Sunday, December 22, 2013

"நாட்டைக் காக்க வாருங்கள்" மோடியின் பேச்சு - "மோடியைக் கொல்லுங்கள்" சன் டி வி க்காரன் பேச்சு!


இன்றைய தினம் லட்சக்கணக்கான மும்பைவாசிகள் முன்னிலையில் மோடி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில துளிகளைப்பார்க்கலாம்:

குவிட் இன்டியா மூவ்மெண்ட் போல இப்போது ' Congress Free India ' கோஷத்துடன் புறப்படுங்கள் சகோதரர்களே, காங்கிரஸிடமிருந்து இந்தியாவிற்கு முக்தி கொடுங்கள். காங்கிரஸ் ஃப்ரீ இந்தியாவை உருவாக்குவோம். அதுவரை தேசத்தில் அமைதி இருக்காது.

மொழியால் அடித்துக்கொள்ளுங்கள், தண்ணீரின் பெயரால் அடித்துக் கொள்ளுங்கள்,  மதத்தால் அடித்துக்கொள்ளுங்கள் என பிரித்தாளும் கொள்கையை கையாண்டு இந்த நாட்டை துண்டாடி வருகிறது காங்கிரஸ்.

கருப்புபணத்தை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள். நாங்களெல்லாம் வெளிநாட்டில் எங்களுக்குக் கருப்புப்பணம் இல்லை என எழுதிக் கொடுத்தோம். அது போல காங்கிரஸிடம்  நீங்களும் இப்படி எழுதிக் கொடுங்கள் பார்க்கலாம் என்றோம். இன்று வரை யாரும் முன்வர வில்லை. வெளி நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அத்தனை கருப்புப்பணத்தையும் கொண்டு நம் நாட்டு ஏழைகளுக்கு உதலாமா இல்லையா?

படிக்கிறீர்கள், பரீட்சை எழுதுகிறீர்கள், ஆனால் அரசு வேலை கிடைக்கிறதா, சிபாரிசு தேவைப்படுகிறது. சிபாரிசுக்கு என்ன வேண்டும், மஹாத்மா காந்தி படம் போட்ட நோட்டுக்கள் வேண்டும். ஒரு ஏழை தாயின் பிள்ளை எப்படி காந்தி படம் போட்ட நோட்டு கொடுப்பான். இன்டெர்வியூ என்ற பெயரில் இப்படி கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் நான் என்ன செய்தேன் இன்டெர்வியூ என்கிற முறையை ரத்து செய்தேன், பரீட்சை எழுதி தேர்வு பெற்ற லட்சக்கனக்கான பேரையும் கம்பியூட்டரில் ஏற்றினேன், கம்பியூட்டரிடம் கேட்டேன் இவர்களில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களை எனக்குக் காட்டு என்று. அது காட்டிய நபர்களுக்கெல்லாம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். குஜராத் அரசு வெள்ளைத்தாளைப் போல சுத்தமானதாக இருக்கிறது.

காங்கிரஸ் நண்பர்களே கேட்டுக்கொள்ளுங்கள்?? டிவியின் பர்தாக்களுக்குப் பின்னால் மோடி இருக்கிறேனோ இல்லையோ, கோடிக்கனக்கான ஜனங்களின் மனதில் இருக்கிறேன். டிவிக்களை நீங்கள் மறைப்பதால் மோடியை மறைக்கமுடியாது" என்றார் மோடி. இவ்வாறு மோடி குறிப்படதற்கு காரணம், மும்பையில் பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கானோரது கரகோஷத்தோடும் மோடியை வாழ்த்திய கோஷத்தோடும் பிரம்மாண்டமாக கூட்டம் நிறைவேறியது.

'மோடியைக் கொல்லுங்கள்' - சன் டி வி வீரபாண்டியனின் வன்முறை தூண்டிய பேச்சு::



இதற்கிடையில் மோடியைக் கொல்லுங்கள் என முஸ்லீம்களைத் தூண்டி விட்டு சன் டி வியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வீரபாண்டியன் முஸ்லீம்களின் கூட்டத்தில் நின்று பேசிய வீடியோ வெளியாகி பெரிய எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சன் டி வி தனக்கிருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த நபரை தொகுப்பாளர் வேலையிலிருந்து சன் டி வி நிர்வாகம்  நீக்க வேண்டும்.

இந்த வீடியோ வெளியான விதம் மற்றும் முஸ்லீம்களால் அந்தப்பகுதி பயத்தின் காரணமாக நீக்கப்பட்டது பற்றியும் பல தகவல்களை நண்பர் பால கௌதமன் தனது தளத்தில் விவரித்திருக்கிறார். 

அதில் வீரபாண்டியனின் குறுக்கு புத்திக்கான ஒரு சுவாரஸ்யத்தை அவர்  இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இதே விஷப்பாண்டியன் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில், நானும் பேராசிரியர் நன்னன் அவர்களும் கலந்து கொண்டோம். அதில் என் கையே ஓங்கியிருந்தது. அதில் பல பகுதிகளை வெட்டியபின்னும், ஒளிபரப்பப்பட்ட விவாதம், சித்திரைதான் புத்தாண்டு என்பதை நிரூபித்து, எதிர் அணியின் வாதத்தை கேலிக்கூத்தாக்கியது. எல்லா விவாதங்களையும் வலைத்தளத்தில் போடும் சன் நியூஸ் தொலைக்காட்சி, இந்த விவாதத்தை மட்டும் இதுவரை வலைத்தளத்தில் போடவில்லை! இது தான் இவரின் நடுநிலமை!

இதில் கூட ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. பேராசிரியர் நன்னன் அவர்கள் ஒரு சிறிய சூட் கேஸை எடுத்து வந்திருந்தார். விவாதம் தொடங்கும் முன், தை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் அந்தப் பெட்டியில் இருப்பதாகச் சொன்னார் வீரபாண்டியன்! சொன்னவுடன் நான் பயந்து விடுவேன் என்ற நினைப்பு! ஏதோ பெரிய சைகாலஜிஸ்ட் என்ற எண்ணம்! விவாதத்தின் இடைவேளையின் போது பேராசிரியர் நன்னன் அவர்கள் அந்த பெட்டியைத் திறந்தார். அதில் ஒரு தண்ணீர் பாட்டில்தான் இருந்தது. நான் நிமிர்ந்து பார்த்தேன் வீரபாண்டியனை! பாவம் என் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியவில்லை."

அது பற்றி விபரமாகப் படிக்க க்ளிக்கவும்: சன் நியூஸில் ஒரு பின் லாடன்



Sunday, December 15, 2013

'ஹோரா'வில் இருந்து வந்தது 'Hour' !



நிருக்தம் என்பது வேதத்துக்கு அகராதி (dictionary) அகராதி என்பது 'கோசம்'என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும். 'அமர கோசம்'என்று பிரஸித்தமான அகராதி இருக்கிறது. 'நிகண்டு'என்றும் சொல்வதுண்டு. தமிழிலும் 'நிகண்டு'என்றே சொல்வர். ஒவ்வொரு வார்த்தையும் இந்த தாதுவிலிருந்து வந்தது என்று அட்சர அட்சரமாகப் பிரித்து ஒவ்வொரு அட்சரத்துக்கும் அர்த்தம் சொல்வது நிருக்த சாஸ்திரம். இதை Etymology என்கிறார்கள்.

நிருக்தம் வேதபுருஷனுக்கு ச்ரோத்திர ஸ்தானம், அதாவது, காது. வேதத்தில் உள்ள அரிய வார்த்தைகளுக்கு இன்ன இன்ன அர்த்தம் என்று அது சொல்கிறது. ஏன் இந்தப் பதம் இங்கே உபயோகப்படுத்தப்பட்டது என்பதைக் காரணத்துடன் அது சொல்லும்.

நிருக்த சாஸ்திரம் பலரால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் முக்கியமானது யாஸ்கர் செய்தது. வேத நிகண்டுகளில் ஒவ்வொரு பதத்திற்கும் அது இப்படி உண்டாயிற்றென்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. 'ஹ்ருதயம்'என்றே ஒரு பதம் இருக்கிறது. அது ஏன் இப்படி வந்தது? வேதமே அதன் காரணத்தைச் சொல்லியிருக்கிறது. 'ஹ்ருதி அயம்':'ஹ்ருதயத்தில் அவன் இருக்கிறான்' என்பது அர்த்தம். 'ஹ்ருத்'என்பதே பௌதிகமான ஹ்ருதயத்தின் பெயர். ஆனால் 'அயம்'என்று அதில் கிட்ட உள்ளவனான ஈச்வரனனையும் சேர்த்துச் சொல்வதால் அதன் ஆத்மிகமான முக்யத்வமும் குறிப்பிடப்படுகிறது.எந்த சாஸ்திரமானாலும் ஈச்வரனில் கொண்டுவிட வேண்டும். ஹ்ருதயத்தில் பரமேச்வரன் இருப்பதால், அதற்கு, 'ஹ்ருதயம்'என்று பெயர் வந்தது என்று தெரிய வருகிறது. இபப்டி ஒவ்வொரு பதத்திற்கும் காரணம் உண்டு.

அதை ஆராய்வது நிருக்தம். ஸம்ஸ்கிருதத்தில் எல்லாப் பதங்களுக்கும் தாது உண்டு. தாதுவை "ரூட்"என்று இங்கிலீஷில் சொல்லுவார்கள். இங்கிலீஷில் கிரியாபதங்களுக்கு ( verb s) தாது உண்டே தவிரப் பெயர்ச் சொல்லுக்கும் இன்ன க்ரியையால் இப்படிப் பெயர் வந்தது என்று தாது காட்ட முடிகிறது. அப்படி உள்ள பதங்களின் விகாரங்களை மற்ற பாஷைகக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைக்காரர்கள் எடுத்து உபயோகித்தார்கள். அதனால்தான் அந்த பாஷைகளில் பல வார்த்தைகளுக்கு ரூட் தெரிவதில்லை. அந்த பாஷைக்கே உரிய சொல்லாக இருந்தால்தானே சொல்ல முடியும்?மணியை இங்கிலீஷில் Hour என்று சொல்லுகிறார்கள். அந்தப் பதத்தில் அமைந்துள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை அநுசரித்துப் பார்த்தால், ஹெளர் அல்லது ஹோர் என்றே சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் "ஹோர்"என்றே சொல்லியிருக்க வேண்டும். "ஹோரா சாஸ்திரம்"என்று ஸம்ஸ்கிருதத்தில் ஒரு சாஸ்திரம் உண்டு. 'அஹோராத்ரம்' 
(இரவு பகல்) என்பதிலிருந்து, அந்த 'ஹோரா' என்பது வந்தது. 'ஹோரா'என்பது தமிழில் 'ஒரை'ஆயிற்று. கல்யாணப் பத்திரிக்கைகளில் முஹ¨ர்த்த காலத்தை 'நல்லோரை'என்று போடுகிறார்கள். 

அந்த ஹோராவே இப்போதைய இங்கிலீஷ் ஸ்பெல்லிங்கில் hour -ஆகவும், உச்சரிப்பில் 'அவர்' என்றும் வந்திருக்கிறது. 

இப்படியே heart என்பது ஸம்ஸ்கிருத 'ஹ்ருத்'என்பதிலிருந்து வந்தது. இப்படிப் பல வார்த்தைகள் இருக்கின்றன. இவைகள் பிற பாஷைகளில் தற்காலத்திய ஸ்வரூபத்தை அடைவதற்கு எவ்வளவோ காலம் ஆகியிருக்க வேண்டும். அந்த பாஷைகாரர்களுக்குப் பதங்களின் மூலம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பழமைதான்.

- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Wednesday, December 4, 2013

எங்கும் நிறைந்த ப்ரம்மத்தில் மனதை நிறுத்து!


தியானம் செய்யும் முறை!

இலக்காகிய பிரம்மத்தில் மனதை மிகவும் திடமாக நிலை நிறுத்தி வெளி இந்திரியங்களை அவ்வவற்றின் இடங்களில் புகுந்திருக்கச் செய்து உடலை அசையாமல் நிறுத்தி உடலின் ஸம்ரக்ஷணையையும் கூட கவனியாது விடுத்து பிரம்மத்திடம் ஆத்மாவை ஒன்று படுத்தி
தன்மயமாகி இடைவிடாத தியானத்தால் எப்பொழுதும் உனக்குள்ளேயே பொங்கும் மகிழ்ச்சியால் பிரம்மானந்த ரஸத்தை பருகுவாயாக. பயனற்ற மற்ற மதிமயக்கச் செயல்களால் ஆவதென்ன?

விஷயமாகிற அழுக்குடன் கூடியதும் துக்கத்தை விளைவிப்பதுமான ஆத்மாவல்லாத உலக சிந்தனையை விட்டொழித்து எது முக்திக்குக் காரணமோ ஆனந்த வடிவானதோ அந்த ஆத்மாவை சிந்திப்பாயாக.

இந்த ஆத்மா தன்னொளியால் பிரகாசிப்பது. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பது; விஞ்ஞானமய கோசத்தில் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருப்பது. அஸத்தாகிய பிரபஞ்சத்தினின்று முற்றும் வேறான இதை இலக்காக வைத்துக் கொண்டு இடைவிடாத தியானத்தால் அதையே உனது ஸ்வரூபமாக அனுபவத்திற்குக் கொண்டுவருவாயாக.

இந்த ஆத்மாவை வேறு எண்ணம் குறிக்கிடாத இடைவிடாத தியானத்தால் உள்ளத்தில் கொண்டுவந்து தெளிவாக தனது ஸ்வரூபமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த பரமாத்மாவில் தன்னுடைய ஒற்றுமையை திடமாகச் செய்து அஹங்காரம் நீக்கி 'தனது' என்ற எண்ணத்தை நீக்கி பொருட்களில் ஸம்பந்தப் படாமல் அவற்றிடை நிற்க வேண்டும்.

பரிசுத்தமான அந்தக்கரனத்தை ஸாக்ஷியாகவும் ஞான மாத்திரமாகவும் உள்ள தனது ஸ்வரூபத்தில் வைத்து மெதுவாக அசைவிலாத நிலைக்கு கொணர்ந்து பிறகு பரிபூணமாகிய தனது நிலையை தொடர்ந்து காண வேண்டும்.

தனது அஞ்ஞானத்தால் கற்பிக்கப்பட்ட தேகம், இந்திரியங்கள் பிராணனன், மனது அஹங்காரம் முதலிய எல்லா உபாதிகளினின்றும் விலகியதும் பிளவு படாததும் எங்கும் நிறைந்ததுமான ஆத்மாவை பேராகாயத்தைப் போல் பார்க்க வேண்டும்.

குடம் , செம்பு, குதிர், ஊசி முதலிய நூற்றுக்கணக்கான உபாதிகளினின்று விலகிய ஆகாயம் ஒன்றே ஆகிறது. விதவிதமானதன்று. அவ்வாறே அஹங்காரம் முதலியவற்றினின்று விலகிய பரம்பொருள் ஒன்றேயாம்!

- ஆதிசங்கரரின் விவேக சூடாமணி!