மனிதனை பாவி என்று சொல்லாதே!
'நீ தெய்வம்' என்று அவனிடம் சொல்.
நாமெல்லோரும் பாவிகள் என்று சொல்வது முட்டாள்தனம்.
அயோக்கியத்தனம்.
நீங்கள் எல்லோரும் இறைவனின் வடிவங்களே...
- சுவாமி விவேகானந்தர்.
மதநல்லிணக்கமும் தேசிய சிந்தனையையும் வலியுறுத்தும் இரு நிகழ்வுகள் கடந்த வாரங்களில் நிகழ்ந்தன.
ஒன்று:
இடமிருந்து வலம்: திராவிட மாயை சுப்பு அருகில் சுவாமி விமூர்தானந்த மகராஜ்
ஈஸ்டர் தினமான
31.03.2013 அன்று தி நகர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளி
வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 150
ஆம் ஆண்டி ஜெயந்தி விழா சார்பாக 'எனது போர் முறை' என்ற தலைப்பில் கருத்தரங்கம். நடைபெற்றது. இதில் விவேகானந்தர் பார்வையில் மத நல்லிணக்கம், விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம் மற்றும் விவேகானந்தர் பார்வையில் தேசத்தின் அடையாளம் என்ற தலைப்புகளில் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.
முதற்கண் ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக சுவாமி விமூர்தானந்த மகராஜ் பேசுகையில்
"இது போன்ற மதநல்லிணக்கக் கருத்தரங்கில் இப்போது ஹிந்துக்களாகிய நாம் தான் அமர்ந்திருக்கிறோம். இதே மேடையில் ஒரு புறம் முஸ்லீம்களும், இன்னொரு புறம் கிறிஸ்தவர்களும் சேர்ந்து அமர்ந்து கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ள வேண்டும். நல்லிணக்கக் கருத்துக்களை எல்லா மதத்தவரும் ஒரே அனியில் நின்று வலியுறுத்தும் போது தான் அவை வலிமை பெறுவதாக அமையும்"
என்றும் தனது கருத்தை முன்வைத்தார்.
திரு. அரவிந்தன் நீலகண்டன்
தொடர்ந்து எழுத்தாளரும் ஹிந்துத்துவ சிந்தனையாளருமான திரு. அரவிந்தன் நீலகண்டன் உரையாற்றினார். அவற்றுள் சில வரிகள்
"மதமாற்றம் அல்லது பண்பாட்டு அழிவுகளல்லாத மதிப்பீடுகளின் பரிமாற்றம் என்பது மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாகும். அதனை விவேகானந்தர் சாதித்துக் காட்டினார். 2009 ஆம் ஆண்டு நியூஸ்வீக் பத்திரிகை லிஸா மில்லர் எனும் சமய அராய்ச்சியாளர் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அமெரிக்கர்களின் மதநம்பிக்கைகள் குறித்த அக்கட்டுரை 'நாம் அனைவரும் இப்போது ஹிந்துக்கள் என குறிப்பிட்டிருந்தது. இதன் பொருள் அமெரிக்கர்கள் வழிபடும் கடவுளரை மாற்றிக் கொண்டார்கள் என்பதல்ல, மாறாக 'எந்த மதத்தினை பின்பற்றுவோரும் நல்லோராக இருந்தால் சத்தியத்தை அடைவர்' எனும் கோட்பாட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே ஆகும். அமெரிக்கச் சமுதாயத்தில் இந்த நேர்மறை மாற்றத்தை கொண்டு வந்ததில் சுவாமி விவேகாந்தரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என 'ரெவரண்ட் ரியூ' எனும் யூனிட்டேரியன் சபையைச் சேர்ந்த இறையியலாளர் தெரிவிப்பதாகவும் அரவிந்தன் நீலகண்டன் எடுத்துரைத்தார்.
திரு. அரவிந்தன் தொடர்கையில் 'கிறிஸ்தவம், இஸ்லாம் போலவே மார்க்ஸியத்தையும் ஒரு மதமாகவே கருதப்பட வேண்டும் என கூறுகிறார். இவை அனைத்துடனும் பாரதம் இணக்கத்துடன் உரவாடி வருவதையும் அதுவே இந்நாட்டின் பன்பாட்டுச் சிறப்பு எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பார்வையாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
"மத நல்லிணக்கத்தைத் தொடர்ந்து ஹிந்துக்கள் மட்டுமே பேசி வருவதாகவும், ஆனால் இதே நல்லினக்க உணர்வை 'தன் கடவுளை ஏற்காதவனை சாத்தான் என்று ஏசும் கிறிஸ்தவர்களிடமும், வாஹாபி முஸ்லீம்களிடமும்கொண்டு சேர்க்க என்ன வழி?"
என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரவிந்தன் அவர்கள்
"ஒரு சிறு கூட்டத்தினராக இருக்கும் சிலரை வைத்து பிற மதத்தினரை மொத்தமாக அடையாளப்படுத்த வேண்டியதில்லை. தமிழகத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடக்கும் போது அது சார்பாக சுவரொட்டிகள் நகரின் பலபகுதிகளில் இருக்கும். அவற்றில் நூற்றுக்கு எழுபது போஸ்டர்களிலாவது நீங்கள் விழா நடத்துபவர்களில் முஸ்லீம்களின் பெயர்களைப் பார்க்கமுடியும். பர்தா அணிந்து கொண்டு மாரியம்மன் கோவில் வாசலில் நின்று வணங்கிச் செல்லும் முஸ்லீம் பெண்களை நம் நகரிலே பார்க்க முடியும். அது போல பிற மதக்கடவுளரை இகழாமலும் அக்கடவுளர் மீது பக்தியும் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களையும் காணமுடியும். நாம் அது போன்ற மக்களிடம் பேச வேண்டும். மேலும் வாஹாபி இஸ்லாமியர்களால் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல முஸ்லீகளுக்கே எதிராளிகளாகும் சூழல் உருவாகி வருகிறது. அவர்கள் தமிழகத்து தர்கா க்களையெல்லாம் உடைத்து கழிவறைகளாக்க வேண்டும்' என்று முழங்கி வருகிறார்கள். ஆனால் ஹிந்துக்கள் தர்க்காவையும் வழிபடுகிறோம். ஏற்கனவே நம்மோடு நல்லிணக்கத்தோடு பழகும் முஸ்லீம் கிறிஸ்தவர்களோடு கைகோர்த்துப் பழகுவதன் மூலம் நல்லிணக்கத்தை இன்னும் வலுப்படுத்தலாம்."
என்றார்.
மன்னராட்சிகாலத்திலேயே யூதர்கள் நம் நாட்டில் தஞ்சமடைந்த போது அவர்கள் வாழ்வதற்கென தனியாக இடமொதுக்கிக் கொடுத்து அவர்களுக்கென வழிபாட்டுத் தலங்கள் அமைக்க உதவி செய்த பன்பாடு கொண்ட தேசம் தான் பாரதம் என்றார் அரவிந்தன் நீலகண்டன்.
தொடர்ந்து தஞ்சையைச் சேர்ந்த ஸாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை பேராசிரியர் இரா. ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்தியப் பண்பாட்டில் இயல்பாகவே நல்லிணக்கம் இருந்தது என்பதை பல தரவுகளுடனும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
மேலும் வேல்ஸ் பல்கலைக்கழத்தின் இணைவேந்தர் ஸ்ரீமதி ஆர்த்தி கணேஷ் , சென்னை மீனாக்ஷி கல்லூரி செயலர் டாக்டர் கெ.எஸ்.லக்ஷ்மி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இரண்டு:
"சென்னை மையிலாப்பூரில் மசூதி தெரு இருக்கிறது. மசூதித் தெருவிற்குள் தான் ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. அதைச் சுற்றி வளையல்கடைகள் நிறைய உள்ளன. அந்த கடைகளெல்லாம் முஸ்லீம் பாய்களுடையது. ஹிந்துப் பெண்கள் வரலக்ஷ்மி நோன்பிற்கு வளையல்களை இங்கே இருக்கும் முஸ்லீம்களின் கடைகளில் தான் வாங்குகிறார்கள். இது தான் பாரதம்"
- இப்படி தனது உரையைத் துவக்கினார் எத்திராஜ் கல்லூரி தமிழ் பேராசிரியர் திருமதி வசந்தாள்.
"சென்னை மையிலாப்பூரில் மசூதி தெரு இருக்கிறது. மசூதித் தெருவிற்குள் தான் ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. அதைச் சுற்றி வளையல்கடைகள் நிறைய உள்ளன. அந்த கடைகளெல்லாம் முஸ்லீம் பாய்களுடையது. ஹிந்துப் பெண்கள் வரலக்ஷ்மி நோன்பிற்கு வளையல்களை இங்கே இருக்கும் முஸ்லீம்களின் கடைகளில் தான் வாங்குகிறார்கள். இது தான் பாரதம்"
- இப்படி தனது உரையைத் துவக்கினார் எத்திராஜ் கல்லூரி தமிழ் பேராசிரியர் திருமதி வசந்தாள்.
மயிலை மாங்கொல்லையில் தமிழ்நாடு வாசகர் வட்டம் கிளை துவக்க விழா நடைபெற்றது. மையிலாப்பூர் கிளை துவக்க விழாவில் திருமதி வசந்தாள் சிறப்புரை ஆற்றினார்.
அதென்ன வாசகர் வட்டம் என்று கேட்பவர்களுக்கு சிறு அறிமுகம். 'ஊடகங்களில் தேசியத்தின் குரல் ஒலிப்பதற்காக"
என்பதே இந்த அமைப்பின் மைய முழக்கம். சமீப காலங்களில் தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள் என அனைத்து ஊடகங்களும் வலிமை படைத்த வெவ்வேறு மனிதர்களின் ஆதிக்கங்களில் சிக்கி இருக்கின்றன. இவை அனைத்தும் ஏதாவது ஜாதி , மத அல்லது மொழி ரீதியான பிரிவினைவாத தூண்டுதல்களை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. ஆனால் அது பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இந்த ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மையென ஆராயாமல் நம்பி ஏமாறும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்டுவரவும், பிரிவினை சிந்தனைகள் நீங்கி தேசிய உணர்வை வலுப்படுத்தவும் மக்களை இளைஞர்களை ஒன்றினைக்க தன்னார்வலர்களால் துவங்கி நடத்தப்படும் அமைப்பு தான் 'தமிழ்நாடு வாசகர் வட்டம்'.
'திராட மாயை' திரு.சுப்பு
இந்த அமைப்பில் இளைஞர்கள் இளம்பெண்கள் தேசிய சிந்தனை உள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். எந்த சிந்தனையும் இல்லாமல் சினிமா சீரியல் வாரப்பத்திரிக்கை படிப்பவர்கள் வெட்டி அரட்டை அடிப்பவர்கள் கூடச் சேரலாம். யாராக இருந்தாலும் அவர்களது எண்ண ஓட்டங்களை தேசியத்தன் பக்கம் திருப்புவதும் தேச ஒற்றுமை காப்பது மட்டுமே அமைப்பின் நோக்கம் என அதன் பொறுப்பாளர் 'திராவிடமாயைப்' புகழ் திரு.சுப்பு அவர்கள் தெரிவித்தார். இணைய விரும்புபவர்கள்
subbupara@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஊர் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அங்கொரு கிளை உருவாக்கப்படும் என்றார்.
நேற்று மயிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதற்கண் திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் எழுதிய
'1857ல் தமிழ் மண்' என்ற புத்தகத்தைப் பற்றி சிறப்புரை ஆற்றப்பட்டது.
விகடன் பிரசுரத்தின் மூலமாக வெளியாகியிருக்கும் இப்புத்தகம்
1857 ல் நடந்த ஆங்கிலேயர்களுக்கெதிரான புரட்சியின் போது தமிழகத்தின் பங்கு பற்றிய வரலாற்றைச் சுவைபட எடுத்துக் கூறுகிறது. சிப்பாய்க்கழகம் என்றால் வடக்கே நடந்த புரட்சிகள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் தமிழகப்பகுதியில் நடந்த வெள்ளையர்களுக்கெதிரான போர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாக இப்புத்தகம் அமைந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம் என இப்புத்தகத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார் எத்திராஜ் கல்லூரி தமிழ்பேராசிரியர் திருமதி வசந்தாள் அவர்கள்.
திரு. செங்கோட்டை ஸ்ரீராம்
பின்னர் இந்தப் புத்தகம் உருவான சூழல் குறித்தும் அதற்கான தனது உழைப்பு மற்றும் தரவுகள் சேகரித்த விதம் குறித்தும் திரு செங்கோட்டை ஸ்ரீராம் ஏற்புரை வழங்கினார்.
நிறைவாகப் பேசிய விஜயபாரதம் ஆசிரியர் திரு வீரபாகு அவர்கள் பேசுகையில்
"சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான மதமாற்றம் தேசத்தின் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது, சமீபத்தில் ஒரு சுவரொட்டி, பிராமணர் ஒருவர் ஏசுவுக்கு முன் ஏழை பிராமணராக இருந்ததைப் போலவும் ஏசுவிற்குப் பின் செழிப்புடன் வாழ்வது போலவும் பிராமண வேஷத்தில் ஒருவர் இருப்பது போல சுவரொட்டி காணப்பட்டது. நீங்களும் ஏசுவைக் காண வாருங்கள் என்று அழைத்து கூட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையில் புகார்செய்து சுவரொட்டியின் மூலமாக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தவரை விசாரித்தால் அவருக்கு குலம் கோத்திரம் என்று எதுவும் சொல்லத்தெரியவில்லை. அவர் பிராமணராக இருந்தவரில்லை என்ற குட்டும் வெளிப்பட்டது. ஏழை பிராமணர்களை மதம்மாற்றவும் பிராமர்களைக் காட்டி பிறரை மதம் மாற்றவும் இப்படி கேவலமான முறையில் நடந்து கொள்கிறார்கள். கேட்பதற்கு ஆளில்லாத நிலையில் நடத்தப்படும் இது போன்ற அட்டூழியங்களை ஒரு அமைப்பாக நின்று நாம் குறைந்த பட்சம் அறவழியில் ஒரு எதிர்ப்பாவது தெரிவிக்க வேண்டும். அதற்காக நம் தேசத்தைக் காக்கும் சிந்தனை கொண்டவர்கள் நம்மோடு தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"
என்றும் கூறி விழாவை சிறப்புடன் நிறைவுசெய்தார்.
இப்படி தேசியம் உடையாமல் காக்கப்பட வேண்டும் என பலர் போராடிக் கொண்டிருக்கையில் இதோ ஒரு பிரிவினைச் செய்தி:
கத்தோலிக்க சர்ச்சின் நெடுநாள் குறிக்கோள் வடகிழக்கு இலங்கையையும் தமிழகத்தையும் இணைத்து ஒரு தமிழ் கிறிஸ்தவ தேசம் அமைக்க வேண்டும் என்பது தான்.
அதனை வழிநடத்தும் முகமாக பிரிவினைவாதி மாணவர்களுக்கு விடுக்கும் பிரிவினைத் தூண்டுதல்:
கல்லூரி மாணவர்களுக்கு சு.ப. உதயகுமார் (இடிந்தகரை) ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் விரும்பும் தமிழ் கிறிஸ்தவ தேசத்திற்கான வரைபடத்தை எழுத்து மூலம் முன்னிறுத்தி அதை அடைவதற்கானபோராட்டமாக இந்த இலங்கைத் தமிழருக்கான போராட்டத்தை பயன்படுத்த வேண்டுமென நாசூக்காகத் தெரிவிக்கிறார்.
அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய கடிதம்:
** பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா உள்ளடக்கிய கடல் பகுதிகளை
"தமிழ்க் கடல்"
என அழைப்போம்
** தமிழ் நாடு மற்றும் தமிழீழம் உள்ளிட்ட தமிழர் வாழும் மண்ணை
"அகண்ட தமிழகம்"
எனக் கொண்டு, ஈழத் தமிழரையும் இங்குள்ளத் தமிழரையும் ஒன்றிணைக்க தமிழ் இலக்கியம் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க இயன்ற வழிகளில்லெல்லாம் உழைப்போம்.
உடையுமா இந்தியா?
3 comments:
Dear Ram,
Can you please enable copy pate/open in another tab options which is disabled now
Pradeep
pradeep ji, pls mail me mirrrors@gmail.com
Dear Ram
Have sent it today
Pradeep
Post a Comment