்கென்று 'சொந்தத்தில்
பெண்ணெடுக்கப் போவதில்லை, என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை. குழந்தை
ஊனமாகப் பிறக்குமாமே!' என்று கூறி உறவுக்குள் திருமனத்தை உடைத்தெரிந்து மகிழ்வார்கள்.
ஆனால் இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியோ உண்மைத் தன்மையைப் பற்றியோ, இதை ஆராய்ந்து ஏதோ ஆராய்ச்சி முடிவுகளைப் போல இதைப் பரப்புபவர்கள் யார் என்பது பற்றியோ எந்த சிந்தனையும் உதிக்காது.
உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறாது எனக் கொள்வோம். ஒருவர் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் பெண் பார்க்கச் செல்கிறார், பெண்ணின் தந்தைக்கு உடல் முழுவதும் ரோமம் வெள்ளைப் படுதலால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் பெண் மிகவும் அழகாக எந்த உடல் குறைபாடும் இல்லாமல் இருக்கிறார். அந்த வீட்டில் பெண் எடுப்பார்களா? பின்னங்கால் பிடறியில் இடிபட ஓட்டம் பிடிப்பார்கள். எவ்வளவு வரதட்சினை கொடுத்தாலும், ஐயா சொத்தையே எழுதித் தருகிறேன் என்றாலும் 'நாம ஏன் ரிஸ்க் எடுக்கனும்?' என்று காணாமல் போய் விடுவார்கள்.
ஏன் இந்த ஓட்டம்? நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் தானே பரம்பரை நோயோ அல்லது தாத்தா பாட்டிகளின் நோயோ பேரன்களுக்கு வரும்? அந்நியத்தில் தானே பெண் பார்த்தோம். பெண்ணின் தந்தைக்கு இருக்கும் சருமப் பிரச்சனை 'அந்நியப்' பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைக்கு எப்படி வரும்?
அந்நியத்தில் பார்க்கும் ஒரு ஆண்மகனுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. நெருங்கிய சொந்தமல்லாத அவனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை அதே சர்க்கரை வியாதியுடன் பிறக்காது என்று உறுதியாக நம்பி சர்க்கரை வியாதி உள்ள ஒரு ஆணை எந்த பெண் வீட்டிலாவது தனது மகளுக்கு மணம் முடிப்பரோ? அப்பொழுதும் 'எஸ்கேப்' தான்.
ஒரு வீட்டினரின் பெரியவர்களுக்கு இருக்கும் ஏதாவது நோய் அவர்கள் வீட்டுச் சந்ததியினருக்கு மரபணு வியாதியாக தொடர வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு பொதுவான கருத்து. அது சொந்தமானாலும் அந்நியமானாலும் அப்படியே. ஆனால் சொந்தத்தில் திருமணம் செய்தால் மட்டும் தான் மரபுப்படியான நோய் அடுத்த சந்ததியினருக்கு வரும் என்பது போல செய்தி பரப்புகின்றனர்.
ஆனால் ஏன் இந்த புரட்டு பரப்பப் பட வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான இறுக்கமான உறவு முறைகள் நிலவுகின்றன. உறவுமுறைத் திருமணங்கள் பெருகி சந்ததினர் ஒரு குழுவினராக அறியப்பட்டு பின்னர் அதுவே ஒரு குறிப்பிட்ட இனக்குழுவாக பின்னாலில் பெரிய ஜாதியாகவும் வளர்ந்து விடுகிறது.
தற்காலத்தில் ஜாதிகளாக இருப்பவைகளில் பல அதற்கு முன்னதாக ஒரு பெரிய குடும்பத்தைக் கொண்ட குழுவாக இருந்திருக்கும். அவைகள் எல்லாமே உறவுகளுக்குள்ளேயே உறவுகளை வளர்த்து சந்ததிகளைப் பெருக்கிக் கொண்ட இனக்குழுக்களாகவே இருந்திருப்பர்.
அப்படித்தான் கிராமங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே சொந்தங்களைக் கொண்ட பங்காளிகளாகவே இருப்பதைப் பார்க்கிறோம். உறவுமுறைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆக ஒரு ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் உறவுக்காரர்களாகத் தான் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் ஒரே ஜாதியினர் ஒருவரை ஒருவர் உள்ளுணர்வு உந்த ஆதரித்துக் கொள்வதும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
இந்த ஜாதீய குழு உணர்வை உடைக்க முயற்சிப்பவர்களில் அதனால் ஆதாயம் தேடுபவர்களில் முக்கியமானவர்கள் மதமாற்றிகளே! காரணம் ஒரு குறிப்பிட்ட மனிதனை இறுக்கமாக பிணைக்கப்பட்ட அவன் ஜாதியில் இருந்து பிரிப்பது மதமாற்றிகளுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.
மதம் மாற்றிகளின் முக்கியமான வேலை ஒருவரை மதம் மாற்றும் போது, அவனிடமிருந்து பழைய மதத்தில் இருந்த கலாச்சார சம்பிரதாயங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து
விடுதல் தான்.
அவ்வாறு ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர் பல தலைமுறைகளாக செய்து வந்த ஜாதீய சடங்குகளை அடுத்து வரும் நாட்களில் செய்ய முடியாமல் போய் விடுகிறது.
அது வாழ்நாள் முழுவதும் ஒரு இழப்பாகவே ஆகிவிடுகிறது.
குடும்பத்தின் எந்த ஒரு நிகழ்விற்கும் அவரவர் ஜாதியின் வழக்கப்படி சடங்குள் இருக்கின்றன. உதாரணமாக பெண் வயதிற்கு வந்தால் அதற்கு ஒரு சடங்கு, பிறப்போ இறப்போ அவற்றிர்கு ஒரு சடங்கு, திருமணம் வளைகாப்பு என்றால் அதற்கு ஒரு சடங்கு என்று குடும்பத்தின் எந்த ஒரு முக்கிய நிகழ்வானாலும் ஜாதியின் அடிப்படையிலான சடங்கிற்கு உட்பட்டே அதனை கொண்டாட வேண்டிவருகிறது. அவரோடு சேர்ந்து வீட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டாட வரும் உறவுக்காரர்கள் ஜாதிய சடங்கின்படி நடக்கவில்லையென்றால் அவர்கள் அதனை ஒரு விஷேஷமாகவே கருதாமல் ஒதுங்கிவிடுவர்.
ஆக ஒருவர் தனது ஜாதிக்கட்டுக்குள்ளிருந்து வெளியேறுவது தனது மொத்த சமூகத்தின் ஆனிவேரை இழந்து விடுதலுக்குச் சமமாகிறது. உறவுகளை முழுமையாக இழக்க நேரிடுகிறது.
இதற்கெல்லாம் பயப்படுவோரும், உறவுகளையும், சொந்தங்களையும், பல தலைமுறைகளாக கட்டிக்காத்து வந்த நடைமுறைச் சம்பிரதாயங்களையும் இழக்க விரும்பாதவர்கள் வேற்று மதம் பற்றிய யோசனைக்கே வருவதில்லை.
இந்த உறவுகளுக்குள்ளான நெருக்கமான சங்கிலிப் பிணைப்பு மத மாற்றிகளுக்கு பெரிய உபத்திரவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனையும் மதம் மாற்ற அதீத பிரயத்தனம்
செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டு, பிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது.
செய்ய வேண்டி வருகிறது. அதில் களைத்துப் போய் விடுகிறார்கள். ஆக இந்த நெருக்கமான உறவுகளை உடைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஒரு நெகிழ் தன்மை கிடைக்கும். அந்த உறவுகள் எல்லாம் திருமண பந்தத்தின் மூலமாகத்தான் உண்டாகின்றன. எனவே சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று கதை கட்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளின் நெருக்கங்கள் அந்நியப்பட்டு, பிறகு அப்படியே ஜாதிய அடிப்படையின் ஆணி வேரை அசைத்து விடலாம், தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயங்களை அழித்து விடலாம் என்கிற நோக்கத்தில் பரப்பப்படுகிறது.
எனக்குத் தெரிந்த மனிதர்களுள் சொந்த அத்தை மகளை, மாமன் மகனை, ஏன் தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட பலரும் மிகவும் ஆரொக்கியமான குழந்தைகளைப் பெற்று சுபிட்ஷமாக இருப்பதைப் இந்தக் காலத்திலும் பார்க்க முடிகிறது. அந்நியத்தில் திருமணம் செய்தவர்களுக்குக் கூட சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வரும் பிள்ளைகள் பிறப்பதும் உண்டு. பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைக்கு கேன்சர் வந்து இறந்த செய்திகளும் உண்டு. அவர்கள் அந்நியத்தில் திருமணம் செய்தவர்களாகவே இருந்தனர்.
மரபணு பற்றி அராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், குழந்தை கருவிலே உருவாகும் போதே அது ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும் என்று கூறுகிறார்கள். ஆக மரபணுவில் யாருடைய மரபணுவில் என்ன எழுதியிருக்கிறதென்று படித்து தெரிந்துகொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். அப்படி இருக்கையில் சொந்தத்தில் அல்லாமல் அந்நியத்தில் திருமணம் செய்பவர்களுக்கு, எந்த நோய் நொடியுமே அண்டாத குழந்தைதான் பிறக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதை யார் கொடுக்கப்போகிறாகள்?
மேலும் ஒருவருக்கு நோய் உண்டாவதற்கு வெறும் மரபணு ரீதியான காரணங்கள் மட்டுமே இருந்துவிடப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.
ஆக எல்லோருக்கும் மரபணு உண்டு, சொந்தத்திலோ அந்நியத்திலோ, எங்கே யாருடன் திருமணம் செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தையின் நலன் என்பது மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது உறுதி. 'நாங்கள் கூறும் வகையில் நீங்கள் திருமணம் செய்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்' என்று கூற யாருக்கும் தகுதி இல்லை.
எனவே நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்பது சுத்தப் பித்தலாட்டம் என்று அறிக. உங்கள் பிள்ளைக்குப் பெண்ணோ, பெண்ணிற்கு பிள்ளையோ உறவுகளில் இருந்தால், அவர்களுடன் திருமண பந்தத்தை பயமின்றி உறுதி செய்து உறவுகள் சிதறாமல் அள்ளிக்கொள்க. புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு என்றெல்லாம் பெயர் சொல்லி நமது பாரம்பரிய குடும்ப கலாச்சாரத்தை உடைக்கப் பார்க்கும் குப்பைகளை அள்ளி குப்பைத்தொட்டியில் இடுக.
உண்மைகளை உணருங்கள். உறவுகளைப் பேணுங்கள்.
வாழ்க வளமுடன்!
.
34 comments:
அருமை நண்பரே. தேவையான, உண்மையான் பதிவு.
இது பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். நீங்கள் எழுதி, என் வேலையைக் குறைத்து விட்டீர்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருமி.
முன்காலத்தில் உறவுகளுக்குளே திருமணம் செய்து கொண்டவர்கள் நலமுடன்தான் வாழ்ந்தார்கள். வியாதிகளே இல்லாமல் பூரணவாழ்வு வாழ்ந்து மறைந்தார்கள். விஞ்ஞான அடிப்படை என்று பல பொய்களுக்கு உண்மை போல வேடமிட்டு அனுப்பும் வேலை வெகு காலமாக நடக்கிறது. சிம்பிளான விஷயம். அரிசி சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்று விஞ்ஞான அடிப்படையில் மருத்துவர்கள் சொல்லப்போக அனைவரும் கோதுமை, மைதா என்று மாறினார்கள். இப்போது மைதாவால் தான் சர்க்கரை வியாதியே வருகிறது என்கிறார்கள். நம் முன்னோர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து கணக்கிட்டுச் சொன்னதை இப்போது ஆராய்ச்சி என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பிறகு அப்படித்தான் போலிருக்கு என்று தடிதடியான ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். வெளங்கிரும்...
Dear sir, I strongly object you regarding close relation. Not only scientifically, also logically there are many demerits. I surprised how you kind of people support close relation. They were acctualy cousins (sisters/brothers) or nephew, niece ( just like son/daughter).
உண்மை. நாம் மாமன் மச்சானில்தால் கல்யாணம் செய்கிறோம். க்றிஸ்தவ, இஸ்லாமிய, யூத பாலைவன கொள்ளை குழுக்கள் போல சித்தப்பா, பெரிப்பா மக்களையல்ல. பேரலல் கசின்ஸ் அல்ல...நமது க்ராஸ் கஸின் முறை. இங்க் மட்ட்மில்லாமல் சீனாவில்ம் உள்ளது.
இண்டியா, சீனா சேத்தா முன்னூறு கோடி. இப்ப சொல்லுங்க எல்லாம் ஹேண்டிகேப்டா?
அப்படி பண்லைன்னா உறுதியா நான் -- ஹேண்டிகேப்டா?
ஆராய்ச்சியே பண்ணாம போர்ட் கார் நெறைய விக்க கார் கம்பெனி காரன் முதல் சினிமாக்காரன் வரை செய்த ’அராச்சி’ தான் இது. அப்பதானே சரக்கு விக்கும்.
சொந்தம்னாதான் ஷோ வேண்டிதில்லையே.
மிக நுன்னிய சொந்த பந்த விபரங்களை தொடர்புபடுத்தி அழகான பதிவு.இந்த உறவுகளின் மிகப்பெரிய சக்தியாக இப்போ மொய்விருந்து என்ற பழக்கம் புதுக்கோட்டை,தஞ்சை பகுதிகளில் உள்ளது.அவர்களுக்குள் இருக்கும் உறவை மேலும் மேலும் அதிகரிக்க பணமும் ஒரு காரண கர்த்தா!
அக்கா மகளைத்திருமணம் செய்வது பொருத்தமானதாகத் தெரியவில்லை.அக்காவை அக்கா என்று அழைப்பதா அத்தை என்று அழைப்பதா .இந்த ஒரு மாற்றமும் அவசியம் தேவை.
Dr. Anburaj is completely white washed......akka purusan mamathane?
Dr. Anburaj is completely white washed......akka purusan mamathane?
அக்கா மகளை திருமணம் செய்வதற்கு தற்சமயம் பல இளைஞர்கள் மறுத்து வருகின்றனர்.எனது தோளில் போட்டு வளா்த்தப்பிள்ளையை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என்று பல இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். நல்ல பண்பாடு ஒழுக்கம் ஆகியவற்றிற்கு இக்கேள்வி சிறந்த எடுத்துக் காட்டு. குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் முன்னேற்றம் இல்லாத பல கருத்தக்களைக் கொண்டவர்களே அக்கா மகளை திருமணம் செய்வார்கள். உடனே நிறுத்த வேண்டும்.
அக்கா கணவர் மாமா என்றால் அக்கா மகள் மருமகள் என்றாகிறது. மருமகளை மாமா எப்படி திருமணம் செய்யலாம். பொருத்தமாக இல்லையே. அக்கா கணவர் அத்தான் என்பதே சரியான உறவு முறை.
சொந்த அக்கா மகளை திருமணம் செய்வது வேண்டுமென்றால் சிறுது சங்கோஜம் இருக்கலாம் ஆனால் கஸின் ஸிஸ்டர் மகளை திருமணம் செய்வதை ஆதரிக்கலாம். அதாவது பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர்காளின் பேத்தி நமக்கு அக்காள் (கஸின் ஸிஸ்டர்) மகள் ஆகும். அந்த பெண்ணை நாம் தூக்கி வளர்த்தோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவளுக்கும் நமக்கும் பெரும்பாலும் 5லிருந்து 10 வயதிர்க்குள் வித்தியாசம் இருக்கும். மேலும் அவள் அவளுடைய நெருங்கிய உறவுகள் சூழலியே அதிகம் வளர்திருப்பாள். அதாவது தன் அம்மாவின் உடன் பிறந்தோர் ( நம் பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ) இவர்கள் தான் அப்பெண்ணிற்கு நெருங்கிய சொந்தங்களாய் இருப்பார்கள். நாம் அல்ல. நாம் என்றாவது ஒரு நாள் ஏதோ விசேஷ நாட்களில் அவளை பார்ப்போம், ஏதோ ஓரளவிற்கு பேசுவோம். அவளும் ஒன்றும் நாம் தூக்கி வளர்த்த பெண் என்ற நெருடல் நமக்கு இல்லை. அவளுடைய அம்மாவும் அப்பாவும் நமக்கு மிகவும் நெருக்கமும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் அவளை நாம் பெண் பார்ப்பது ஒன்றும் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. நன்றி.
தேவையான பெண்கள் நமக்கு கிடைப்பாா்கள். அக்கா மகள் என்று முறை சொன்னாலே திருமணம் தவிா்க்க வேண்டும்.
Dr.Anburaj is getting funding from Ford Foundation. They are promoting this pseudo-scientific theory.
அக்கா பொண்ணு பெஸ்ட்.....அத்தை மாமன் பொண்ணு இன்னும் ரொம்ப பெஸ்ட்....மத்தது பெஸ்ட் (pest)
எனக்கு யாரும் பணம் தர வேண்டியதில்லை.போதிய அளவு என்னிடம் பணம் உள்ளது.யாாிடமும் கையேந்தி கண்டதை எழுத எனக்கு அவசியம் இல்லை. இரத்த தொடா்பு அற்ற திருமண உறவுகள் தான் நல்லது. நல்லதை ஊரறிய உரக்கச் சொல்வேன்.
Whole world knows who alopaths are working for - corporate pharma lobbies. You have made your fortune by making a few bucks from what they have told you. Research ...all of em is pharma funded. Little or no independent research. I challenge you...rather thanscreaming wat has been taught to you , like a missionary...show me ...atleast funded research that ....most imp. CROSS COUIN Marriages are reason for deformities....don't tweet like a parakeet.
If cannot provide research papers on cross cousin marriagrsmeans you are definitely funded by some pharma lobby for posti their propaganda,and I will take proper legal action if you remain silent for next 5 days - deadline.
And don't fool us with islamic and xtian societies' parallel cousin marriage data. Those marriageare inbreeding while kula gotram and traditional marriage urimais are most scientific.
அக்கா மகளை திருமணம் செய்தால் அக்காவை அக்கா என்று அழைப்பதா? அத்தை என்று அழைப்பதா ? பல இடங்களில் மாப்பிள்ளை வயதில் மிகவும் மூத்தவராக இருக்கிறார். மாப்பிள்ளை-பெண் இருவருக்குமே முழுசம்மதம் யின்றி பெரியவர்களில் வற்புருத்தல் காரணமாகவே நடைபெறுகின்றது என்பது எனது அனுபவம். எனது ஊரான திருச்செந்தூா்ில் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கங்கள் அதிகம் இல்லை.குறிப்பாக நான் சாா்ந்த நாடாா் சமூகத்தில் கிடையாது.
You are a person who apes the west. Responnd or face themusic. Where are the research papers? Ie on cross cousin I van show u ppl in our TN.ask ur athAin imdia marriahes r betwen failies, not individuals.
kka enrudhan ...mama onruthane? Read some sociology doc. In south india mama is a common term for both father in lsw and husband of athai....they followed urimai n menarikam a a rule.....This is an attempt by pcorporates to make ppl islands.
Let us end the debate here. You have not supplieany proof on cross cosin marriages. We are not marrying within our blood a in parallel ccousins but outside. This a pseudo-scientific baseless propaganda by south indian paid allopaths. I hereby conclude that cross cousin marriages are sociologically and genetically more known and safe.
அன்புராஜ் சார், அக்காள் மகளை மணமுடித்தாலும் அக்களை அக்கா என்று தான் அழைப்பர். அதுவே மரபு. எனக்குத் தெரிந்த தம்பதிகள் மிக ஆரோக்கியமான குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அக்காள் மகளைத் திருமனம் செய்தவர்கள் தான். இவையெல்லாம் தவறு என்று ப்ராபலிட்டி என்ற பெயரில் விளம்பரப்படுத்துவது ஹிந்து சமுதாயத்தில் மிக இருக்கமாக இருக்க்கும் குடுப்பப் பிணைப்பை உடைக்கும் தந்திரங்கள் தான். அதனால் அவற்றை நம்பாமல் மரபுப்படி சுதந்திரமாக நமது குடும்ப உறவுகளை தீர்மானம்செய்து கொள்ள வேண்டியதும் குடும்ப உறவுகளைக் காப்பதும் நல்லதே.
Hayyram....dr. kku kodutha bookla apdi sollalaye! Ford foundation, rockefeller foundation, rothschild, bilderberg pondra freemasons nadathum pharmakkal noigalai labil uruvakki vidubavargal...adarkku marundhum virpavarga.....avargalidam neengal real science patri pesinal.....hayyram!
More than the intent of foreign religions to convert, this propoganda would have been indirectly spread by foreign business establishments to break Indian joint family system, since small family units will boast their sales further.
Moodar Koodam.
Nonsense.
0good
Namakku thevayana pen akka magal endru thondrinal thirumanam seivathil thavarillaye.
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகளை திருமணம் செய்யலாமா?(அதாவது பெரியத்தையின் பேத்தியை)
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகளை திருமணம் செய்யலாமா?(அதாவது பெரியத்தையின் பேத்தியை
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகளை திருமணம் செய்யலாமா?(அதாவது பெரியத்தையின் பேத்தியை
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகளை திருமணம் செய்யலாமா?(அதாவது பெரியத்தையின் பேத்தியை
என் (அப்பாவின் அக்கா) பெரியத்தை உடைய மகளின் மகளை திருமணம் செய்யலாமா?(அதாவது பெரியத்தையின் பேத்தியை
Post a Comment