”நீயா நானா?”
”நாங்க தான்” என்று நிரூபித்த ஹிந்துக்கள்.
இன்று (29/07/2012) ”நீயா நானா” நிகழ்ச்சியில் ஹிந்துத் துறவிகளை கொச்சைப் படுத்தும் விதமாக நிகழ்ச்சி தயாரித்திருந்தது ஆண்டனி என்பவரின் மெர்குரி கிரியேஷன்ஸ் நிறுவனம். ஹிந்து கலாசாரத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் புண்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது இந்த நிறுவனம் அடிக்கடி செய்யும் அயோக்கியத்தனம்.
...
ஆகவே இன்றைய (29.07.2012) நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் செய்ய வேண்டும் என்று சில ஹிந்து நண்பர்கள் தீர்மானித்தனர். அவர்கள் உடனே ஹிந்து முன்ன்ணியையும், ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பையும் தொடர்பு கொண்டனர். ஹிந்து முன்னணியின் துணைத்தலைவர்களுள் ஒருவரான திரு.இளங்கோ அவர்கள் தலைமையில் சுமார் 300 பேர் திரண்டு விஜய் டிவி நிறுவனத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்த ஹிந்து நண்பர்கள் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஹிந்து ஜனஜாக்ருதி அமைப்பினரும், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை மற்றும் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் எழுத்து மூலமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டிக்கொண்டனர்.
உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் விஜய் டிவி நிறுவனத்தாரிடம் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டு அவர்களிடம் உறுதி மொழியும் பெற்றனர். குறிப்பாக நுங்கம்பாக்கம் காவல்துறை ஆய்வாளரும் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தினரும் நமது நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
கைது செய்யப்பட்ட ஹிந்து முன்னணி நண்பர்கள் அனைவரும் பின்பு விடுதலை செய்யப்பட்டனர். ஹிந்து முன்னணியினருக்கு நம் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் கண்டது இந்த ஊடகங்கள் என்றும் திருந்தாத ஜன்மங்கள் என்பதுதான். சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தங்கள் அழுக்கு புத்தியைக் காண்பிப்பார்கள்.
எனவே ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்களின் பொருட்களை நிராகரிப்பதுதான். அவர்களின் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி அவர்கள் வியாபாரம் குறைந்துபோனால்தான் அவர்களும் ஸ்பான்ஸார் செய்வதை நிறுத்துவார்கள். இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.
- ஹர்ஷ் தமிழ்
இனி நான்: இந்த விஜய் டிவியின் நீயா நானா நடத்தும் ஆன்ட்டனி பாதிரியார்கள் - கன்னியாஸ்திரிகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒரு போதும் நடத்தியதில்லை. பாதிரியார்களின் ஓரினச்சேர்க்கை, பாதிரியார்கள் காப்பகங்கள் நடத்துகிறேன் என்று கூறி குழந்தைகளை காம இச்சைக்கு பயன்படுத்துவதைப் பற்றி நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. கன்னியாஸ்திரிகளும் பாதிரிகளும் சர்ச்சுக்குள் குடும்பம் நடத்தும் சர்ச்சைகளைப் பற்றி ஒரு நாளும் நிகழ்ச்சி நடத்தியதில்லை.
கடந்த முறை இந்துக்களின் புனித பாரம்பரியமான தாலி வேண்டுமா வேண்டாமா என நிகழ்ச்சி ஒளிபரப்பிய இந்த ஆள், முஸ்லீம்களின் பர்தா வேண்டுமா வேண்டாமா என்கிற நிகழ்ச்சியை விளம்பரத்துடன் நிறுத்திக் கொண்டான்.
ஆனால் தொடர்ந்து ஹிந்து கலாச்சாரம், திருமணம், மாமியார் மருமகள் மற்றும் குடும்ப உறவுகள், பண்டிகைகள், துறவிகள் என தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சர்ச்சையாக்கும் விஷயங்களையே நீயா நானாவில் நடத்திக் கொண்டிருக்கிறான்.
சகோதரர் ஹர்ஷ் தமிழ் எழுதியிருப்பதைப் போல, இந்த ஆண்ட்டனி சில நாள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதே நிகழ்ச்சியையோ அல்லது இது போல வேறொன்றையோ ஒளிபரப்புவான். நாம் தான் விழிப்புடன் இருந்து தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்!