Tuesday, December 8, 2009

கிருஷ்ணா கிருஷ்ணா!


கண்ணனை காதலிப்பதைப் போன்றே நான் கண்ணதாசனையும் காதலிக்கிறேன். என் இறைவன் கண்ணனை நான் நண்பனாக, குருவாக, சகோதரனாக என்று பலவாறு விரும்பி வணங்குகிறேன்.

அந்த பக்தி அப்படியே கண்ணதாசனின் பாடலைக் கேட்கும் போது ஆழ்மனதில் இருந்து பிரவாகம் எடுத்து வெளியேறுவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பதிவிட உட்கார்ந்தபோது கண்ணதாசனின் பாடல்களில் இப்பாடல் சட்டென்று மனதைக் கனமாக்கியதால் இந்த பாடல் வரிகளை என் நண்பர்க்ளான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் காதலன் கண்ணதாசனின் வரிகள் இதோ!

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா!


ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா!

ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா!

தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)


தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!

தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா!

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா!

அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா! (கேட்டதும் கொடுப்பவனே)


நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா!

நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா!

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா!

குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா!


எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா!

_______________________________________________________________________________

பாடியவர் : டி எம் எஸ்

எழுதியவர்: கண்ணதாசன்

ரசித்தவர்: அடியேன் :-)


ஜெய் ஸ்ரீக்ருஷ்ணா!

2 comments:

Unknown said...

Dear Ram,

You forgot to mention two very important credits to this song.

Music by the great Mellisai Mamannar M.S. Viswanathan.

The great Nadigar Thilagam.

Thayidam vazhndhadillai...

Ennaiyilladhoru deepam.....

These two stanzas were suitably written for NT's character (his character name is Kannan) and keeping in mind the situation for the song.

Fantastic evergreen song.

Would be glad if you could give an explanation for the verse.

" saatriya maalayile...
dharmathai thedi nindrom...."

hayyram said...

///Would be glad if you could give an explanation for the verse.

" saatriya maalayile...
dharmathai thedi nindrom...." ///

நன்றி மொஹன்.

உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கிறது. நீங்களே மேலும் விளக்கினால் உங்களிடமிருந்தும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.!