Sunday, April 14, 2013

மருந்துப் பரிசோதனைக்கு பலியாகும் இந்திய எலிகள்!



எனது நண்பர் ஒருவருக்கு கும்பகோனம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தால் அதனை உடனே பதிவு செய்ய வேண்டியது பல நடைமுறை பரிமாற்றங்களுக்கு அவசியமாக இருக்கிறதே. அதனால் திருமணம் நடைபெற்ற சுவாமிமலை கோவிலில் சென்று திருமணம் நடந்ததற்கான பதிவுச் சான்றிதழ் ஒன்று தாருங்கள் என்று நண்பர் விசாரிக்க அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணம் நடைபெற்றது என்று சான்றிதழ் கொடுக்க வேண்டுமானால் மணப்பெண்ணுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது என்ற சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று கூறிவிட்டனர் கோவில் நிர்வாகிகள்

'இதென்னய்யா அநியாயம்? அது என்ன ஊசின்னே தெரியாது? நாங்க நல்லாதானே இருக்கோம், வளர்ந்த ஆளுங்களுக்கு இப்போ எதுக்குங்க தேவையில்லாம தடுப்பூசி?' என அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர். அதற்கெல்லாம் மசியாத கோவில் நிர்வாகத்தார், 'இதோ பாருங்க? அப்படித்தான் ரூல் போட்டிருக்காங்க. தடுப்பூசி போட்டுக்கறது கட்டாயமாம். அந்த ஊசி போட்டாச்சுன்னு டாக்டர் சர்டிபிக்கேட் காட்டினா உடனே சர்டிபிகேட் குடுத்தற்றேன். என்கிட்ட ஏன் கொச்சிக்கறீங்க ? என்று கூறி கைவிரித்து விட்டனர்.

இந்த சம்பவம் நண்பரின் குடும்பத்தினரை அதிக மன உலைச்சலுக்கு ஆட்படுத்தி விட்டது. ஒரு தனிமனிதருக்கு, அல்லது குடும்பத்தினருக்கு சம்பந்தமில்லாத அல்லது தேவைப்படாத மருத்துவத்தை அவர்கள் மீது கட்டாயமாக எப்படித் திணிக்கலாம்? அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் இப்படி சட்டம் இருக்கிறதா? அனைத்து கோவில்கள் திருமண நடைமுறைக்கும் இந்தச் சட்டம் பொருந்துகிறதா? அறநிலையத் துறை இத்தகைய கட்டாய தடுப்பூசி திணிப்பு பற்றிய வெளிப்படையான அறிக்கை அல்லது பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறதா? இது பற்றிய அரசு ஆணை உள்ளதா? இது பற்றி மக்களிடம் விரிவாகவும் வெளிப்படையாகவும் அரசு எந்த விதத்தில் எடுத்துக் கூறியிருக்கிறது? என பல கேள்விகள் எழுகின்றன.



உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் மருந்துகளையெல்லாம்
நாட்டு மக்களின் மீது திணிக்கும் நடவடிக்கையை இந்திய அரசாங்கம் பல காலமாகவே செய்து வருகிறது. அவற்றில் ஏறக்குறைய 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த ரூபெல்லா தடுப்பூசி மருந்தை மக்கள் மீது திணிப்பதை மருந்து நிறுவனங்கள் சத்தமில்லாமல் அரசு உதவியுடன் செய்துவருகின்றன.
இங்கே சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். புதிது புதிதான நோய்க் கிருமிகளின் கண்டுபிடிப்புக்களையும் அவற்றிற்கான மருந்துகளை உடனே மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைக்கும் கண்டிப்பாக ஏதேனும் பின்புலம் இருக்க வேண்டும் என்கிற பலத்த சந்தேகம் வலுத்துவருகிறது.

மேலைநாடுகளெல்லாம் பாரதம் போன்ற பழைமையான கலாசாரத்தை கடைபிடித்த நாடுகளையெல்லாம் காட்டுமிராண்டி தேசம் போல வர்ணித்தும் தாங்கள் தான் உலகத்திற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்தவர்கள் என்று கூறிக்கொண்டும் திரிகின்றன. ஆனால் உலகத்தை அச்சுறுத்தும் பல அழிவு நோய்க்கிருமிகளெல்லாம் இதே மேலைநாடுகளில் தான் முதலில் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதையும் அவர்களிடமிருந்து தான் பரவுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என பல்வேறு வகையான உடனே பரவும் நோய்கள் எல்லாம் மேலை நாட்டிலிருந்தே இறக்குமதியாகின்றன. ஆனால் இவற்றிற்கான தடுப்பு மருந்துகளும் அவற்றின் விற்பனைக்கும் இந்தியாவே மிகப்பெரிய சந்தை என்பதை மறக்கக்கூடாது. எயிட்ஸைத் தடுக்க வேண்டும் என்கிற பெயரில் செய்யப்படும் அபரிமிதமான காண்டோம் விற்பனையும், பன்றிக்காய்ச்சல் , பறவைக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தான் அதிகம். மேலும் புதிய நோய்க்கிருமிக்கான புதிய மருந்துகளை பரிசோதனை செய்யவும் இந்நாட்டு மக்களிடமே அதிகமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டு என்று புரளியைக் கிளப்பிவிடுவதும், சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றும் பலவிதமான பிரச்சாரங்கள் மருத்துவத்துறை மூலமாகவே பரப்பிவிடப்படுகிறது. இவ்வாறான பல தவறான பிரச்சாரங்களை அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தே வருகிறது.


சரி, இந்த ரூபெல்லா வைரஸ் அப்படி என்ன செய்துவிடும் என்று இதற்கான தடுப்பூசியை கட்டாயப்படுத்துகிறார்கள் எனபார்க்கலாம். ரூபெல்லா வைரஸுக்கான தடுப்பூசியை ஒரு பெண் கர்பமாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் போட்டுக்கொள்ள வேண்டுமாம். அப்படிச் செய்தால் பிறக்கும் குழந்தை தோல்வியாதி, அம்மை, போன்ற வியாதிகளின்றியும் பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறன் குறைபாடில்லாமலும் பிறக்கும் என்று கூறப்படுகிறதே அன்றி புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே பிறந்த குழந்தைக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போடும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. போலியோ பாதிப்பில்லாமல் இருக்க தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இப்போது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் குழந்தை பிறக்கும் முன்பாகவே இதே காரணங்களுக்காக தாய் கர்பமாகும் முன் 3 மாதங்கள் முன்பாக ரூபெல்லா வைரஸ் தடுப்பூசியைப் போட வேண்டும் என்கிறார்கள்.

'ரூபெல்லா' எந்த விதத்திலும் உயிரை மாய்க்கும் வைரஸ்ஸாகத் தெரியவில்லை. இந்த வைரஸால் பிறக்கும் எல்லா குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. இந்த ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் அத்தனையும் கூன், குருடு, செவிடாகத்தான் பிறக்கிறது என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் நம் நாட்டு மக்கள் மீது இந்த 'ரூபல்லா' தடுப்பூசி திணிக்கப்படுகிறது.

கிறிஸ்டியன் பேட்ரியாட் : என்கிற வலைத்தளம் ரூபெல்லா தடுப்பூசி தயாரிக்கும் கம்பெணியைப் பட்டியலிடுகிறது.






கீழ்கண்ட தாஜ் பார்மசூட்டிகல் என்ற இந்திய நிறுவனமும் இந்த தடுப்பூசி தயாரித்து விற்கும் வேலையைச் செய்கின்றன.


ஒரு பெண் கர்பமாவதற்கு மூன்றுமாதம் முன்பாக இந்த தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஊசி போட்ட மூன்று மாதம் கழித்து தான் கர்பமாக வேண்டும் என்று கட்டாயம் கொள்ள முடியுமா அல்லது ஊசி போட்ட மூன்றாவது மாதம் கர்பமாகி விடுவார்கள் என்பதற்கு ஏதாவது நிச்சயம் தான் இருக்கிறதா? அதுவும் இல்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக இலங்கையில் பள்ளிச்சிறுமிகளுக்கெல்லாம் இந்த தடுப்பூசி 2009 ஆம் ஆண்டு போடப்பட்டிருக்கிறது. அதில் பலர் பாதிக்கப்பட்டும் இரு பள்ளிச் சிறுமிகள் மாண்டும் போயிருக்கிறார்கள்.


அது பற்றிய ஒரு செய்தி இதோ: 

ருபெல்லா தடுப்பு மருந்து 1996ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.

யாழ்க்குடாநாட்டில் ரூபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்ட சிறார்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் தென்மராட்சியைச் சேர்ந்த 22 மாணவிகள் இவ்வாறு ரூபெல்லா தடுப்பூசி  ஏற்றப்பட்ட நிலையில் கடுமையான தலைச்சுற்று மற்றும் மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது இவர்கள் அபாய கட்டத்தில் இல்லை என கூறும் வைத்தியசாலை நிர்வாகம் எனினும் இவர்களை வைத்தியசாலையில் தங்க வைத்து சிகிச்சையளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வலிகாமத்தின் சங்கானைப் பகுதியிலிருந்தும் பாடசாலை மாணவியொருவர் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 மற்றும் 14 வயது மாணவிகளே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்க்குடாநாட்டிலும் ரூபெல்லா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தடைவிதித்துள்ளது
குறிப்பாக சாவகச்சேரிப் பகுதியிலுள்ள இந்துக் கல்லூரியில் ரூபெல்லா ஊசி ஏற்றப்பட்ட சுமார் 90 சிறார்களில் 6சிறார்கள் ஸ்தலத்திலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தடுப்பூசி ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டு கொழும்புத் தலைமையத்திற்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் எவையும் கிட்டாத நிலையில் குடாநாட்டில் இந்த ஊசியைத் தடை செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே மாத்தறைப் பகுதியில் இந்த ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக ஒரு சிறுமி உயிரிழந்ததுடன் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து குடாநாட்டிலும் தற்போது இது தொடர்பான ஆய்வுகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சுகாதார திணைக்கள அதிகாரிகள் ஆயட்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 .

மற்றொரு செய்தி:


"இலங்கையில் இரண்டு பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட காரணமாக அமைந்த ரூபெல்லா ஊசி மருந்து தயாரிக்கும், இந்தியாவின் ட்ரம் இன்சிடியூட் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தனது உயர் மட்ட அதிகாரிகளை, நிறுவனம் அமைந்துள்ள இந்தியாவின் பூனே நகருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. "

இப்படி உயிருக்கு ஆபத்தானதாகவும் ஒவ்வாமையைக் கொடுக்கும் வகையிலான ஒரு தடுப்பூசியை கோவில் திருமணத்தின் மூலம் சட்டமாக்க அரசு முனைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது? அறநிலையத்துறை மூலம் இந்த தடுப்பூசி விற்பனைக்கு ஏதாவது ஏற்பாடு நடைபெறுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் அதனால் மருந்துகளுக்கு விரிவான சந்தையும் உண்டு. அதே நேரம் இந்தியாவில் திருமணங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே திருமணத்தை முன்னிறுத்தி இந்த மருந்தை கட்டாயமாக விற்பனை செய்தால் நிறுவனங்கள் மிகப்பெரிய சந்தையை பெறுவதோடு மிகப்பல கோடிகளை குறுகிய காலத்திலேயே ஈட்டிவிடும் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

கோவில்களில் ரூபெல்லா தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்குத்தான் திருமணச் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று சட்டம் இருக்கிறதா என மருத்துவர்களுக்கே தெரியவில்லை என்பது இன்னொரு வேடிக்கை. நம் நாட்டில் இவை இன்னும் பிரபலமாகவில்லை என சில மருத்துவர்கள் விசாரனையில் தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டில் மட்டுமே பரப்பப்பட்டு மக்களை பயமுறுத்தி விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்துகளை கட்டாயப்படுத்தி இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டிய அவசரம் தான் என்ன?

கோவில்கள் தான் இதற்கு களமா? ஹிந்துக்கள் தான் இது போன்ற மருந்துகளுக்கு பலியாகப்போகும் எலிகளா?

மருத்துவம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் அரசு விழிப்புணர்ச்சியை உண்டாக்கலாமே ஒழிய கடுமையான சட்டங்கள் மூலம் கட்டாயப்படுத்தி மருந்துகளைத் திணிப்பது ஏற்புடையதா என்று யோசிக்க வேண்டும்.

அல்லோபதி மருத்துவம் வளர்ச்சி பெற்றதும் அதனால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்ததையும், பல்வேறு வேதனை மிகுந்த நோய்களை எளிதாக குணப்படுத்திவிடும் வளர்ச்சியும் அதனால் மக்கள் அடைந்த பயனையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. என்றாலும்  மிருகத்தனமான வியாபார நோக்கம் நம்மை அச்சமுறச் செய்கிறது.

மக்களே, நீங்கள் சோதனை கூடத்து எலிகள் இல்லை

உங்கள் மீது நடத்தப்படும் பரிசோதனைகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள்

தற்காத்துக் கொள்ளுங்கள்.

2 comments:

Unknown said...

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கட்டுரை பகலவன்! நன்றி. இது மிகவும் சீரியஸான விஷயம். அறமற்ற துறையின் அயோக்கியர்கள் எங்கெல்லாம் பணம் கிடைக்குமோ அங்கெல்லாம் கையை நீட்டுவார்கள், மானம் கெட்டவர்கள். இது அவர்கள் கீழுள்ள கோவில்களில் எல்லாம் நடக்கிறதா என்று பார்க்கவேண்டும். பார்ப்போம்.

hayyram said...

நன்றி ஹரன் ஜி!

இன்னும் இறங்கி விசாரிக்க வேண்டும். வேறு கோவில்களிலெல்லாம் இதே பொல சொல்கிறார்களா என்று விசாரித்து அதை தடுக்க ஆவன செய்ய வேண்டும். தங்கள் ஆதரவிற்கு நன்றி.