Sunday, July 3, 2011

எது ஆன்மீகம்?




அலுவலகத்தில் சக பணியாளர்களில் ஒருவர் முஸ்லீம். நல்ல நண்பர். சாப்பிட்டு விட்டு மதியம் அக்கடாவென அமர்ந்திருக்கையில் அவர் வந்தார்.

"என்னசார், சப்டீங்களா?" என்றேன் நான்.

"ம்ம் ஆச்சு" - அவர்

"என்ன சார், சாப்டீங்க?" என்றேன் நான்.

"சாதம், குழம்பு, மீன் வறுவல்.." - அவர்.

"அப்புறம்.."

"அவ்ளோதான்.."

"மோர் சாதம் சாப்பிடலையா?" - நாம எப்போதும் மோர் சாதத்தோட தானே சாப்பாட்டுக்கு எண்ட் கார்டு போடுவோம் என்பதால் கேட்டேன்.

"மீன் சாப்பிட்டா மோர் சாப்பிடக்கூடாது!"

"அட்லீஸ்ட் நீர் மோர் குடிச்சா வயித்துக்காவது நல்லதாகுமே!"

"இல்லை, மீன் சாப்பிட்டா மோர் சாதமோ மோரோ எடுத்துக்கொள்ளக்கூடாது!" என்றார்.

எனக்கு ஆர்வம் மேலிட, "அப்படியா? ஏன், என்ன காரணம்? சாப்பிட்டால் என்ன ஆகும்?" என்றேன்.

அவர் சொன்னார் "அதெல்லாம் எதுக்கு, மீன் சாப்பிட்டால், மோர் சேர்க்கக்கூடாது என்று நபிகள் சொல்லியிருக்கிறார்.. !"

"அது சரி சார், ஆனா சாப்பிட்டா என்ன ஆகும்னு ஆராய்ச்சி பண்ணி பாத்திருக்கீங்களா? இல்லை என்ன ஆகும்ன்னு தெரிஞ்சாவது சொல்லுங்க! நானும் தெரிஞ்சிப்பேன் அல்லவா? நாங்கல்லாம் கறி மீன் முட்டைன்னு எல்லாத்தையும் ஒன்னா அடிச்சிட்டு கடைசியா தயிர் சாதத்தையும் சேத்து
கடாசிட்டு தான் தின்னையிலேயே சாய்வோம். எங்களுக்கு ஒன்னும் பண்ணலியே! உங்களுக்கு மட்டும் என்ன ஆகும்னு புரியலையே அதான் கேக்கறேன்!" என்றேன்.

அவர் "நபிகள் சொல்லியிருக்கார். மீறி செஞ்சி பாத்து ரிஸ்க் எடுக்க தயாரில்லை. அதனால இதுவரை அப்படி சாப்பிட்டதில்லை" என்று கூறி விட்டால் போதும் என இடத்தை காலி செய்தார்.


இந்த உரையாடலுக்குப் பிறகு தோன்றியதெல்லாம், எல்லாவற்றையும் இவர்கள் ஏன் மதமாகவே பார்க்கிறார்கள்? தத்துவார்த்தமாக இவர்கள் ஆன்மீகத்தை எங்கேயாவது பார்க்கிறார்களா? என்பது தான்.

"இதைச் செய்யச் சொன்னார், இதைச் செய்யக்கூடாது என்றார்" அவ்வளவு தான் ஆன்மீகமா?

"செய் அல்லது செய்யாதே! - DO's and DON's மட்டுமே கொண்ட புத்தகம் எப்படி ஆன்மீக புத்தகமாக முடியும். அதில் அனுமதித்ததைச் செய்வேன், அனுமதிக்காததைச் செய்யமாட்டேன் அவ்வளவுதான் என் ஆன்மீக வாழ்க்கை முறை என்றால் சுய சிந்தனைக்கு இடம் எங்கே இருக்கிறது?

இறைவனை இவர்கள் புறப்பொருளாகப் பார்க்கிறார்கள். அது சொல்வதைச் செய்யவேண்டும். அவ்வளவு தான். நாமோ இறை என்பதை நமது உள்ளாகப் பார்க்கிறோம். 'நீயே இறை, நீயே அதுவாக இருக்கிறாய்!' என்று மொத்த சக்தியையும் நாமாகப் பார்க்கிறோம். புறப்பொருளின் கட்டளைதான் ஆன்மீகம் என்று அதைப் பின்பற்றுவதற்கும் நமக்குள்ளேயே இறைத்தன்மையை உணர முயல்வதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.

என்றைக்காவது இவர்கள் இது போன்று சிந்தித்தாவது பார்க்க முயற்சித்திருப்பார்களா? என்று எண்ணுகையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு தத்துவார்த்தம் இல்லாத பிரம்பெடுத்தால் ஆடவேண்டும் என்கிற கட்டளைக்கிணங்கும் தன்மையை ஆன்மீகமாக பார்ப்பது புரியாத விஷயமாகவே இருக்கிறது.

இறைவனின் கட்டளைக்குக் கீழ்படிதல் மட்டுமே ஒருமிகப்பெரிய குழுவினரின் வாழ்க்கை நடைமுறை பழக்கம் என்றால் இறைவனின் கட்டளை என்று எதைச் சொன்னாலும் அவர்கள் செய்துவிடுவார்கள் தானே! ஆக ஒரு சமூகமே எளிமையாக சுயமாக சிந்திக்க வழிவகை செய்துகொடுக்கப்படாத திரைகட்டிய
குதிரை போன்ற வழிநடத்தலுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்றுதான் இதை எடுத்துக்கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட பழக்கப்படுத்தல் மூலமாகவே அவர்களால் மிகப்பெரிய சமூகத்தை "ஜிகாத்" என்கிற பெயரில் மனித சமூகத்திற்கு எதிராக வழிநடத்த முடிகிறது என்றால் மிகையாகாது.

இத்தகைய குழுவினரை பொதுவாக இவர்கள் இத்தகையவர்கள் என்று தீர்மானித்து விட முடியும் என்று நம்பலாம்.

1942ல் யங் இந்தியா பத்திரிக்கையில் அந்நாளைய பிரிவினைவாத கலவரங்கள் பற்றி காந்திஜி இவ்வாறு எழுதுகிறார்.:



"முஸ்லீம்களை ஒன்றுபடுத்தியதற்கும் விழிப்புணர்வூட்டியதர்கும், மௌல்விகளுக்கு மரியாதையும் அந்தஸ்தும் கிடைத்ததற்கும் நான் தான் காரணம் என்று சொல்லி ஹிந்துக்கள் எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள். வங்காளத்தில் ஹிந்துப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றிய
செய்திகள் பாதிக்குப் பாதி உண்மையாக இருந்தால் கூட மிகவும் பயங்கரமானவை. ஆனால் எனது சொந்த அனுபவத்தைப் பொறுத்தவரையில் முஸ்லீம்கள் பொதுவாகவே முரடர்கள்; மற்றவர்களைத் தூற்றும் போக்கை முஸ்லீம்களால் ஞாயப்படுத்த முடியாது."


புத்தகம்: தேசப்பிரிவினையின் சோக வரலாறு ('தி ட்ராஜிக் ஸ்டோரி ஆஃப் பார்டிஷன்' என்னும் நூலின் தமிழாக்கம்.

ஆசிரியர்: ஹொ வெ சேஷாத்ரி

இங்கே எடுத்தியம்ப வேண்டிய விஷயம் என்னவென்றால் காந்தியடிகள் "பொதுவாகவே மூடர்கள்" என்று தனது அனுபவம் வாயிலாகக் கண்டதாக எழுதியிருக்கிறார். ஆக ஒரு குறிப்பிட்ட கட்டளைக்கு இணங்குவது மட்டுமே எமது ஆன்மீகம், எமது வாழ்க்கை வழிமுறை என்று கூறும் குழுவினரை பொதுவாக இப்படித்தான் இருப்பார்கள் என்று இனம்கான முடியும் என்று தோன்றுகிறது.

கிறிஸ்தவத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான் பின்பற்றப்படுகிறது. ஆரம்பத்தில் அன்பு, கருணை என்று மயக்கிப் பின் இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் தண்டனை கிடைக்கும் என்று பயமுறுத்திப் பணியச் செய்யும் தண்டனைச் சித்தாந்தம் பரப்பப்படுகிறது.

இந்து தர்மத்தைப் பொறுத்தவரை ஆன்மீகத்தை ஒரு கணித ஃபார்முலா போலச் சொல்லி விட்டு அந்தக் கணக்கைச் சுயமாக போட்டு பார்த்து விடைகண்டறிய வேண்டிய பொறுப்பு உன்னுடையது என்று கூறிவிடுகிறார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் "அர்ஜுனா! நான் உனக்கு தேவையானவற்றை உபதேசித்து விட்டேன் அவற்றில் உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்வாயாக!" என்று பொறுப்பை அவனிடமே விட்டு விடுகிறார். ஆக அர்ஜுனன் கண்ணனின் கட்டளையாக எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அவன் கூறிய விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்து அதன் வழி நடந்து செம்மையான
வெற்றியைப் பெறுகிறான். அது நிலைக்கிறது.

எது சரி, கட்டளை இடும் ஆன்மீகமா? சிந்திக்கத் தூண்டும் ஆன்மீகமா?

.

13 comments:

Madhusudhanan D said...

In marriages, we are doing a lot of rituals, mantras, etc. Do we know the reason behind each?

But we do that. Every religion has some things like that. We are not told the reason, or they were not conveyed properly across generations.

In our culture, we do Suryanamaskaram. But doctors say that it is not good to see Sun with naked eye. But we do that. After Upanayanam, a Brahmacharin should see Sun everyday with naked eye.

Many people do not know the reason for that. But they follow. I do not know the reason.

This is called Abstraction. For example, we are buying a vaccum cleaner. But we do not know how it creates low pressure and sucks the dust. It is not necessary for us to know that. Hence they are not given to us. We need to know how to switch it on and off. The inner details are concealed from us. that is called abstraction.

This is also a similar to that. We cannot blame them for everything. But we can try to know the reason if interested.

hayyram said...

// But doctors say that it is not good to see Sun with naked eye// for suryanamaskaram also we taught to see the sun between the fingers not with open eyes.

Madhusudhanan D said...

Yes I meant between the fingers only. Yet it causes strain on our eyes.

Anyway the point is that we do not know the reason behind all our customs.

reno85 said...

ரொம்ப நாள் பிறகு சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு

hayyram said...

நன்றி reno85, ஏனெனில் ரொம்ப நாளா பதிவு பக்கமே வர முடியாமல் போனது!

hayyram said...

மது, //Anyway the point is that we do not know the reason behind all our customs// நமக்குத் தெரியவில்லை என்றாலும் அதை ஆராய்ந்து பார்க்கவோ எதிர் கேள்வி கேட்டு விளக்கம் பெறவோ நமக்குத் தடையில்லை. அதுவும் மதரீதியான தடைகள் இல்லை. ஆனால் பிறருக்கோ மதத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதை அப்படியே கட்டளையாக நிறைவேற்ற வேண்டும், அப்படிச் செய்யாமல் விட்டால் என்ன ஆகும் என்கிற ஆராய்ச்சி மனப்பான்மைக்கே அங்கே இடமில்லை என்பதைக் குறிப்பிடுகிறேன்.

RAJA said...

மதுசுதனன்
நாம் செய்யும் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஏன் செய்கிறோம். அதனால் பலன் என்ன? என்று நீங்களே ஆராய்ச்சி செய்து விமரிசனம் செய்யலாம். சுரிய நமஸ்காரம் என்பது வேறு. சுரியனை நேரடியாக கண்ணால் பார்ப்பது என்பது வேறு. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் காலை இளம் சுரியனை நேரில் பார்த்தால் கண்களுக்கு நல்லது என்பார். 70 வயதிற்கு மேல் இருக்கும் அவர் கண்ணாடி போடவில்லை. எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லது என்று நம் மதம் சொல்கிறது. டாக்டர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். ஆனால் எண்ணெய் தேய்த்து குளித்து பார்த்து விட்டு பலன் இருக்கிறதா? இல்லையா என்று சொல்லுங்கள். டாக்டர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். டாக்டர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள். டாக்டர்களால் குணப்படுத்த முடியாததை சிலர் எளிதாக குணப்படுத்தியிருக்கிறார்கள்.

Tamilan said...

நல்ல பதிவு நண்பரே! குரானிலேயே இருக்கிறது கேள்வி கேட்காமல் அடிபணிந்துபோ என்று .. அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

hayyram said...

நன்றி திரு ராஜா, திரு தமிழன்.

கவி அழகன் said...

நல்ல கருத்துள்ள பதிவு

கிருபா said...

@ பதிவர்

மனிதன் கடவுள் மதம் என்னும் முட்டாள்தனத்தில் இருந்து வரும் வரை இந்த கொடுமைகள் இருக்கவே செய்யும்
இதற்கு இந்து மதமும் விதிவிலக்கல்ல
சரிதானே

//இந்துதர்மம் மனோவியலும்,அறிவியலும்
ஆகும் //

இப்படியே எத்தனை நாளுக்கு சொல்ல போகிறீர்கள்,நீங்கள் சொவதை பார்த்தால் உங்கள் நன்பர் சொன்ன மீன் ,மோர் தயிர் கதைக்கும் என்ன வித்யாசம்

saravana kumar said...

திரு.மதுசூதனன் அவர்களே...
நீங்கள் திரு ராம் அவர்களின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை.ஹிந்து மத நம்பிக்கைகள் வெறுமனே திணிக்கப்பட்டவை அல்ல. நீங்கள் விரும்பினால் அதற்குரிய விளக்கத்தை தேடி அடையலாம். விளக்கம் திருப்தியானதாக இல்லை என்றால் மேற்படி வழக்கத்தை விட்டுவிடலாம்.ஆபிரகாமிய மதங்களின் வழக்கம் அப்படியல்ல. தேவதூதன் இதை சொன்னார். அதை செய். அவ்வளவுதான்.மாட்டேன் என்றாலோ,விளக்கம் தேடினாலோ அது மத விரோதம்.அவ்வளவுதான்.
மேலும், சூரிய நமஸ்காரம் என்பது அதிகாலையில், சூரிய உதயத்தின் போது செய்ய வேண்டிய பயிற்சி. அப்போது சூரியனை வெறும் கண்களால் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது.
முதலில் நம் மத வழக்கங்களை புரிந்து கொள்வோம். பிறகு மாற்று மதத்தினருக்கு வக்காலத்து வாங்கலாம்.

radhakrishnan said...

நல்ல பதிவு.முதலையும்,மூர்கனும்
கொண்டது விடாது.எதையும் பகுத்தறிவு
கொண்டு ஆராய்ந்து செயல் படுத்தவேண்டும் என்பது பெரியோர் வாக்கு.அது ஏன் பலருக்குப்புரிவதில்லை.
வாழ்த்துக்கள்.