Wednesday, January 5, 2011

வள்ளுவர் வாக்கு! - இனிய உளவாக இன்னாத கூறல்!


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்க காயைத் தின்பது போன்றதே
என்கிறார் வள்ளுவர்.

பல நேரங்களில் நாம் இனிமையாக பேசுவதை விட வள்ளென்று விழுவது நம்மையறியாமலே நடந்து விடும். அதையே கொஞ்சம் மென்மையாக சொல்லி இருந்தால் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்று பின்னால் தோன்றும். அலுவலகத்தில் வேலை செய்யும் போது பல நேரங்களில் பலரும் இப்படி உணர்ந்திருப்பார்கள். சே! கொஞ்சம் மென்மையா பேசியிருக்கலாம் என்று.

முன்பெல்லாம் சரியாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனது அலைபேசியில் அழைப்பு வரும்..

அன்றும் அப்படித்தான்...

"ஏய், டெல்லி!" என்று அந்தப் பெண்குரல் அதிகாரமாக அழைக்கும் போது கொஞ்சம் மிரட்சியாக இருக்கும்.

"யாருங்க?" என்பேன்

"டெல்லி தானே?"

"இல்லீங்க, ராங் நம்பர்"

"இன்னாது..?"

"ஹலோ, ராங்க் நம்பருங்க!" என்பேன் எரிச்சலாக.

"ஆங்.." தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஒரே நபரிடம் எத்தனை முறை "ராங் நம்பர்" என்று சொல்லிக்கொண்டே இருப்பது. அதனால் பதில் கடுப்பாகவே வெளிப்படும். "கனியிருப்ப காய்கவர்ந்தற்று!"

மறுநாள்..

அதே பெண் குரல்.

"ஏய், டெல்லீ.."?

"ஹலோ.. ராங் நம்பருங்க!"

"இன்னது ராங் நம்பரா.. ஏய் எங்கடா இருக்க நீ?"

"ஏங்க ராங் நம்பர்ங்க...!"

அதற்குள் எதிர் தரப்பில் ஆண்குரல் "டேய்... த்தா..இன்னா ராங் நம்பரா? டேய் நாயே.. ****** ******, ********* , *************, ******** , ****************, மீண்டும் பெண்குரல் டேய்...**** *****". 'ஸேம் ப்ளட்"

ஆத்தாடி தொடர்பை நானே துண்டித்து விட்டேன்..... ராங் நம்பர்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?

நான் வாங்கிய அலைபேசி எண் இதற்கு முன்னர் டெல்லிக்கோ பம்பாய்க்கோ இருந்திருக்கலாம் என்று புரிந்து கொண்டேன்.

சரியாக ஆறு மாதம் கழித்து மீண்டும் அதே பெண் குரல்

"யாரு டெல்லியா?"

இந்த முறை எச்சரிக்கையாக பேச வேண்டும். எரிச்சலாக "ராங் நம்பர்" என்று சொல்லக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

மிகவும் அன்பொழுக அதி மரியாதையாக "மேடம், நீங்க தப்பா டயல் பண்ணியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் செக் பண்றீங்களா
மேடம்!" என்றேன்.

உடனே "ஆங் சரி!" துண்டித்துக்கொண்டார்.

மீண்டும் ஒரு முறை அதே ஊரை கூப்பிட்டார்...அந்தப் பெண்.

மறுபடியும் மிகவும் மரியாதையாக அன்பாக அதே போல் பேசினேன்.

இவ்வளவு மரியாதையாக நம்மிடம் பேசுகிறான். எனவே இவன் நிஜமாகவே நாம் அழைக்கும் டெல்லி இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பார் போலும். ராங் நம்பர் தொல்லை அத்தோடு முடிந்தது.

வள்ளுவர் வாக்கும் பலித்தது.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

வாழ்க வள்ளுவர்!

3 comments:

Madhavan Srinivasagopalan said...

அட.. சாப்டா பேசினா.. அவங்க ஆளு இல்லைனு ஆயிடிச்சா..
நல்லாத்தான் இருக்கு..

Suresh said...

Nice thought. Also would like to share with you this link http://bengalgenocide.com/mughalistan.php. I dont know to say :-(. In the name secularism, they are spoiling the country.

hayyram said...

நன்றி மாதவன்.

**********

@ suresh, நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கும் முகலிஸ்தான் பாடு கொஞ்சம் கஷ்டம் தான். ஏனினில் காஷ்மீர் தவிர கிழக்கே இருக்கும் இடங்களில் எல்லாம் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாகாலாந்து மணிப்பூர், மிசோரம் என்று பல பகுதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக மதம் மாற்றி கிரேட் நாகாலாந் என்று தனி நாடு கோரிக்கையை ஏற்கனவே அவர்கள் வைத்தாயிற்று. எனவே பங்களேதேஷிலிருந்து பாகிஸ்தான் வரை ஒரே எல்லைக்கோடு சாத்தியப்பட அவர்கள்கிறிஸ்தவ மிஷினரிகளோடு கொஞ்சம் சண்டை போட வேண்டும் என நினைக்கிறேன். மொத்தத்தில் இந்துக்கள் பாடு அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்கு மேல் கொஞ்சம் சங்கடம் தான். இப்போதே கன்னியா குமரியில் அவதிப்படுகிறார்கள். அதற்குள் எம்மதமும் சம்மதம் என்று லூசுத்தனமாக உளரிக்கொண்டிருக்கும் இந்துக்கள் முழித்துக்கொண்டால் சரி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.