Thursday, February 11, 2010

மரணத்திற்கு அப்பால் - 7"எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி
உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

மனிதர்கள் எந்தெந்த சூழ்நிலைகளால் தம்மை வந்தடைகிறார்கள் என்பதைச் சொல்லத் துவங்கினான் எமதர்மன்.

"நசிகேதா! உலகமாயையின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். உலகச் சூழலில் சிக்கித்தவிக்கும் இவர்கள் நடைமுறை வாழ்வில் எது உயர்வானவை என்று மற்றவர்கள் கூறுகிறார்களோ அதையே உயர்வானது என கருதி உலகச்சூழலை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள்.

குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப் போல் இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச் சூழலில் உழல்கிறார்கள்.

குறுக்கு வழியில் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த, மனப்பக்குவ மற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. 'இந்த உலகம் தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது' என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்."

அதாவது அல்ப சந்தோஷங்களில் மனதை லயிக்கச் செய்து நிரந்தர அமைதியைத் தேடாதவர்கள் ஒவ்வொரு முறையும் எமனை அடைந்து மீண்டும் பிறப்பெய்துகிறார்கள். மரணத்திற்கு அப்பால் மனிதன் மீண்டும் பிறக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எமதர்மன் விவரிக்கிறான்.

எமதர்மன் மேலும் தொடர்கிறான் "நசிகேதா! எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்."

பூலோக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கித்தவிக்கும் யாருக்கும் ஆத்மாவைப் பற்றிய தேடலுக்கு நேரமிருக்காது. அவ்வாறு தேடுபவர்கள் மிகச்சிலர் இருந்தாலும் அவர்களுக்கு உபதேசிக்க, ஆன்மா பற்றி உணர்ந்தரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள். சரி அப்படியென்றால் ஆன்மாவை எப்படி அறியலாம். இதோ எமதர்மன் தொடர்கிறான்.

"நசிகேதா! உலகியல் மனிதர்களால் கூறப்படும் போது இந்த ஆத்மா பற்றிய விபரங்கள் நன்றாக அறியப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு விதமாக விளக்கிவிடுகின்றனர்.

அனுபூதி பெற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பின்பற்றினால் குழப்பம் இல்லாமல் விளங்கும். உனக்கு நான் விளக்குகிறேன். நசிகேதா கேள்! ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது. அனுபவித்தே அறிந்து கொள்ளக்கூடியது. வெறும் விளக்கங்களால் புரிந்து கொள்ள முடியாதது."எமதர்மன் தொடர்ந்தான். "அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும் போது அது ஒருவனை மேலான ஞானத்தைற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்."

"வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால் தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்."

பொதுவாக புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எமதர்மனோ புண்ணியம் செய்தல் என்பது நீங்கள் ஆற்றும் வினைப் பயன். அவற்றால் மேலான ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனால் பிறப்பற்ற தன்மையான ப்ரம்மத்தை அடைதல் நடக்காது என்பதையே தெளிவுபடுத்துகிறார். நிரந்தரமான பரப்பிரம்மத்தோடு கலக்கவேண்டுமானால் ஆத்மாவை உணரவேண்டும் என்பது தெளிவாகிறது.

பிறகு ஆன்மாவின் தன்மையையும் அது இருக்கும் இடம் பற்றியும் எமதர்மன் நசிகேதனுக்கு விளக்குகிறான்.

"நசிகேதா! நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்."

சரி, இதயக்குகை என்பது எது...

(பொறுங்கள் கேட்போம்.....)மரணத்திற்கு அப்பால் - 8

8 comments:

Anonymous said...

Thiru Raam, Romba nalla iruku...intha pathivu...aduthu pathivu eppa varum nu avaolodu kathu irukiren...

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16224 unga paarvaiku...enna sollurathu nu theriyala...varathai illai ennidam...ennai ariyamal kai koopi vanakam matum seluthinen... nandri swami

hayyram said...

.ஒருநாள், அவர்கள் லங்கூர் வகைக் குரங்குகளை வேட்டையாடினர். அவற்றில் இரண்டு குரங்குகள் மீது பழங்குடியினர் விட்ட அம்பு தைத்து விட்டது.


ஒரு குரங்கு பக்கத்து தோட்டத்தில் விழுந்தது. கிராம மக்கள் அதைக் கவனித்துவிட்டு, அதன் மீதிருந்த அம்பை நீக்கி அதற்கு உணவு கொடுத்துப் பராமரித்தனர். ஒரு மணி நேரத்தில் அது குணமாகி விட்டது.ஆனால் மற்றொரு குரங்கு, அங்கிருந்த மானசா தேவி கோவிலுக்குள் சென்றுவிட்டது.

ஒரு சிலர் அந்தக் குரங்குக்கு சிகிச்சை செய்ய முன்வந்தனர். ஆனால், அந்தக் குரங்கு அதை ஏற்க மறுத்துவிட்டது.


கூட்டத்தில் இருந்த பாரத் கோஷ் என்பவர் அதற்கு தண்ணீர் கொடுத்தார். அதை மட்டும் அந்தக் குரங்கு வாங்கிக் கொண்டது. ரத்தம் ஒரு பக்கம் ஒழுகியபடி இருக்க அந்தக் குரங்கு, மானசாதேவி, ராமர், சீதை சிலைகளை மாறி மாறிக் கட்டிப்பிடிக்க ஆரம்பித்தது.கொஞ்ச நேரத்தில் ராமர் சிலையைக் கட்டிப் பிடித்தபடியே அந்தக் குரங்கு தன் உயிரை விட்டது. அதைப் பார்த்த மக்கள் அழுதனர். அந்தக் குரங்கு அனுமானின் அவதாரம் என்று பேசிக் கொண்டனர். அந்தக் குரங்கின் ரத்தத்தை எடுத்து தங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டனர்

உருக்கமான செய்தி. நமமால் அறிந்து கொள்ள முடியாத சில சூட்ஷமங்கள் உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நமக்கு புரியாவிட்டால் மூட நம்பிக்கை என்கிறோம்.

டில்லியில் கூட குரங்குகளின் சேட்டை அதிகமானதால் அவற்றைக் கொல்ல காங்கிரஸ் அரசு தீர்மானித்தது. பின்னர் அந்த பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த விஷயத்தைக் கைவிட்டார்கள்.

என்னதான் சேட்டை செய்தாலும் குரங்கு நமக்கு ஆஞ்சநேயர் தான். என்ன சொல்கிறீர்கள். அறியத்தந்ததற்கு நன்றி சுவாமி.

Vijay said...

உங்களுடைய மரணதுக்கப்பால் தொடர் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும் நடுவில் இடைவேளை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :)

hayyram said...

நன்றி விஜய். முடிந்த வரை இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறேன். ஆதரவிற்க்கு நன்றி.

Tired of Secularism said...

Do you know Sanskrit or did you read these stories from the Tamil version of Upanishads?

hayyram said...

hi Tired of Secularism ..

i don know sanskrit..but want to learn very much..i could not spend time for classes..thats the problem.

I read this in tamil version only.

its interesting.

Tired of Secularism said...

Cool. Can you recommend a good Tamil version of Upanishads and Vedas? I'd like to add it to my books collection.

hayyram said...

to start with books from ramakrishna matt's all are simple and understandable. www.sriramakrishnamath.org