Sunday, July 19, 2009

இந்து தர்மம் என்றும் வெல்லும்

இந்து தர்மத்தில் எதுவுமே மூடநம்பிக்கை இல்லை என்பதை பலமுறை பல விளக்கங்களுடன் பல அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். அவற்றை நாத்திகர்களாக இருந்தவர்களே பிற்பாடு அனுபவப்பூர்வமாக வாழ்ந்து பார்த்து ஒத்துக்கொண்டு பின்னர் முழு ஆத்திகர்களாக மாறியிருக்கிறார்கள். இந்து தர்மம் என்பது வாழ்வியல் வழிகாட்டு முறையே அன்றி இது ஒரு ஒரு தனி நபர் ஸ்தாபித்த அடையாள மார்க்கமாக இருக்கவில்லை. இந்து தர்மம் என்பது அறிவியலும் மனோவியலும் சேர்ந்ததே ஆகும்.

இந்தக் கருத்து இன்று அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா மூலமாகவே நிரூபனம் ஆகியிருக்கிறது. தொலை நோக்கு அறிவியல் கருவிகள் எதுவும் இல்லாமலே சூரியன் உதிக்கும் நேரமும், சந்திரன் மறையும் நேரத்தையும் கூட ஆராய்ந்து சோன்னது இந்து தர்மம்.

சூரிய கிரகனமும் சந்திர கிரகனமும் வெள்ளைக்காரன் சொல்லும் முன்பே பஞ்சாங்கம் சொல்லிவிடும். இந்த அறிவியல் யார் கொடுத்தது. இந்து தர்மத்தின் ஆதாரமே மூடத்தனம் இல்லாத இந்த அறிவியல் விஷயங்கள் தானே. இயற்க்கையோடு ஒன்றிப்போய் ஒன்றாய்க்கலந்து வாழ்ந்த நம்மக்கள் அதற்க்கான அடையாளங்களையும் அந்தப் பொக்கிஷங்களையும் நமக்காக விட்டுப்போனார்கள். அத்தகையப் பொக்கிஷங்களே நம் கண்முன்னே உயர்ந்து நிற்க்கும் கோவில்கள்.

இந்த ஆடி மாதம் ஆறாம் தேதி சூரிய கிரகணம் வரப்போவதை பஞ்சாங்கம் துல்லியமாக நேரம், காலம், நாழிகை முதற்க்கொண்டு சொல்லிவிட்டது. ஆனால் வெள்ளைக்காரன் சொன்னால் தானே நம்மவர்களுக்கு வேத வாக்கு. இதோ வெள்ளைக்காரன் சொன்னதாக வெளியாகியிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம் இது தான். பிகார் மாநிலம் தரிகானா என்ற இடத்தில் தான் சூரிய கிரகனம் நீண்ட நேரத்திற்கு நிலவும். அதாவது சுமார் இருநூறு கிலோமீட்டர் தொலைவிற்க்கு சூரியனை மறைக்கும் சந்திரனின் நிழல் தெரியும். எனவே சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க இது தான் சரியான இடம் என்று நாசா அறிவித்துள்ளது. அதாவது பீகாரில் மாநிலத்தில் தரிகானா என்றொரு இடம் இருப்பதே அவர்களுக்கு இப்போது தான் தெரியும்.

ஆனால் ஆரியபட்டர் என்ற இந்திய வானியல் விஞ்ஞானியாக அறியப்படும் வானியல் மேதை ஆறாவது நூற்றாண்டிலேயே இந்த இடத்தை வானியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கண்டறிந்திருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கும் முன்பாகவே சூரியனுக்கு கோவில் கட்டப்பட்டும் இருந்தது அதைவிட விஷேஷம். அந்த இடத்திலிருந்து ஆரியபட்டர் சூரியன் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். இது பற்றி பல புத்தகக் குறிப்புகளும் உள்ளன.

விஷயம் என்னவெனில், இந்து தர்மத்தில் கோவில்கள் வெறும் சிலை வைத்து வழிபடும் தளங்களாக மட்டும் இல்லாமல், மனதிற்கு நிம்மதி தரும் இடமாகவும், புவியியல் மாறுதல்களைக் கனித்து பூமியைச் சுற்றியுள்ள கிரகங்களின் அழுத்தம் நாம் வாழும் பூமியில் எந்தப் பகுதியில் பரவிக்காணப்படுகிறது என்பதையும் கணித்தே கட்டப்பட்டுள்ளது என்பதை நாஸா மூலம் மீண்டும் நாம் விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகியிருக்கிறது.


தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களும் இதே போன்ற பல நன்மைகள் கருதியே கட்டப்பட்டுள்ளன. கிரகங்களின் சுற்று வட்டப்பாதையில் அந்த இடங்கள் இவ்வாறான புவியியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டே நிரூபிக்க முடியாது. அது வாழ்ந்து பார்க்கும் போது காலத்தால் மட்டுமே நிரூபனம் ஆகும்.

அவ்வளவு ஏன். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மகாலய அமாவாசை அன்று இறந்து போன முன்னோர்களுக்கு தர்பனம் செய்வார்களே! அப்படி என்ன விஷேஷம் அந்த நாளில் என்று தோன்றும். வருடத்திலேயே சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாள் அது தான். இது புவியியல் ரீதியான உண்மை. மேலும் உண்மை அறிந்தவர்கள் இன்னும் விளக்கலாம். கேட்கத்தயார்.

இன்னும் நிரூபனம் வேண்டும் என்றால், சமீபத்தில் சுனாமி வந்ததே. அப்போது அலைகளுக்கு பக்கத்திலேயே இருந்த திருச்செந்தூர் கோவிலில் சொட்டுத் தண்ணீர் கூடப் படவில்லை. ராமேஸ்வரத்தில் சுனாமி தாக்கவில்லை. இதை எந்த ஊடகங்களும் பெரிது படுத்தாமல் அமுக்கிவிட்டன. ஏனெனில் இது இந்து மதத்தைப்பற்றி இச்செய்தி உயர்வாக சொல்லிவிடுமே. அதுதான் காரணம். ஆனால் உலகையே உலுக்கிய சுனாமி ஏன் இந்த இரு கோவில்களைத் தொடவில்லை. பதில் தெரிந்தால் கூறுங்கள்?

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

3 comments:

Bala said...

தற்போதைய உலகமும் ஊடகங்களும் இந்து சமுதாயத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை

hayyram said...

உண்மை பாலா, முடிந்த வரை நமது தர்மத்தைக் காக்க போராடுவது நமது கடமை.
தங்கள் வருகைக்கு நன்றி
அன்புடன்
ராம்

அஹோரி said...

nalla pathivu