Tuesday, July 26, 2011

நல்ல சிந்தனை கொண்டிருந்தால் நல்ல பிள்ளை பிறக்கும்!



நற்குணம் கொண்ட பெற்றோர்களுக்கு தீய குனம் கொண்ட குழந்தைகளும், தீய குணம் கொண்டவர்களுக்கு நற்குணம் கொண்ட பிள்ளைகளும் பிறக்க சில காரணங்கள் இருக்கிறது.

பரிணாமத்தில் வந்த பிறவித் தொடரில் எண்ணற்ற பதிவுகள் மனிதனிடம் இருக்கும். அவற்றை ஆழ்நிலைப் பதிவு என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தீயகுணம் உள்ளே அடங்கி இருக்கும் போது நற்குணம் செயலுக்கு வந்து கொண்டிருக்கும். அப்போது ஒருவன் நல்லதையே செய்வான்
நல்லவனாகவே வாழ்வான்.

உள்ளே அடங்கியிருக்கும் தீய குனங்களையும், தீய செயல்களையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அவை கருமையத்திலே மட்டும் ஆழ்நிலைப் பதிவாக இருக்கும். அவனுடைய வித்துவின் மூலம் பிறவித் தொடராகத் தோன்றும் குழந்தைகளிடம் அந்த எண்ணங்கள் எழுச்சி பெறும். அதனால் அந்தக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் செய்ய முடியாமல் விட்டுவிட்ட தீய செயல்களையும் செய்கிறார்கள்.

அதனால் தான் நம் முன்னோர்கள் மனதால் கூட தீயசெய்லகளை நினைக்காதே என்பார்கள். அந்த நினைவே ஆழ்மன பதிவாக மாறி நாம் வெளிப்படுத்தாவிட்டாலும் நம் வழித்தோன்றல்களின் ஜீன்களின் பதிவாக மாறி அவர்களது குணத்தை மாற்றிவிடும்.

அதேபோல, நல்ல எண்ணங்களெல்லாம் ஒருவரிடம் அடக்கமாகவும் இருக்கலாம். வேறு வழியில்லாது ஒருவர் கசாப்புக்கடை வவத்திருப்பவராக இருக்கலாம். அவர் மனதில் தூய்மையான பணிசெய்தால் நல்லது என்ற எண்ணமே மேலோங்கி இருக்கலாம். அப்போது அவருக்குப் பிறக்கக்கூடிய குழந்தை அந்த நல்லெண்ணத்தைப் பதிவாகப் பெற்று இருக்கும்.

எந்த எண்ணத்தை மனதில் வைத்திருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லையோ அவை கருத்தொடரான குழந்தை வாயிலாகச் செயலுக்கு வரும்போது அத்தகையவருடைய குழந்தை உயர்ந்த எண்ணமுடியதாக இருக்கிறது.

அதனால் தான் நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் மனத்தால் எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பார்கள்.

அதேபோல, ஒருவர், பூஜைகளெல்லாம் செய்து கொண்டிருப்பவர். அதே நேரத்தில் வருகின்றவர்களிடமெல்லாம் என்ன பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவருக்குப் பிறக்கும் குழந்தை பிறர் வளம் பறித்தலில் முதலிடம் வகிக்கும்.

தீய பதிவுகளைத் தவிர்க்க வேண்டுமெனில் மனதை விழிப்புடன் வைத்திருந்து
எப்போதும் நற்சிந்தனையையே வளர்த்து தீய பதிவுகள் எழாது காத்துக் கொள்ளும் நற்பண்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

- ஸ்ரீ வேதாந்திரி மகரிஷி





----------------------------------------------------------------------------------------------------------


'உங்கப்பன் எந்த நேரத்தில தான் உன்னையப் பெத்தானோ?' என்பார்களே, அதன் அர்த்தம் இதுதானோ?


.

No comments: