நமது இந்து தர்மப் புராணக் கதைகளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் ஏற்ப அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.
அகங்காரத்துடன் வாழக்கூடாது, அகங்காரம் பாவம் என்பதை பல முற்கால சம்பவங்கள் மற்றும் கதைகள் மூலம் விளக்கி உள்ளனர் பெரியோர்.
அவற்றில் ஒரு துளியை இங்கே பார்ப்போம்.
மகாபாரதத்தின் நிறைவு காலம். அதாவது பாரதப்போர் முடிந்து தருமரின் ஆட்சி நடந்து வந்தது. தருமரின் ஆட்சி தருமத்தின் ஆட்சியே ஆகும்.
தருமரின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பருவநிலைகள் சீராக இருந்தது. விவசாயம் பெருகியது. திருட்டு கொள்ளை மற்றும் பிற துர்காரியங்கள் எதுவும் நடக்காமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். பசித்தவர்கள் யாருமே இல்லாமல் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். இப்படி நல்லாட்சியை சிறப்பாக நடத்தி வந்தார் தருமர்.
இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒரு முறை ஸ்ரீ க்ருஷ்ணர் தருமரைப் பார்க்கச் சென்றார். அங்கே நல் ஆட்சி நடப்பதையும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதையும் தருமரிடம் பேசுவதன் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
அவை யாவையும் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு தருமருக்கு தனக்கு நிகராக நல்லாட்சி நடத்துபவர் யாரும் இல்லை என்பது போன்ற கர்வம் உண்டாகியிருப்பது புரியத்துவங்கியது. தருமருக்கு பாடம் புகட்ட எண்ணினார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
ஒரு நாள் தருமரை பாதாள உலகில் ஆட்சி புரிந்துவரும் மகாபலி என்னும் அரசனிடம் அழைத்துச் சென்றார் ஸ்ரீ க்ருஷ்ணர். மகபலி சகல மரியாதைகளுடன் தர்மபுத்திரரை வரவேற்றார்.
க்ருஷ்ணர் மகாபலியிடம் கூறினார்: "உனக்குத் தர்ம புத்திரரைப் பற்றித் தெரியுமா? தான, தர்மங்களின் இருப்பிடம் இவர்தான், நாள் தவறாமல் ஒவ்வொரு தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உனவு அளிக்கிறார். இப்படிப்பட்ட நல்லாட்சி நடத்தும் ஒரு அரசனை நீ எங்காவது பார்த்திருக்க முடியுமா?" என்றார்.
இதைக்கேட்ட மகாபலி சிரித்தார், "தினமும் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தன்னிடம் பிச்சை எடுத்துதான் தின்ன வேண்டும் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது, இவருடைய ஜம்பத்தைத்தானே காட்டுகிறது? இப்படி நடத்தப்படும் ஆட்சி ஒரு ஆட்சியா? எனது நாட்டில் நான் ஒரு ஊரைக் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட, என்னிடம் எந்தப் பிரஜையும் உணவுக்காக வந்து காத்திருக்க மாட்டான்.
இப்படிப் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை வளர்த்து, தனது மமதையைக் கட்டிக் காத்துக் கொள்ளும் இந்தத் தர்மபுத்திரரா பெரிய அரசர்? இவரது ஆட்சியா நல்லாட்சி? தூ...! என்று காரி உமிழ்ந்து பரிகாசித்து விட்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ம புத்திரரின் இறுமாப்பு அடியோடு ஒழிந்து அமைதியும் அடக்கத்துடனும் ஆட்சி செய்தார் என்கிறது பாரதம்.
இத்தகைய குணம் கொண்டவர்கள் எல்லாக்காலத்திலும் உள்ளார்கள். இந்த காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும் தானே!
ஆதலால் தான் சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
8 comments:
இலவசங்கள் ஓட்டுக்காக எனும்போது, ஆட்சியின் தரத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் நண்பரே,
வாழ்த்துக்கள்
ஆம் நிகழ்காலத்தில் நீங்கள் கூறியது சரியே. எங்கே இதை மாற்றுவதற்கு பகவான் க்ருஷ்ணன் மீண்டும் வந்து விடுவானோ என்ற அச்சத்தில் தான் ஒட்டு மொத்தமாக இறைவனை வெறுக்கிறார்களோ?
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய
இங்கு கிளிக்
செய்யுங்கள்
KRISHNAMOORTHY.S.R அவர்களே தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கு நன்றி
அருமையான பதிவு:
எனது நாட்டில் நான் ஒரு ஊரைக் கொடுக்கிறேன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட, என்னிடம் எந்தப் பிரஜையும் உணவுக்காக வந்து காத்திருக்க மாட்டான்..
இருப்பவனே இலவசங்களை ஆதரிக்கிறான். இல்லாதவர்களை சொல்லி என்ன பயன்.
Kesavan இருப்பவனே இலவசங்களை ஆதரிக்கிறான். இல்லாதவர்களை சொல்லி என்ன பயன்.
சரிதான் , இல்லாதவர்கள் தானே தற்கால அரசியல் வாதிகளின் மூலதனம்.
ராம்!
இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாகவும் குடிகாரர்களாகவும் மாற்றி விட்டன . மீண்டும் பாரதத்திற்கு தேவை ஒரு கிருஷ்ண பரமாத்மா. நிகழட்டும் பாரதப் போர் மீண்டும்
இலவசமாக கொடுப்பதற்கு அரிசி மந்திரத்தில் விளைகிறதா?எந்தச்செலவும்
உழைப்பும் இன்றிசுயம்புவாக வந்துவிட்டதா?அதிகாரம் இருப்பதால்
விவசாயியின் உழைப்புக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல்அரிசி, அதாவதுதானிய லட்சுமி இலவசமாக
கொடுக்கப்படுகிறது,கடத்தப்படுகிறது.ஊழல் பெருகுகிறது.என்ன பகுத்தறிவோ.
தங்கள் பதிவு.அருமை.வாழ்த்துகள்.
Post a Comment