வீடு பேறு அடைய வேண்டி
இறைவனை வேண்டி நின்றேன்!
ஈரேழு ஜென்மத்திற்கும் வீடில்லை
உனக்கு என்றான், விதியென்றான்..
அடுத்தொரு ஜென்மம் உண்மையென்றால்
நத்தையாக எனைப் படைத்திடென்றேன்!
நமுட்டுச் சிரிப்புடன் நாவசைத்து
அப்படியே ஆகட்டும் என்றான்!
நிம்மதியாய் வீடு திரும்பினேன்
சொந்த வீடு கிடைத்ததென்று..
இப்படிக்கு
வாடகை வீட்டுக்காரன்
4 comments:
கவிதை ரொம்ப அழகு நண்பா..
thanks k7
வீடு இல்லாத கொடுமைக்கு நத்தையைவிட ஆமையா பொறக்க வரம் கேக்குறது இன்னும் பெட்டர் இல்லீங்ளாண்ணா?! :)
thanks mr.கிருபாநந்தினி,
i thought a least one..i mean atleast snail...
என்னமோ, நத்தையை எடுத்துக்கலாம்ன்னு தோனிச்சு..அவளோதான்.
Post a Comment