Sunday, December 11, 2011

மோடியின் சாதனைகளும் முஸ்லீம்களின் மகிழ்ச்சியும்!நாங்கள் 13.11.2011 மதியம் 12 மணிக்கு திரு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தோம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த பொழுது 'வணக்கம்' என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்த படியே வந்து கொண்டிருந்தார். 'ஸ்வாகதம்' என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அரிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது.

தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும் அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்போதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

மோடி "நீங்கள் உள்ளே வரும்போது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?" என்று கேட்டார். "நாங்கள், அப்படி எதுவும் இல்லை' என்றோம்.

ஆனால் 'என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அது தான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்" என்று விளக்கினார்.

ரயில் பயணத்தின் போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமான தெருவிளக்குகள் எரிவதைப் பார்க்க முடிந்தது. கார்களில் பயணிக்கும் போது, தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமாதாபாத்திலும், சூரத்திலும் நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், 'மோடியினால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்' என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும், நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், 'இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது... இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்.. நாங்கள் செய்த புன்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்..' என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உனர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, 'தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்' என்றார்.

-'டி வி' புகழ் வரதராஜன்

நன்றி:- இவ்வார துக்ளக்இம்முறை ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டவர்களெல்லாம் அவரிடம் இத்தகைய ஒரு ஆட்சியை எதிர்பார்த்து தான் என்பதை ஜெயா உணர்வாரா?

5 comments:

Madhusudhanan D said...

I read the article in Thughlak last night. All security checks were done as per it should be without you being aware of that. That is the highlight. Modi is great.

hayyram said...

Yes madhu, thats modi. it was a nice article, giving a nice experience to read it.

khaleel said...

dear ram,
you may check your facts again.gujarat seems to benefit mostly the ambanis, tatas and adanis. it ranks quite poorly in human development indices and ranks higher in child malnutrition even Uttar pradesh fares better than gujarat in these indices. check the human development index report for 2011.

hayyram said...

hi khaleel,

//even Uttar pradesh fares better than gujarat in these indices//

From where did you get the indices, provide thelink if possible, we can have a look.

தனித்தனியாக ஒரு விஷயத்தை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டுமென்றால் உலகில் எந்த நாடும் யோக்கியமில்லை என்று எளிதாக சொல்லிவிடமுடியும். உலகிலேயே பணக்கார நாடுகள் என கருதப்படும் மேலை நாடுகளில் கூட பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், அதனால் உருவாகும் திருடர்கள் என எல்லா தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் ரீதியான முன்னேற்றம் என்பது பொதுப்படையான ஒரு மொத்தமான ஒரு வளர்ச்சி இலக்கை நோக்கிச் செல்வதாகும். அதில் நீங்கள் குறிப்பிடும் விஷயமும் அடங்கியே இருக்கும். ஆனால் நாம் எதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு அதைப் பற்றியே பேசத்தோன்றும். பூதக்கண்ணாடி கொண்டு பார்க்காமலேயே ஒப்பீட்டின் அடிப்படையிலேயே தெரியும் அருமையான முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறோம். நீங்கள் பூதக்கணாடி வைத்து பார்த்து அதில் இருக்கும் குறையை மட்டும் காண நினைக்கிறீர்கள். ஒரு சமூகம் வளரும் போது சார்புள்ளவைகள் யாவும் படிப்படியாக வளர்ச்சி அடையும். அதுவரை பொறுமை வேண்டும்.

உங்களைப் போன்றவர்களுக்காக குதர்க்கமாக ஒன்று சொல்லலாம், குஜாராத்தில் நல்ல ப்னம் புழங்குகிறது என்று கூறி அங்கே பிச்சையெடுத்தால் நிறைய சம்பாத்தியம் கிடைக்கிறது என, இந்தியாவின் எல்லா பிச்சைக்காரர்களும் குஜராத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று கொள்வோம், அப்போதும் நீங்கள் பார்த்தீகளா, குஜராத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிகம் என்று கூறுவீர்கள். ஆனால் நாங்களோ, பாத்தீர்களா பிச்சைக்காரனுக்கு பிச்சை போடக்கூட மற்ற மாநிலத்தவரிடம் காசில்லை என்போம். இப்படியே இருவரும் பேசிக்கொண்டே போக வேண்டியது தான். நிறைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்றவர்களும் அதை கடை பிடித்தால் நாடு சுபிட்ஷமாகும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

khaleel said...

you havent responded to my question. instead you went round and round and replied something to your own satisfaction.

what to do with all the money, growth etc etc when 70% of the children are anaemic and 45% of the children below 5 are malnutritioned. its not africa.

check the link below.
http://articles.timesofindia.indiatimes.com/2011-10-22/india/30310270_1_poor-states-bjp-ruled-states-social-inclusion
இது பூத கண்ணாடி வைத்து பார்க்க வேண்டிய விஷயம் தான்.