Friday, July 24, 2009

தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை மூடிவிடுகிறார்களே ஏன் ?

பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.

மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது. அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்.

தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே. நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும். கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்.

வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள்.

அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மை.

- எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன்.


கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

6 comments:

thina said...

நன்றி. முற்றிலும் உண்மை.

நான் said...

உண்மை

நான் said...

மேலும் இறப்பவர் சில நேரம் நோய்வாய் பட்டிருந்தால்
அது பரவும் தண்மை உடையதா என்பது தெரியாது அதற்காக தான் பிணம் சென்ற பின் தண்ணீர் விட்டு அலசி விடுவது

குப்பன்.யாஹூ said...

good post

RAVINDRAN said...

UNMAIYIL PINAM KOIYILAI KADAKKUMPODHU ,OPPAI,OLANGAL KOYILUKKUL KETKA KOODATHU YENBADHARKKAGATHAN KOYIL NADAIYAI ADAKKIRARGAL. MELUM DHURNATRAM MATRUM PINATHAL PARAVUGINRA NUNKIRUMIGAL PONDRAVAI KOYILUKKUL,VARAAMAL THADUKKAVE NADAI ADAIKKAPPADUGINDRADHU. ATHE KARANATHUKKAGATHAN, NAMUM EZHAVUKKU POYI VANTHAVUDAN UDANADIYAGA KULIKKINDROM
RAVINDRAN.R KUNDACHAPPAI, NILAGIRI

Arun Ambie said...

சரியான மனோதத்துவக் காரணம். நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். நடுவில் சில தலைமுறைகள் சறுக்கிவிட்டோம். நிற்க. இந்த மனோ தத்துவ முறையை சிக்மண் ஃபிராய்டு, பீட்டர் மேண்டல்சன் என்ற பெயர்களில் சொன்னால் மட்டுமே சில கும்பல்கள் ஏற்கும். சில அறிவுஜீவிகள் ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் ஏற்பர்.