Saturday, July 4, 2009

இந்து தர்மத்தில் சொல்லப்படும் கதைகளை நம்புங்கள்

இந்து தர்மத்தில் பல்வேறு வாழ்வியல் கருத்துக்களும் தர்மங்களும் பல ஆழ்ந்த தத்துவங்களும் கதைகள் மூலமாகவே பெரும்பாலும் விளக்கப் பட்டுள்ளன. ஆனால் காலப்போக்கில் அவைகள் யாவும் வெறும் கற்பனைகளே, எல்லாம் மூட நம்பிக்கையை போதிப்பவை என்று பல்வேறு சர்ச்சைகள் உருவாயின. காரணம் குறை கூறுபவர்கள் யாரும் வெறும் கதைகளை மட்டுமே கேட்டு விட்டு அதைப் பற்றி மட்டுமே விவாதித்து விட்டு அதன் மூலம் சொல்ல வரும் ஆழ்ந்த கருத்துக்களையும் உட்பொருளையும் உணராமலே விட்டு விடுகின்றனர். காரணம் ஆழ்ந்துனரும் தன்மையற்ற மூடர்களாக அவர்கள் இருப்பது தான்.


மதமாற்றம் ஜாக்கிரதை


இது ஒரு ஜென் கதை,

ஒரு ஜென் குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அவர் சீடர்கள் அறிவைச் சோதிப்பதற்க்காக கேள்வி ஒன்றைக் கேட்டார்.

‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். ‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’ ‘இது ஏன்’? என்று குரு வினவினார்.

சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்.

‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’,

‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக‌ உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’

'ஒரு வேளை அவன் மட்டும் வேகமாக ஒரு கட்டிடத்தில் ஒதுங்கி இருக்கலாம்'

இப்படி பலவாறு விடைகள் வந்தன. எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை.

முடிவில் சீடர்களே குருவிடம் பதில் சொல்லத் தெரியவில்லை என்று ஒத்துக்கொண்டனர்.

அதற்கு குரு சொன்னார் 'மூடர்களே! ‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’ ‘ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை’ என்றார்.

‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’ ‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’ என்றால் என்ன அர்த்தம்?

விடை: ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் அதன் அர்த்தம். வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.

இவ்வாறு குரு விளக்கம் அளித்தார்.

இந்து தர்மத்திலும் இப்படித்தான் பல கதைகள் உள்ளர்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கும். பகுத்தறிவுடன் யோசித்தால் பல விடைகள் விளங்கும். வெறும் வார்த்தைகளை வைத்து தர்க்கம் செய்து கொண்டிருப்பவர்களை விட அதை ஆழ்ந்து அனுபவித்து விளங்கிக்கொள்பவர்களே உண்மையான பகுத்தறிவாளர்கள்.

ஆதலால் சொல்கிறேன், இந்து என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.