Showing posts with label stories. Show all posts
Showing posts with label stories. Show all posts

Saturday, June 19, 2010

தெனாலி ராமன் கதைகள்!



ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் தெனாலிராமன்.

ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை உண்பதே தனி சுகம் தான்" என்றார்.

தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவறை நோக்கி ஓடினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார்.

"அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.

தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.



நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே ஆகும்.

Sunday, May 30, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 6


தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்ற இரு இளைஞர்கள் நண்பர்களாயிருந்தனர். அவர்கள் வியாபாரத்திற்காக ஒர் நாள் பயணம் சென்றனர். வழியில் ஒரு காட்டில் அவர்களுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன.

தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் "நாம் இருவரும் இதை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழலாம்" என்றான். ஆனால் துஷ்டபுத்திக் காரனோ வஞ்சகம் ஒன்றை நினைத்தான். அவன் தர்மபுத்தியிடம் "இப்போது இந்தப் புதையலை நாம் ஊருக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். தற்போது செலவுக்காக ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். மீதியை இந்த மரத்தடியில் புதைத்து வைப்போம். பின்னர் தேவைப்படும்போது வந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.

துஷ்டபுத்தியின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத தர்மபுத்தி அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் புதையலை மரத்தடியில் புதைத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தனர். துஷ்டபுத்தி தன் கையிலுள்ள காசுகளைச் சீக்கிரமே செலவு செய்து விட்டான். மரத்தடியிலுள்ள மொத்த காசுகளையும் தர்மபுத்திக்குத் தெரியாமல் தாமே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவன் காட்டுக்குச் சென்று மொத்த தங்கக் காசுகளையும் எடுத்து வந்தான்.

சில மாதங்கள் கழிந்தன. தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் வந்தான். மரத்தடியிலுள்ள காசுகளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று அழைத்தான். இருவரும் காட்டிற்குச் சென்றனர். மரத்தடியில் தோண்டினர். அங்கே புதையல் பானையைக் காணவில்லை. காசுகளை துஷ்டபுத்திதான் எடுத்திருக்க வேண்டும் என தர்மபுத்திக்கு சந்தேகம் வந்தது. அவன் அதுபற்றி துஷ்டபுத்தியிடம் கேட்டான். துஷ்டபுத்தியோ தான் எடுக்க வில்லை என்று மறுத்தான். இறுதியாக தர்மபுத்தி அரசரிடம் சென்று வழக்கு தொடுத்தான்.

துஷ்டபுத்தி அரசரிடம் "அரசே! நான் நண்பனுக்குத் துரோகம் செய்பவன் அல்ல. காசுகளை நான் எடுக்கவில்லை. இதற்கு வனதேவதையே சாட்சி" என்றான்.

"வன தேவதை வந்து சாட்சி சொல்லுமா உனக்காக?" என்றார் அரசர்.

துஷ்டபுத்தியோ காட்டிற்கு சென்று வனதேவதையிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்றான். மறுநாளே கட்டுக்குச் சென்று பார்ப்போம் என்று அரசர் முடிவு செய்தார்.

அன்றைய இரவு வீட்டிற்கு வந்த துஷ்டபுத்தி தன் தந்தையை அழைத்தான். நடந்த அனைத்தையும் கூறினான். பிறகு தன் தந்தையையே வன தேவதை போல் நடிக்கத் தயார் செய்தான். அன்றிரவே ஒரு மர பொந்தில் தந்தையை ஒளிந்திருக்கச் செய்து அரசர் கேட்கும் போது தன் மகன் குற்றவாளி இல்லை என்று அசரீரி போல பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

மறுநாள் அரசரும் துஷ்டபுத்தி மற்றும் தர்மபுத்தி ஆகியோரும் காட்டை அடைந்தனர். வனதேவதையிடம் அரசர் கேள்வி கேட்டார். உடனே மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை "நான் வனதேவதை பேசுகிறேன். என் பிள்ளை குற்றம் செய்யவில்லை. தர்மபுத்தி தான் திருடினான்" என்று அசரீரி போலக் கூறினார்.

அரசர் அந்த மரபொந்திற்கு அருகே சென்று சற்று நேரம் அமைதியாக சிந்தித்தார். அரசருக்கு சந்தேகம் வந்தது. தர்மபுத்தியோ அரசரிடம் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவும், உண்மையைக் கொண்டு வெளியே கொண்டு வர ஒரு யோசனை இருப்பதாகவும் கூறினான். அரசர் அவ்வாறே செய்யுமாறு தர்மபுத்தியை அனுமதித்தார்.

தர்மபுத்தி ஓடிச் சென்று காய்ந்த சருகுகளையும் குச்சிகளையும் திரட்டி வந்து, மரத்தடியில் போட்டு தீமூட்டினான். குபுகுபுவென தீப்பற்றிக் கொண்டது. தர்மபுத்தியின் செயலைக் கண்டு மன்னர் திகைத்தார்.


சற்று நேரத்தில் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டிருந்த துஷ்டபுத்தியின் தந்தைக்கு உடல் வெந்து போனது. மறுநொடியே மரப்பொந்திலிருந்து அவர் வெளியே குதித்தார்.

"மன்னா! ஏதோ பிள்ளைப் பாசத்தால் என் மகனுக்காக நான் தான் மரப்பொந்திலிருந்து வனதேவதை போல பேசினேன்" என்று உண்மையைக் கூறிவிட்டார். காசுகளைத் திருடியதோடு அல்லாமல் நண்பன் மீது பழியும் சுமத்திய துஷ்டபுத்திக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

நீதி: பேராசை பெருநஷ்டத்தையே தரும்.

Saturday, March 27, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 4 - நான்கு நண்பர்கள் கதை!


அமராவதி நகரத்தில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு சக்தி வாய்ந்த ஒரு யோகி இருப்பதாக அறிந்தார்கள்.

அவரிடம் சென்று தங்களின் தீராத வறுமைக்கு ஏதாவது தீர்வு கூறும்படி கேட்கலாம் என்று தீர்மானித்தார்கள். உடனே அவரிடம் சென்றார்கள். யோகி இந்த நான்கு நண்பர்களையும் பார்த்து "யார் நீங்கள்? எம்மிடம் வரக் காரணமென்ன?" என்று கேட்டார்

நண்பர்கள் நால்வரும் தங்கள் குறைகளைக் கூறினார்கள். அடிகளே! நாங்கள் கொடிய வருமையால் துன்புற்றிருக்கிறோம். வறுமை போக்க பொருள் தேடி தேசாந்திரமாக புறப்பட்டுள்ளோம்" என்று கூறினர்.

மேலும் "நீங்களோ பெரிய யோகி. எங்கள் நால்வருக்கும் பொன்னும் பொருளும் கிடைக்கும் வழியைக் காட்டித்தாருங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று அருள்புரியுங்கள். இல்லையேல் இங்கேயே உயிர் விடுவோம்" என்று கெஞ்சினார்கள் அந்த நால்வரும்.

யோகிக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது. அவர் பொருள்கிடைக்க தான் வழி செய்வதாகக் கூறினார். பின் நால்வர் தலையிலும் பருத்தியாலான திரிசீலைகளை வைத்தார். “இதோ பாருங்கள்! இத்திரிசீலையைத் தலையில் வைத்தபடியே இமயமலையை நோக்கிச் செல்லுங்கள், போகும்போது எவன் தலையிலிருந்து திரிசீலை எவ்விடத்தில் விழுகிறதோ அவனுக்கு அவ்விடத்தில் பொருள் கிடைக்கும். அதாவது புதையல் கிடைக்கும்”, என்று கூறி அனுப்பினார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்நால்வரும் அத்துறவியின் ஆணைப்படி இமையமலையை நோக்கி நடந்தார்கள்.

சிலநாட்கள் நடந்திருப்பார்கள், ஒருவரின் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. உடனே அவன் அங்கு தோண்டிப் பார்த்தான். செம்பு உலோகம் எக்கச்சக்கமாக இருந்தது. மகிழ்ந்துபோன அவன் மற்ற மூவரையும் பார்த்து “நீங்களும் வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

ஆனால் அவர்களோ “முட்டாளாகப் பேசாதே. இதனால் நம் வறுமை எந்த அளவும் குறையாது. நீ வேண்டுமானால் கொண்டு போ" என்று கேலியாகக் கூறி வேகமாக நடக்கவும் செய்தனர். முதலாமவனோ தன்னால் இயன்ற அளவுக்குத் செம்பு உலோகத்தை எடுத்துக்கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பிவிட்டான்.

மீதமிருந்த மூவரும் தொடர்ந்து சில மைல்கள் தூரம் நடந்திருப்பார்கள், மூவரில் ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது.

உடனே அந்தத் திரிசீலைக்குரியவன் அந்த இடத்தில் தோண்டினான். வெள்ளிக் கட்டிகள் ஏராளமாக இருந்தன. “நாம் இவைகளை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகலாம்”, என்றான் அந்த இரண்டாமவன்.

ஆனால் மற்ற இருவருக்கும் ஆசை அதிகமாகியது. முதலில் செம்பு பிறகு
வெள்ளி என்றால் இன்னும் போய்ப் பார்ப்போம். நமக்கு தங்கம் வைரம் என்று மேன்மேலும் கிடைக்கலாம் என்று எண்ணலாயினர். உடனே மீதமிருந்த இருவரும் வெள்ளிக்கட்டிகள் கிட்டியவனைப் பார்த்து “இது யாருக்கு வேண்டும்? இது நம் வறுமையை முற்றிலும் ஓட்டாது. நீ வேண்டுமானால் கொண்டு செல்”, என்று கூறி நடக்கலானார்கள்.

இரண்டாமவன் அவ்வெள்ளிக் கட்டிகளை எடுத்துக் கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பினான். சில மைல்கள் இருவரும் நடந்தார்கள்.

ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. அவன் அங்கு தோண்டினான். பொன் கட்டிகள் புதையலாக இருந்தன. “நாமிருவருமே இதை எடுத்துக்கொண்டு ஊர் போய்ச் சேரலாம் வா”, என்றான் மூன்றாமவன் மற்றவனிடம்.

ஆனால் கடைசிக்காரனுக்கு இப்போது பேராசை தொற்றிக் கொண்டுவிட்டது. அவன் இன்னும் மேலே போய்ப் பார்க்க எண்ணினான். அதனால் அவன் தங்கக்கட்டி கிடைத்தவனிடம் அலட்சியமாக "இது யாருக்கு வேண்டும்? எத்தனை நாட்களுக்கு இது நம் வறுமையை போக்கும்? இன்னும் போனால் எனக்கு நவரத்தினக் குவியலே கிடைக்கும். நீ வேண்டுமானால் எடுத்துக் கொண்டு உன்னூர் போய்ச் சேர்" என்று துச்சமாகப் பேசிச் சென்றுவிட்டான்.

மூன்றாமவன் அத்தனைத் தங்கக் கட்டிகளையும் மூட்டை கட்டிக்கொண்டு தன் சொந்த ஊர் நோக்கித் திரும்பினான்.

முதலாமவனுக்கு செம்பு கிடைத்தது, இரண்டாமவனுக்கு வெள்ளி கிடைத்தது, மூன்ராமவனுக்கோ தங்கக் கட்டிகள் கிடைத்தது, அப்படிஎன்றால் நான்காவதாளான தனக்கு நவரத்தினங்கள் தானே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான்காவது ஆள் நடந்து கொண்டே இருந்தான் இமையமலையை நோக்கி. நடக்க, நடக்க அவனுக்குப் பசியும் களைப்பும் அதிகமாகி தடுமாறியது. அப்பொழுது அவனெதிரில் ஒருவன் எதிர்பட்டான். அவன் தலையில் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. உடலெல்லாம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நான்காமவன் அவனை நோக்கி நீ யார்? உன் தலைமேல் ஏன் சக்கரம் சுழல்கிறது? என்று கேட்டான். அப்படி கேட்கும்போதே அந்தச் சக்கரம் கேட்ட அந்த நான்காமவனான பேராசைக்காரன் தலைமேல் வந்துவிட்டது.

திடுக்கிட்ட அவன் “இதென்ன அநியாயம்? நான் கேட்கும்போதே உன் தலையிலிருந்தது என் தலைமேல் வந்து இந்தச் சக்கரம் சுற்ற ஆரம்பித்துவிட்டதே” என்று பதறினான்.

இதுவரை நான் இந்தச் சக்கரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு துயரப் பட்டுக்கொன்டிருந்தேன்.

இன்று காலை குபேரன் வந்து, ஒருவன் தலையில் திரிசீலையோடு வருவான், வருபவன் பேசுவான், பேசும்போது இந்தச் சக்கரம் அவன் தலைக்கு மாறி உனக்குச் சாபவிமோசனம் ஆகும் என்று கூறினான். அவன் கூறினபடி நீ வந்தாய். வந்து என்னை விடுவித்தாய். நான் வருகிறேன் என்று அவன் புறப்பட்டுப் போனான்.

"சரி எனக்கு எப்போது இதிலிருந்து விமோசனம் கிடைக்கும்" என்றான் நாலாமவன்.

"அடுத்த பேராசைக்காரன் வரும் போது" என்றான் விடுதலையானவன்.

பாடம்: பேராசை பெருநஷ்டம். நமக்கென்று கிடைக்கும் பொருளை வைத்து இன்புற்று வாழத் தெரியாதவன் எதையும் அனுபவிக்காமல் இருப்பதையும் இழந்து நிற்பான்.

நம் பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Thursday, March 4, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 2



நண்டு, கொக்கைக் கொன்ற கதை!

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.


ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.



உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

நமது பாரம்பரியக் கதைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Wednesday, February 10, 2010

பஞ்சதந்திரக் கதைகள் - 1


பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவம் விளங்கினான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும், மூடர்களாகவும் இருந்தார்கள். நமக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது.

இதற்கு என்ன செய்வது? பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடம் மன்னன் தனது கவலையைச் சொன்னான். வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாச்த்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார்.

அரசே! கவலைப் படாதீர்கள். நான் இவர்களுக்குத் தகுந்தமாதிரி கல்வியைப் புகட்டுகிறேன் என்றான்.

சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார்.

பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள்.

அவை மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம்

என்பனவாகும். அப்படிஎன்றால்? சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர் லாபமானது தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்தப் பொருளை அழித்தல், அசம்பிறேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம்.

இக்கதைகளைக் கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அரச குமாரர்களுக்கு நீதிக்கதைகளை போதிக்கத் துவங்கினார்.

அரசகுமாரர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டு அப்படியே நல்ல போதனைகளைக் கதைவடிவில் கற்கத்துவங்கினார்கள்.

பஞ்சதந்திரக் கதைகள். இப்படித்தான் உருவாயின. அவற்றில் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் பார்ப்போம். சரியா!

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Thursday, January 21, 2010

விக்கிரமாதித்தன் கதைகள் - 12


விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

ஒரு காலத்தில் அரசர் ஒருவருக்கு மூன்று அழகிய ராணிகள் இருந்தனர்.

ஒரு நாள் மன்னரும் முதல் ராணியும் அரண்மனைப் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

மலர்களின் வாசனையும் அருமையான தென்றல் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. மன்னரும் ராணியும் அதை ரசித்து அமர்ந்து கொண்டிருந்தனர். அந்த சமயம் மெல்லிய தென்றல் காற்றால் ஆடிய ஒரு பூச்செடியிலிருந்து மிக மெலிதான ஒரு அழகிய மலர் ராணியின் கையின் மீது விழுந்தது.

மிக மெலிதான அழகிய பூவாகினும், அது விழுந்ததால் வலி உண்டாகி ராணி துடிக்கத் தொடங்கினாள். "ஐயோ! என் கை வலிக்கிறதே. என்னால் தாங்க முடியவில்லையே!" என்று துடிக்கத் துவங்கினாள். இதைப் பார்த்த மன்னர் பயந்து போனார்.

அவர் ராணியின் கைகளைப் பார்த்தார். மெல்லிய பூ விழுந்த இடம் மிகவும் சிகப்பாக சிவந்து போய் இருந்தது. ஒரு மலர் விழுந்ததால் கை சிவந்து போகுமா என்று குழம்பிப்போன மன்னர் ராணியை அரைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்.

பிறிதொரு நாள் மன்னர் தனது இரண்டாவது மனைவியுடன் ஜன்னலோரமாக காற்றாட அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஜன்னலின் திரைச்சீலை விலகியது. உடனே ராணி திடீரென சப்தமிடத் துவங்கினாள். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. ராணியோ "அய்யோ! என்னால் தாங்க முடியவில்லை. இந்த நிலவின் ஒளி என்னைச் சுட்டு எரிக்கிறது" என்றாள். மன்னர் திகைத்துப் போனார்.

"என்ன நிலவின் ஒளி சுடுகிறதா?" என்றார்.

ராணியின் முகம் முழுவதும் நிலவின் ஒளிபட்டு கொப்பளங்கள் உண்டாகிப் போனது. மன்னர் திகைப்புடன் ராணியை தனது அரைக்கு அழைத்துப் போய் அமரச்செய்து ஓய்வெடுக்கச் செய்தார்.

மற்றொரு நாள் தனது மூன்றாவது மனைவியுடன் அரண்மனை முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராணிக்கு எங்கோ தூரத்தில் யாரோ அரிசியை உரலில் போட்டு உலக்கையால் இடிக்கும் ஓசை கேட்டது. திடீரென்று ராணி அலறத்துவங்கினாள் "ஐயோ, நிறுத்துங்கள். என்னால் இந்த சத்தத்தைக் கேட்க முடியவில்லை. தயவு செய்து யாராவது நிறுத்தச் சொல்லுங்கள். என் தலை இந்த சப்தத்தால் வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று கூறிக்கொண்டே மயங்கி விழுந்து விட்டாள். அவளது கைகளும் முகமும் வேதனை தாங்காமல் சிவந்து விட்டது.

மன்னர் ராணியை பத்திரமாக அவளது அரையில் உறங்கச் செய்தான்.

இதோடு கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமாதிதனைப் பார்த்து கேள்வி கேட்டது.

"விக்கிரமாதித்தா! இப்போது சொல். இந்த மூன்று ராணிகளில் யார் மிகவும் மென்மையானவள்?"

"மூன்றாவது ராணி தான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

"ஆம். மலர் மற்றும் நிலவின் ஒளி போன்றவை முதல் இரண்டு ராணியின் உடலையும் தீண்டுவதாக இருந்தது. ஆனால் உடலைத் தீண்டாத சப்தம் கேட்டதற்கே மூன்றாவது ராணியின் உடல் சிவந்து போனது. எனவே மூன்றாவது ராணிதான் மிகவும் மென்மையானவள்" என்றான் விக்கிரமாதித்தன்.

இதைக் கேட்ட வேதாளம் "சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியதால் நான் போகிறேன்" என்று கூறி மீண்டும் முருங்கை மரத்தை நோக்கிப் பறந்து போனது.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.

Saturday, December 19, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 10


தலையும் உடலும்

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட
வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப்
பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு
நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து
கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை சதுர்சன் என்ற அரசன் ஆண்டு
வந்தான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அரன்மனையில் இருந்த துர்கா தேவியிடம் பல நாட்கள் இக்குறை நீங்க வேண்டி
பூஜை செய்து வந்தான். அந்த பூஜா பலனால் அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்கு வஜ்ரவீரன் என்று பெயரிட்டான்.

வஜ்ரவீரன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு அரசவையின் சலவைத்
தொழிலாளியான ருத்ரராஜன் நண்பனாக இருந்தான்.

ஒரு முறை நண்பன் வீட்டிற்குச் சென்ற வஜ்ரவீரன் அவன் வீட்டருகே ஒரு
அழகிய பெண்ணை பார்த்தான். அந்த பெண் மீது மோகம் கொண்டு அவளை
மனமுடிக்க விரும்பினான். இதை தன் நண்பன் ருத்ரராஜனிடம் தெரிவித்தான்.

ஆனால் ருத்ரராஜனோ அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தான்.
இந்நிலையில் நாட்டின் யுவராஜனும் தனது நண்பனுமான வஜ்ரவீரன்
அப்பெண்ணை மணக்க விரும்பியதை அறிந்து வருந்தினான். ஆனால்
நண்பனுக்காக தன் ஒருதலைக் காதலை விட்டுக்கொடுக்க முடிவு செய்தான்.
அதனால் தனது விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நண்பனுக்காக
விட்டுக் கொடுத்தான்.

ஆனால் வஜ்ரவீரனுக்கோ தனது தந்தை தன் விருப்பத்தை நிறைவேற்றுவாரா
என்று கவலை உண்டானது. அவன் துர்காதேவியிடம் சென்று "அம்மா துர்க்கா!
என் தந்தை நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தால், வரும்
பௌர்ணமி தினத்தில் என் தலையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று
வேண்டினான்.

தனது நண்பனின் மனக்கவலையை உணர்ந்து கொண்ட ருத்ரராஜன் அவனைத்
தேற்றினான். நண்பனுக்காக தானே அரசனிடம் சென்று விஷயத்தை கூறலானான். "அரசே! தங்கள் மகனும் எனது நன்பனுமான வஜ்ரவீரனுக்கு
சலவைத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தாங்கள்
அனுமதிப்பீரா என்ற தயக்கத்தில் இருக்கிறான். அதை தங்களிடம் தெரிவித்துப்
போகவே வந்தேன்" என்றான்.

மன்னனோ "என் மகனின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதனால் அவன்
விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைக்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட வஜ்ரவீரன் பெருமகிழ்ச்சி கொண்டான். பெரு விமரிசையாக
வஜ்ரவீரனுக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினர். இந்நிலையில் பௌர்ணமி
நாள் நெருங்கியது. வஜ்ரவீரனுக்கு துர்காதேவியிடம் தன் தலையை
காணிக்கையாக கொடுப்பதாய் வாக்கு கொடுத்தது ஞாபகம் வந்தது.

இனிமையான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டிய கட்டாயம் வந்தது. எந்தப்
பெண்ணோடு வாழ்வதற்க்காக பிரார்தனை செய்தானோ அந்தப் பெண்ணை
உடனேயே பிரியும் நிலை அவன் பிரார்த்தனையாலேயே உண்டானது.

மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப்
படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

Saturday, July 11, 2009

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும் மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ‌ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென் ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 4000 மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க‌ளாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம். யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை. சம்மந்தமே இல்லாமல் உங்கள் வீட்டருகே விலைவாசி உயர்ந்தால் அதற்க்கு இந்த பணப்புழக்கமும் ஒரு காரணம்.

180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும். சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப் படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம் கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்...

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி இஸ்லாத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசுகிறார்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக. அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க முற்ப்படுகிறார்கள்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும் பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக் காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம் என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன் கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும் வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில் நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின் வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?


யோசியுங்கள்...

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள் தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார் என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும் அல்ல‌. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

விபூதி குங்கும போன்ற மத அடையாளங்களை பூசிக்கொள்ள வெட்கப்படாதீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு இந்து தர்மம் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் முடிந்த வரை எடுத்துச் சொல்லுங்கள்.

இந்து மதப் பண்டிகைகளை ஆர்வத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடுங்கள்.

நமது கோவில்களை சீர்படுத்த நம்மால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள்.

ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

இப்படி நம் சொந்த மதத்தை நாம் மதித்து பாதுகாக்க முற்ப்பட்டால் அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தைக் கொண்டு போக முடியும். இல்லையேல் நம் கண்முன்னே நம் மண் நம்மிடமிருந்து பறிக்கப்படலாம்.

விழிப்புணர்வு தேவை.

யோசியுங்கள்.....இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.