Sunday, August 30, 2009

சப்பை கேள்வியும் மொக்கை பதிலும் - 1


காலையில் இந்த வார ஆனந்த விகடன் அட்டைபடத்தில் சட்டை போட்டு போஸ் கொடுத்திருந்த சினேகாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துவீட்டு வாண்டுப் பையன் வீட்டுக்குள் வந்தான். 'அண்ணா' என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்தான். ஏழாம் வகுப்புதான் படிக்கிறான்.

ஆனால் பிஞ்சிலேயே பழுத்த பழம். சாதாப்பழம் இல்லை பலாப்பழம்.

"என்னான்னா, சினேகாவ உத்து உத்து பாக்றீங்க!" என்றான் நக்கலாக.

'சும்மா பாத்தேண்டா'

அவன் விடவில்லை "ஐ, சைட் அடிக்கிறீங்கதானே"

"டேய், என்ன வேணும் சொல்லு"

"இல்ல... உங்களுக்கு சினேகாவைப் பிடிக்குமான்னு கேட்டேன்?"

"பிடிக்கும்"

"பாவனா?"

"பிடிக்கும்"

"த்ரிஷா"

"பிடிக்கும்"

"தமன்னா?"

"ரொம்ப.., என்னடா வரிசையா லிஸ்ட் போட்ற?"

'நான் ஒன்னு கேட்கட்டா?'

'சப்பையா கேக்காம உருப்படியா எதாவது கேளு'

"இல்ல, இத்தனை நடிகைல உங்களுக்கு யாரோட போட்டோ பாக்கும் போது ரொம்ப மூடுவரும்?"

ஆகா, ஓவராப்போறானே, இவனை ஒரு வழிபண்ணாம விடப்போறதில்லைன்னு முடிவு பண்ணி விளக்கமா பதில் சொன்னேன்.

"தம்பி, ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சிக்கோ!, எல்லாத்துக்குமே நம்ம மனசு தான் காரணம். ஒரு போட்டோவப் பார்த்து நமக்கு உணர்ச்சி உண்டாகும்னா அது நம்ம மனசிலேர்ந்து தானே வருது. போட்டோ வெறும் காகிதம் தானே. நல்லா கேட்டுக்கோ. நம்ம மனசும் உடம்பும் சுகமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் போது எல்லாத்தையுமே ரசிக்கத் தொணும். மனசோ உடம்போ சரியில்லைன்னா எல்லாமே வெறுப்பா இருக்கும்.

யோசிச்சுப் பாரு! நம்ம மனசும் உடம்பும் சந்தோஷமா இருந்தா அறுபது வயசு கிழவியைப் பாத்தா கூட கிளர்ச்சி இருக்கும். இல்லன்னா பதினாறு வயது பெண்ணைப்பார்த்தாலும் வெறும் தோலும் சதையும் தெரியுமே தவிர உணர்ச்சி வராது.

அதனால ஒரு பெண்ணை ரசிப்பதும் அவளைப் பார்த்து மயங்குவதும் நம்ம உடம்புக்குள்ள இருந்து வர உணர்ச்சி தானே தவிர பெண்ணால் உண்டாவது ஒன்றும் இல்லை.

உனக்குள்ளிருந்து வரும் உணர்ச்சியை நீ முதலில் புரிந்து கொள்.

'அகம் மூடாஸ்மி !' என்று முடித்தேன். கடுப்பாகி விட்டான்!

"ன்னா...ஏன்னானா இப்டி மொக்க போட்றீங்க.. நான் என்ன கேட்டா நீங்க என்ன சொல்றீங்க.. போங்கன்னா."

"டேய் நீ இப்படி சப்பையா கேட்டா நான் மொக்கையா தாண்டா சொல்ல முடியும்..சரி.. உங்கப்பா நேத்து உன்னை அடிச்சாராமே எதுக்கு?"

"ன்னா...போங்கன்னா...நல்ல நேரத்தில மூட் அவுட் பன்றீங்க" என்றவன் ஏதோ மேட்ச் இருப்பதாகவும் பசங்க வெளிய வெயிட் பன்றதாகவும் சொல்லிட்டு ஓடிவிட்டான்.

மவனே அடுத்த முறை அவன் உள்ளே வரட்டும். கட்டிலில் கட்டிப்போட்டு பட்டினத்தார் கதை சொல்ல தீர்மானித்திருக்கிறேன். வருவானா பார்க்கலாம்.

7 comments:

Thamira said...

மவனே அடுத்த முறை அவன் உள்ளே வரட்டும். கட்டிலில் கட்டிப்போட்டு பட்டினத்தார் கதை சொல்ல தீர்மானித்திருக்கிறேன். வருவானா பார்க்கலாம்//

சிரிப்பை அடக்கமுடியவில்லை. நல்ல ரசனையான பதிவு.

hayyram said...

ஆதிமூலகிருஷ்ணன் அவர்களே! தங்கள் ரசனைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
ராம்

karthick said...

//அகம் மூடாஸ்மி//

correct than thalaiva

Madhu said...

gud but i heard this from
nithyanandha swamigal

hayyram said...

நன்றி MADHUSUDHANAN.R அவர்களே!

என்னைப் பொறுத்தவரை இந்து தர்மத்தில் ஆதி சிவனைத் தவிர யாரும் சுயம்பு இல்லை!

அன்புடன்
ராம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா..

Anonymous said...

//gud but i heard this from
nithyanandha swamigal//

Oh! so, he was a "swamigal" last year ??!!

Ram,

Freud-aye minjiteenga !!!

:)

cheers
mohan