Monday, August 13, 2012

செக்யூலரிச பீடைகள்!



இந்தியாவைப் பிடித்த பீடை இந்த செக்யூலரிசம். திரு எம்.கே.காந்தி துவங்கி வைத்த நாடகம் இது. அரசியல் வாதிகளும் மீடியாக்களும் மாறி மாறி நீரூற்றி வளர்க்கும் விஷச் செடி இந்த செக்யூலரிசம்.

இந்த செக்யூலரிசமும் அதனால் உண்டான செக்யூலரிச மனப்பான்மை என்பதும் அடிக்குருத்தில் வெண்ணீர் ஊற்றி ஆளுயரச் செடியை காயச்செய்யும் கொடூரச் செயல். வேருக்குள் அமிலம் ஊற்றி மரத்தை மெதுவாகப் பட்டுப் போகச் செய்யும் மோசமானக் கொலைச் செயல்.

இந்த செக்யூலரிச மனம் படைத்தவர்கள் எங்கெல்லாம் வியாபித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதும் அவர்களை அடையாளம் கண்டு களை பிடுங்க வேண்டியதும் ஆகப் பெரிய வேலையெனத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. செய்து தான் ஆக வேண்டும். அது பாரதத்தின் தலையெழுத்து.

சரி எதற்கு இப்போது இந்த வெறுப்பு என்கிறீர்களா?

இரண்டு பேர் தினசரி அடிக்கும் அரட்டைக் கச்சேரியில் அவ்வப்போது எழும் இந்த செக்யூலரிச மனப்பாங்கு ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைத்ததால் தான் இந்த அங்கலாய்ப்பு.

அரட்டை அடிக்க எல்லோருக்குமே பிடிக்கும்.அதுவும் பிறர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தால் கண் கொட்டாமல் வாய் பார்த்துக் கொண்டே இருக்க நமக்கு எப்போதுமே பிடிக்கும் தான். ஆனால் அவர்கள் ஹிந்து விரோத தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு செக்யூலரிச மனப்பாங்குடன் தினசரி உளரிக் கொட்டுவது கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வேறாருமல்ல. தினசரி காலையில் எட்டு மணி முதல் ஒரு பத்து நிமிஷம் பேசிவிட்டுச் செல்லும் பட்டிமன்ற ராஜாவும், பாரதி பாஸ்கரும் தான். பேசுவது சன் டிவியில்.

பொதுவாக சமூக விஷயங்கள் அல்லது ஏதாவது புதிய செய்தியைக் கொண்டு தான் பேசுவார்கள். சாதாரணமாக நல்ல உரையாடல்களாகவே இருதாலும் சில நேரங்களில் உறுத்தும்.
காரணம் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் புரியவரும்.

1. இவர்கள் தங்களது பேச்சில் ஹிந்து கடவுளர் அல்லது புராணக் கதைகளிலிருந்து உதாரணங்கள் அல்லது மேற்கோள் காட்டுவதை கவனமாகத் தவிர்ப்பார்கள்.

2. எந்த விஷயம் பற்றிப் பேசினாலும் பெரும்பாலும் பைபிளில் இப்படி ஒரு வசனம் இருக்கிறது என்பார்கள் அல்லது குரானில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள்.

3. ஹிந்து நம்பிக்கைகளைப் பற்றிய பேச்சு வந்தால் அது மக்களின் அறியாமை சார்ந்தது என்றும் அதீத நம்பிக்கை என்றும் பேசுவதில் உற்சாகம் கொள்வார்கள்.

4. கதைகளுக்கு உதாரணம் வேண்டுமென்றாலும் கூட அரபு நாட்டுக் கதைகள் பற்றிப் பேசுவதில் ஒரு அறிவுஜீவித்தனம் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள்.

மேற் சொன்ன இவைகள் எல்லாம் நான் சில மாதங்களாகப் பார்க்க நேர்கையில் கவனித்தவை. அதையே வருடக்கணக்காக யாரேனும் பார்த்திருந்தால் வேறு ஏதானும் செய்து சொல்லலாம்.

சரி இப்படி இவர்கள் பேசுவதால் என்ன ஆகி விட்டது என்று நினைக்கலாம். இவ்வாறு பேசுவது தவறில்லை. ஆனால் சொந்த நாட்டின் புராணங்களையும் பாரம்பரியக் கதைகளையும் இவர்கள் வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து பைபிள் வசனங்களையும், குரான் மேற்கொள்களையும் வலியத் திணித்து அவ்வாறு பேசுவது ஒரு வித அறிவுஜீவித்தனம் என்றும் காட்ட நினைக்கிறார்கள். இது ஒரு தவறான போக்கு.

ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச்சு வருகையில் பாரதி பாஸ்கர் உடனே "பைபிளில் கூட, 'குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்காதீர்கள். நான் அவர்களுக்கு பிரியமானவனாக இருக்கிறேன்', என்று ஏசு சொல்வதாக வசனம் இருக்கிறது" என்று சிலாகித்துக் கொண்டார்.

ஆனால் அவருக்கு இறைவனையே குழந்தையாகக் கொஞ்சும் நம் புராணக் கதைகளைப் பற்றி சொல்லத் தோன்றவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணரை குழந்தையாக்கி வீடு தோறும் அவரவர் வீட்டுக் குழந்தைகளையெல்லாம் க்ருஷ்ணராகவே பாவித்து மகிழும் நம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசத் தோன்றவில்லை. அல்லது கவனமாகத் தவிர்க்கிறார்.

இது செக்யூலரிச முகமூடியா? அல்லது ஹிந்து சாமிகளை பற்றி பேசிவிட்டால் மூட நம்பிக்கை என்ற நினைப்பா? அல்லது பைபிள் குரான் பற்றிய மேற்கோள்களுடன் பேசுவது தான் அறிவு ஜீவித்தனம் என்று காட்ட நினைக்கிறார்களா? அல்லது இவர்களை ஒளிபரப்பும் டிவி சேனல் அவ்வாறு கவனமாகப் பேசச் சொல்கிறதா?

இன்னொன்று, ஒரு நிகழ்ச்சியில் வழிவழியாக மக்களிடம் புழங்கும் கதைகள் பற்றி பேசினார்கள். சரி, நம்மூரில் தான் அம்புலி மாமா, தெனாலிராமன், மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகளெல்லாம் நிறைய இருக்கிறதே, அது பற்றி பேசுவார்கள் என்று பார்த்தால் உடனே அரபு நாட்டு 'ஆயிரத்தி ஓரு இரவுகள்' கதைக்குள்ளே போய் நம்மை அரபுக்கு அழைத்துச் சென்று விட்டனர் இருவரும். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பின்னர் வேறு கதைகளைப் பற்றிப் பேசியும் சிலாகித்து விட்டுப் பின் நேரம் முடியும் தருவாயில் நம்மூரில் கூட தெனாலிராமன், மரியாதைராமன் போன்ற கதைகளெல்லாம் இருக்கிறதே என்று ஒரு வரியில் பேசி முடித்து விட்டார்கள்.

இதில் எனக்கு என்ன வருத்தமென்றால் மரியாதை ராமன் கதைகளும் தெனாலி ராமன் கதைகளுமே இக்காலத்தில் நம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. வீடியோ கேம் கதாபாத்திரத்தை ஞாபகமாகக் கூறும் குழந்தைகளுக்கு தெனாலிராமன் தெரிவதில்லை. அது போன்ற கதைகளைப் பற்றி பேசி நம் மக்களுக்கு அதன் மீது ஆர்வம் உண்டாகும் படிச் செய்யாமல் அரபுநாட்டுக் கதைகளுக்குச் சென்று விட்டார்களே என்று தோன்றியது.

இத்தனைக்கும் ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும் என்கிற அறிவைச் சொல்லித் தருவது மரியாதை ராமன் கதை. இக்கட்டான சூழலில் எப்படி சமையோசிதமாகச் சமாளிப்பது எனச் சொல்லித் தருவது தெனாலி ராமன் கதை. இவைகளைப் பற்றிப் பேச பாரதி பாஸ்கருக்கும் ராஜாவுக்கும் நேரம் கிடைக்கவில்லை.

அது மட்டுமா, ஒரு நாள் "நாய்ஸ் பொல்யூஷன்" பற்றிப் பேசினார்கள். நகரங்களில் எப்படியெல்லலம் சப்தம் அதிகரித்திருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். நான் நினைத்தது போலவே மறக்காமல் மாரியம்மன் கோவில் திருவிழா பற்றிப் பேச்சு வந்தது. அப்போது பாரதி பாஸ்கர் "அம்மன் கோவில் திருவிழா வந்தா போதும், தெருவில் இந்த மைக் செட் வைத்து கத்த விடுவார்களே, அப்பப்பா" என்று கண்ணத்தைப் பிடித்துக் கொண்டு கரித்துக் கொட்டினார்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், மாரியம்மன் கோவில் திருவிழாவோ அல்லது விநாயகர் சதுர்த்தியோ எதுவும் வருடம் ஒரு முறை சில நாட்கள் சப்தமிட்டு ஓய்ந்து போகும். ஆனால் நாள் தவறாமல் தினசரி ஐந்து வேளை தங்கள் கட்டிடத்தைத் தாண்டி இரண்டு மூன்று தெருவிற்கு கேட்குமளவுக்கு மைக் செட் வைத்து "அல்லா ஹு அக்பர் அல்லாஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்" என்று தொடர்ந்து கத்துகிறார்களே இது "நாய்ஸ் பொல்யூஷனில் அடங்காதா? அது பற்றி பேசவேண்டும் என்று பாரதி பாஸ்கருக்கோ ராஜாவுக்கோ ஏன் தோன்றவில்லை? 365 நாளில் பத்து நாள் அம்மன் கோவிலில் பாட்டு வைப்பது இவர்களுக்கு "நாய்ஸ் பொல்யூஷனாம்" , 365 நாட்களும் ஐந்து வேளையும் கத்தவிடும் மசூதிகளின் ஒலிபெருக்கிச் சத்தம் இவர்களின் காதுகளுக்கு தேனாம்!

என்ன ஒரு செக்யூலரிச மாயை, ஹிந்து விரோதம் மனப்பான்மை!

அதோடு விடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இன்றைய நிகழ்ச்சியில் கோவில்களில் மக்கள் அறியாமையோடு சாமி கும்பிடுகிறார்கள் என்று கோவில்களில் சாமி கும்பிடும் பழக்கத்தை ஒரு பத்து நிமிடம் நையாண்டி செய்தார்களே பார்க்கலாம்.

"மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பல பரிகாரக் கோவில்களுக்குப் போய் அந்தக் கோவிலின் மூலக் கடவுளை விட்டு விட்டு நவக்கிரகங்களையும் பரிகாரக் கடவுளையும் கும்பிடுகிறார்கள். மக்களின் அறியாமை, பாவம்" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் பாரதி பாஸ்கர்.

ஏன், இவர்களுக்கு அறியாமை கொண்ட கிறிஸ்தவ மக்கள் பற்றி அங்கலாய்க்கத் தெரியவில்லை. ஜபம் செய்தால் கண் வந்துவிட்டது என்றும், கர்த்தரைக் கூப்பிட்டவுடன் காது கேட்டு விட்டது என்றும் கூவிக்கூவி ஜப வியாபாரம் செய்பவர்களிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவிகள் பற்றியும் அப்படி அறியாமை கொண்டவர்களை ஏமாற்றுபவர்கள் பற்றியும் ஏன் பேசத்தெரியவில்லை?

எல்லாம் செக்யூலரிச மாயை. அவர்கள் அமர்ந்திருக்கும் டிவி சேனலில் லீலை.

ஹிந்து புராணங்களை கவனமாக ஒதுக்கி, பைபிள் குரானைப் பற்றி பேசுவதை அறிவு ஜீவித்தனம் என்ற தோற்றத்தை முன்னிருத்தி, ஹிந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடிப் பேசுவதை ஒரு சிந்தனை என்றும் காட்டிக் கொள்கிறார்கள்.

இவர்கள்...

செக்யூலரிசப் பீடைகள்.

12 comments:

Unknown said...

நன்றாக சொன்னீர்கள் , பணம் சம்பாதிக்க தனது மதத்தையே தரக்குறைவாக பேசும் மனிதர்களுக்கு சவுக்கடி .

திண்டுக்கல் தனபாலன் said...

அதிகம் பார்ப்பதில்லை... (முதலில் கரண்ட் இருந்தால் தானே)

இவ்வளவு நுட்பமாக கவனித்து அலசியதற்கு பாராட்டுக்கள்...

நன்றி... வாழ்த்துக்கள்...

Navarasan said...

நல்ல முயர்ச்சி,

மற்ற சமயத்தை பற்றி எழுதும் போது வார்த்தைகளில் கூடுதல் கவனமும் கட்டுப்பாடும் செலுத்தி இருந்தால் இன்னமும் நன்றாக இறுந்திருக்குமே!

Anonymous said...

இந்த செக்கூலர் பித்தலாட்டக்காரர்கள் இந்து மதத்திலிருந்து மேற்கோள் காட்டாமல் இருப்பதே நமக்கு நலம். அப்படி மேற்கோள் காட்டினாலும், இந்து மதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது, இது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்றெல்லாம் பினாத்துவார்கள், பீடைகள்.

Anonymous said...

அந்த நாய்ஸ் பொலூசனில் புதிதாக சில 'நாய்ஸ்' வந்து விட்டன. மணிக்கொரு தரம் என்னத்தையாவது உளறி விட்டு 'ஏசாயா....' என்று அதிகாரத்தின் பேரைச் சொல்லும் கிறித்துவ மதமோசடிக் கும்பல்கள் ஒரு நாளுக்கு 24 தடவை வெறுப்பேற்றுகிறார்கள்.

S. Arul Selva Perarasan said...

நல்ல பதிவு. இதை கம்யூனிசத் தோழர்கள் பார்க்க வேண்டுமே! கம்யூனிசமே வெல்லும் என்று வாதிடுவதற்காக தம் நாட்டையே எவ்வளவு தரக்குறைவாக வேண்டுமானாலும் சித்தரிக்கத் தயாராயிருப்பார்கள்.

இப்போதெல்லாம் சிறிது கம்யூனிசத்தை தெரிந்து கொண்டு நான் அறிவுஜீவி என்னை அறிவுஜீவி என்று ஏற்றுக் கொள் என்று பிச்சை (மிரட்டல் விடுக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்)எடுக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

அவர்களுக்கான தனி பதிவு ஒன்றை நீங்கள் எழுதினால் நன்று!

gujjan said...

"வாங்க பேசலாம்" அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என உங்கள் வலைப்பதிவைப் பார்த்த பின் தான் தெரியும். பட்டிமன்ற ராஜா பாரதி பாஸ்கர் பெயர்களும் நீங்கள் சொல்லி தான் தெரியும்.

எது எப்படியோ. இந்த செக்குலரிச பீடைகளின் எண்ண ஓட்டங்களை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்

RAJA said...

அருமை ராம்.
இந்துவிரோத சன்டிவி , விஜய் டிவி-யை நான் பார்ப்பதே இல்லை. இந்த சண்டாளர்கள் டிவியை இந்துஉணர்வுடைய அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

hayyram said...

கருத்து தெரிவித்த அனனவருக்கும் நன்றிகள் பல. அன்பர் கிருமி கூறியதைப் போல இப்போது ஞாயிற்றுக் கிழமையானால் அல்லேலூயா கோஷ்டிகளும் சப்தம் உண்டாக்கக் கிளம்பிவிட்டன. அவை பற்றி யாரும் பேசுவதில்லை. தொடர்ந்து கமெண்டுகளில் வாழ்த்திவரும் திண்டுக்கல் தனபாலனுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்!

premprakash said...

All your points are accepted. But regarding noise pollution, Hindu is the worst community in the world. Don't compare few hundred mosques/church with the crores of temples. Also hindus make noise in the name of god atleast 4 months a year. My curse, hindus making noise pollution in temple definetly will reach their HELL. please donot give trouble others is the main meaning of DHARMA.

But i am your fan, and even i love you and your writings. Gnaniyin moolai ungaledam ullathu. my wishes and blessing for your mission.

shivam said...

அருமையான விமர்ச்ணனம்.ஆனால் இவர்களின் முதிரா மதசார்ப்பின்மையை MK காந்தியுடன் ஒப்பிடுவது சரியாக தோன்றவில்லை.

hayyram said...

ப்ரேம் ப்ரகாஷ், என்ன இப்படி சபிக்கிறீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டீர்களோ? ஹிந்து கோவில்கள் எல்லாமே சப்தமிடும் கோவிகள் இல்லை. பெரும்பாலும் தெருவோர மாரியம்மன், பிள்ளையார் கோவில்கள் அந்தந்த விஷேஷ காலங்களில் அதுவும் அதனை நடத்துபவரைப் பொறுத்து தான் மைக்செட் கட்டுவதும் சப்தம் கூடக் குறைய வைப்பதும். அருகில் குடியிருப்போருக்கு பெருந்தொல்லையானால் அதுவும் அராஜகம் தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அவற்றை காவல் துறையினர் உதவியுடன் தடுக்கவோ, அல்லது இத்தனை டெசிபலுக்கு மேல் சப்தம் அதிகமாக இருக்கிறது என்று கூறி கோர்ட் ஆணைகளைக் காட்டி கட்டுப்படுத்தவோ யாராலும் முடியும். ஆனால் உங்கள் பக்கத்து வீட்டில் மசூதி இருந்தால் தினசரி சில தெருக்களுக்கு கேட்கும் அளவு மைக் செட்டில் கூச்சலிட்டால், அதுவும் குளிர்கால அதிகாலை வேளையில் அயர்ந்து தூங்கும் போது தினசரி உங்களை எழுப்பினால்? அவர்களிடம் சட்டங்கள் செல்லாது, போலீஸ் உதவிகளும் கிடைக்காது! உங்களால் 'சீசனபிளாக' இல்லாத தினசரி தொல்லை பொறுக்கவும் முடியாமல் போகும். இவ்வாறான தொடர் சப்தங்களால் மனோநிலை பாதிக்கப்பட்டு சொந்த வீட்டை விற்று விட்டு ஓடியவர்களும் உண்டு. ஹிந்து கோவில்கள் அவ்வளவு கொடுமை இல்லை என்பது அடியேன் கருத்து. கொஞ்சம் யோசித்து சாபம் குடுங்க சாமி!