Thursday, January 5, 2012

மருத்துவம் என்கிற மகா கொள்ளை!





தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்?

 டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

 ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை. 

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

 இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா? நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

 சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம், கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை. இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

 ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை. சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை?

 புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

 "அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.

 வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

 மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று? சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.

 தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே...

 தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.

நன்றி:- தினமணி
________________________________________________________________________________

மனிதாபிமானம் குறையும் இடத்தில் போராட்டம் வரத்தான் செய்யும்! மருத்துவம் என்பது மனிதாபிமானமற்ற மகாக்கொள்ளையான பிறகு கொலையும் கலப்பதில் ஆச்சரியம் இல்லையே!

சத்தமில்லாமல் மருத்துவர்கள் எத்தனை பேரைக் கொண்றிருப்பார்களோ???! அத்தனையிலும் இருந்து அவர்கள் தப்பிக்க ஒரே ஆயுதம், உயிர்பயத்திலிருக்கும் நோயாளிகளின் உறவினர்களிடம் 'நோயாளிக்கு என்ன நடந்தாலும் மருத்துவரோ மருத்தவமனையோ பொறுப்பில்லை' என்று எழுதி வாங்கிக்கொள்வதால் தானே!  

இந்தியாவில் இரக்கமற்ற தொழிலென்றால் இன்றைய தேதியில் அது மருத்துவம் தான்!




.

11 comments:

பிரபு said...

நண்பரே !

முற்றிலும் உண்மை. அது மட்டும் அல்ல.பெரிய மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்வை நேரம். மற்ற நேரங்களில்? இதை போல் மூன்றிற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் தங்களது சொந்த மருத்துவமனை என்று பணத்திற்காக மட்டும் சேவை அல்ல வேலை பார்க்கும் மருத்துவர்கள் அதிகம். அதனால் என்ன பாதிப்பு? நோயாளிக்கு முதல் நாள் மருத்துவம் பார்த்தால் திரும்பவும் மறுநாள் அவர் பார்வை நேரத்தில் மட்டுமே. இப்படி தான் இன்று மருத்துவர்கள் செய்வது.

அதனால் மிகவும் பாதிக்க பட்டவன் என்ற முறையில் இதை எழுதுகிறேன். என் குடும்பத்தில் 5 வயது குழந்தை இப்படி பட்ட மருத்துவத்தால் இறந்தது. அதை விட வருந்த தக்க விசயம். அந்த குழந்தை என்ன காரணத்திற்காக இறந்தது என்று மருத்துவர்களுக்கு தெரியாதது கொடுமை. கடைசியாக இறப்பு சான்றிதளுக்கு சான்றிதழில் அவர்கள் கொடுத்த காரணம் டெங்கு காய்ச்சல். 4 நாட்கள் 3 மருத்துவமனை, நரம்பியல், மூளை மருத்துவம், சிறுநீரகம் என்று எல்லா மருத்துவர்களும் பரிசோதனை செய்து இதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை நீங்க இந்த மருத்துவரை பாருங்க இந்த டெஸ்ட் எடுத்துட்டு வாங்க இது தான். யாரும் கடைசி வரை இது தான் காரணம் என்று கூறவில்லை. அந்த குழந்தை இறந்ததை விட அந்த 4 நாட்கள் மருத்துவர்கள் மட்டும் மருத்துவ உதவியாளர்கள் நரம்பு தேடறேன், இந்த டெஸ்ட் பண்ண அந்த டெஸ்ட் பண்ண என்று அவர்கள் அந்த பிஞ்சு உடலில் காயபடுத்தாத இடங்களே இல்லை. அவர்களுக்கு நோயாளியின் உடல் வெறும் சதையும் எலும்பும் தான்.

அன்று முதல் இன்றுவரை எதற்காகவும் நான் மருத்துவமனை செல்லவதில்லை. (குணபடுத்த தெரியாவிட்டால் வெட்டி எறிவது)கசாப்பு மருத்துவம் - நோயை குணப்படுத்துவது இல்லை நோயை அப்போதைக்கு நிறுத்துவது மட்டும் தான். முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற வைத்திய முறைகள்(பாட்டி வைத்தியம்) இன்றைய மருத்துவத்தை விட மிகவும் உயர்வானது. அதன் பலன் அதிகம். உடலுக்கு தீங்குகள் அற்றது. எல்லாவற்றிற்கும் நமது மருத்துவ முறைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள ஆர்வம் மற்றும் தேடல் இருந்தால் போதும். நமது உடலை மற்றும் நம்மை சார்ந்தவர்கள் உடல் நலனை காக்க முடியும். உடம்பு சரி இல்லையா hospital போனையா ? கேட்கறது பேஷன் ஆகி போச்சு.

kppradeep said...

Dear Hayyram,
1.This post of yours is really sad and hurts thousands of Doctors. So many of the good things done by us never sees the light of the day.
2. If you have any doctor in your circle please ask them about this
3. Since the trust between patient & Drs are now becoming rare i have personally convinced many of my younger cousins not to do Medicine
4. Like society like professionals including Doctors
5.Such universal condemnation of doctors will discourage us from taking risky potentially savable patients
6. Media will always love juicy news but i did not expect this in your blog.
7.By being bad no one feels good.
8.This post of yours is from a preopiniated angle and i feel very sad.
9. For every one bad doc you show i can show thousands of good ones.
We all also believe in law of Karma and if some one is bad they will have to face the wrath of GOD.
More than the general public its we who believe-"Doctors treat while GOD only heals" as Medicine is not an exact science.
If this continues in future no one will take up Medicine in general and Anaesthesia/Obstetrics in particular.
Is asking money for treatment given a crime?. Do you think we all are so heartless that we will not do anything till the money is paid?
One Gentleman by name Desikan a consumer activist was very critical in a TV prog yesterday. Whats stopping him in starting a hospital of his own?
Many of you wont know how many times we have offered our services free or at a concessional cost. thats between us and the patient.
moreover whenever we have a difficult surgery the day we see the patient and till he's discharged gives us sleepless nights.
If everything is in our hand then no doctor or their friends and relatives will die.
thanks for your patient reading and please do not KILL us by your words as if we are all demons
With deep regret
Dr Pradeep Kumar

kppradeep said...

All patients cannot be saved whether they have money or not. Ex murasoli Maran.
Some patients can be cured by their own good karma and mass prayer Ex MGR/Super Star.
We are not GODS but just ordinary humans.
Great Yogi's and Saints only can heal any one anywhere anytime.

kppradeep said...

Dear Sir,
Below is the prayer kept in my friends hospital where i also go there as a doctor

DEEPAM PRAYER


It is indeed a tragedy of circumstances my Lord that my livelihood should depend on the sickness of others.


But let me take as an excellent opportunity to mitigate their sufferings. This, I take as a great responsibility you have cast upon my shoulders. Grant me the strength my God to fulfill this task in all earnestness.


Grant that I may not treat patient as an object for exposing my skills, nor consider him as an experimental for research, nor may I look up on him as a source of income. Let nothing but the desire to restore his health be my sole motivation. While doing so neither his wealth nor his poverty influence my treatment.


Bless me with such compassion and patient as would enable as would enable me to listen to his woes attentively, keeping in mind his emotional as well as physical suffering but never once forgetting that apart from correct judgement and proper medication he is also badly in need of some kind words of reassurance and hope.


Give me also the good sense to understand and appreciate the very natural anxiety of his kith and kin and also their financial difficulties.


O God, in this benevolent profession you have privileged me to be in, I know that I may have to tread a slippery path. Hold me on my Lord, that I may not succumb to the enticement of “infective incentives” and unknowingly fall in to the dirty pit.


Let my faith in you unwavering, every moment, at times, of miraculous recoveries, and at times of unpreventable agony and loss. Let me never forget that, you are the Healer and I am just a privileged agent.


Let me never grow haughty and play God, realizing, that my very breath is in your hands. You are the healer and I am just a privileged agent.


Thank you God for granting this honour of caring for otherlives.

hayyram said...

ப்ரதீப், இந்த இடுக்கை உங்களைப் போன்றவர்களை புன்படுத்தும் நோக்கத்தோடு இடப்பட்டதல்ல! உங்கள் மனம் புண்பட்டதற்கு நான் வருந்துகிறேன்! இது தினமணியின் தலையங்கம். தினமணியின் சுட்டியை நன்றியுடன் குறிப்பிட்டு அதை பலரும் படித்தறிய வேண்டி இங்கே இடப்பட்டது தான்.

இந்த தினமணி தலையங்கத்தில் மருத்துவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை, ஏன் அப்படிச் செய்யவில்லை என்று பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். நீங்கள் வருத்தப்பட்டது போல அதற்கும் பதில் சொல்லி இருக்கலாம். ஒரு மருத்துவராய்!

மருத்துவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை விட மக்களின் உணர்வுகள் மீது அவர்கள் உண்டாக்கி இருக்கிற தாக்கம் எத்தகையது என்பது தான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!

நெருக்கடியான டிராபிக்கை உடைத்துக்கொண்டு அசுரவேகத்தில் ஆம்புலன்ஸு பறக்கும் போது அருகே டிவிஎஸ் பிப்டி ஓட்டிக்கொண்டிருந்த தாத்தா கேட்டார் - 'இவ்ளோ வேகமா உசுரக்குடுத்து போறனுகளே... ஒடனே ஓடி வந்து வைத்தியம் பாக்க ஆஸ்பத்திரில டாக்டருங்க இருக்கவா போறானுவ??!!!

இந்த அவநம்பிக்கையை மருத்துவர்கள் தான் உண்டாக்கி இருக்கிறார்கள்! எந்த அப்பாவி மக்கள் மருத்துவர்களை உயர் குடிமக்களாக பெருமரியாதைக்குரியவர்களாக வைத்திருந்தார்களோ அவர்கள் தான் இன்றைக்கு வயிறெரிந்து சாபம் விடுகிறார்கள்! திட்டுகிறார்கள். அடித்து உதைக்க முஷ்டியை உயர்த்துகிறார்கள்! இதற்கு மருத்துவர்கள் வருந்துவதை விட, மக்களிடம் நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்படுத்தச் செய்யவேண்டியது தான் ஒரே வழி!

///என் குடும்பத்தில் 5 வயது குழந்தை இப்படி பட்ட மருத்துவத்தால் இறந்தது. அதை விட வருந்த தக்க விசயம். அந்த குழந்தை என்ன காரணத்திற்காக இறந்தது என்று மருத்துவர்களுக்கு தெரியாதது கொடுமை. கடைசியாக இறப்பு சான்றிதளுக்கு சான்றிதழில் அவர்கள் கொடுத்த காரணம் டெங்கு காய்ச்சல்.///

இப்படி வருத்தத்துடன் இங்கே பதிவு செய்திருப்பது, ப்ரிஸ்கிரிப்ஷனில் என்ன எழுதியிருக்கிறது, அதை தன் வீட்டுக் குழந்தைக்குக் கொடுத்தால் என்ன மாதிரி உடலில் வேலை செய்யும் என்றெல்லாம் தெரியாத ஒரு அப்பாவி மனிதன் தான்! அவரைப் போன்றவர்களின் அவநம்பிக்கையை போக்க மருத்துவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

எந்த மருத்துவமனையிலாவது ஒருவரின் வியாதியையும் அதற்குத் தரப்படும் மருந்தையும், ஏன் கொடுக்கிறோம் என்கிற காரணத்தையும், அது என்ன வேலை செய்யப்போகிறது என்பதையும் உரியவர்களிடம் சரியாக விளக்குவது உண்டா?

நிறைய புலம்பல்கள் மருத்துவமனைகள் மீதும் மருத்துவர்கள் மீதும் இருக்கிறது, மக்கள் குடும்பங்களுக்குள் பேசி, வீதிகளில் பேசி , இப்போது தான் செய்திகளில் பேசப்பட்டு ஊடகங்களில் உணர்ச்சிப் பெருக்குடன் வெளிவரத் துவங்கி இருக்கிறது!

எல்லா மருத்துவர்களும் கெட்டவர்கள் என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஆனால் நூறு கோடி மக்களில் 70% நடுத்தர மற்றும் ஏழைகள் மட்டுமே வாழும் நாட்டில் மருத்துவமனையும் , மருத்துவமும் தொழிலாக மாற்றப்பட்டால் இது போன்ற உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கத்தான் செய்யும். அதன் தாக்கம் எங்கிருந்து துவங்குகிறது என ஆராய்ந்து கசப்புணர்வை போக்க வேண்டியது, நோயாளிகளிடம் பணத்தை மட்டுமே பாராது கொஞ்சம் மனிதத்துடனும் பார்க்க வேண்டியது மருத்துவர்களின் கடமை, அது உணரப்படுவதில்லை!

இறுதியாக

///மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று?// என்பது தினமணி தலையங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி!

என் சந்தேகம்..உயிருள்ள மனித உடலை வைத்து மருத்துவர் ஒருவரின் அராய்ச்சி, வெளியே தெரிந்தது இது, வெளிவராமல் ரகசியாமாக எத்தனையோ??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

kppradeep said...

Dear Ram
1.Manaparai matter was exposed and condemned by that branch of IMA then it self
2.Media will ask thousand questions after any incident. Before hearing both sides its foolish to come to any conclusions
3. Most often being critical care specialist after explaining the condition of the patient, the attender asks us- Nothing will happen no, which no doctor can answer. Moreover we see suddenly a new relative coming after a week questioning us whats happening. Is it possible to explain to each and every relative?
4.The friend who posted first comment saying-I lost my child- I feel sorry for him as losing ones children is the biggest tragedy. Without knowing full details i cannot comment on one side of the story. I can only say some thing like Collecting blood sample from children is very difficult and some times the diagnosis is also difficult to arrive at
5.Please go to a doctor who spends time with you to explain,that there are many people who say Doctor did not tell every thing even after explaining
6.Accept the fact that our people do not want to spend money for their health.
7.If you people start killing doctors because patient dies many of us will be killed as we cant save all even if it is our own relative or the CM or PM
8. All the small hospitals will vanish and you will have only bigger ones like Apollo or Hospitals run by powerful politicians. You and I cant take treatment there as it will be atleast 100 times the cost of smaller hospital.
9.Though i accept there are some Black Sheeps amongst us talk to your classmate/relative who is a Doctor for better understanding
10. Unless we explain all the details of the disease to the best of our ability no patient will come to us.
11.Has any media/blogger heaped praise on any Doctor for saving some patient anywhere?
12. Even when our children have very high fever we give medicines to them and go to see our patients. Day/Night Rain or no rain flooded roads or not we do offer our service which any amount of money can compensate.
This high handed condemnation of Doctors by the media will deliver the final blow to the patient doctor relationship which is paramount.
Let me finish by citing two incidents
1.One well educated person comes to my friends clinic and says- Dr My mom has cataract but my dad only has taken insurance;Can you help me impersonate so that i can claim insurance. What he wants is operate on my mom but fill insurance form as if his dad has been operated
2. Many times the patients tell us dont write in case sheet that i suffer from such disease as i wont be covered by insurance.
What do you say about all these.
If there are many greedy crooks in society so it will be seen in any profession including Medicine.

hayyram said...

///1.Manaparai matter was exposed and condemned by that branch of IMA then it self///

அன்புள்ள ப்ரதீப், அந்த மருத்துவர் மீதும் அவர் மகன் மீதும் ஒரு உயிரை சொந்த பரிசோதனைக்கு பயன்படுத்தியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை! ஒரு வேளை மருத்துவரின் மகன் பிரசவ ஆப்பரேஷன் செய்யப் போய் அந்த பெண் இறந்திருந்தால் வெளியே மகன் விஷயத்தைச் சொல்லாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் பேஷன்ட்டின் உடல் நிலை மோசமானதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி இருப்பார்கள். இதற்கெல்லாம் தைரியம் கொடுப்பது எது..'நோயாளிக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், மருத்துவரோ, மருத்துவ மனைகளோ பொறுப்பேற்காது' என்று எழுதி வாங்கிக்கொள்கிறீர்கள் என்கிற சட்டப்பாதுகாப்பு தானே! எந்த மருத்துவரிடம் சண்டைபோட்டாலும் அவர் கேஸ் போடு பார்த்துக் கொள்கிறேன் என்பார். அந்தளவிற்கு சட்டத்தை தங்கள் அத்தனை நிகழிவிற்கும் சாதகாமக பயன்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

///6.Accept the fact that our people do not want to spend money for their health.
7.If you people start killing doctors because patient dies many of us will be killed as we cant save all even if it is our own relative or the CM or PM///

அன்பிற்குரிய ப்ரதீப், நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்,

மருத்துவம் வியாபாரமாக, தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதை மருத்துவர்களே ஒத்துக்கொள்கிறார்கள்! வியாபாரம் என்றால் கொடுத்த பணத்திற்கு பொருளை வாங்கிக்கொள்வது ஒரு மனிதனின் உரிமை தானே! அப்படியென்றால் ஒருவரின் உயிரைக் காக்கிறேன் என்று கூறி லட்சம் லட்சமாக பணம் வாங்கிக் கொண்டு,காப்பாற்றாமல் பிணத்தை கையில் கொடுத்தால் வஞ்சிக்கப்பட்டவனின் நிலை என்ன?

ஒரு மனிதருக்கு விபத்து நேர்ந்து விட்டது, அவசரசிகிச்சையில் சேர்த்திருக்கிறார்கள், சேர்த்த முதல் நாள் பணத்தை கொடுத்தால் தான் ட்ரீட்மென்ட் துவங்குவார்கள். பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பணம் கட்ட சொல்வார்கள். ஏனெனில் மருத்துவம் தொழிலல்லவா, அதற்கு சுமார் ஒரு லட்சம் செலவு செய்வோம், பிறகு ஐசியூ வில் சேர்ப்பார்கள், அதற்குள் மருந்து வேண்டி பணம் கட்டச் சொல்வார்கள்,பிறகு லாட்ஜ் நடத்துவதைப் போல ரூம் வாடகை, ஆப்பரேஷன், தியேட்டர் வாடகை, ஐசியூ வாடகை, கரண்ட் செலவு என அத்தனைக்கும் பணத்தை வாங்கி விடுவார்கள். அத்தனைக்கும் ஒரு நோயாளியின் சம்பந்தப்பட்டவர் மருத்துவமனையிடம் பணம் கொடுக்கிறார். ஏன், நோயாளியைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நம்பித்தானே! கடைசியில் என்ன ஆகும், "ஸாரி , முயற்சி செய்துவிட்டோம் , காப்பாற்ற முடியவில்லை இறந்து விட்டார்" என்பார்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரும் மருத்துவரும்.

அதற்குள் 3 ,4 லட்சங்கள் செலவாகியிறுக்கும். அத்தனைக்காசையும் வாங்கிக்கொண்டு குணப்படுத்த முடியவில்லை என்று சொன்னால், செலவழித்தவனுக்கு என்ன பதில்?! மருத்துவம் தொழில் என்னும் போது வாங்கியக் காசுக்கு நீங்கள் பணம் கொடுத்தவன் எதிர்பார்த்த பொருளை கொடுப்பது தானே ஞாயம்! அப்போது மட்டும் நாங்கள் கடவுள் இல்லை, ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டுமென்றால் உயிருக்கு விலை வைத்து பணம் பறிக்க நீங்கள் யார்?

குறைந்த பட்சம் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாமல் இறந்து போனால் அவனுக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் பாதியையாவது எந்த மருத்துவமனையாவது திருப்பி கொடுத்திருக்கிறதா? அதுவெல்லாம் மருத்துவர்கள் செய்த வேலைக்குக் கூலி, மருத்துவமனை உபகரணச் செலவுக்கு விலை, ஆனால் உயிரைக் காப்பது எங்கள் வேலை இல்லை என்று பணத்தை மட்டும் கறந்து விட்டு மருத்துவர்கள் விலகிக்கொண்டால் அது ஞாயமான தொழிலா?

குறைந்த பட்சம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுபவர்களுக்கு மட்டும் அவர்கள் கட்டிய பணத்தை திருப்பிக்கொடுக்கவோ, கட்டணத்தில் சலுகைகாட்டவோ எந்த ஆஸ்பத்திரியும் முன்னுக்குவராத போது மனிதம் மறந்த தொழில் மீது மக்களின் உணர்ச்சி இப்படித்தானே இருக்கும்?

hayyram said...

மருத்துவம் காசு பார்க்கும் தொழிலான பிறகு இதுபோன்ற உணர்ச்சி போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும் தான்!

ஒரு முறை அரசு ஆஸ்பத்திரியில் கை விரல் துண்டிக்கப்பட்ட ஒரு வடநாட்டவர் வலியுடன் வந்திருந்தார். அவர் வேலை செய்த இடத்தில் விபத்து நடந்து விட்டது, உடன் வந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அமரவைத்து போய்விட்டார்கள். வடநாட்டிலிருந்து வந்து இங்கு ரூமில் தங்கி வேலை பார்ப்பவர் எனபதால் பார்க்க யாரும் இல்லை.

அரசு ஆஸ்பத்திரியில் வெளி மாநிலக்காரர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கட்டணமாக கட்ட வேண்டுமாம்! வந்தவரிடம் அந்தப் பணம் இல்லை. அவரை சேர்த்துவிட்டுப் போனவர்களும் பணம் கட்டவில்லை, சுமார் 3 மணி நேரம் வலியால் துடித்து கூவிக்கொண்டே இருந்தார் அவரை எந்த மருத்துவரும் பார்க்க வில்லை. ஆஸ்பத்திரி சிப்பந்திகள் யாரும் அவருக்கு முதலுதவி கூட செய்ய முன்வரவில்லை. கட்டணத்தை கட்டி ரசீது காட்ட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

பின்னர் சுற்றி இருந்தவர்களெல்லாம் அவர் கஷ்டத்தை பார்த்து கொஞ்சம் காசுபோட்டு, அவரிடம் இருந்த இருநூறு ரூபாயையும் வாங்கி ஒரு 800 ரூபாயாகச் சேர்த்து அவரை விட்டே கெஞ்சிக் கூத்தாடி இவ்வளவு தான் இருக்கிறது என்று கூறி கட்டச்சொன்னார்கள். அதைக் கட்டிய பின்னர் தான் அவருக்கு சிகிச்சை துவங்கியது! நடந்த இடம் ஸ்டான்லி மருத்துவமனை!

என் அலுவலக நண்பரின் விரல் அறுவை சிகிச்சையை முன்னிட்டு அங்கே சென்ற போது நடந்த காட்சி இது!

இந்தளவு மனிதாபிமானம் தான் மருத்துவத்தில் தொடர்ந்து காணமுடியுமென்றால் அவற்றைப் பார்த்தே மறத்துப்போய் வயிறெரிந்து இருக்கும் மனிதர்களின் உச்சக்கட்ட கோபம் இப்படித்தானே இருக்கும்!

நீங்களே சொல்லுங்கள்... பணம் கட்டாதவனுக்கு அல்லது கட்ட முடியாத ஒருவனுக்கு உங்கள் மருத்துவமனையில் அல்லது தமிழகத்தின் பெரிய மருத்துவமனையில் என்ன தான் அலறித் துடித்தாலும் சிகிச்சையை துவங்குவீர்களா?

பணமில்லாதவனுக்கு அரசு ஆஸ்பத்திரியிலும் நிம்மதியான வைத்தியம் கிடைக்காது, தனியார் மருத்துவமனையும் உள்ளே சேர்க்காது, இந்தளவு வியாபாரமயமக்கப்பட்ட பிறகு மக்கள் மட்டும் மருத்துவர்கள் மீது இன்னும் தெய்வீக உணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன ஞாயம்???

hayyram said...

///1.One well educated person comes to my friends clinic and says- Dr My mom has cataract but my dad only has taken insurance;Can you help me impersonate so that i can claim insurance. What he wants is operate on my mom but fill insurance form as if his dad has been operated///

இதற்கு என்ன காரணம்? மருத்துவமனை என்றாலே லட்சத்தில் செலவழிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கும் போது, நமக்கு உயிர் பயம் எந்நேரமும் வரலாம் என்று பயமுறுத்தப்படும் ஒரு சாதாரண மனிதன் இன்ஸூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் வலையில் விழுகிறான். மருத்துவச் செலவென்பது ஏழைகளுக்கெட்டாத செலவாகி விட்டது என்பதால் அதை வைத்து நல்ல காசு பார்க்க இன்ஸூரன்ஸ் நிறுவனம் தயாராகி விட்டது. மருத்துவமனைகள் மட்டும் என்ன யோக்கியமா? இன்ஸூரன்ஸ் இல்லதவனை உள்ளேயே சேர்க்கவே யோசிக்கிறார்கள்!!

காரணம் 10,000/- செலவாகும் ஒரு சிகிச்சைக்கு இன்ஸூரன்ஸ் இருப்பவன் வந்தால் 50'000/- செலவாகி விட்டதைப் போல பில் போட்டு விடுகிறார்கள்! மருத்துவமனையைப் பொறுத்தவரை நோயாளியின் கையிலிருந்து காசு கொடுக்கப்படப் போவதில்லை, இன்ஸூரன்ஸ் கம்பெனி தானே கொடுக்கிறது என்று அதிக பணம் வசூலித்து விடுகிறார்கள்! இதனால் இன்ஸூரன்ஸ் பாலிஸி இல்லாதவர்களிடம் இப்படி அதிக பணம் வசூலிக்க முடியாது என்பதாலேயே பாலிஸி இல்லாமல் மருத்துவமனை வருபவர்களை புழுவைப்போல பார்க்கும் காட்சியும் அரங்கேருகிறது. அதற்கென்ன சொல்வீர்கள்??

ஆக பாலிஸிகொண்டு வரும் நோயாளியிடமிருந்து மருத்துவர்கள் கொள்ளையடிக்கும் போது அவனுக்கு தேவையானபடி மருத்துவமனை நடந்து கொள்ள வேண்டுமென அவன் எதிர் பார்ப்பதும் ஞாயம் தானே! சார், களவானித்தனம் எங்கேயோ முதலில் துவங்கி விடுகிறது.. பிறகு எல்லோரும் அதில் ருசிகண்டு போய்விடுகிறார்கள்... பிரச்சனை என்று வரும் போது நீ, நான் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத் துவங்குகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் விஷயமும் அப்படிப்பட்டது தான்!

மீண்டும் சொல்கிறேன், மருத்துவத்தை பணம் கொழிக்கும் வியாபாரமாக மருத்துவர்களே பார்க்கத் துவங்கி விட்ட பிறகு உங்களை அண்டி வரும் நோயாளியின் உணர்ச்சிகளுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்! எல்லாம் பணம் தான் காரணம்! மூல கர்த்தா அது தான்!

kppradeep said...

Dear Ram,
I am not able to understand your logic some thing like Money Back policy. And also justifying a patient relative demanding the most unethical thing.
Will you sell your conscience for money sake if there's a guarantee that you will not be punished?. Tell me can you sleep peacefully after doing such things?
Think you have formed your opinion about Doctors thats is Preopinionated. I cant argue with you.
One thing i will say may your child become a Doctor and then you will understand. Thats why i told you before -Show this post to a well known friend/classmate/relative of yours.

hayyram said...

ப்ரதீப் ஜி, நீங்கள் பணம் வருகிறது என்பதற்காக தவிழைக்க மாட்டேன் என்னும் நற்குணம் கொண்டவர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எல்லா மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மனித நேயத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்தி கூற முன் வந்தால், அது சரியாகாது.

//பணம் கட்டாதவனுக்கு அல்லது கட்ட முடியாத ஒருவனுக்கு உங்கள் மருத்துவமனையில் அல்லது தமிழகத்தின் பெரிய மருத்துவமனையில் என்ன தான் அலறித் துடித்தாலும் சிகிச்சையை துவங்குவீர்களா?//

இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால் நன்று!


மருத்துவக் கொள்ளை பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும், அடுத்த பதிவாக நேரமின்மையால் தள்ளிப் போகிறது.

உங்களைப் போல நல்லவர்கள் இன்னும் மருத்துவத்துறையில் இருக்கிறீர்கள் என்கிற ஒரே நம்பிக்கையில் தான் பலரும் மருத்துவமனைக்கு உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள்.

அந்த நம்பிக்கை தொடர வேண்டுமென விரும்பும் பலரில் நானும் ஒருவன்!