Friday, July 10, 2009

யோகிராஜ் வேதாந்திரி மகரிஷியின் பொன்மொழிகள்


எண்ணமும் குணமுமே எக்காலத்திற்க்கும் வாழ்க்கையின் சிற்பி. எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திட்டால் எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும். உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே.

உண்ணும் உணவு உடல் வரை தான் பாயும். எண்ணும் எண்ணங்கள் பிரபஞ்சம் எங்கும் பாயும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குணங்களுக்கேற்ப்ப மனமே நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கிறது. மனம் தீயவற்றை நினைத்தால் மூளை அதனை தீய செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. அதுவே நல்ல செயல்களை நினைத்தால் மூளை நற்செயல்களை செயல்படுத்துகிறது.

சமூகத்தில் தீய எண்ணங்களை நினைப்பவன் தீயவனாகவும், நல்ல எண்ணங்களை நினைப்பவன் நல்லவனாகவும் உருவெடுக்கிறான். நீங்கள் நல்லவர்களாகவே வாழுங்கள். எப்போதும் நல்லவைகளையே நினையுங்கள்.

எண்ணமே எல்லாவற்றையும் இயக்கும் சக்தி. அவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வேண்டாத எண்ணங்கள் விரட்ட விரட்ட வரும். அவற்றை கவனைத்து வரிசைப்படுத்தி மனதில் அது தோன்றிடாமல் தியானிக்க வேண்டும்.

ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயல், அதற்குத் தேவையும் இல்லை. ஆசையைச் சீரமைக்க வேண்டும்.

மனதின் ஆசைகளினால் எழும் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போகக்கூடாது. பெருக்கினோமானால் அதன் மோகத்திலேயே மனம் சென்று கொண்டிருக்கும். அதனால் நிம்மதி என்பதை உணராமாலேயே மனம் துன்பத்தில் ஆழக்கூடும். எனவே தேவையைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெறுத்து ஒதுக்குவது துறவாகாது. புரிந்து உணர்ந்து கொண்டு தேவை மற்றும் தேவையற்றதை பிரிக்கக் கற்றுக் கொள்ளும் மனோநிலையே துறவு.

*இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.*