Sunday, May 9, 2010

கீதோபதேசம் - வேலையப் பாரு!




அர்ஜுனன் கேட்கிறான்!

ஜனார்த்தனா! காரியங்கள் செய்வதைக் காட்டிலும் நிலையான புத்திதான் மேலானது என்பது உமது கருத்தானால் அப்பொழுது ஏன் என்னை இந்த கொடிய காரியத்தில் (போரில்) ஈடுபடச் சொல்கிறாய்?

முரண்பட்ட வார்த்தைகளால் என்னுடைய மனதைக் குழப்புகிறாய். எது எனக்கு நன்மை தரும் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்!


இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கண்ணன் இறையவதாரம் என்பதை அர்ஜுனனும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் அவன் தான் கடவுளின் அவதாரமாயிற்றே. அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே செய்துவிடுவோமே என்று அர்ஜுனன் நினைக்கவில்லை. தனக்குப் புரியவில்லை என்பதாலேயே "என்னைக் குழப்பாதே கண்ணா! தெளிவாகச் சொல் எது சரி என்று?" எனக் கேட்கிறான். முன்பு வேறொன்றைச் சொன்னாய், இப்போது இப்படிச் சொல்கிறாயே எது சரி என்று தர்கமும் புரிகிறான். அதே நேரத்தில் ஸ்ரீ க்ருஷ்ணரும் நான் கடவுள்..என் கட்டளையை அப்படியே நிறைவேற்று என்று கூறாமல் அர்ஜுனன் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் உபதேசிக்கிறார்.

ஆக கடவுளிடமே தர்கம் புரிந்து ஞானம் பெறும் சுதந்திரம் கொண்ட மார்க்கம் இந்து தர்மம் என்பது தெளிவாகிறது. மற்றவைகளெல்லாம் விசுவாசம் செய்யவேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அடிமைப்படுத்தும் தன்மையையே போதிப்பதாக இருக்கின்றன. ஆனால் அர்ஜுனனோ ஸ்ரீ க்ருஷ்ணனிடமே தர்கம் செய்து ஞானோபதேசம் பெறுகிறான்.


அர்ஜுனன் கேட்கிறான்!

ஜனார்த்தனா! காரியங்கள் செய்வதைக் காட்டிலும் நிலையான புத்திதான் மேலானது என்பது உமது கருத்தானால் அப்பொழுது ஏன் என்னை இந்த கொடிய காரியத்தில் (போரில்) ஈடுபடச் சொல்கிறாய்? முரண்பட்ட வார்த்தைகளால் என்னுடைய மனதைக் குழப்புகிறாய். எது எனக்கு நன்மை தரும் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்!



ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

பாபமற்றவனே! முன்னரே என்னால் இரண்டுவித நெறி முறைகள் கூறப்பட்டன. முதலாவது எல்லாவற்றையும் துறந்து யோகத்தில் நிலைத்திருப்பது. அதன் மூலம் முக்தி அடைவது. இரண்டாவது தன்னுடைய காரியங்களை முறையே செய்து வந்து அதன் மூலம் என்னை அடைவது.

அர்ஜுனா! ஒருவன் காரியங்களைச் செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைய மாட்டான். எல்லாவற்றையும் துறந்துவிடுவதால் மட்டும் ஒருவன் முக்தி அடைந்துவிட முடியாது.

உலகில் எவராலும் ஒரு நொடிப்பொழுது கூட செயலாற்றாமல் வீணே இருக்க முடியாது. படைப்பில் தோன்றிய குணங்களால் ஒவ்வொருவனும் தன்னை அறியாமலேயே கர்மாக்களைச் செய்து கொண்டிருக்கிறான்.

எவன் காரியங்களைச் செய்யாமல், புலன் விஷயங்களை மனதில் நினைத்துக் கொண்டு மனம் மயங்கி இருக்கிறானோ, அவன் கபடவேடதாரி எனப்படுகிறான்.

அர்ஜுனா! எவன் புலன்களை மனதால் கட்டுப்படுத்திக் கொண்டு செய்ய வேண்டிய செயல்களைப் பற்றில்லாமல் செய்து கொண்டிருக்கிறானோ அவனே மேலானவன்.

நீ உனக்கு விதிக்கப்பட கடமைகளைச் செய்யக்கடவாய். ஏனென்றால் செயல் புரிதல் செயலற்ற தன்மையை விட மேலானது. மேலும் எந்தக் காரியமும் செய்யாவிட்டால் உனக்கு தேகத்தைப் பராமரிக்கக்கூட இயலாது போய்விடும்.

உலக நன்மைக்காக செய்யப்படும் காரியங்களைத் தவிர இதர செயல்களால் கர்மபந்தம் ஏற்படுகிறது. எனவே குந்தியின் மகனே! செயல்களை விருப்பு வெறுப்பின்ரி செய்.

விருப்பு வெறுப்பின்றி தனது கடமைகளைத் தவறாமல் செய்துவருபவன் எவனோ அவன் யோகியாகிறான்!

- ஸ்ரீ க்ருஷ்ணர்.


4 comments:

kargil Jay said...

Dear Sri. Ram,
From whose writing / speach are you blogging the above? do you have mastery over Bhagwat Gita in order to answer any questions arisen by readers?

I am in madras, we can meet.

with regards,
Kargil Jay

hayyram said...

//From whose writing / speach are you blogging the above?//

sri krishna.

//do you have mastery over Bhagwat Gita in order to answer any questions arisen by readers?//

don no..if any body ask then only i can find about my self.

thanks for coming and ur comments jay.

kppradeep said...

Dear Sri Ram,
You are doing a good job and am regular reader of your blog. Carry on your good work so that we are all benefited. May God bless you for your wonderful work.
Pradeep

hayyram said...

thanks pradeep.