Monday, April 5, 2010

மீண்டும் மெக்காலே - 2


சரி விதவிதமான பட்டப்படிப்பை வியாபாரம் செய்து தாங்கள் கொடுக்கும் பட்டம் தான் நீ இனி இந்த உலகில் வாழ உன்னைத் தகுதியானவனாக ஆக்கும் என்று நம் மக்களை குழப்பி அவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் அவலம் ஒரு புறம் நடக்கும் என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு புறம் ஏற்கனவே மெக்காலேயின் வழிகாட்டுதல் படி, நம் நாட்டு கலாச்சாரம் இழிவானது என்றும் வெள்ளையன் கலாச்சாரம் தான் உயர்வானது என்றும் நம்மக்களை மூளைசலவை செய்தாயிற்று. அதற்கு முக்கியமாக இந்நாட்டு மக்களை அவர்கள் சொந்த மொழியில் படிக்கவிடக்கூடாது என்றும் ஆங்கிலத்தையே மூல மொழியாக்கினால் தான் அது நாம் நினைத்தபடி நடக்கும் என்றும் சதித் திட்டம் தீட்டி அதை அப்படியே நம்மீது தினித்தார்கள். இன்றும் அதே அவலம் தொடர்வதை நாம் பார்க்கிறோம்.

ஆக நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அழிக்கும் வேலையில் இனி வரும் புதிய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தாராளமாக நமது அனுமதி உடனேயே ஈடுபடப்போகிறது எனலாம். இதற்குப் பெயர் தான் வேலில போற ஓனானை எடுத்து வேட்டிக்குள்ளே விட்டுக்கொள்வது என்பார்கள். தற்போது இந்தியர்கள் முக்கியமாக சந்தித்துவரும் பிரச்சனை மதமாற்றம்.

இந்து மத பாரம்பரியங்கள் எல்லாமே கட்டுமிராண்டித்தனம் என்றும் ஏசுவைப் பின்பற்றுவதே நாகரீகம் என்றும் மூளைச்சலவை செய்து நம்மக்களை ஏற்கனவே மதமாற்றம் செய்துவருகின்றனர். அவர்கள் இனி பாடங்கள் என்ற பெயரில் நம்நாட்டு பிள்ளைகளின் மூளைகளில் நம்பாரம்பரியத்திற்கு எதிரான கருத்துக்களை இளம்பருவத்திலேயே விதைக்க நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக பாலியல் கல்விபற்றி நம்மவர்கள் விவாதித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், இந்தியாவிற்குள் நுழையப்போகும் பல்கலைக்கழகங்கள் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தினால் என்ன செய்யப் போகிறார்கள்? வகுப்புகளில் ஆண் பெண் இருபாலரை ஒருசேர அமரவைத்து ஆண், பெண் உறுப்புகளைப் படம் போட்டு காண்பித்து பாடம் நடத்தினால் என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு எதிர்ப்பு இருக்குமா அல்லது வரவேற்பு இருக்குமா? பின்னர் இது தான் சாக்கு என்று குஷ்புவைப் போல அயல்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்களும் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாம். அப்படிச் செய்தால் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார்களே! அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள். அப்படியே சந்தடிச்சாக்கில் திருமணம் என்பதே வேஸ்ட் என்று இந்திய இளைஞர்கள் மனதில் விதைத்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம். அப்படி நடக்குமெனில் மெக்காலே ஆசைப்பட்ட பாரம்பரிய கலாச்சார சிதைவை மீண்டும் கல்வியின் போர்வையில் கொண்டுவரப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிடும்.

இந்தியாவின் வரலாற்றை திரித்துக் கூறி "வரலாற்றுப்படி வெள்ளையர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா?" என்று நாளை நம்பிள்ளைகள் நம்மிடமே உயர்வாகக் கூறும் வாய்ப்பு உண்டாகும். அப்படிப்பட்ட உருவகம் ஏற்பட்டால் சுதந்திரப் போராட்டம் என்ற மாய பிம்பமும் காந்தி என்கிற கான்க்ரீட் உணர்வுகளும் நீர்க்குமிழியைப் போல் ஒன்றுமில்லாத உணர்வாகவே புரிந்துகொள்ளப்படும். இதெல்லாம் ஒரு யூகம் தான்.

ஆனால் நாட்டிற்கு நாடு வரலாற்றைத் திரித்துச் சொல்லிக்கொடுக்கும் விஷயம் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் முகலாய ராஜாக்களின் கொடூர வரலாறுகள் மறைக்கப்பட்டு கட்டிடக்கலைகள் பற்றிய புகழ்ச்சிகளும் இந்துப்பெண்களைத் திருமணம் செய்ததையுமே முன்னிறுத்தி பாடமாக போதித்து வருகின்றனர். உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை இந்தியா மீது தாக்குதல் நடத்தி பொன்னும் பொருளும் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த வரலாறு மறைக்கப்பட்டு, 17 முறை போர் தொடுத்து பின்னரே இந்தியாவை வென்றார் கஜினி என்று அவரை தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டானவரைப் போல சித்தரித்து பாடம் நடத்துகின்றனர்.

ஆனால் சிலரோ வெள்ளையர்கள் இந்த விஷயத்தில் ஞாயமான வரலாற்றையே போதிக்கக்கூடும் என்கிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் ஆங்கிலேயர் போதிக்கும் அக்பரின் வரலாறு. "அக்பருக்கு 40 வயது ஆகும்வரை அவர் கடும் இஸ்லாமியவாதியாகவே இருந்துள்ளதாகவும் 40 வயதிற்குப் பின்னரே மதசார்பற்றவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதாகவும் கூறபடுகிறது. அதாவது அக்பருக்கு 40 வயது ஆகும் வரை இந்துக்களை, “மதம் மாறு அல்லது செத்து மடி” என்ற முறையில் நடத்தியதாகவும், பெரும்பாலானோர் சாவதை விரும்பியதைக் கண்டதால் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 40 வயதிற்குப் பின் அக்பர் இந்துக்களை “மதம் மாறு (அல்லது) உன்னுடைய மதத்திலேயே இரு; ஆனால் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதற்கான வரியைக் கட்டிவிடு (அல்லது) செத்து மடி” என்ற முறையில் நடத்தியிருக்கிறார்" என்று அக்பரின் நிஜ வரலாறை ஆங்கிலேயர்கள் போதிக்கிறார்கள். எனவே வெள்ளையர்கள் நடத்தும் வரலாற்றுப்பாடத்தை நம்பலாம் எனவும் கூறுகின்றனர்.

ஆனால் வெள்ளையர்களின் குயுக்தி வேறுமாதிரியானது. ஐரோப்பா முழுவதும் இஸ்லாமியர்களின் பெருக்கத்தைத் தடுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி கடுமையான வெறுப்பை உண்டாக்கிவருகின்றனர். அதனால் அந்நாடுகளில் அவர்கள் முகலாயர்களின் நிஜ வரலாறுகளை கற்றுத்தரலாம். ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு இந்துக்களை அழிப்பதே குறிக்கோளாக இருந்தால்? இங்கே வரலாறு சமரசப்படுத்தப்பட்டால் மீண்டும் வஞ்சிக்கப்படப் போவது இந்துக்களாகளே!

ஆரியர் திராவிடர் என்பதும், ஆரியர்கள் படையெடுப்பு என்பதும் ஆதாரம் இல்லாத கட்டுக்கதை என்று ஆராய்ந்து சொல்லும் வெள்ளையர்கள் அதைப் பாடமாக தமது பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியர்களுக்குச் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்திய அரசியல் வாதிகளின் மிரட்டல்களால் அவை தொடர்ந்து மறைக்கப்படுமா? பதில், காலத்தின்கையில் இருக்கிறது.

அமெரிக்காவால் மட்டுமே இரண்டு முறை உலகப்பொருளாதாரமே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடைசியாக உண்டான பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் உலகம் தற்போது தான் மூச்சுவாங்கத் துவங்கி யிருப்பதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகைய எல்லா வீழ்ச்சியிலும் இந்தியப் பொருளாதாரமே ஸ்திரமாக இருந்து உலகப் பொருளாதர நிபுணர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆனால் அத்தகைய பொருளாதார நடவடிக்கைகளைக் கையாளும் இந்தியர்களுக்கு அமெரிக்கப் பல்கலைகழகம் பொருளாதாரப் பாடம் எடுத்தால் எவ்வகைப் பொருளாதாரம் சரி என்று சொல்லிக்கொடுக்கும். அமெரிக்கப் பொருளாதர முறையே சிறந்தது
என்று நம்மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டால் அதைவிட முட்டாள்தனமும், நம்மக்களுக்கு நம் நாட்டு அரசியல்வாதிகளே செய்யும் மிகப்பெரிய துரோகமும் வேறென்னவாக இருக்க முடியும்?

ஆக மேற்சொல்லப்பட்டவை எல்லாமே ஒரு விவாதத்திற்குரிய யூகமே. எப்படிப்பட்ட கல்விக்கொள்கையுடன் அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்படப்போகின்றன என்பதை அரசு வெளிப்படையாக மக்களுக்கு விளக்கவில்லை, அல்லது இவர்களுக்கெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று யோசித்திருக்கலாம். எப்படியோ எதையும் நம்மால் தடுக்க முடியப்போவதில்லை. எனவே மீண்டும் வரும் மெக்காலேவை எதிர்பார்த்து காத்திருப்போம்!

ஈஸ்வரோரக்ஷது!

7 comments:

Anonymous said...

Poda venna Neeyum un blogum

Parthiban said...

Why You are saying no to Sex education?
kamasutra was written by an Indian. Population of India is almost more than a population of continent. think our future generation want to grow as many as in the world now. Let them read it and have their knowledge on sex. But Sex practice needs to be avoided.

hayyram said...

//Why You are saying no to Sex education?//

கலவிக்கல்வி கூடாது என்று சொல்வது எனது நோக்கமல்ல. வெள்ளையர்கள் நம்மக்களிடம் அதை எந்த விதமான விஷமத்தனத்துடன் தினிப்பார்களோ என்பதே எமது ஐயம்.

//kamasutra was written by an Indian.//

ஒரு விஷயத்தை இதில் நீங்கள் கவனிக்க வேண்டும். காமசூத்ரா எழுதப்பட்ட காலம் காதலும் காமமும் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்த காலம். அத்தகைய தர்மம் வழுவாமல் கடைபிடிக்கப்பட்ட காலம். ஆனால் இந்த காலத்திலோ தாலி தேவையா? கல்யாணம் தேவையா? கல்யாணத்திற்கு முன்னல் உடலுறவு கொண்டால் என்ன தவறு என்றெல்லாம் நம் இளைஞர்களை சுயகட்டுப்பாட்டு தர்மங்களிலிருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள் இத்தாலி ராஜ்ஜியக்காரர்கள். இப்படிப்பட்ட காலத்தில் கலவிக்கல்வி எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை ஆராய வேண்டாமா?

//Let them read it and have their knowledge on sex. But Sex practice needs to be avoided.//

இதுமட்டும் முரண்பாடாகத் தெரியவில்லையா நண்பரே! தேனைத்தொட்டவன் புறங்கையை நக்கமாட்டானா என்ன??

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்த்திபன்.

அன்புடன்
ராம்

Anonymous said...

Your comments are fully biased. Muslims ruled India for around 800 years. If they had the rule like 'Accept Islam or die', then how you are living as Hindu today? Why India has 80% Hindu population today? That's because the Muslim kinds did not impose any religion on them. One or two black sheeps could have been found, which is true in all religions including Hindu Religion. Look for good things in any religion and if anything bad found, then it is from the people and not from the religion. Stop writing biased content.

Anonymous said...

Biased content. Majority of the Indians are Hindus in India. If your statement is true (muslim kinds forced people to accept Islam or Die), then Muslims would have been the majority. But this not the case, which proves that you are a lier. Black sheeps are in every community including Hinduism. Look for good things and if you find anything bad, then they are from the people and not from the religion.

hayyram said...

பெயர் வெளியிட்டு பேசத்தரியாத அனானி நண்பரே! வருகைக்கு நன்றி!

//If they had the rule like 'Accept Islam or die', then how you are living as Hindu today? Why India has 80% Hindu population today?//

முகலாயர் வருகையின் போது இந்தியாவில் இந்து மதம் தவிற வேறில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியென்றால் இந்துக்களை முஸ்லீமாக மாறு இல்லையேல் கொன்று விடுவேன் என்று முகலாயர்கள் மிரட்டினால் கூட , ஏற்றுக்கொள்ள முடியாது மொத்த இந்துக்களும் சொல்லும் போது எல்லாரையும் கொன்று விட்டு யாரை வைத்து உங்கள் இஸ்லாம் ராஜாக்கள் ஆட்சி செய்வார்கள். ஆளே இல்லாத ஊரில் யாரிடம் அதிகாரம் செலுத்துவார்கள். அதனால் எல்லா இந்துக்களையும் அவர்கள் கொல்ல முடியாமல் போனது. ஆனால் பலரைக் கொன்று அதனால் பயம் உண்டாக்கி மீதிப்பேரை மதம் மாற்றினார்கள் என்பதே வரலாறு. மீதம் உள்ளவர்களையும் பயம் உண்டாக்க இந்துக்களாக வாழ்பவர்களுக்கு கடுமையான ஜஸியா வரி விதித்தனர். இந்துக்கள் அதைப்பற்றி கவலைப் படாமல் வரியையும் கட்டி இந்துக்களாகவே வாழ்ந்தனர். அதனாலேயே இந்தியாவில் இந்துக்கள் பிழைத்திருக்க முடிந்திருக்கிறது. முஸ்லீம்கள் பயமுறுத்தும் ஸ்டையில் எப்படி இருக்கும் என்பதை முகமது கோரியை படித்தாலே தெரியுமே! கோரியின் படையில் இந்தியப் படைக்கைதிகள் லட்சம் பேர் இருந்தனர். அவர்களை கட்டுக்குள் வைக்கவும் திடீர் புரட்சி செய்திடாமல் இருக்கவும் என்ன செய்தான் தெரியுமா? அவர்களில் இருந்து சுமார் ஐயாயிரம் பேரை நடுவே நிற்க வைத்து அத்தனைபேர் கழுத்தையும் துண்டாக்கினான். மீதமிருப்பவர்களிடம் நீங்கள் ஏதேனும் புரட்சி செய்ய நினைத்தால் இதுவே உங்கள் கதி என்றான். அடிமைகள் அமைதியானார்கள். ஆனால் உயிர் பிழைத்தார்கள். இந்தியாவில் இன்று வரை வாழும் இந்துக்கள் இப்படி உயிர் பிழைத்தவர்களே!

hayyram said...

//Majority of the Indians are Hindus in India. If your statement is true (muslim kinds forced people to accept Islam or Die), then Muslims would have been the majority.// இப்போது காஷ்மீரில் நடந்தது போல நடந்திருக்கும் என்கிறீர்களா? இதற்கு வரலாற்றுக்கு ஏன் போகவேண்டும். கண் முன்னே காஷ்மீரில் பாருங்களேன். ஏறத்தாழ மூன்று லட்சம் இந்து பண்டிட்டுகளைக் கொன்று அவர்கள் வீட்டுப் பெண்களை கடத்திச் சென்று மதமாற்றம் செய்வதுமாகப் பண்ணி இன்று அங்கே இந்துக்களே இல்லை. காஷ்மீரில் முஸ்லீம் மெஜாரிட்டி தானே இருக்கிறது. இப்பொழுதும் அதைச் செய்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்த இந்திய மக்களை ஒரே கால கட்டத்தில் மாற்ற முஸ்லீம் ராஜாக்களால் முடியாமல் போயிருக்கிறது என்பதே உண்மை. since the kashmir history is true, i m not lier.