Wednesday, April 18, 2012

மதமாற்று நிறுவனங்கள்!


என் அலுவலக ஹெச் ஆர் மேனேஜருக்கு கலர்புல்லான சில போட்டோக்களுடன் நல்ல அச்சுக்காதிதத்தில் ஏழை சிறுவர் சிறுமியர், பசித்திருக்கும் மூதாட்டி போன்றோரை காண்பித்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எதேச்சையாக அவரைக் கடந்து போகையில் கவனித்தேன். அது வேர்ல்ட் விஷன் என்கிற தொண்டு நிறுவனத்தின் நோட்டீஸ். வேறென்ன நன்கொடை கொடுங்கள் என்று கேட்டுத்தான்.

அந்த நான் அவர் அருகே நின்று அது என்ன என்று சில வினாடிகள் பார்த்தேன். அந்த மேனேஜர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு சிறு புன்னகையுடன் "இல்லை, வேர்ல்ட் விஷன்' னு போட்டிருகே, குழந்தைகள் படங்களோட அதான் பார்த்தேன்" என்றேன்.

"ஆங், டொனேஷன் ரெக்வெஸ்ட். இப்டி டெய்லி நிறைய வரும்"!

"நீங்க குடுப்பீங்களா?"

"கொஞ்சம் ரிலையபிளா தோனிச்சின்னா ஹெச் ஆர் ஜிம் கிட்ட வெப்போம், அவர் சொன்னா ஐநூறோ ஆயிரமோ கொடுப்போம்" என்றார்.

"இந்த வேர்ல்ட் விஷன் னுக்கு?"

"முன்னாடி ரெண்டு வாட்டி குடுத்தோம், அப்புறம் என்ன தோனிச்சோ நடுவில நிறுத்தினாங்கஇப்போ மறுபடி வந்திருக்கு, என்ன டீட்டெய்லா கேக்றீங்க"

"ஒன்னுமில்ல சும்மாதான், இந்த வேர்ல்ட் விஷன் ஏழைகளுக்கு டொனேஷன் னு நம்ம கிட்டயே காசு வாங்கிட்டு நம்மாளுங்களையே மத மாற்றம் பன்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் கேட்டேன்!"

ஹெச் ஆர் மேனேஜர் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. என்னை உற்றுப் பார்த்தார்.

"ஆமாம், எனக்கும் தெரியும். நான் பெரும்பாலும் இந்த நோட்டீஸை கொண்டு குடுக்க மாட்டேன்! ஆனா சில சமயம் அவங்களே நோட்டிஸைப் பாத்தா டொனேஷன் அனுப்பி வெப்பாங்க. தெரிஞ்சி செய்றாங்களா, தெரியாம செய்றாங்களான்னு தெரியாது."

'என்ன சார், இது கூடவா புரியலை, நம்ம வேலை பாக்றது எம் என் ஸி கம்பெனி. அதுக்கு ஓனர் இத்தாலி, அமெரிக்கான்னு அங்கெதான் இருக்காங்க. அவங்களுக்குள்ள காண்ட்டாக்ட் இருக்கலாம். அவன் நாட்டு அமைப்புக்கு அவன் விசுவாசமா இருக்க மாட்டானா?" என்றேன்.

கொஞ்சம் அமைதியாக இருந்தார். "ம்..நம்ம காசு குடுக்காட்டாலும் உள்நாட்டில் இருந்துக்கிட்டே அவங்களுக்கு அவங்க ஆளுங்களே குடுத்துப்பாங்க போலருக்கு. நம்ம என்னவோ தோக்கற சைட்ல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங் வருது" என்றார். "சரி, இந்த வேர்ல்ட் விஷன் டீட்டெயில் எல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்."

"என்ன சார், இவங்க மாதிரி ஆளுங்க கருனை காட்டறதே மத வியாபாரத்துக்குத் தானே, அது போக ஏற்கனவே நிறைய படிச்சிருக்கேன். வாங்கும் டொனேஷனையெல்லாம் வெச்சி,  சர்சு கட்டுவாங்க. இருக்கிற டிவி மற்றும் இதர மீடியால பூராம் புகுந்து மதப்பிரச்சாரம் பன்றாங்க. தெரிஞ்சது தானே! அது மட்டுமில்லை, இப்போ சமீபத்துல அரவிந்தன் நீலகண்டன் எழுதி ரிலீசான "உடையும் இந்தியா" ங்கற புத்தகத்துல கூட ரொம்ப டீட்டெயிலா நிறைய எடுத்துச் சொல்லிருக்காங்க.

"அப்டியா?" என்றார்.

"ஆமாம், படிச்சுப் பாத்தீங்கன்னா உங்களுக்கே மலைப்பா இருக்கும், உதாரணத்துக்கு சில வரிகளை சுருக்கமா சொல்றேன் பாருங்க -

அதிகார ஆற்றல் கொண்ட ஒரு கிறிஸ்தவ வலைப்பின்னல் வட அமெரிக்கா முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதற்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவக் குழுக்களுடன் மிக நெருக்கமான
உறவு இருக்கிறது. இந்த அமெரிக்க அமைப்புக்கள் இந்தியக் குழுக்களுக்கு அரசியல் கோட்பாடுகளையும் நிதியுதவிகளையும் வழங்குகின்றன.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ பன்னாட்டு நிறுவனங்களில் மத மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அமைப்புகளில் ஒன்று வேர்ல்ட் விஷன். அதன் மோசடித்தன்மையை ஒரு மேற்கத்திய அறிஞரே விளக்குகிறார்.

"பல சமயங்களில் வேர்ல்ட் விஷன், அமெரிக்க அரசுக்கு உளவு சேகரிக்கும் கரமாகவே இயங்கியுள்ளது. 1970 களில் வேர்ல்ட் விஷன் சி ஐ ஏ க்காக வியட்நாமிலிருந்து களத்தகவல்களைத் திரட்டி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கத் துருப்புக்கள் இப்பகுதியை விட்டுப் போன பிறகு வேர்ல்ட் விஷன் அகதிகள் முகாம்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது."

வேர்ல்ட் விஷன் அமைப்பின் இந்திய இணையதளம் அதனை மனித நேயத்தன்மை கொண்ட ஓர் அமைப்பாகக் காட்டுகிறது. வேர்ல்ட் விஷனும் அதைப் போன்ற மிஷனரி அமைப்புகளும் வெளிப்புறச் சக்திகளாகச் செயல்படுகின்றனர். அவை அந்தந்த பிராந்திய / வட்டாரச் சமுதாயங்களின் சமூக அமைப்பையோ அல்லது மதப் பண்பாட்டையோ மதித்து அவற்றுக்காக உழைப்பதில்லை.

வேர்ல்ட் விஷன் உள்ளூர் சர்ச்சுகளை ஆதரிக்கிறாது. பாஸ்டர்களுக்குத் தலைமைப் பண்புப்
பயிற்சிகளை அளிக்கின்றது.

- அரவிந்தன் நீலகண்டன், உடையும் இந்தியா

இப்படி பல தகவல்கள்."

"அடேங்கப்பா" என்று ஆச்சரியப்பட்டார்.

"சார், நான் ரெண்டொரு வரிகளை ஒரு சாம்பிளுக்குத் தான் எடுத்துச் சொன்னேன். அந்த புத்தகத்தை வாங்கிப் படிச்சீங்கன்னா உங்களைச் சுத்தி இன்னொரு உலகம் தனியா இயங்கிக்கிட்டிருக்கறமாதிரி ஃபீல் பண்ணுவீங்க" என்றேன்.

கண்களை அகல விரித்துப் பெருமூச்சு விட்டார். அதுவரை கையில் வைத்திருந்த வேர்ல்ட் விஷன் நோட்டீஸை சுக்கு நூறாக கிழித்து காலடியில் இருந்த குப்பைக் கூடையில் போட்டார்.

இன்று ஒரு நல்லகாரியம் என நினைத்து என் இருக்கைக்குப் போனேன்!


* * * * * * * * * 
ஒரிசாவில் மிஷனரிகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்டுகளின் அட்டகாசம்!           80 வயதான சுவாமி லக்ஷ்மனானந்தாவின் கொடூரக் கொலை! 

மீடியாக்கள் இவற்றை மறைத்து விட்டு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றே விளம்பரம் செய்யும்!

மிஷநரிகள்! ஜாக்கிரதை!

3 comments:

subbaraman gopalakrishnan said...

`ஆக சமூக சங்கமத்தில்* எது சத்தியமோ அதுவே கடைசியாக நிஜ பகுத்தறிவாக மாறுகிறது. அதுவே நிலைக்கிறது. அத்தகைய நிதர்சன உண்மையை சத்தியத்தை ஆராய்ந்து உண்மையின் முடிவு எதுவோ அதுவே பகுத்தறிவாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும்.'*சமூக சங்கமத்தில் இரு சத்யம் தென்படுகின்றது. பிரதிபலிப்பு சத்யம்: நம் கண்ணே நம்மை ஏமாற்றும். உதாரணம்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல, மலை அருகில் இருப்பது போல் தோன்றும். ஆனால் உண்மையான தூரம், அதிகமாக இருக்கும். மாலை நேரங்களில், பழுதை பாம்பு போல் தோன்றும். நீதிமன்ற சத்யம்:கிராம பஞ்சாயத் முதல் சுப்ரீம் கோர்ட் வரை, நீதிபதிக்கு முன்னர் அடுக்கப்படும் ஆவணங்களே நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் (எத்தனை முறை அவரவர்கள் மத புனித நூல்களுக்கு முன்னர் திரும்ப திரும்ப சத்யம் செய்து வாக்குமூலம் கொடுத்தாலும்) சத்யம் மாறுபடும். இத்தகைய பகுத்தறிவையா ஏற்றுகொள்ளமுடியும்?

hayyram said...

///இரு சத்யம் தென்படுகின்றது. பிரதிபலிப்பு சத்யம்: நம் கண்ணே நம்மை ஏமாற்றும்.///

அதைத்தான் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்" என்பார்கள். அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நம் கண்ணை மறைக்கும் மாயையே சூது!

////உதாரணம்: மின்னுவதெல்லாம் பொன்னல்ல, மலை அருகில் இருப்பது போல் தோன்றும். ஆனால் உண்மையான தூரம், அதிகமாக இருக்கும். மாலை நேரங்களில், பழுதை பாம்பு போல் தோன்றும்.///

இது போன்ற நேரங்களில் நாம் எங்கே இருக்கிறோம், இங்கே பாம்பு வருவதற்கு சாத்தியம் உண்டா என்கிற இடம் பொருள் ஆராய்ச்சியோடு சிந்தித்து இது பாம்பு இல்லை பழுது தா ன் என்று நாம் தைரியமாக தீர்மானித்து நகர்வதற்குப் பெயர் தான் பகுத்தறிவு! அதில் குழம்ப வேண்டாம்!

premprakash said...

dear brother, atleast christians madha matram endra peyaril sapadu podaram, padikka vaikaran, vaidiyam panram. Avangalukku kodani kodi puniyam. anal, kodi kodiyai panam vaithrikkum sankara madam, thripathi trust ponra pala hindu amaippu kovanam koda avizhpathilaiya. yen? dhaanam yenbadu vedathil padithal mattum pothathu. seyalil katta vendum.