Showing posts with label ப‌குத்த‌றிவு. Show all posts
Showing posts with label ப‌குத்த‌றிவு. Show all posts

Friday, July 10, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்


எண்ணமும் குணமுமே எக்காலத்திற்க்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திட்டால் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும். உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.

உண்ணும் உணவு உடல் வரை தான் பாயும். எண்ணும் எண்ணங்கள் பிரபஞ்சம் எங்கும் பாயும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குணங்களுக்கேற்ப்ப மனமே நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கிறது. மனம் தீயவற்றை நினைத்தால் மூளை அதனை தீய செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. அதுவே நல்ல செயல்களை நினைத்தால் மூளை நற்செயல்களை செயல்படுத்துகிறது.

சமூகத்தில் தீய எண்ணங்களை நினைப்பவன் தீயவனாகவும், நல்ல எண்ணங்களை நினைப்பவன் நல்லவனாகவும் உருவெடுக்கிறான். நீங்கள் நல்லவர்களாகவே வாழுங்கள். எப்போதும் நல்லவைகளையே நினையுங்கள்.

எண்ணமே எல்லாவற்றையும் இயக்கும் சக்தி. அவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வேண்டாத எண்ணங்கள் விரட்ட விரட்ட வரும். அவற்றை கவனைத்து வரிசைப்படுத்தி மனதில் அது தோன்றிடாமல் தியானிக்க வேண்டும்.

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயல், அதற்குத் தேவையும் இல்லை. ஆசையைச் சீரமைக்க வேண்டும்.

மனதின் ஆசைகளினால் எழும் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போகக்கூடாது. பெருக்கினோமானால் அதன் மோகத்திலேயே மனம் சென்று கொண்டிருக்கும். அதனால் நிம்மதி என்பதை உணராமாலேயே மனம் துன்பத்தில் ஆழக்கூடும். எனவே தேவையைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. புரிந்து உணர்ந்து கொண்டு தேவை மற்றும் தேவையற்றதை பிரிக்கக் கற்றுக் கொள்ளும் மனோநிலையே துறவு.

*இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.*

Sunday, June 21, 2009

யோகிராஜ் வேதாந்திரி ம‌க‌ரிஷியின் ம‌ணிமொழிக‌ள்:


ம‌ன‌த்தை அட‌க்க‌ நினைத்தால் அலையும். ம‌ன‌த்தை அறிய‌ நினைத்தால் அட‌ங்கும்.

த‌வ‌றிழைப்ப‌து ம‌ன‌ம். இனித்த‌வ‌று செய்ய‌க்கூடாது என்று தீர்மானிப்ப‌தும் அதே ம‌ன‌ம் தான். ஆக‌வே த‌வ‌று செய்யாத‌ வ‌ழியைத் தேர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டிய‌தும் ம‌ன‌மே. ம‌ன‌த்தைப் ப‌ழைய‌ நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய‌ ந‌ல்ல‌ வ‌ழியில் எப்ப‌டிச் செல்ல‌ முடியும். ம‌ன‌த்தின் குறைக‌ளைப் போக்கியாக‌ வேண்டும். ந‌ல்வ‌ழியில் தீர்மான‌மாக‌ நிற்கும் சுய‌ப‌ல‌த்தை ம‌ன‌த்திற்கு ஊட்டியாக‌ வேண்டும்.

தின‌ந்தோறும் ச‌மைய‌ல‌றையில் பாத்திர‌த்தை உப‌யோகிக்கிறோம். அதை சுத்த‌ம் செய்து வைத்தால் தானே ம‌று நாளைக்கு ந‌ன்றாக‌ இருக்கும். அது போல‌, தின‌ந்தோறும் நாம் ந‌ம்முடைய‌ வாழ்க்கையிலே ம‌ன‌தை அலைய‌ விட்டுக் கொண்டு அத‌னால் உட‌லையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள‌ ந‌ல‌ன்க‌ளையும் குழ‌ப்ப‌ம் செய்து கொள்வ‌தை மாற்றி, தின‌ந்தோறும் தியான‌த்தின் மூல‌ம் ம‌ன‌த்தைச் சுத்த‌ப்ப‌டுத்தி, ம‌ன‌த்தை அத‌ன் உண்மை நிலைக்குக் கொண்டு வ‌ந்து வைக்க‌ வேண்டும். அப்போது தான் ம‌ன‌ம் அமைதியாக‌ இருக்கும். சிந்த‌னைக‌ள் தெளிவாக‌ இருக்கும். த‌வ‌றில்லா வாழ்க்கை அமைத்துக்கொள்ள அதுவே உத‌வும்.

வாரியாரின் பொன்மொழிகள்


கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்:

எங்கும் ஈஸ்வ‌ர‌ன் இருக்கின்றான் என்று நினை. எல்லாப்பொருள்க‌ளிலும் ஈஸ்வ‌ர‌னைப் பார். எல்லா உயிர்க‌ளும் இறைவ‌னுடைய‌ வ‌டிவ‌மே என்று உண்மையாக‌ எண்ண வேண்டும். அந்த‌ எண்ண‌ம் நின்ம‌ன‌தில் நிலைத்து நிற்க்குமாயின் உல‌கில் உன்னால் வெறுக்க‌த்த‌க்க‌ ம‌னித‌னாவ‌து, உயிராவ‌து, பொருளாவ‌து இல்லை, எல்லாப் பொருள்க‌ளிலும் இறைவ‌னைக் காணும் போது எதை வெறுக்க‌ முடியும்? வெறுப்பு நீங்கி விடுகிற‌து. விரோத‌ம் நீங்கி விடுகிற‌து. அவிரோத‌ ஞான‌ம் உண்டாகிற‌து. அப்போது சாந்த‌ நிலை தானே வ‌ந்து சேரும். சாந்த‌ வ‌டிவான‌ இறைவ‌ன் உன‌க்கு எங்கும் தோன்றிய‌ருள்வான்.

இறைவ‌னை எப்ப‌டி தேட‌ வேண்டும். வெறும‌னே அவ‌னைப்ப‌ற்றி அங்க‌லாய்த்துக் கொண்டிருந்தால் அவ‌னை அடைய‌ முடியுமா?.

ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ர் ஒரு மாந்தோட்ட‌த்துக்குள் சென்றார்க‌ள், ஒருவ‌ன் உட‌னே மாம‌ர‌ங்க‌ள் எத்த‌னை என்றும், ம‌ர‌த்திற்கு எத்த‌னை கிளைக‌ளென்றும், ஒவ்வொரு ம‌ர‌த்திலும் எத்த‌னைப் ப‌ழ‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌வென்று எண்ணிக்கொண்டும், அத்தொட்ட‌த்தின் விலை எவ்வ‌ளவிருக்குமென்று ம‌திப்பிட்டும், அத்தோட்ட‌த்தை வை‌த்த‌வ‌ன் யார்? அவ‌னுக்கு ம‌க்க‌ள் எத்த‌னை? என்று விசாரித்துக் கொண்டும், அத்தோட்ட‌ம் எத்த‌னை அடி நீள‌ம்? அக‌ல‌ம் எத்த‌னை அடி? இவை முத‌லிய‌ன‌ ஆராய்ந்து கொண்டும் இருந்தான்.

ம‌ற்றொருவ‌ன் தோட்ட‌த்தில் நுழைந்த‌வுட‌ன் அத்தோட்ட‌த்தின் சொந்த‌க்கார‌னிட‌ம் சென்று அவ‌னை ந‌ட்பு கொண்டு அவ‌னுடைய‌ அனும‌தி பெற்று மெல்ல‌ ஒரு மாந்த‌ருவின் அடியிற் சென்று ந‌ன்கு க‌னிந்த‌க‌னிக‌ளைப் ப‌றித்துத்தின்று கொண்டு இன்ப‌த்தை அனுப‌வித்துக் கொண்டிருந்தான்.

இவ்விருவ‌ரில் யார் உய‌ர்ந்த‌வ‌ர் என்ப‌தைக் க‌வ‌னியுங்க‌ள். ம‌ர‌த்தையும் இலைக‌ளையும் எண்ணுவதால் ப‌ய‌னென்ன‌, ப‌சியை நீக்க‌வ‌ல்ல‌ ப‌ழ‌த்தைய‌ல்ல‌வா உண்டு ம‌கிழ‌ வேண்டும். அதுபோல‌, உல‌க‌த்தவ‌ர் ப‌ல‌ர் க‌ட‌லின் ஆழ‌ம் எவ்வ‌ள‌வு? உல‌கில் ம‌னித‌ர் எத்த‌னை கோடியுள்ள‌ன‌ர்? ஆணெத்த‌னை? பெண்ணெத்த‌னை? எந்த‌ பாஷை உய‌ர்ந்த‌து? உல‌க‌ந்தோன்றி எவ்வ‌ள‌வு கால‌மாயிற்று? ஏன் உல‌க‌ந்தோன்றிய‌து? இவை முத‌லிய‌ன‌ ஆராய்ந்து கொண்டே நாள் க‌ழிக்கிறார்க‌ள். ஒரு சில‌ர் ந‌ல்ல‌ குருநாத‌னை அடுத்து அவ‌ர‌ருளைப் பெற்று ஈஸ்வ‌ர‌ தியான‌ம் புரிந்து மெய்ஞ்ஞான‌ இன்ப‌த்தை நுக‌ர்கின்ற‌ன‌ர்.

உல‌க‌ நிக‌ழ்வுக‌ளை அறிவைக்கொண்டு ஆராய்ந்து குழ‌ம்பிக்கொண்டே இராம‌ல் அத‌ன் மூல‌த்தை நோக்கி ந‌க‌ர‌த்துவ‌ங்குவ‌தே ப‌க்குவ‌ம் ஆகும்.