Monday, December 19, 2011

சபரிமலை பயணத்தைக் குலைக்கச் சதி முல்லைப் பெரியாறு!



அப்புசாமி: குப்பு, அதென்னய்யா டிவிய தொறந்து மூடினா எப்பப்பாரு முல்லைப்பெரியாறு முல்லைப்பெரியாறு ன்னு பொழுதன்னிக்கும் காட்டிக்கிட்டே இருக்காங்களே..அப்டி என்னய்யா ப்ரச்சனை?

குப்புசாமி: அப்பு, தமிழக கேரள எல்லைல இருக்கும் டேம் தான் முக்கியப் பிரச்சனை. ஏதோ டேம் ஒடஞ்சிருமாம், அதை வெச்சி அரசியல்வாதிங்க மக்களை பயமுறுத்திக்கிட்டே வர்ராங்க.

அப்புசாமி: அதான் பிரச்சனையா, அதுக்கெத்துக்குப்பா ஐயப்பசாமிக்கு மாலை போட்டவங்களையெல்லாம் அடிக்கனும்? தினசரி, ஏதோ சபரிமலைக்குப் போறவங்களுக்குப் பிரச்சனைன்னு திராவிடக்காரங்களோட திராவகச் சேனல்ல காமிச்சிக்கிட்டே இருக்காங்களே? அவங்க மேலே என்ன கோவமாம்?

குப்புசாமி: ஆங், இப்போதான் நீ விஷயத்துக்கே வந்திருக்க அப்பு, இந்த முல்லைப்பெரியாறு பிரச்சனை இருக்கே அது வெறும் டேம் பிரச்சனைன்னு எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா அதோட மையப் பிரச்சனையே வேற...! இந்த டேம் பிரச்சனைகுப் பின்னாடி பல முகமூடி சதி வேலைங்கல்லாம் இருக்கப்பு..!

அப்புசாமி: என்ன குப்பு சொல்ற, அப்போ இது வெறும் டேம் பிரச்சனை இல்லையா?

குப்புசாமி: ஆமாம் குப்பு உண்மையா சொல்லப்போனா ஒரு பெரிய பிரச்சனையை நேரடியா செய்யாம அதுக்கு இந்த டேமை ஒரு காரணப் பிரச்சனையா கையிலெடுத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க...

அப்புசாமி: குப்பு, கொஞ்சம் புரியரமாதிரி சொல்லேன்!

குப்புசாமி: அப்பு, சொல்றேன் கேளு, மொதல்ல டிவில என்னல்லாம் நியூஸ் போடறான், யாரெல்லாம் பேசுறாங்க, அப்புறம் எதப் பத்தி முக்கியமா திரும்ப திரும்ப சொல்றாங்கன்னு கவனிச்சா ஒனக்கே புரியும்.

தினமும் எங்கேயாவது, யாராவது டேம் விஷயமா ஆர்பாட்டம் பண்ணினாங்கன்னு நியூஸ் போட ஆரம்பிப்பாங்க. அப்புறம் உடனே கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டார்கள்ன்னு மேட்டருக்கு வருவாங்க. கடைசியா, ஏன் சபரிமலைக்குப் போரீங்க, எல்லாரும் தமிழ் நாட்டு ஐயப்பன் கோவில்லயே மாலையை கழட்டுங்கன்னு வந்து முடிப்பாங்க. இப்போ தெரியுதா என்ன பிரச்சனைன்னு!

அப்புசாமி: அட ஐயப்பா..! நீ சொல்றதப் பாத்தா ஏதோ திட்டம் போட்டு இந்த சபரிமலை சீசனையே கெடுத்து ஹிந்துக்களோட ஐயப்ப வழிபாட்டையே சீர்குலைக்கனும்னு நடத்திவர்ர பிரச்சனையாவுல்ல தெரியுது..!

குப்புசாமி: ஆங்! அதுதான் பாயிண்ட்டு, டேம் பிரச்சனைங்கர பேர்ல நடக்கிற இந்தப் பிரச்சனையின் மையப் பகுதி எதுன்னு தெரியுதா?

அப்புசாமி: அடேங்கப்பா, 'வொய் திஸ்ஸு கொலவெறி' இந்த பாடாவதிங்களுக்கு? இதெல்லாம் யாரோட திட்டம், ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க? இதனால் யாருக்கு லாபம்?

குப்புசாமி: அப்பு, அடிப்படையில கேரளா ஹிந்துக்களை மைனாரிட்டிகளாகக் கொண்ட மாநிலம். அங்கே முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தான் அதிகம். மிச்சம் மீதி கேரள ஹிந்துக்களையும் முஸ்லீம்கள் லவ் ஜிகாத் மூலமாகவோ, அல்லது மிரட்டியோ மதம் மாத்த முயற்சிக்கறதும், கிறிஸ்தவங்க மிஞ்சியிருக்கரவங்களை கருனை வலைக்குள்ள கொண்டு வரனுமுன்னும் பெரிய வேலைங்களையெல்லாம் செஞ்சிக்கிட்டு வர்ராங்க. அது மாதிரி ஆளுங்களுக்கு தொழிலே அதுதான்.

ஆனா இதுக்கெல்லாம் பெரிய முட்டுக்கட்டையா இருக்கறது அங்க இருக்கிற முக்கியமான சில ஹிந்துக் கோவில்கள். சரியா சொல்லனும்னா, திருவனந்த புரம் பத்மனாபர்சுவாமி கோவில்குருவாயூரப்பன் கோவில் மற்றும் சபரிமலைன்னு சில முக்கியமான கோவில்கள் அதிகளவு ஹிந்துக்களை ஒரே இடத்திற்கு ஈர்க்கும் கோவிலா இருக்கு.

அதுலயும் குறிப்பா சபரிமலை ஐயப்பன் கோவில் இருக்கே, அது வாட்டிகன் மற்றும் மெக்காவை மிஞ்சும் அளவிற்கு ஒரே நாளில் உலகிலேயே அதிக மக்கள் கூடும் முக்கியக் கோவில் என்ற பெயரை பெற்றதோடல்லாமல், உலகிலேயே 4.5 முதல் 5 கோடி மக்கள் மிகக்குறுகிய காலத்தில் வருடம் தோறும் அமைதியாக கூடிக்கலையும் புரம்மாண்டக் கோவிலாக இருக்கிறது என்பது பல அந்நிய மதக்காரர்களுக்கு கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கு.

இப்படி கேரளத்தை மதரீதியாக அபகரித்து அங்கே தனியாக ஒரு மதத்தின் நாடு உருவாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ஐயப்பன் பெயரைச் சொல்லி கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து போவது மிகுந்த தொந்தரவாக இருக்கு. இந்தியாவின் முக்கியப் பகுதியாக அதுவும் ஹிந்துக்களின் முக்கியப் பகுதியாக இன்னும் கேரளம் தென்பட்டுக் கொண்டே இருந்தால் கேரளத்தை தனியொரு மதத்தினரின் பகுதியாகப் பிரிப்பது என்பது கனவிலும் நடக்க முடியாமல் போயிடும்.

அது மட்டுமல்ல, தங்கள் சாமி தான் உலகை காக்கப் போகிறது என்று சொல்பவர்கள் கண்முன்னாலேயே ஐயப்பன் தான் எங்களைக் காக்கிறான் என்று சொல்லி இத்தனை லக்க்ஷம் பேர் ஆண்டு தோறும் பிரயாணம் செய்வது மிஷ'நரி'களின் தோல்வியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் வைபவமாகவும் இருக்கு. அதனால் இதனை எப்படியாவது சீர்குலைத்திட வேண்டும்னு திட்டமிட்டு ஒவ்வொரு ஐயப்ப சீசன் வரும்போதும் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ண காத்துக்கொண்டே இருக்காங்க, அதுப்படி செய்யவும் செய்றாங்க.

இப்போது இந்த முல்லைப் பெரியாறு பிரச்சனையும், ஐயப்ப சீசனை சீர்குலைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் நடக்கும் ஒரு பிரச்சனை தான்.

அப்புசாமி: குப்பு, எனக்கு தலையே சுத்துதய்யா! ஒரே ஒரு பிரச்சனைக்குப் பின்னாடி இத்தனை முகமூடிப் பிரச்சனை இருக்கா..? ஆனா அதை ஒரு முதலமைச்சரே செய்ய நினைப்பாரா என்ன?

குப்புசாமி: என்ன அப்பு ஒலகம் தெரியாதவனா இருக்க? கோயமுத்தூர்ல குண்டு வெச்சதுக்காக ஜெயில்ல இருந்த மதானியை விடுதலைப் பண்ணுங்கன்னு தமிழக முதலமைச்சரை நேர்ல பாத்து சொல்லிட்டுப்போனது கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் ங்கறத மறந்திட்டியா? சிறுபான்மை போர்வைய போத்திக்கறதுக்காக கேரள முதல்வருங்க என்ன வேனாலும் பண்ணுவாங்க! அதுலயும் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும் ஹிந்துக்களுக்கு எதிராவே தான் இதுவரைக்கும் நடந்திக்கிட்டு வருதுன்னு எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இதுபோல சதிவலைக்கு அதிகாரத்தில இருக்கறவங்க ஏன் உதவி பண்ண மாட்டாங்க?

அப்புசாமி: ஓஹோ, இந்த ஜெயமாலாங்கற நடிகை ஐயப்பன் சிலையை தான் தொட்டதா சொல்லி நாட்காமாடினாளே அதுவும் இதுமாதிரி கேஸ்தானா?

குப்புசாமி: ஆமாம் அப்பு, ரொம்பநாளாவே சபரிமலையை அபகரிக்கனுமுன்னும், அதைச் சுத்தி ஹிந்துக்கள் மலைக்குப் போற வர்ர வழிகளையெல்லாம் எப்படியாவது அடைச்சி சபரிமலை பிரயாணத்தையே தடுத்து நிறுத்தனுமுன்னும் கிறிஸ்தவ மிஷனரிங்க நிறைய வேலை செஞ்சிக்கிட்டு வர்ரதா ஏற்கனவே பல செய்திகள் வந்திருக்கு.

இந்த செய்தியை படிச்சிப் பாரு உனக்கே புரியும்!


அப்புசாமி: ஆத்தி...! என்னய்யா மலை முழுங்கி மகாதாவனுங்களா இருக்கானுங்க..! விட்டா மொத்த இந்தியாவையும் மிஷ'நரி'ங்க வெல குடுத்து வாங்கி நம்மள தொறத்திடுவானுங்க போல இருக்கு!

குப்புசாமி: ஆமாம், இப்படித்தான் பத்மநாபர்சாமி கோவிலை கேரள அரசாங்கம், தேவசம் போர்டுகிட்ட இருந்து பிடுங்கிக்க பார்த்தது. ஆனால் தேவசம் போர்டு காரங்க பிடிவாதமா இருந்ததாலேயும், அங்கிருந்த ஹிந்துக்களின் ஒட்டுமொத்த கடுமையான எதிர்ப்பாலயும் தான் தப்பிச்சது.

இப்படி படிப்படியா ஹிந்தக்களுடைய பெருமைக்குரிய உத்வேகமான வழிபாடுகளையெல்லாம் சிதைக்கனும்ங்கறது தான் இங்களோட நோக்கம். அதுக்காக என்ன வேனும்னாலும் செய்வாங்க.

கீழே உள்ள படத்தைப் பாரேன், கரெக்ட்டா ஐயப்ப சீசன்ல தான் பெரும்பாலும் முல்லைப் பெரியாறு பிரச்சனையை ஊடகங்களை விட்டு அதிகப்படுத்தறாங்கன்னு புள்ளி விபரம் சொல்லுது..


அதோட இந்த ஆங்கில செய்தியையும் படிச்சிப் பாரு..


நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் தான் எல்லா செய்தித் தாள்களும் ஊடகங்களும்  முல்லைப் பெரியாறு பிரசினையைப் பற்றிய செய்திகளை  மிக அதிகமாக வெளியிடுதுன்னு செய்தி சொல்லுது!

தமிழகத்திலிருந்து  வரும் ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக  கேரளத்தில் துவேஷ உணர்வை உண்டாக்கி, அதனால்  தமிழர்கள்  சபரி யாத்திரையை  விட வைக்க வேண்டும்  என்பது உள்நோக்கம்மாம்!

அப்புசாமி: ஆமாம், குப்பு, நானும் பாக்கறேன், விஜயகாந்தில இருந்து கிறிஸ்தவ சைமனும், வைக்கோலும் மற்றும் எல்லாப்பயலும் 'ஏன் சபரிமலைக்குப் போறே?' ன்னு ஒரே கேள்வியைத்தான் கேக்கறாங்க..! நீ சொல்றது சரிதான்!

குப்புசாமி: இப்போ புரியுதா அப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குப் பின்னாடி இருக்கறது, டேம் பிரச்சனை இல்லை, சபரிமலை சம்பந்தப் பட்ட மதப் பிரச்சனைன்னு!

அப்புசாமி: ஆமாம் குப்பு, இது நம்ம நாடு, நம்ம சபரிமலை, எத்தனை பிரச்சனை வந்தாலும் சபரிமலைக்கு போகும் நம் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது. ஒரு சுதந்திர நாட்டின் பக்கத்து ஊருக்கு போகக்கூட பாதுகாப்பு தரமுடியாத அரசியல் வாதிங்க, அங்க ஏன் போறேன்னு கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியில மட்டும் வீராப்பா இறங்கிடறாங்க!

குப்புசாமி: ஆமாம் குப்பு, ஒரு கோவிலுக்கு நிம்மதியா போய்ட்டு வர்ர அளவுக்கு அமைதியா நாட்டை வெச்சிக்க தெரியாத இவங்களை நம்பி பிரயோஜனம் இல்லை. வர்ரது வரட்டும்ன்னு நம்ம பூமியையும் நம்ம உரிமையையும் நாமதான் காப்பாத்திக்கனும்! அப்பு, நான் இந்த சீசனுக்கே மாலை போட்டு மகரஜோதிக்கு சபரிமலைக்குப் போய் தரிசனம் செய்யத்தான் போறேன்!

அப்புசாமி: குப்பு, நானும் வர்ரேன், நம்ம சபரிமலைய நம்மகிட்டருந்து எவன் பிரிச்சிடுவான்னு நானும் பக்கறேன். இன்னிக்கே போய் மாலை போட்டு ஐயப்பனை நம்பி புறப்படுவோம்..!

குப்புசாமி: இது நம்ம நாடு, நம்ம கேரளம், நம்ம சபரிமலை, நம்ம ஐயப்பன்!

அப்புசாமி: சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!

குப்புசாமி: சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!

சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!


10 comments:

Madhusudhanan D said...

எல்லாத்தையும் இப்படி மதத்தோட சம்பந்தப்படுத்தி பார்க்கறீர்களே!!! எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை. காங்கிரஸ் லோக்பால், ஊழல் போன்றவற்றை மறைத்து கேரளாவில் இடை தேர்தலை சந்திக்க செய்யும் நாடகம் என்று தான் தோன்றுகிறது.

hayyram said...

மது, புரிகிறது, ஆனால் மேலோட்டமாகப் பார்த்தால் இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்றே தோன்றும். ஆனால் சரியாக சபரிமலை சீசன் துவங்கப்போகும் சமயமாகப் பார்த்து உம்மன் சாண்டி இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்துவதும், அதை மீடியாக்கள் அதுவும் குறிப்பாக தமிழகத்தின் திராவிட மீடியாக்கள் அதை ஊதிப்பெரிசாக்குவதும் ஒப்பீட்டளவில் பல சந்தேகங்களை உண்டாக்குகின்றன.

ஒருவிஷயம் யோசித்துப் பாருங்கள், இதே கேரளாவில் ஏதாவது முஸ்லீம் கோவிலுக்கு ஆண்டு தோறும் முஸ்லீம்கள் நோன்பிருந்து தொழுகைக்குச் செல்லும் மாதமாக இந்த டிசம்பர் மாதம் இருந்திருந்தால், முஸ்லீம்கள் யாத்திரை போகும் போது தாக்கப்பட்டிருந்தால் எந்த அரசியல் வாதியாவது முஸ்லீம்களைப் பார்த்து கேரள மசூதிக்கு ஏன் போகிறீர்கள், தமிழ் நாட்டிலேயே தொழுகை நடத்துங்கள் அங்கே போகாதீர்கள் என்று சொல்வார்களா? முஸ்லீம்கள் தாக்கப்பட்டிருந்தால் அரசியல் வாதிகள் அது பற்றி வாய்திறக்காமல் இருந்திருப்பார்களா? முஸ்லீம் சகோதரர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறோமென்று ஆளாளுக்கு துள்ளிக் குதித்திருக்க மாட்டார்களா? ஆனால் எத்தனையோ ஐயப்ப பக்தர்கள் விரதமேற்கொண்டு செல்லும் வழியில் தாக்கப்படுவதை பற்றி எந்த அரசியல் வாதியும் வாய்திறக்கவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை அரசியல் ரீதியானது, சபரிமலை யாத்ரீகர்களை யாரும் துன்புறுத்த வேண்டாம் என உம்மன் சாண்டியும் சொல்லவில்லை, தமிழக அரசியல் வியாதிகளும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அறிக்கையும் கொடுக்கவில்லை. மாறாக அந்த வழிகளை அடைப்போம் என்று தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

சபரிமலைக்குப் போகாதீர்கள் என்று தான் தடுக்கிறார்கள். சைமனும், கோ வால்சாமியும் சேர்ந்து துவேஷத்தைத் தான் வளர்க்கிறார்கள். இதனால் அல்ட்டிமேட்டாக பாதிப்படைவது ஐயப்ப பக்தர்கள். ஆதாயமடைவது ஹிந்து துவேஷிகள். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த பிரச்சனை அடுத்தவருஷமும் இதே போல் நீடிக்கும். முடிவற்ற இப்பிரச்சனையில் தொடர்ந்து சபரிமலை யாத்திரை முடக்கப்பட வேண்டுமா?

பிரபு said...
This comment has been removed by the author.
பிரபு said...

Dear Mr.Ram,
I am regular viewer of your blog and I like all your articles.. but I never commented on your blog so far. After watching the Video on intellectual terrorism. I feel shame of myself. 'Coz most of our Hindu friends including me. viewing other anti hindu/unwanted blogs/websites commenting, argueing unwanted/useless things. But we forgot to show our unity atleast by encouraging our Hindu people blogs/websites. Showing if one hindu hand raises all thousands of our hands will raise together to show our unity ,to encourage, to demolish the evil forces and be the threat to those who think to divide and rule our unity.

Hereafter I assure for each and every article My comment will be there as I am part of you, as a support, as a team, as a Hindu. we will bring back our Rastra and Rajiya for sure.

Those who read this comment and Agree with me. Please assure the same and show our sathriya blood still running inside our body. And this is my Country.

Prabu

hayyram said...

உங்கள் ஆதரவிற்கும் உணர்வுப்பூர்வமான கருத்திற்கும் நன்றி பிரபு. நம்மால் முடிந்தது போலி செக்யூலரிசம் பேசி நம்மை ஏமாற்றுபவர்களைப் பற்றி பலருக்கும் அறியச் செய்யவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மதச்சார்பற்றவன் என்று இந்தியாவில் யாரும் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் மட்டும் மதச்சார்பற்று இருப்பதை முற்போக்கு சிந்தனையாக நினைக்க வேண்டும் என்னும் அளவிற்கு ஹிந்துக்களின் மனது மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றிலிருந்தெல்லாம் வெளிப்பட வேண்டும். ஹிந்துக்களுக்கும் தம்மைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் பற்றித்தெரிந்திருக்க வேண்டும். என்னால் ஆனது உங்களை அடைய முடிந்தது, உங்களால் ஆனது, இந்த கருத்துக்களை பிறர் அடையுமாறு செய்யுங்கள். அதுவே நாம் நம் சமூகத்திற்கு ஆற்றும் கடமை. ஒரு அனிலைப் போல!

smart said...

உங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, கேரள முதல்வர் தமிழக முதல்வரிடம் "கிறிஸ்மஸ் கொண்டாட வரும் கேரள மக்களுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளார்".

smart said...

ஆனால் பாஜவும் சேர்ந்து சபரிமலை சென்றவர்களை தாக்கியதால் தான் இதை நம்ப சிரமமாகவுள்ளது.

rishikss said...

Mr Smart, that might be fake news that BJP attacked sabarimala pilgrimage, as media is under controls of Sonia(missioniries). Now onwards, sabarimala pilgrimages should go with weapon to take care of themselves .

They can keep the weapons in samakutti(as it is meant for) before going to darshan.

பிரபு said...

திரு ராம் அவர்களே,

நமது சனாதன தர்மம், நமது கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை ஒவ்வருவரும் இதன் அடிப்படை மற்றும் அறிவியல் ஆழம் உணர வேண்டும். அதற்க்கு என்னால் ஆனா அனைத்தையும் செய்துகொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக எனக்கு தெரிந்த அனைவருக்கும் அந்த கருத்துகளை எடுத்து கூறுவேன்.

அந்த வீடியோவில் திருமதி ராதா ராஜன் கூறுவது போல் நாமே அதை பல இடங்களில் பார்திருக்கிறோம் பெரிய சிலைகள் மட்டும் அல்ல. பேருந்தில் பயணம் செய்யும் பொழுது மலைகளும், இயற்கையான இடங்களிலும் உயரமான இடங்களிலும் பாறைகளும் எங்கும் சிலுவை படம் அவர்களின் வசனங்கள் பார்க்க சகிக்காது. நாட்டிற்காக ஒரு மரம் கூட நடாதவர்கள் எல்லா மரங்களிலும் அவர்களின் மத பிரசார எழுத்துகளை ஆணி அடிகிறார்கள்.நாம் யாரேனும் இதை கண்டித்தது உண்டா ? நாம் யாரும் அதை அவ்வளவாக பெரிது படுத்துவது இல்லை. இனி நம்மால் இயன்றதை செய்வோம். இனியும் நாம் காலம் கடத்தினால். முன்பு வியாபாரத்திற்கு வந்து நம்மை அடிமை படுத்தினார்கள் மீண்டும் இப்பொழுது இவர்கள்.

விழுமின் எழுமின்......

நன்றிகள் பல

Shri Hari said...

ஸ்மார்ட்,

முதலில் உங்கள் கேள்விக்கு பதில் எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் உங்கள் வலைதள பகுதியில் eluthappatta தகவலை படித்த பின்பு அது வீண் என்று முடிவு செய்துவிட்டேன்...

eninum ungal kelvikku rishi sariyaana pahtilai valangiullar.