Sunday, December 4, 2011

ரமண மகரிஷியின் அருள் மொழிகள் - ஆன்மா


 

ஆன்மா இதயக்குகையினில் இருக்கிறது என்று உபநிஷத்து கூறுகிறது. அத்தகைய ஆன்மா வேறெங்கிருந்தோ வருவதில்லை. அது உள்ளது உள்ள படியே இருப்பது. என்றென்றும் நிலைபேறானது. ஆட்டமோ அசைவோ இல்லாதது. மாற்றம் காணாதது. காணப்பெறும் மாற்றங்கள் ஆன்மாவைச் சார்ந்தவை அல்ல. ஏனெனில் ஆன்மா இதயத்தில் குடிகொண்டுள்ளது.

ஜீவநாடி, ஆத்மநாடி அல்லது பரநாடி என்று கூறப்படும் ஒரு நாடி உள்ளது என்றே யோகிகள் சொல்கிறார்கள். இதயத்திலிருந்து வெளியே செல்லும் முக்கிய நாடிகள் 101 என்றும், அவற்றிலொன்று நேரே ஸஹஸ்ராரத்திற்குச் செல்கிறதென்றும் உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பத்தின் ஏழாம் மாதத்தில் பிரும்ம-அந்தரத்தின் அதாவது சிசுவின் தலையில் மண்டை ஓடு வளர்ச்சி பெறாத நிலையில் மென்சதை மட்டுமே உடைய உச்சி மையத்தின் வழியே ஜீவனுடன் அகந்தை உடலுக்குள் ப்ரவேசிப்பதாகவும், உடல் முழுவதும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான நாடி நரம்புகள் மூலம் அது இயங்குகிறது என்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகவேதான், பேருண்மையை நாடுவோர் உச்சந்தலை மூளைப்பகுதியில், மனம் குவித்துத் தியானித்து மூல சக்தியைத் திரும்பப் பெறவேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் நாபி அதாவது தொப்புள் நரம்பு முடிவலையில் சுருண்டு பதுங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்புவதற்குப் பிராணாயாமம் யோகிகளுக்கு உதவுகிறது என்றும் அந்த சக்தி முதுகுத் தண்டினுள் பதிந்து மூளைவரையில் செல்லும் சுழுமுனை எனும் நரம்பு வழியே மேலெழும்புவதாகவும் விளக்கப்படுகிறது.

சூக்ஷும்னா என அழைக்கப்படும் சுழுமுனை என்பது ஒரு வளைவுக்கோடு போன்றது. நாபியிலிருந்து தொடங்கி முதுகுத் தண்டின் வழியே மூளைக்குச் சென்று, அங்கிருந்து வளைந்து கீழிறங்கி இதயத்தில் முடிவுறுகிறது. இவ்வாறு இதய மையத்தை எட்டும்போது தான் யோகியின் சமாதி நிலைபேறாகிறது. ஆகவே இதயமே முடிவான மையம் என்பதே இதிலிருந்து அறியலாம்.

- பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி


ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒரு வெள்ளைக்காரர் "நான் ஆன்மாவை எப்படி அடைவது?' என்று கேட்டாராம். அதற்கு ரமணரோ, 'அதுவாகவே நீ இருக்கும் போது அதனை அடைய முயற்சிப்பது என்பது அறியாமையே!' என்றாராம்.
.

11 comments:

தமிழ்கிழம் said...

ரமண மகரிஷி????

அவர் உண்மையான மகரிஷியாக இருந்திருந்தால் இரண்டாவது படத்தில் பின்புலத்தில் (சுவற்றில்) உள்ள அந்த ஆசாமிகள் இருந்திருக்க மாட்டார்கள்....
(நான் அமர்ந்திருக்கும் நபரை குறிப்பிடவில்லை....)

hayyram said...

ரமணர் தன்னையே மதிக்காதவர், பின்னாடி சுவற்றில் தொங்குபவர் பற்றி அவருக்கென்ன கவலை. கூட இருக்கும் பக்தர்களின் வேலையாக இருக்கலாம்.

Madhusudhanan D said...

ThamizhKizham: Gandhi is not bad or selfish. He is an idealist. To some extent he is also like a yogi only. Some of his ideals were not practical. But being an incorrigible idealist is not that easy. But Gandhi followed it.

Many people dislike him for he advocated Hindus and Muslims living in harmony. It is possible, but not with present day Congress which neglect national security for Muslim votes.

Arun Ambie said...

Gentlemen!
Barrister M.K. Gandhi did advocate living in Harmony, but he was weak enough not to allow firm stands on key issues and resorted to appeasement, which still kills the national spirit and comfortable life of the public.

A political leader should lead his people to comfortable living, but Gandhi, still in attempted transition from common man to Yogi in his lifetime, attempted and succeeded in coaxing his innocent followers that suffering is glory.

A leader should allow difference of opinion during the decision making process, but Gandhi scuttled the growth of people who differed with him. He encouraged Yes-men.

If Gandhi wished to be a Yogi and was trying to become one, he should not have come to politics. If his chosen path was politics he should have kept his half-baked spiritual experiments to himself and but he made our people mute spectators of all atrocities with his misinterpreted version of non-violence.

Non-violence is not toleration of violence as Barrister Gandhi advocated. I don't wish to talk about that man anymore.

Well, Ramana Maharshi went past all these worldly issues. He didn't call himself Maharshi nor did he silently encouraged being called so, as Gandhi did in his planned and successful claim to Mahatmahood.

Jayachandran said...

Well said Mr.Arun, and for Mr.Madhusudhanan i strongly recommend you to take a look at Mr.Mohanlaal Karamchand's picture in my facebook wall, you can find it at p.jayachandran22 and for my beloved friend Hayyram, its me jayachandran as Tamilkizham.

Jayachandran said...

சரியாகச்சொன்னீர்கள் தோழர் அருண் அவர்களே.. Madhusudhanan D அவர்களை இந்த லிங்கில் மோகன்தாஸ்-இன் அட்டகாசங்கள் உள்ள படத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்...

for my beloved friend hayyram, its me jayachandran as தமிழ்கிழம்.

Madhusudhanan D said...

As I said previously, some of his ideals are not apt practically to the real world. He did not understand that. But we cannot claim he is bad as he did not understand that.

He inspired every common man to come into freedom struggle. Those days, people thought, to fight against British we need either money, or physical strength. But Gandhi being a lean humble man inspired and showed every common man can do some thing for the country.

விவேகனந்தர் wine குடித்தார் என்பதில் அவருக்கு தண்ணீர் wine என்ற பேதம் இல்லை. அவர் முற்றும் துறந்தவர் என்று ராமகிரிஷ்னரே கூறியிருக்கிறார். அதே போல் என் நாம் இதையும் பார்க்க கூடாது.

If he had hurt British, they would have suppressed him. But he and his people hurt themselves, and British surrendered. His Non co-operation movement was a big success. If he had not taken it back, British would have vacated India by 1923 or 1924 itself.

Arun Ambie said...

மதுசூதனன் அவர்களே! காந்தியார் தன்னை வருத்திக் கொண்டது கண்டு குற்றவுணார்ச்சி மிகுந்துபோய் ஆங்கிலேயர் நம் நாட்டினின்றும் வெளியேறவில்லை. அவர்கள் நாட்டில் இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட பேரிழப்புகள் இளைய தலைமுறை போர்ப்பலியால் சிறுத்துப் போய் முதியோர் கூட்டமாகிப் போனது பிரிட்டன். தம்மிடம் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையால் தம்மால் சமாளிக்க முடியாது என்ற நிலையிலேயே ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டகன்று போயினர்.

இரண்டாம் உலகப்போரில் ஆதரவு வேண்டுமென்றால் சுதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்றாவது ஆங்கிலேயரை காந்தியார் மிரட்டியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மாறாக மாறாப்பற்றுடன் ஆங்கிலேயர்க்கு ஆதரவாக இராணுவத்துக்கு ஆள் திரட்டினார் இந்த அஹிம்சைவாதி. ஏன் ஆங்கிலேயரிடமும் அஹிம்சையை போதித்து "ஹிட்லர் கொன்றால் சாகுங்கள் ஆனால் எதிர்த்து அடிக்காதீர்கள். என்றாவது ஒரு நாள் மனம் திருந்தி ஹிட்லர் நாசிசக் கொள்கையைக் கைவிடுவான், நம்பிக்கையோடு அடிபடுங்கள்" என்று உபதேசித்திருக்க வேண்டியது தானே? விவேகானந்தரையும் காந்தியையும் ஒப்பிடுகிறீர்களே...விவேகானந்தர் கூடத்தான் ஆங்கிலேயர்க்கு எதிராக அவர்களை துன்புறுத்த எதுவும் செய்யவில்லை. காந்தியார் மக்களின் தன்முனைப்பை மழுங்கடித்தவர். தர்மாவேசத்தைக் கூட வன்முறை என்று தூற்றியவர். ஆனால் விவேகானந்தர் இளைஞர்களுக்கு தர்மாவேசத்தை ஊட்டியவர். ஆனால் மழுங்கல் காந்தியார் மகாத்மாவானார். அது எப்படி? பகுத்தாய்ந்து யோசியுங்கள்!!

hayyram said...

///இரண்டாம் உலகப்போரில் ஆதரவு வேண்டுமென்றால் சுதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள் என்றாவது ஆங்கிலேயரை காந்தியார் மிரட்டியிருக்கலாம்///

ஞாயமான கேள்வி, அஹிம்சை வாதி போருக்கு இந்தியர்களை ஈடுபடுத்த ஏன் ஒப்புக்கொண்டார் என்றும் புரியவில்லை. இன்னும் காந்தியைப் பற்றி நிறைய படிக்கவேண்டுமோ...??

Madhusudhanan D said...

Gandhi did not support British in World war II. He said India could not be a part of a war which appears to be a fight for democracy while democracy is denied in India.

செந்தில் said...

காந்தியை பற்றி அறியாமையால் விமர்சனம் செய்யும் நீங்கள் எல்லோரும் வெறும் வெறுப்புக்காக தூற்றி எழுதியிருந்தீர்கள் என்றால் நான் Time waste பண்ண விரும்பவில்லை.

ஆனால் உங்களில் ஒருவராவது காந்தியை போலவே உண்மையை அறிய வேண்டும் என்று விரும்புவீர்கள் என்றால் Jeyamohan எழுதிய "இன்றய காந்தி" book படியுங்கள். உங்களை விட மிக கேவலமான காந்தியை பற்றிய விமர்சனதிர்கெல்லாம் அங்கே பதில் உள்ளது.

book முதலில் வாங்க தயக்கமாக இருந்தால் www.jeyamohan.in website சென்று சில sample கட்டுரைகளை படித்துவிட்டு பிறகு வாங்கவும்.

இந்த விமர்சனத்தை காந்தியின் புகழை தூக்கி நிப்பாட்டுவதற்காக நான் எழுதவில்லை அதற்கு எனக்கு அருகதையும் இல்லை. பின் எதற்காக எழுதினேன் என்றால்:

It is easy enough to be friendly to one's friends. But to befriend the one who regards himself as your enemy is the quintessence of true religion. The other is mere business.

Mahatma Gandhi