Sunday, January 8, 2012

விதுர நீதி - சொர்கத்தை அடைய பத்து வழிகள்!



அறிவு, ஞானம், வயது, அனுபவம் முதலியவைகளில் பெரியவர்களானவர்கள், எந்தச் சபையில் இல்லையோ அது சபை ஆகாது.

யார் தர்மத்தைச் சொல்லவில்லையோ, அவர்கள் பெரியோர்களாக மாட்டார்கள்.

எதில் சத்தியம் இல்லையோ அது தர்மமாகாது. அந்தச் சத்தியமே கபடத்துடன்கூடி இருந்தால் அது சத்தியமாகாது.

சத்தியம், அடக்கம், சாஸ்திர ஞானம், தேவதை வழிபாடு, குலத்தை மேமைப் படுத்தும் காரியம், ஒழுக்கம், பலம், செல்வம், சூரத்தனம், சமத்காரமாகப் பேசுதல் என்னும் இந்தப் பத்தும், சொர்கத்தை அடையச் செய்யும் காரணங்கள் ஆகும்.

இரவில் சுகமாக வாழத்தேவையானவற்றைப் பகலில் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் சுகமாக வாழத் தேவையானவைகளை மற்ற எட்டு மாதங்களில், தயார் செய்து கொள்ல வேண்டும்.

அது போல, முதுமைக்காலத்தில் சுகமாக வாழ்வதற்கு வேண்டியவைகளை இளமைக்காலத்திலேயே தயார் செய்து கொள்ள வேண்டும். ஜன்மாந்திரத்தில், சுகமாக வாழத் தேவையான நற்செயல்கள், தர்மம் , முதலியவைகளை உயிரோடு இருக்கும் வரை செய்ய வேண்டும்.

அதர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தால் எந்த தோஷமானது தீர்க்கப்படுகிறதோ, அந்த் தோஷம் தீர்க்கப் படாததாகவே ஆகிறது. அதைத்தவிர இன்னொரு தோஷமும் சேருகிறது.

தர்மமே மிகச்சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. பொறுமையே மிகச்சிறந்த அமைதியைக் கொடுக்கும். ஞானமே மிகச்சிறந்த திருப்தியை அளிக்கும். அஹிம்ஸை ஒன்றே எல்லா ஸுகங்களையும் கொடுக்கக் கூடியது.

- மகான் விதுரர்
.

No comments: