பதவிக்காகவும் கூட்டனிக்காகவும் கொஞ்சிக்
குலாவிக்கொண்டிருந்தவர்கள் இப்போது மாறி மாறி குற்றம் குறை சொல்லிக் கொள்கிறார்கள். முதுகு ஸ்டாண்டில்
கத்தியை ஒளித்து வைத்துக்கொண்டு, முகமூடி போட்டு கொண்டு பழகினாலும் சுயரூபம் வெளிப்படாமல்
போகுமா என்ன?
எப்டி தான் சிரிக்க முடியுதோ!!?
வாடகைக் கட்டிடத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற பெயரில் கடை நடத்திக்கொண்டு, பெயரை மாற்ற முடியாது என்று 'தில்'லாக நின்றவரை, அந்தக் கட்டிடத்திற்கு சொந்தக்காரரை மிரட்டி கடையை காலி பண்ண வைத்து
விட்டார்களாம். சொந்தக் கடை வாங்கியாவது அதே பெயரில் கடை நடத்துவேன் என்று சபதம் ஏந்திச் சென்றிருக்கிறாராம் ஹோட்டல்காரர். எனக்குத் தெரிந்து ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூத்தாடுபவர்களால்
தான் ஜாதி பிடிவாதமாக நிலை நிறுத்தப்படுகிறது என்று நினனக்கிறேன்.
சில விஷயங்களை பேசாமல் விட்டாலே காலச்சக்கரத்தில்
காணாமல் போகும். பிராமணர்களில் பல பிரிவுகள் உண்டு. 'சோழியர்' என்கிற பிரிவு அநேகமாக இப்போது சத்தமில்லாமல் காணாமல் போய்விட்டது. "சோழியன் குடுமி சும்மா ஆடுமா?" என்கிற பழமொழியே அந்தப் பிரிவினரை அதிலிருந்து
விலகச் செய்துவிட்டதோ என்னவோ? அதைப்பற்றி
யாரும் பேசுவதும் இல்லை. அதனால் கானாமல் போன இனப்பட்டியலில் அப்பிரிவைக்
கூடச் சேர்த்துவிடலாம். ஜாதிகளும் இப்படி காலத்தால் கரைந்து போகக்கூடும். ஒரு சிலர் பேசாமல் இருந்தால்...! முடியுமா?
தினமலரில் ஒரு செய்தி படித்த ஞாபகம்! கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள் என்ற தலைப்பில். இதற்கு வன்னியர்கள் தரப்பிலிருந்து தினமலருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
**. தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்கு பின், கவுண்டர்களை, "நாட்டுக் கவுண்டர்' எனவும், வன்னியர்களை, "வன்னியக் கவுண்டர்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கால மாற்றத்தின் காரணமாக, பெருந்தாளி கவுண்டர், சிறுதாளி கவுண்டர் என, கிராமங்களில் நடைமுறைக்கு ஏற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும், "நாட்டுக் கவுண்டர்' என அழைக்கப்படுகின்றனர்.**
இப்படி
பல்வேறு குழப்பங்களுடன் உலாவரும் ஜாதியினை மக்களே ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றி இருக்கும்
சமூகச் சூழலைப் பொறுத்து பழைய ஜாதிகளை மாற்றி புதிய ஜாதிகளை எடுத்துக் கொண்டு ஒன்றோடொன்றாக
கலந்து காணாமல் போவார்கள். ஆனால் இந்த கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றங்களை கண்டுகொள்ளாமல்
விட்டு விட்டாலே போதும். பல ஜாதிகள் காலப்போக்கில் கானாமல் போய்விடும். இது போன்ற நிகழ்வுகள் பௌதிக விதிப்படி ஒத்துப்போகக்கூடியவை. அதாவது (Energy) சக்தியை யாரும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஆனால் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும். அதே தியரி தான் ஜாதிகளுக்கும். ஜாதிகளை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஒன்று இன்னொன்றாக மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் அதனதன் சக்திக்குத் தகுந்தாற்போல காலச்சூழலுக்குத் தகுந்தாற்பொலவும் இடம் மாறும் அவ்வளவே!
இனி ஒரு அதிசயத்தைப் பற்றி பார்ப்போம்.
அனுமார் கடல் கடந்து லங்கைக்குச் செல்லும் போது தன் உயரத்தை பெரிதாக ஆக்கிக் கொண்டார்
என்று படித்திருப்போம். அதைப் பற்றி ஏதோ அதீதமான கற்பனை அல்லது வெறும் இதிகாசக் கதை என்றும் சாத்தியமில்லாதது என்றும் நாம் நினைக்கலாம். டேனியல்
டக்ளஸ் ஹியூம் என்பவரைப் பற்றி மதன் தனது 'மனிதனும்
மர்மங்களும்' என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். அதில்...
"ஹ்யூம் ஒரு சுவர் ஓரமகப் போய் நின்று கொண்டு தன் உயரத்தை அளக்கச் சொன்னார். ஆராய்ச்சியாளர்கள்
ஸ்கேல் கொண்டுவந்து அவரை மாறி மாரி அளந்தார்கள். அவர் உயரம் கரெக்டாக
ஐந்தடி பத்து அங்குலம். பிறகு அத்தனை பேர் முன்னிலையிலும் மூச்சை இழுத்துக் கண்களை
மூடிக்கொண்டார் ஹ்யூம். ஆச்சர்யம்..மெல்ல மெல்ல அவரது உயரம் அதிகமானது! மீண்டும் ஓடிச்சென்று அவர் உயரத்தை அளந்தார்கள். இப்போது ஹ்யூம் ஆறடி ஆறு அங்குலம்
இருந்தார். அவர் பாதங்கள் நன்கு தரையில் பதிந்திருந்தன. இது எப்படி சாத்தியம்? விஞ்ஞானிகள் வாய்பிளந்து
நின்றார்கள்." என்று எழுதுகிறார். விஞ்ஞானத்திற்கு விளங்காத மெய்ஞானம் எப்போதும்
உண்டு. அதனை அறிய முற்படுவதே பகுத்தறிவு.
கொஞ்சம் கொடூரத்தைப் பார்க்கலாமா?
சோவியத் ரஷ்யா! "1932-33 ல் உக்ரைனில் பஞ்சம் உச்சத்தை அடைந்தது.
குழந்தைகளை சிலர் வேட்டையாடி உண்ண ஆரம்பித்தனர். பெற்றோர்கள் அச்சத்துடன் குழந்தைகளை வீடுகளில் அறைகளில் பூட்டி வைத்தனர். ஆங்காங்கே குழந்தைகளின்
உடல் மீதங்கள் கிடைக்கலாயின. மனப்பிறழ்வுகளும் இதனுடன் இணைந்து ஏற்பட்டன. உதாரணமாக
ஒரு குழந்தையைக் கொன்று உண்டவன் மக்களால் பிடிக்கப்பட்ட போது அவனது
வீட்டில் அவன் உண்ட பதினொரு குழந்தைகளின் தலைகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததைக்
கண்டார்கள். சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள்
குழந்தைகளைக் கொன்று உண்டார்கள்.
ஒரு தாய் தன் இளைய மகனைக் கொன்று தன்
ஆறு வயது மகளுக்குக் கொடுத்தாள். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தை, கடைசியாகத் தன் தந்தையைப் பார்த்த போது, அவர் அவளைக் கொன்று உண்ணக் கத்தியைத் தீட்டிக்
கொண்டிருந்தார்.....!"
- அரவிந்தன்
நீலகண்டன் எழுதிய பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிசம் புத்தகத்திலிருந்து! வாழ்க்கையின் நிதர்சனங்கள் பல நேரங்களில் கற்பனைக் கெட்டாதவையாகத்தான் இருக்கும். மிக மோசமானதும் மிக நல்லதும் அதில் அடக்கம்!
"மக்கள் தலைவராக
தேவர் இருப்பதால், பரமகுடியைத் தாண்டி
தி மு க போகவே இல்லை" என்று அன்ணாதுரையே குறைபட்டுக் கொண்டிருக்கிறார். இத்தகைய
காரணங்களால் கருணாநிதி வஞ்சத்தை வளர்த்துக் கொண்டார். ஒன்றாக இருந்த
முக்குலத்தோர் சமுதாயத்தை, அரசானை போட்டுப்
பிளவு ஏற்படுத்தினார் கருணாநிதி. மதுரை மாவட்டத்தில் வாழக்கூடிய பிறமலைக்கள்ளர், ராமநாதபுரத்தில் வாழக்கூடிய மறவர்களை மட்டும்
'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' என்றும், இதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டங்களில் இருந்தால்
அவர்கள் 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்றும் அரசாணை மூலம் பிரிவினை உண்டாக்கினார்"
என்றார் கோ.மாரி சேர்வை
- துக்ளக்கில்
திரு சுப்பு, திராவிடமாயை
ஒரு கேள்வி?
பெங்குயின்கள் கூட்டமாக இருக்கும் இந்த இடம் - ஆர்ட்டிக்கா? அண்டார்ட்டிக்கா?