Monday, December 12, 2011

கர்பினிப் பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்துப் போவதேன்?
நம் கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கங்கள் இருக்கும். அவை அனைத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவது காரண காரியம் இருக்கும். அதனை அனுபவத்தாலேயே பலர் பல நேரங்களில் உணர்வார்கள்.


கருவுற்ற பெண்களுக்கு வளைக்காப்பு வைப்பது ஏன் என்று முன்பு பார்த்தோமல்லவா. கருவுற்ற கர்பினிப் பெண்ணை குறிப்பிட்ட காலத்தில் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வதும் அவளது தலைப்பிரசம் தாய் வீட்டிலேயே நடக்குமாறு பார்த்துக் கொள்வதும் நம் சம்பிரதாயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதற்கு மனோவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. அறிவியல் ரீதியாக, உடலியல் ரீதியான காரணத்தை முதலில் பார்ப்போம்.

பெண் கருவுருதல் என்பதே ஒரு உயிருக்குள் உயிர் உண்டாகும் அதிசயம். ஒரு உடலுக்குள் இன்னொரு உடல் பூக்கும் அற்புதம். கருவுற்ற பெண்ணை அவளது உடல் மாற்றங்களை உண்ணிப்பாகவும், பாதுகாப்பாகவும் கவனிக்க வேண்டும். ஓர் உயிர் உண்டாகும் இயற்கயின் சூட்சுமம் என்று அதனைப் புனிதமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால் மனிதர்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்பட்டு வாழும் குணம் கொண்டவன் என்பதால் கணவனும், மனைவியும் நெருங்கியிருக்கும் நேரத்தில் உணர்ச்சியால் உந்தப்பட்டு நிலை மறந்து பெண் கருவுற்ற காலத்தில் உடலுறவு கொண்டுவிட வாய்ப்பிருக்கிறது.

கரு உண்டான ஐந்து மாதத்திற்குப் பிறகு ஆண், பெண் உறவு கூடாது என்பார்கள் பெரியோர்கள். அதற்கு காரணம் உண்டு. நம் சமுதாயத்தில் பண்பாட்டு வழிவந்த உண்மை என்னவென்றால் பெண் கருத்தரித்த பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உடலுறவு கொண்டால் கருவிலுள்ள குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்படும். அதனால் குழந்தை பாதிக்கப்பட்டால் இதன் விளைவாக குழந்தை ஊணமாகப் பிறக்கும்.

மேலும் கர்பப்பைக்கும் பலவீனம் ஏற்படும். ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்பில் இருக்கும் கிருமித் தொற்று கருப்பையில் இருக்கும் குழந்தையை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறந்த குழந்தையின் உடலுக்குள் கருவளர்ந்திருப்பது பற்றியெல்லாம் செய்தி படித்திருப்போம். காரணம் விந்து சக்தி ஜீரனமாகாத அணுக்களைக் கொண்டது. அத்தகைய ஆற்றல் பெற்றது விந்தணுக்கள். அவை ஒவ்வொன்றும் உலகை மாற்றத்துடித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் அல்லவா! அவை தாய் வயிற்றில் தேங்கியிருந்து கருவாகி, அக்கரு நகர்ந்து சென்று கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் கருப்பைக்குள் தங்கி விட்டால், அங்கு அது முளைத்து விடும். இவ்வாறு நடந்து விடுவதை செய்திகளில் பார்த்திருப்போம். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருந்த செய்தி இதோ..குழந்தைக்குள் குழந்தை!!

இதைப் பற்றியக் கல்வி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காகத்தான் முற்காலத்தில் பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வைத்திருந்தார்கள். மனைவிக்கு ஐந்து மாத கர்ப்பம் என்றால் கணவன் தாடி வைத்துக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவன் மீதான ஈர்ப்பு குறைய அது வழிவகுக்கும்.

அதாவது கணவனுக்கு அக்காலம் சன்னியாசம் ஆகும். ஆனால் இப்பொழுது தாடி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. எனவே அந்தப் பழக்கம் போய்விட்டது.

பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். காரணம் கூடவே இருந்துவிட்டால், ஆசையின் உந்துதலால் காமத்தில் ஈடுபட்டு அதனால் பிறக்கும் குழந்தை ஊனமாகி ஒரு உயிரின் எதிர்காலமே கேள்விக்குறியாகாமல் இருக்க கர்பினிப் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உண்டாக்கி இருக்கிறார்கள்.

மேலும் எந்த ஒரு பெண்ணிற்கும் அவளது தாய் தான் முதல் தோழி. பிரசம் என்பது பெண்ணிற்கு மறுபிறப்பு என்பார்கள். ஆக தாயின் அரவனைப்பில் தன் பிரசவத்தை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிம்மதியுடன் கர்பினிப்பெண் இருப்பாள். வயிற்றில் கருவைத் தாங்கிய பெண் மன அமைதியுடனும் பாதுகாப்புணர்வுடனும் இருந்தால், பிறக்கும் குழந்தையின் ஆழ்மனமும் அமைதியும் நிம்மதியும் கொண்டதாக இருக்கும்.

அவ்வாறு ஆழ்மனத்தில் அமைதியைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள், நல்ல சிரித்துப் பேசும் ரசனைகளுடனும், நட்புணர்வுடனும், சாந்தமான குணத்தையும் கொண்ட மனிதராக வளரும் வாய்ப்பு அதிகப்படும். அல்லாமல், கர்பினிப் பெண் போராட்ட உணர்வுடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பாளேயானால், அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் ஆழ்மனத்தில் அந்த உணர்வின் படிமங்கள் ஆழப்பதியும். அவ்வாறு பிறக்கும் குழந்தை பயந்த சுபாவம் கொண்டதாகவும்கோபம், சண்டை, பிடிவாதம், போன்ற குணங்களைக் கொண்ட மனிதராக வளர வாய்ப்புக்கள் உண்டாகும். காரணம், கருவுற்றிருக்கும் பெண்ணின் மனோநிலை பிறக்கப் போகும் குழந்தையின் டி என் ஏ வையே மாற்றும் வல்லமை கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதனாலேயே தான் நம் வீட்டில் கர்பினிப் பெண்கள் மீது யாரேனும் கோபம் கொண்டால் கூட புள்ளத்தாச்சி புள்ளயை அழவைக்காதே, திட்டாதே, மசக்கைக் காரியை ஒன்றும் சொல்லாதே என்று பரிந்து பேசுவார்கள். கர்பினிப் பெண்களுக்கு பிடித்ததையெல்லாம் செய்துகொடுத்து அல்லது வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடனிருக்கச் செய்வார்கள். இவ்வாறு மனோரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் பல சூட்சுமங்களை அறிந்தே நம் முன்னோர்கள் பல சம்பிரதாயங்களையும், வழக்கங்களையும் நடைமுறையில் கையாள்கிறார்கள்.

எனவே கர்பினிப் பெண்ணின் மனதில் அமைதி தவழவும், குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கவும், அந்தப் பெண்ணின் முதல் தோழியான அவள் தாயாரின் அரவனைப்பில் அவள் வீட்டில் குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சம்பிரதாயம் அமைக்கப்பட்டது.

அது இன்னும் நம் சமூகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியே!

ஹிந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!
.

5 comments:

தமிழ்தோட்டம் said...

தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Arun Ambie said...

தகவல்கள் அருமை. அறிவியல் தற்போது கண்டுபிடித்துச் சொல்வதை நம் முன்னோர் கண்டுணர்ந்து நடைமுறைப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மெக்காலே மென்னியைப் பிடித்த அதிர்ச்சியில் இருந்து இப்போதுதான் மீள ஆரம்பித்துள்ளோம். ஓரிரு தலைமுறைகளில் பழைய பெருமைகள் புழக்கத்தில் வரும் என்று நம்புவோம்...

Devarajan M said...

அப்பா ஆகப் போகிற ஒவ்வொரு ஆணும் தெரிஞ்சிக்க வேண்டிய தகவல் நன்றி

Devarajan M said...
This comment has been removed by the author.
Devarajan M said...

அப்பா ஆகப் போகிற ஒவ்வொரு ஆணும் தெரிஞ்சிக்க வேண்டிய தகவல் நன்றி